இறைவனின் வழிகளை கண்டுபிடித்து அதன்படி மனிதன் சரியாக நடந்துவிட்டார் தனக்கு சாவுமணி அடிக்கப்படும் என்றும் "உலகத்தின் அதிபதி" என்ற தனது பதவி பரிபோய், தனது சாம்ராஜ்யம் முடிந்து விடும் என்பதையும் அறிந்த சாத்தான், ஆதியிலிருந்து இன்றுவரை அனைத்து மனிதர்களையும் தந்திரத்தால் வஞ்சித்து தடம்புரள வைத்து தனது காரியத்தை சாதித்து வருகிறான்!
தேவனுக்கு மேல் தனது சிங்காசனத்தை உயர்த்தி எல்லோருக்கும் அதிபதியாக இருந்து ஆளுகை செய்யவேண்டும் என்பதுதானே அவனது ஆசை! அதை அறியாத ஜனங்கள் அவனது வஞ்சகவலையில் வீழ்ந்து, வந்த வேலையை நிறைவேற்றாமல் வாழ்ந்து, மாண்டு போகின்றனர்!
மனிதன் தேவனின் வார்த்தைகளின் மேன்மையை நம்பாமல் அதைப் பற்றி அறியவிரும்பாமல் இந்த அற்பகால மாய வாழ்வில் மனம்வைத்து அவருக்கு முழுமையாக கீழ்படிய விரும்பாமல் இருப்பதுதான் அதற்க்கு முக்கிய காரணம்.
ஓசியா 8:12என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
இவ்வாறு மனிதன் தேவனின் மேன்மையான வார்த்தைகளை கை கொள்வது கடினம் என்று கருதும் நிலையில் சாத்தான் தனது தந்திரத்தால் அவ்வார்த்தைகளை மனிதர்களுக்கு மாற்றி காண்பித்து சுலபமாக வஞ்சித்து விடுகிறான்.
அவனின் தந்திரமான செயல்பாட்டை பாருங்கள்.
1. தன்னையே (பிசாசையே) தெய்வமாக வழிபடும் ஒரு கூட்டத்தை திசைதிருப்பி வைத்துள்ளான்
பேய்களையே தெய்வமாக வழிபட்டு அதற்கு பூஜைகள் செய்யும் பல கோஷ்டிகள் இன்றும் உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இரத்தத்தால் அபிஷேக பூஜை செய்து அதை தாங்களும் குடிப்பது போன்ற செயல்களை செய்து சாத்தானை திருப்திபடுத்தி அதன் அடிப்படையில் வாழ்கின்றனர்
I கொரிந்தியர் 10:20 ; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
இதை மீறி கொஞ்சம் முன்னேறி வந்தால்
2.இறைவன் இல்லை என சொல்லும் ஒரு நாத்திக கூட்டத்தை பிடித்து வைத்துள்ளான்.
கடவுளே இல்லை என்று சொல்லும் கூட்டம் இன்று அதிவேகமாக எங்கும் பெருகி வருவதை காணமுடியும்! அதீத அறிவியல் வளர்ச்சியின் காரணமாக அறிவில் மிகுந்த அறிவாளிகளே இவ்வாறு கூவிதிரிகின்றன்ர். தங்கள் சுவாசத்தையே தங்களால் கட்டுப்படுத்த தகுதி இல்லாமல் இருந்தும் பல்வேறு அறிவியில் கோட்பாடுகளை கையில் எடுத்துகொண்டு வாதிட்டுவரும் இவர்கள், "எல்லாமே தானாக உருவானது என்றும் கடவுள் என்று ஒருவள் இல்லை" என்றும் வாதிட்டு வருகின்றனர்!
சங்கீதம் 53:1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்
அதையும் மீறி இறைவன் என்று ஒருவர் உண்டு என வந்தால்
3. இன்பமான உலக வாழ்க்கைக்காக மட்டுமே இறைவனை வழிபடும்படி ஒரு கூட்டத்தை திசைதிருப்பி வைத்துள்ளான்.
எந்த ஒரு உறுதியான நிலைபாடும் இல்லாமல் மறுமையை பற்றிய எந்தகவலையும் இல்லாமல் இந்த உலகில் துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ்வதற்காகவே கொவிலுக்கு சென்று ஓரிரு நிமிட பிரார்த்தனை செய்துவிட்டு பிறகு தங்கள் மனம்போன போக்கில் வாழும்படி அனேக மக்களை மதிமயக்கி வைத்திருக்கிறான்.
I கொரிந்தியர் 15:19இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
இந்நிலயையும் கடந்து வந்தால்
4. கல்லையும் மண்ணையும் சிலையையும் வழிபடும் கூட்டம்
கண்ட கோவிலகளை பார்த்து கைஎடுக்க வேண்டாம், நட்ட கல்லும் பேசுமோ நாதன் (உன்)உள் இருக்கையில் என்று மகான்கள் பாடியும் அதை சற்றும் பொருள்படுத்தாமல் சர்வவல்ல இறைவனுக்கு
இணைவைத்து கல்லையும் மண்ணையும் சிலையையும்
விலங்குகளையும் கூட வழிபடும்படி அனேக ஜனங்களை வழிகெடுத்து வைத்திருக்கிறான்
I கொரிந்தியர் 10:14ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
5 மனிதன்தான் கடவுள் என்று என்று வாதிடும் கூட்டம் ஒன்றும் உண்டு!
ஆம்! இப்படியும் ஒரு கூட்ட மக்கள் அதாவது "மனிதனே கடவுள்" என்பதுதான் இவர்கள் கொள்கை. இவர்கள் சொல்வது என்னவென்றல் "கடவுள் மனிதனை படைத்தான், மனிதன் கடவுளை படைத்தான்" "கோழி முதலா முட்டை முதலா" என்ற சொல்லுக்கு எப்படி விடை இல்லையோ அதுபோல் யார் முதலில் என்று கேட்டால் மனிதன் இயற்கையாக உருவாகி அவன் தனக்கு தெய்வங்களை படைத்து கொண்டான் என்பதுபோல் சொல்லி எல்லாம் மனிதனே என்று போதிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளான்
எரேமியா 17:5மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதையும் மீறி ஆண்டவரை தேடி வருபவர்களை வஞ்சிக்க
6. பைபிளை போலவே ஒரு வேதபுத்தகத்தை பெற்று அதை அக்கறையாய் பின்பற்றுவோர்!
இறைவனின் உண்மையான வேதமாகிய பைபிளை போலவே இன்னொரு வேத புத்தகத்தை உருவாக்கி அதை வைராக்கியத்தோடு பின்பற்றும்படி அநேககருக்குபோதித்து, இயேசுவால் கிடைக்கும் பாவமன்னிப்பை மட்டும் நம்பாமல் இருக்கும்படி செய்து சுய நீதியால் நித்தியத்தை தேடும்படி ஒரு கூட்டத்தை திசை திருப்பியுள்ளான்.
ஏசாயா 64:6நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது
அப்போஸ்தலர் 4:௧௨ அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை!
அதையும் மீறி இயேசுவை அறிந்து கொண்டால்
7. இயேசுவின் தாய் மரியாளையும் தேவதூதர்களையும் தெய்வமாக்கியோர்!
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்" என்று இயேசுவின் தெளிவான வார்த்தை இருந்தும் மரியாள் என்னும் பரிசுத்த பெண்மணியாகிய இயேசுவின் தாயை தெய்வமாக்கி அவர்கள் மூலமாகத்தான் இயேசுவை வணங்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தை திசை திருப்பி அதற்குள் சிலை வழிபாட்டி புகுத்தி அனேக மக்களை வழிவிலக வைத்துள்ளான்.
உபாகமம் 5
7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
அதையும் மீறி இயேசுவிடம் வந்தால்
8. மனித அறிவால் இறை வேதத்தை ஆராயும் கூட்டம்!
வேதத்தை அறிவால் ஆராய்ந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிய தேவையில்லை நரகமில்லை பாதாளமில்லை துன்பமில்லை துயரமில்லை எல்லோருக்கும் நிச்சயம் மீட்பு உண்டு எனவே எதையும் கைகொண்டு நடக்கவேண்டிய தேவயில்லை என்று புதிய உபதேசம் சொல்லும் புதுமையான கூட்டம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளான்
ஏசாயா 47:10உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது
ஏசாயா 5:21தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!
6. பரிசுத்த ஆவியானவரை நம்பாத கூட்டம்!
நம்மை சகல சத்தியத்துக்குள்ளும் வழி நடத்தும் தேவனின் ஆவி மற்றும் மீட்பின் முத்திரையாகிய பரிசுத்த ஆவியை பற்றி அறிய விடாமல் தடுத்து, ஆவியானவரை நம்பாமல் அவரை வாஞ்சித்து பெற்றுக்கொள்ளாமல் அதனால் அணலும் குளிரும் இல்லாமல் பாரம்பரிய முறையில் கட்டுண்டு இருக்கும்படி ஒரு கூட்டத்தை திசை திருப்பி வைத்துள்ளான்.
அப்போஸ்தலர் 8:16அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி
எபேசியர் 4:30 நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி.
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
அதையும் மீறி தடைகளை கடந்து பரிசுத்த ஆவியானவரையும் பெற்று ஆண்டவரின் அருகில் வந்தால்
இறைவனின் வார்த்தையை கைகொள்ளாமல் மிக சுலபமாக
எப்படி பரலோகம் போய்சேரலாம் என ஏங்கி தவிக்கும் மனிதர்களுக்கு, ஆவியனவரின் வார்த்தைகளை அவர்களுக்கு ஏற்றார்போல் புரட்டி காண்பிக்கிறான்: அதாவது
மத்தேயு 19:17 நீஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
I கொரிந்தியர் 7:19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
I யோவான் 5:3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்;
போன்ற பல வசனங்கள் ஆண்டவரின் கட்டளைகள் கைகொள்ளப்பட வேண்டும் என்று தெளிவாக சொல்லியும் கிருபையின் கீழிருக்கும் நாம் அவரது கற்பனையை கைகொள்ள வேண்டிய தேவையில்லை என்று சொல்லி தேவனின் வார்த்தைகளை புரட்டுகிறான் அவர்களும் சுலபமாக அவன் வலையில் விழுந்து விடுகின்றனர். பரலோகம் போய் சேர்ந்தால் போதும் என எண்ணும் அளவுக்கு சோதனையையும் துன்பங்களையும் கொடுத்து, எப்படியாவது தன் வலையில் இழுக்க பார்க்கிறான். முடியவில்லை, அதையும் மீறி அவர்கள் சரியான பாதையில் நடந்து பரலோகம் போய் சேர்ந்துவிட்டால் தலையில் உள்ள ஒரு முடி போனதுபோல "போ" என விட்டு விட்டு மீண்டும் உலகில் உள்ள அடுத்த விசுவாசியை நோக்கி கண்களை திருப்புகிறான்.
ஒருவர் பரலோகம் போனதினால் சாத்தானுக்கும் அவனுடைய ராஜ்ஜியத்துக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
அவன் ராஜ்ஜியம் பூமியில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு தேவனைப்பற்றி தெரியுமோ இல்லையோ அவனுக்கு தேவனை பற்றி நன்றாக தெரியும். இறைவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்றும் ஒரு ஆத்துமா அவனது பிடியில் உள்ளவரை அவனை அக்கினி கடலுக்கு அனுப்பமாட்டார் என்றும் அவன் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறான்
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
மேலும் அவனுக்கும் இவ்வுலக போராட்டம் ஒரு வாழ்வா சாவா என்றபோராட்டமே! அகவே அவன் தன் முழு பெலத்தையும் பிரயோகித்து தனது அனைத்து தந்திரத்தையும உபயோகித்து எல்லோரையும் எதாவது ஒரு விதத்தில் வஞ்சித்து வருகிறான்.
ஆண்டவரின் முழு பெலத்தோடு அன்புகூர்ந்து அவரின் வார்த்தைகளுக்காக பெற்று காத்துக்கொண்டு அதற்காக எதையும் இழக்கதுணிந்து அவைகளுக்கு அக்கறயோடு கீழ்படிய விரும்புவோர் மட்டுமே சரியான வழியை கண்டடைய முடியும்!
அவர்களே மிகுந்த பாக்கியவான்கள்!
லூக்கா 11:28தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
-- Edited by SUNDAR on Wednesday 30th of November 2011 03:35:46 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தனின் இவ்விதமான திசை திருப்பும் தந்திரத்தால்தான் இன்று சபைக்குள் பல்வேறு உபதேச கோட்பாடுகளும், ஊழியர்களுக்குள் ஒன்றுமயின்மையும், மிகப்பெரிய தலைவர்களின் வீழ்ச்சியும், பலவித கள்ள உபதேசங்களும் உருவாகி செழித்து வளருகின்றனர், ஒவ்வொன்றிலும் பல ஆயிரம் ஆத்துமாக்கள் அமிழ்ந்து கிடக்கின்றனர்.
இன்றும் அவன் தன் காரியங்களை இவ்வாறு வெற்றிகரமாக சாதித்து வருவதால்தான் அவனுடைய ராஜ்யம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் இருக்கிறது. "உலகத்தின் அதிபதி" என்ற அவனது நிலையை தக்கவைத்துக்கொள்ள எந்த தந்திரமும் செய்ய அவன் தயாராக இருக்கிறான். தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே பலர் அவனுடைய கரத்துக்குள் கட்டுப்பட்டு கிடக்கின்றனர்.
இவ்வாறு ஆண்டவரால் உயர்ந்த நோக்கத்தோடு அபிஷேகம் பண்ணப்பட்டு சாத்தனின் திசை திருப்புதலால் தங்கள் மேன்மையை தவறவிட்ட பல மனிதர்களை வேதாகமத்திலும் பார்க்கலாம்.
பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிப்பதற்காக ஆண்டவரால் விசேஷ நசரேயனாக அபிஷேகம் பண்ணப்பட்ட சிம்சோன், சாத்தனின் திசை திருப்பும் தந்திரத்தால் ஒரு வேசியால் திசை திருப்பட்டு தன் மேன்மையை இழந்து கண்களையும் இழந்து மடிந்தான்
இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்திலும் தேடி எடுத்து ஆண்டவரால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் சாத்தானின் தந்திரத்தால் திருப்பபட்டு கொள்ளை போருட்கள்மேல் ஆசைப்படு ராஜ்யபாரத்தை இழந்து சத்துருவின் பட்டயத்தால் மடிந்துபோனான்
ஆண்டவரிடமிருந்து அபரிமிதமான அறிவைபெற்ற ஞானியாகிய சாலமன், சாத்தானின் தந்திரத்தால் தனது அனேக மனிவிமார்களால் திசைதிருப்பப்ட்டு விக்கிரகங்களுக்கு கோவில்கட்டி விழுந்து போனான்.
ஆதி திருச்சபை என்னும் அபரிமிதமான சபையில் அங்கம்வகித்த அனனியா சபீறாள் சாத்தானின் தந்திரத்தால் திசை திருப்பபட்டு தனது பணத்தை தானே வஞ்சித்து எடுத்து ஆவியானவரிடம் பொய்சொல்லி அடுத்தடுத்து
மாண்டுபோனார்கள்
ஆண்டவருடன் அனேக நாட்கள் இருந்த யூதாஸ் அலகையின் தந்திரத்தால் வஞ்சிக்கப்பட்டு அற்ப வெள்ளி காசுக்கு ஆசைபட்டு ஆடவரை காட்டிகொடுத்து மேன்மையான தன் அழைப்பை இழந்து நான்றுகொண்டு செத்தான்.
எந்நேரமும் ஓய்வின்றி ஒருவரை கவிழ்க்க முயன்றுகொண்டிருக்கும் சாத்தான், எந்த விஷயத்தில் எப்படி நம்மை திசைதிருப்ப முயல்வான் என்பதை அறிவது நமக்கு எட்டாத காரியமாக இருப்பதால், எந்நேரமும் ஆண்டவருடன் தொடர்ந்த நிலையான ஐக்கியத்தில் (ஆன்லைனில்) இருந்தால் மட்டுமே அவனது தந்திரங்களை முரியடிக்க முடியும்! எனவே விழித்திருப்போம்
-- Edited by SUNDAR on Friday 23rd of April 2010 11:11:34 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தானின் திசை திருப்பும் தந்திரங்கள் என்ற இந்த திரியில் "தந்திரக்காரனாகிய" சாத்தானின் செயல்பாடுகள் குறித்து நாம் அறிந்தவைகளை எழுதி பிறரை எச்சரித்து வருகிறோம். இன்று நம் தளத்தில் எழுதப்பட்ட சில காரியங்களை தியாநித்தபோது சாத்தானின் இன்னொரு முக்கிய தந்திரத்தையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதை குறித்த எச்சரிக்கையை இங்கு எழுதிவைக்க விரும்புகிறேன்.
சாத்தானின் தந்திரமான உபதேசத்தில் ஓன்று "நீ இருக்கும் நிலையிலேயே சுகமாக இரு அதற்க்கு மேல் ஒன்றும் சிந்திக்காதே ஒன்றும் செய்யவும் வேண்டாம்" என்பதே அந்த உபதேசம்.
இன்றைய உலகில் நாம் அனேக இடங்களில் பார்க்கும் காரியம் அநீதத்துக்கு எதிராக அதிமாக குரல் கொடுப்போரை கையூட்டு கொடுத்து கையமர்த்தி வைத்துவிடுவது ஆகும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் தொழிலாளிகளுக்கு சாதகமாகவும் முதலாளிகளுக்கு பாதகமாகவும் செயல்படும் ஒரு லீடரை முதலாளி வர்க்கம் தனியாக
அழைத்து "நீ ஏன் இதுபோல் செய்து கொண்டு இருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேள் நாங்கள் தருகிறோம், நீ மௌனமாகி விடு. யாரும் எக்கேடும் கெட்டுபோனால் உனக்கென்ன" என்பது போல் சுமுகமாக பேசி அந்த எதிர்ப்பை அடக்கிவிடுவது உண்டு.
அதேபோல் சாத்தானும் தான் அடிமை படுத்தி வைத்திருக்கும் மனுஷர்களில் யாராவது அவனுக்கு விரோதமாக எழும்பும்போது அல்லது அவனது தந்திர செய்கைகளின் உண்மைகள் அறிந்து யாராவது அவனுக்கு எதிராக எழும்பும்போது"உனக்கு என்ன வேண்டும் அதை சொல், நான் தருகிறேன், நீ சுகமாக இந்த உலகத்தில் வாழ்ந்து விட்டு போ! எதற்காக இப்படி உண்மையை உளறிகொட்டி கொண்டு இருக்கிராய்? நீ என்னதான் சத்தமிட்டு சொன்னாலும் யாரும் கேட்க போவது இல்லை" என்று முதலில் சமாதானம் செய்ய பார்ப்பான். அது முடியாத பட்சத்திலோ எப்படியாவது தான் ஜகஜால மாய்மாலங்களை பயன்படுத்தி முறையற்ற வழியில் செயல்பட்டு அவர் செய்யும் காரியங்களை கெடுத்துவிட பார்ப்பான் அதுவும் முடியாத பச்சத்தில் தான் தான் கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்டு அவர்களை கொல்ல பார்ப்பான். ஆனால் ஆண்டவரோ அவருக்கு துணையாக நின்று அவனை எல்லா தீங்கிற்கும் விலக்கி விடுவிப்பார்.
ஏசாயா 59:19வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்காக மரித்து உயிர்த்து இரண்டாயிரம் வருடம் முடிந்துவிட்டபோதும், சாத்தானின் எந்த ஒரு கிரியையும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை நான் இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்! இந்நிலையில் நாம் இருக்கும் நிலையில் சொகுசாக வாழ்க்கை நடத்த விரும்பாமல் அல்லது இருக்கும் நிலையில் திருப்தியடைதுவிட்டு போகாமல், யாரோ பாஸ்டர்களும் வெளிநாட்டுகாரர்களும் சொன்ன உபதேசத்தை அப்படியே வேதவாக்காக எண்ணாமல், வேதம் சொல்லும் வசனங்களை நாமே அமர்ந்து இன்னும் அதிக அதிகமாக தியானித்து ஒவ்வொரு வசனமும் நமக்கு சொல்லும் பாடம் என்ன? நமது பக்கத்தில் இருந்து செய்யவேண்டிய காரியங்கள் எதாவது இருக்கிறதா அல்லது தேவன் என்னை இந்த பூமியில் படைத்த நோக்கம் என்ன? நான் இன்னும் ஆண்டவருக்காக எதைசெய்யவேண்டும் என்பது குறித்த சிந்தனையில் இடைவிடாமல் தேவனை நோக்கி ஜெபிக்கவேண்டும்.
அப்படி செய்ததால்தான் உலகமெல்லாம் கேட்டுக்குள் வீழ்ந்து கிடக்கும்போது கூட நம்மால் வீரநடை நடந்து தேவனுக்க நிலைக்கு முன்னேற முடியும்!
அன்று பாபிலோன் தேசத்தில் பான பாத்திரக்காரனாக சொகுசாக இருந்த நெகேமியா 2: 3. ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன். அதேபோல் என்போன்ற எத்தனையோ ஆயிரம் ஜனங்கள் இந்த உலகத்தில் சொல்லொண்ண வேதனையும் துன்பமும் துயரமும் அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது நான் மட்டும் சுகமான வாழ்க்கையை
வாழ்வது எப்படி? என்று சொல்லி அவர்களுக்காக தேவனிடம் மன்றாடுங்கள்!
சத்துரு உங்களிடம் வந்து "உனக்கு அதுபற்றி ஏன் கவலை?இதுபோதும் இதற்க்கு மேல் வேண்டாம், உனக்கு என்ன வேண்டும் அதை கேள் தருகிறேன் இப்படியே இருந்துவிட்டு எல்லோரும் போவதுபோல செத்து போ" என்று சொல்லி உங்களை அமுக்க பார்ப்பான்! ஆனால் அன்பானவர்களே இந்த உலகத்தில் உள்ள தீமைக்கு முடிவும் சத்துருவுக்கு சாவு காலமும் வரும் வரைக்கும் தேவ பிள்ளைகளாகிய நமக்கு ஆண்டவருக்காக செய்யும் காரியங்களில் ஓய்வோ அல்லது இவ்வளவு போதும் என்ற இளைப்பாருதலோ இல்லை என்பதை மறந்துபோக வேண்டாம்!
-- Edited by SUNDAR on Wednesday 30th of November 2011 03:44:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தானின் திசை திருப்பும் தந்திரங்கள் என்ற இந்த திரியில் "தந்திரக்காரனாகிய" சாத்தானின் செயல்பாடுகள் குறித்து நாம் அறிந்தவைகளை எழுதி பிறரை எச்சரித்து வருகிறோம். இன்று நம் தளத்தில் எழுதப்பட்ட சில காரியங்களை தியாநித்த போது சாத்தானின் இன்னொரு முக்கிய தந்திரத்தையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதை குறித்த எச்சரிக்கையை இங்கு எழுதிவைக்க விரும்புகிறேன்.
ஐயா, கீழ்க்கண்ட திரியில் இன்று காலை நான் எழுதியதை சாத்தான் எழுதியது என்கிறீர்களா,எப்படி ஐயா குணசாலியான வேடம் போட்டுக்கொண்டு இப்படி சகமனிதனை நேருக்கு நேர் சாத்தான் என்று உங்களால் எழுதமுடிகிறது? நான் எழுதியதில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நேரடியாகவோ தனிமடல் மூலமாகவோ தெரிவிப்பது தானே நியாயம், உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா ?
ஐயா, கீழ்க்கண்ட திரியில் இன்று காலை நான் எழுதியதை சாத்தான் எழுதியது என்கிறீர்களா,எப்படி ஐயா குணசாலியான வேடம் போட்டுக்கொண்டு இப்படி சகமனிதனை நேருக்கு நேர் சாத்தான் என்று உங்களால் எழுதமுடிகிறது? நான் எழுதியதில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நேரடியாகவோ தனிமடல் மூலமாகவோ தெரிவிப்பது தானே நியாயம், உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா ?
இந்த தளத்தை கவனிக்கும் மற்ற நண்பர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்கட்டும்
நீங்களாகவே தவறாக புரிந்து கொண்டோ அல்லது அவரை குற்றம் பிடிக்கவேண்டும் என்றோ எழுதி இருக்கிறேர்கள்.
எனக்கு தெரிந்து யாரையுமே சாத்தான் என்றோ அல்லது மற்றபடி கொடுமையாகவோ யாரையும் சொன்னதுகூட கிடையாது.. எனக்கு தெரிந்தவரை....
ஒருவேளை அப்படி அவர் எங்கே யாரை குறிபிட்டுள்ளார்.....என்று சொல்லுங்கள் தாங்களே அவரை எப்படியாகிலும் மனமடிவாக வேண்டுமென்பதில் குறியாக உள்ளீர்கள்... என்பது தெளிவாக தெரிகிறது....
நீங்கள் இது வரைக்கும் அவருடைய எல்லா பதிவுகளிலும் குற்றத்தை மாத்திரமே கூறி உள்ளீர்கள் அப்படி என்னதான் உங்களுக்கு அவர்மேல் தனிப்பட்ட வெறுப்போ எனக்கு தெரியவில்லை.
-- Edited by Stephen on Wednesday 30th of November 2011 09:38:56 PM
-- Edited by Stephen on Wednesday 30th of November 2011 09:41:09 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
திசை திருப்பும் சாத்தானின் தந்திரங்களில் இன்னும்சில தந்திரங்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்!
நான் +2 படித்துகொண்டு இருந்தபோது என்னுடன் ஒரு போலிஸ் அதிகாரியின் மகன் படித்துகொண்டிருந்தான். அவன் கொஞ்சம் சாதுவாக குணம் உடையவன். மற்ற மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து அவனிடம் "உனக்கென்னப்பா உங்க அப்பா ஒரு பெரிய போலிஸ் அதிகாரி, நீ என்ன தப்பு செய்தாலும் உன்னை எப்படியாது காப்பாற்றி விடுவார்" என்பதுபோல் சொல்லி சொல்லி, அவன் ஒரு தவறை செய்ய பயந்தாலும், அவனை காப்பாற்ற ஒருஆள் இருக்கிறது என்பதுபோல ஒரு இமேஜை ஏற்ப்படுத்துவது வழக்கம். ஆனால் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி தான் மகன் தவறு செய்தால் கூட தண்டிக்காமல் விடமாட்டார் என்பதை அங்கேயாரும சுட்டுவதில்லை.
இன்னும் பல உலக மனுஷர்களை நாம் பார்த்திருக்கிறோம் யாரை பற்றி அவர்களிடம் சொன்னாலும் "அவர் பெரிய இவரோ? என்னை பற்றியும் என்னுடைய பேக்ரவுண்ட் பற்றியும் உனக்கு தெரியாது. நான் நினைத்தால் எதையும் சாதிப்பேன்" என்பது போல் சொல்லி தன்னைப் பற்றிய ஒரு உயர்ந்த என்னத்தை எல்லோரு மனதிலும் ஏற்ப்படுத்துவார்கள்.
வேறு சிலரோ, இங்கு நடக்கும் அனேக அடிப்படை காரியங்களுக்கு அவர்களே சூத்திரதாரியாக இருந்தாலும், யார் மீதாவது பொறுப்பை போட்டுவிட்டு தான் ஒன்றும் தெரியாதவர்போல ஓரமாய் இருந்து விடுவார்கள் (உம்: சோனியா காந்தி அவர்கள்)
இதுபோன்று சாத்தானும் ஒரு மனுஷனை கவிழ்ப்பதர்க்கோ அல்லது ஒருவரை தவறான ஒரு நிலையில் தொடர்ந்து தக்கவைப்பதற்கோ
தன்னுடய பலவிதமான தந்திரங்களை இங்கு பயன்படுத்துகிறான்.
தேவனின் வல்லமையை குறைத்து காண்பித்து, தேவனை விட தனக்கு அதிகம் வல்லமை இருபதுபோல் ஒரு தோற்றத்தை உலகத்தில் ஏற்ப்படுத்தி அனேக ஜனங்களை தன்பக்கம் திசை திருப்பி தனது பிடியில் வைத்திருக்கிறார்.
அந்த செயல்பாடு ஒருவரிடம் நடக்கவில்லை என்றால்,
தேவனை மிகப்பெரியவராக உயர்த்தி, அவர் பிள்ளைகள் என்ன செய்தாலும் அவர் பாதுகாத்துவிடுவார் எனவே பாவம் செய்வதில் எந்த பெரிய பாதிப்பும் இல்லை எனவே துணிந்து பாவம் செய்யலாம் என்பது போல்ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தி ஜனங்களை தொடர்ந்து பாவத்தில் நிலைநிறுத்தி வஞ்சிப்பான்.
அந்த செயல்பாடும் ஒருவரிடம் நடக்கவில்லை என்றால்,
தன்னை ஏதோஒரு கையாலாகாதன் போலவும் தேவனுக்கு மிகவும் பயந்து நடந்குகிறவன் போலவும் அவரை எதிர்த்து எதையும் செய்ய விரும்பாதவன் போலவும் காண்பித்து, ஏதோ தான் தேவனின் திட்டத்தில் அடிப்படையில் அவர் ஆட்டி வைத்தால் ஆடி செயல்படும் ஒரு அப்பாவி போல தன்னை காண்பித்து வஞ்சிக்கிறான்.
இவைகள் எதுவுமே சாத்தானின் உண்மையான நிலை இல்லை எல்லாமே சாத்தானின் தந்திரமான வஞ்சனைகளே! இது போன்ற தந்திரங்களில் வஞ்சிக்கபட்டாமல் இருக்க தேவனை அறியும் அறிவு மிக மிக அவசியம்! தேவனை சரியாக அறிய அவரது வார்த்தைக்கு கீழ்படிதல் அவசியம்!
ரோமர் 1:28தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
தேவனை அறியவேண்டிய விதமாக சரியாகஅறிந்து அவரை பற்றிக் கொண்டிருக்க விரும்பாதவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு விஷயத்தில் சத்துருவின் பிடியில் இருப்பார்கள் என்பது மாத்திரம் உறுதி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தன்னையே (பிசாசையே) தெய்வமாக வழிபடும் ஒரு கூட்டத்தை திசைதிருப்பி வைத்துள்ளான்
பேய்களையே தெய்வமாக வழிபட்டு அதற்கு பூஜைகள் செய்யும் பல கோஷ்டிகள் இன்றும் உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இரத்தத்தால் அபிஷேக பூஜை செய்து அதை தாங்களும் குடிப்பது போன்ற செயல்களை செய்து சாத்தானை திருப்திபடுத்தி அதன் அடிப்படையில் வாழ்கின்றனர் இதற்கான் இணைப்பு சாத்தானின் ஆலயம்
__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22:12
"சாத்தானின திசை திருப்பும் தந்திரங்கள"் என்று நான் எழுதியிருக்கும் இந்த திரியில் சாத்தனின் அனேக தந்திரங்கள் பற்றியும் அவன் எவ்வாறு மனுஷர்களை எல்லாம் திசை திருப்பி உண்மைகளை அறியவிடாமல் வஞ்சிக்கிறான் என்றும் விளக்கியிருக்கிறேன்.
இவ்வகை வஞ்சனையில் ஒன்றே "இயேசு எனக்காக மரித்தார் என்பதை அறிந்தால் போதும் அதற்க்கு ஆழமாக போய் அவரை கொலை செய்தது யார?் அதன் அடிப்பட காரணம் என்னவென்பதை அறியவேண்டிய அவசியமில்லை" என்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தி நடந்த
காரியத்தின் உண்மை தன்மையை அறியவிடாமல் வஞ்சிப்பது.
உதாரணமாக நமக்கு வேண்டிய ஒருவர் எதோ ஒரு நோயால் மறித்து போய்விட்டார் என்று வைத்துகொள்வோம் அவர் எதனால் மரித்தார் அவர் மரணத்துக்க காரணமாக இருந்த நோய் எது எவ்வளவு நாளாக அவர் அந்நோயால் பாதிக்கபட்டார் அதற்க்கு மருத்துவம் எதுவும பார்த்தாரா, மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் போன்ற அனைத்து உண்மைகளையும் அறிய முற்படுவோம். காரணம் அவ்வாறு அறிவதன் மூலம் நாம் நம்மையும பாதுகாப்பதோடு அந்நோய் குறித்து பிறரையும பிறரையும் எச்சரிக்கஎச்சரிக்க முடியும். அந்நோய் எப்படி உண்டானது அது
எவ்வாறு பரவுகிறது என்பதை அறிந்து மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு முடிந்தால் அந்நோய் கிருமிகளை அடியோடு அழிக்கவும் முடியும (,பெரியம்மை நோய் போலியோ போன்றவைகள் இவ்வாறுதான் அழிக்கபட்டன)
அவர் எதோ நோயால் மரித்துபோனார் அவர் பாவத்துக்காக மரித்தார, சாபத்தால் மரித்தார் என்று சொல்லிவிட்டு அடிப்படை உண்மையை ஆராயாவிடடால் இன்னும் பலபேரை நாம் இழக்க நேரிடலாம்
அதேபோல் எதோ தேவ கிருபையால் ஆண்டவராகிய இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்ற உண்மையை நாம் அறிந்துகொண்டோம் சாத்தனின் தந்திரத்தில் அமுக்கபட்டு அத்தோடு நின்றுவிடாமல் யார் இந்த கருத்தின் உண்மைகள்பற்றி கேட்டலும் அவர்களுக்கு
கொடுக்கும் பொருட்டு, அவரை கொலை செய்த கொலை பாதகன் யார், நம் பாவத்துக்காக அவர் மரித்ததால் அந்த பாவத்தின ஆணி வேர் எது என்பதை ஆராய்ந்து உண்மையை தேவனின் சமூகத்தில் அமர்ந்து அராய்ந்து அறிந்து தேவ வழி காட்டுதலின்படி செயல்பட்டால் சாத்தனின்
தந்திரங்களை அடியோடு ஒழித்து நம்போல் உண்மையை அறியமுடியாமல் இரட்சிப்ப பெறமுடியாமல் தவிக்கும் அநேகரை நாம் தப்புவிக்க முடியும் என்பது நான் அறிந்த உண்மை!
உண்மையை அறியும் வாஞ்சை இருந்தால்போதும் அவர்களுக்கு பதில் கொடுக்க ஆவியானவர் ஆயத்தமாக இருக்கிறார்!
ஒரு கொலை நடந்து அதில் அரசியல்வாதிகள் யாராவது சம்பந்தபட்டிருந்தால யார் உண்மையான குற்றவாளி என்பதை அறியவிடாமல் தடுக்கும் பொருட்டு அந்த கேசை அதிகம் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவிடாமல் போலீசுக்கு பணம் கொடுத்து அமுக்க பார்ப்பார்கள
அதுபோல் இங்கும் இயேசுவின் மரணத்தில அடிப்படை காரணியான சாத்தான் உண்மைகளை அறியவிடாமல் தடுத்து தந்திரமாக வஞ்சிக்கிறான்.
என்போன்ற எந்த மனுஷனும் எனக்கு எதிரி அல்ல! எனது ஒரே எதிரி தேவனின் எதிரியாகிய சாத்தானே!
-- Edited by SUNDAR on Monday 17th of November 2014 02:37:27 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கேன்சர் கட்டிக்கு வெளிப்புற மருந்து பூசி குணப்படுத்திவிட முடியாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.
அதேபோல் எந்த ஒரு பிரச்சனையானாலும் அதன் அடிப்படை வேர் என்ன என்பதை ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக தீர்வு தேடினால் அந்த தீர்வு தற்சமயத்துக்கு ஒரு தீர்வாக தோன்றினாலும் அதன் பலன் நீண்ட நாள் நிலைப்பது இல்லை.
அதேபோல் "இயேசு பாவங்களுக்கு மரித்தார்" என்ற உண்மையை மாத்திரம் அறிந்துகொண்டு அவர் யார்? அவர் ஏன் பாவங்களுக்கு மரிக்கவேண்டும்? பாவத்தின் ஆணி வேறு எது அதை எப்படி பிடுங்க முடியும்? என்ற அடிப்படை உண்மையை அறியாமல் ஒருவர் வாழும்வரை அவரால் தேவனுக்கு என்ற
பிள்ளையாக வாழ்த்து எந்த ஒரு காரியத்தையும் சாதித்துவிட முடியாது.
இயேசுவின் மரணத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்பதுபோல் போதிக்க வைத்து மனுஷனை தான் தேவனுக்காக செய்யவேண்டிய கடமையை
அறியவிடாமல் தடுப்பது சாத்தானின் மிகப்பெரிய தந்திரம்.
இயேசுவின் மரணத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்றால் இயேசு தன வாழ் நாளில் அனேக இடங்களில் என் வார்த்தையை கைகொள்ளுங்கள் / என் கற்பனையை கைகொள்ளுங்கள் என்று சொன்னதோடு அல்லாமல் மறித்து உயிர்த்தபின்னும்
வெளி 22:7இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
என்று போதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே சாத்தனின் எவ்வித தந்திரத்தினாலும் இருதயம் மழுங்கி போகாமல் தேவனுடைய கற்பனைகளை கைகொள்ள பிரயாசம் எடுப்போமாக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எத்தனையோ காலங்கள் கடந்து போகிறது ஆனால் இன்னும் அநேகர் சாத்தானின் தந்திரங்களை சரியாக அறியாமல் தவறான கோட்பாட்டில் சாத்தானின் தந்திரத்தில் கட்டுண்டு கிடப்பதால் அவர்கள் உணர்வடையும் பொருட்டு மீண்டும் இந்த திரி பார்வைக்கு வைக்கப்படுகிறது
தேவன்தாமே அவர்கள் உள்ளம் திறந்து உண்மைகளை அறிந்துகொள்ள கிருபை செய்வாராக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)