பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆளுகை செய்யகூடிய மனிதன் ஆளுகை தன்மையை இழந்தது கீழ்படியாமையால் என்று சொன்னால் மிகையாகது.
16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
தேவன் சொன்ன கட்டளைக்கு மனிதன் கீழ்படிய மறந்த படியால்முதன் முதலில் தேவனுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளபட்டான் என்று அறிகிறோம்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
தேவன் கொடுத்த அருமையான ஆளும் தன்மையை மனிதன் இழந்தபடியால் தன வாழ்நாளெல்லாம் அடிமையின் ஸ்தானத்துக்கு தள்ளபட்டான். எனவேதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே உலகத்திற்கு வந்தார் என்று வேதம் சொல்லுகிறது.
லூக்கா 19 :10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
ரோமர் 5 :19.
அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
1 சாமுவேல் 15 :3.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
ஆனால் சவுல் செய்தது என்ன ?
9. சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
இதினால் தேவனுக்கு கோபம் வந்தது அவன் ஆளுகை செய்ய கூடிய அதிகாரத்தை இழந்தான் என்று வேதம் சொல்கிறது.
1. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
தேவனாகிய கர்த்தர் மனிதனிடத்தில் எதிர்பார்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அவருடைய சத்தத்திற்கு கீழ்படிவது. ஆனால் மனிதன் அதை தவிர மற்ற எல்ல காரியங்களை செய்தாலும் கூட கீழ்படியாவிட்டால் இம்மையில் மட்டும் அல்ல மறுமையிலும் அவனுக்கு இடம் கிடைப்பது அரிதுதான்.
மத்தேயு 7 :21.
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
ஆப்ரகாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தபடியால் பெரிய ஜாதிகளுக்கு தகப்பனாகவும் பெரிய பெரிய ஆசிர்வாதங்களையும் பெற முடிந்தது.
மோசே கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தபடியால் இஸ்ரேல் ஜனங்களை வழி நடத்த தேவன் கிருபை கொடுத்தார்.
தாவிது கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தபடியால் ராஜ்யங்களையும் இருதயத்துக்கு ஏற்றவன் என்ற சாட்சியையும் பெற முடிந்தது.
சிம்சோன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்த வரைக்கும் பெரிய பலசாலியாகவும் அநேகருக்கு ஆச்சர்யமாகவும் கர்த்தர் வைத்து இருந்தார்.
பவுல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தபடியால் பவுலை கொண்டு கர்த்தர் செய்தவைகள் ஏராளம்.
இப்படி அநேகரை சொல்லி கொண்டே போகலாம்.
இன்றைக்கு மனிதனுடைய எல்ல பிரயாசங்களும் அவனுடைய வாய்காகதானே அவன் மனதுக்கு நிம்மதியில்லை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
மனிதன் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கும்போது தேவன் அவனுக்குரிய எல்ல தேவைகளையும் கர்த்தர் சந்திப்பார். சந்தித்தும் இருக்கிறார்.
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்தால் போதும் எல்லாவற்றிலும் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் எல்ல நேரங்களயும் ஞானமாய் நடக்க முடியும் எல்ல ஆசிர்வாதங்களையும் பெற்று கொள்ள முடியும்.
தொடரும்............................
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
இயேசு கிறிஸ்து அனேக உவமைகளினால் பரலோக ராஜ்யத்தை குறித்து பேசி இருக்கிறார். அவைகளில் ஒன்றாய் நான் இங்கு குறிபிடுகிறேன்.
லூக்கா 14 அதிகாரம்
16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
இதற்கு ஒப்பனையாக இன்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூட தம்முடைய ரத்தத்தால் மீட்கப்பட்ட பிள்ளைகளை தம்முடைய விருந்தாகியா பரலோக ராஜ்யத்திற்கு வரும்படி அழைப்பதற்கு தம்முடைய ஊழியகாரர்களை அனுப்புகிறார்.
ஆனால் அன்று நடந்து போல இன்றும் அநேகர் சாக்கு போக்கு சொல்கிறார்கள்.
18. அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19. வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
20. வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
இவர்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் அவர்கள் அந்த அழைப்பிற்கு இணங்கி போய் இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறி விட்டார்கள்.
இதினால் நடந்தது என்ன ?
21. அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
அந்த எஜமானுக்கு கோபம் வந்தது அவர்கள் கீழ்படியாத காரணத்தினால் அவர்களுக்கென்று ஆயத்தமாக்கப்பட்டு இருந்த ஒரு அருமையான் ஸ்லாகியத்தை இழந்தார்கள்.
இன்றைக்கும் அப்படிதான் நடந்து கொண்டு இருக்கிறது. தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளைகளுக்காக அயதமாக்கபடுகிற பரலோக ராஜ்யத்திற்கு வரும் தகுதியை தெரிந்தோ தெரியாமலோ இழந்து கொண்டு இருக்கிறார்கள்.
தேவனுடைய எல்ல கட்டளைகளும் எல்ல நேரங்களிலும் கைகொள்ள முடியாவிட்டாலும் தேவனுடைய கிருபையால் அவருடைய துணை கொண்டு அவைகளுக்கு கீழ்படியாமல் இந்த உலகம் அப்படிதான் இங்கு இப்படிதான் நடக்கவேண்டும் இல்லையேல் வாழ முடியாது. என்று ஆண்டவரிடமே சாக்கு போக்கு சொல்கின்ற அநேகரை பார்க்க முடிகிறது.
இப்படி சொல்வதினால் யாருக்கு நஷ்டம் வர போகிறது. ஆண்டவருக்கா..?
சாக்கு போக்கு சொல்லும் மனிதர்களுக்குத்தான்.
முடிவு:
சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு ஆண்டவருடைய கட்டளையை மீறக்கூடாது.
மனுஷகுமாரனாய் வந்த இயேசு கிறிஸ்துவும் கூட எல்லாவற்றிலும் எப்போதும் கீழ்படிந்தவராய்
நமக்கு முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டியுள்ளார். நாம் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படியும்போது நிச்சயமாய் தேவன் சொல்லி முடியாத ஈவ்வுகளால் நம்மை நடத்துவது உறுதி.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
பிறரோடு பொய்யை களைந்து உண்மையை மட்டும் பேசுகிறீர்களா?
சபையில் ஸ்திரிகள் பேசகூடாது என்ற கட்டளைக்கு கீழ்படிகிறீர்களா?
போன்ற கேள்வியை கேட்டால், அதற்கும் சரியான விளக்கமோ, ஆம் கீழ்படிகிறேன் என்ற உறுதியான பதிலோ இல்லை.
இப்படி எவ்விதத்திலும் தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிய விரும்பாமல் இருந்துகொண்டு "நாங்கள் வேத வசனங்களின்படி வாழ்கிறோம்" என்று பேசிக்கொண்டு அலைவதை பார்க்க சிரிப்புதான் வருகிறது.
கீழ்படிதலில் பொருள் என்னவென்றே புரியாமல் போய்விட்டது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)