நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன் என்னுடைய தாய், தந்தை மற்றும் என்னுடைய முற்பிதாக்கள் எல்லாரும் இந்துக்கள்தான். என்னுடைய தாயார் ஒரு சத்துணவு பள்ளியில் வேலை செய்து வந்த நேரத்தில் அவர்களுடன் கூட வேலை பார்த்த வயதான ஒரு தாயார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்வதுண்டு. நாட்கள் ஆகா ஆகா இயேசு கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட்டு என் தாயார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டார்கள். மற்றபடி நாங்கள் எப்போதும் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஆனால் என் தந்தைக்கு இது தெரியாதபடியால் என் தாய் என் தந்தைக்கு தெரியாமல் ஆலயம் செல்வதுண்டு. நானும் என் சகோதிரிகளும் என் தாயோடு செல்வது வழக்கம் என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் நாங்கள் ஆலயத்திருக்கு சென்று வந்ததை என் தந்தையிடம் சொல்லி விடுவார்கள். இதினால் நாங்கள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்றால் உடம்பில் அடி வாங்குவதகு தெம்பு இருந்தால் மட்டுமே போக வேண்டிய நிலை இருந்தது.
நாங்கள் ஆலயத்திற்கு போன நாட்களில் எல்லாம் நிறைய அடியும் ஒதையும் வாங்கி இருக்கிறோம். ஆனாலும் என் தாய்க்கோ ஆண்டவர் மேலுள்ள அதிகமான் அன்பினால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஆலயத்திற்கு சென்று கொண்டுதான் இருந்தார்கள். எனக்கோ ஆலயத்திற்கு போக ஆசை இல்லாதிருந்தபடியால் சில நேரங்களில் நான் ஏதாகிலும் பொய் சொல்லிவிட்டு போய் விடுவேன். ஞாயிற்றுகிழமைகளில் சம்பளம் குடுக்காவிட்டாலும் பரவாயில்லை நான் வேலைக்கு வருகிறேன் என்று அனேக நாட்கள் போனதுண்டு. வேலையில் மேலுள்ள ஆவலினால் அல்ல..! ஆலயத்திற்கு போக மனம் இல்லாதபடியால்...!
ஒருவேளை வேற வழியில்லாமல் நான் ஆலயத்திற்கு போய் விட்டால் வேத புத்தகத்தை நான் எடுத்து கொண்டு போக மாட்டேன். நான் ஆலயத்தில் வந்து உட்கார்ந்ததும் என் சகோதரி வேதாகமத்தை கொண்டு வந்து எனக்கு முன்பாக வைத்து விடுவார்கள். அந்த வேதாகமத்தை பார்த்தவுடன் நான் உட்கார்ந்திருக்கும் இடத்தை விட்டு சற்று பின்பாக தள்ளி உட்கார்நதுகொள்வேன். எனக்கோ அவ்வளவு வெட்கம்.
இப்படியாக ஏழு வருடங்கள் போய் விட்டது. அந்நாட்களில் எல்லாம் நான் என் வீட்டிற்கு அருகில் உள்ள சபையில்தான் தூங்குவது வழக்கம். என்னுடைய வீடு மிகவும் சிறியதாய் இருந்தபடியால்...!
சபையில் நானும் பாஷ்டருடைய மகனும் படுத்து கொண்டிருந்தோம் ஏறக்குறைய இரண்டு மணியளவில் பயங்கரமான சத்தம் கேட்டு நான் எழுந்து விட்டேன். அவனோ தூங்கி கொண்டிருந்தான். நான் பயத்தில் எழுந்து உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். நான் சபைக்கு உள்ளே தான் இருந்தேன். ஆனால் நான் பார்க்கும் போது எனக்கு வானம் நன்றாக தெரிந்தது.
அங்கே இருந்து ஒருவர் என்னோடு பேசுகிற சத்தத்தை கேட்டேன். இது கனவு அல்ல நான் நன்றாக அந்த சத்தத்தை என் காதுகளால் கேட்டேன். அவர் பேசின சத்தத்தை இதுவரைக்கும் நான் எங்குமே கேட்டதில்லை என்னால் அவைகளை வார்த்தையால் சொல்லவும் முடியவில்லை என் முழு உடம்பும் கலகலத்து போய்விட்டது.
நான் எங்கு இருக்கிறேன் என்ற உணர்வே எனக்கு சுத்தமாக இல்லை அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் முச்சு விடுகிறேனா இல்லையா என்றா உணர்வு கூட எனக்கு தெரியவில்லை. அந்த திறந்த வானத்தில் இருந்து என்னை பார்த்து அவர் பேசினார். அவர் பேசினது எனக்கு நன்றாய் புரிந்தது எனக்கு அந்த சத்தத்தை கேட்கும் போது மிகவும் பயந்து நடுங்கினேன். ஒரு சில வார்த்தைகளை பேசின பின்பு அவரை என்னால் மறுபடியும் பார்க்க முடியவில்லை.
என் அருகில் ஒருவரை கண்டேன். ஆனால் அவரை பார்க்கும் போது என்னக்கு பயம் வரவில்லை அவரை பார்த்ததும் எனக்கு எல்ல பயமும் போய்விட்டது. ஆனாலும் அந்த நடுக்கம் உள்ளக்குள் இருக்கத்தான் செய்தது. என் அருகில் இருந்தவர் என் கைகளை பிடித்து கொண்டு தன்னோடு வரும்படி என்னை அழைத்தார்.
இப்போது நான் படுத்து கொண்டிருக்கும் என்னையும் என் அருகில் அந்த பாஸ்டர் பையனையும் பார்த்தேன். இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் நான் படுத்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவர் என் கையை பிடித்ததும் ஒரு இனம்புரியாத ஒரு அன்பு என்னை பற்றி பிடித்தது.
எனக்கு எல்ல உணர்வுகளும் அப்போது இருந்தது. அவர் என்னை ஒரு இடத்திற்கு அழைத்து கொண்டு போனார். அவர் அங்கு என்னோடு இருந்து செய்தவைகளை விரைவில் பதிகிறேன்.
தொடரும்..................................
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
என் அருகில் இருந்தவர் என்னை வெகு தொலைவில் அழைத்து கொண்டு போனார் ஆனால் கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள்ளாக ஒரு கிராமத்தை காட்டினார். அந்த கிராமத்திற்குள் நாங்கள் போகும் போது மிகவும் இருட்டாக இருந்தது. ஆனால் என்னால் என்னோடு கூட வருகிறவரை என்னால் பார்க்க முடிந்தது.
நான் படுத்திருத சபையில் என் சரிரத்தையும் பார்க்க முடிந்தது. இங்கு இப்போது என்னால் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முடிந்தது. ஆனால் நான் சரிரத்தில் இருந்தேனோ அல்லது இல்லையோ எனக்கு தெரியவில்லை ஆனால் என்னால் உண்மையாக எல்லாவற்றையும் உணர முடிந்தது.
நாங்கள் அந்த கிராமத்திற்குள்ளாக நடந்து சுற்றி வந்து பார்த்து கொண்டிருந்தோம் மிகவும் இருட்டாகத்தான் இருந்தது. ஆனல் என்னால் எப்படி அந்த இருட்டிலும் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது என்று தெரியவில்லை. நாங்கள் அந்த கிராமத்தின் ஒரு புறம் நுழைந்து மறுமுனைக்கு சென்றோம் அங்கே ஒரு பெரிய ஆலமரத்தை கண்டோம்.
அந்த ஆலமரத்தில் இருந்த ஒவ்வொரு விழுதும் நேராக இழுத்து பூமியிலே ஒரு கல்லை வைத்து கட்ட பட்டு இருந்தது. ஒவ்வொரு விழுதும் ஒரு கல்லுடன் பூமியில் கட்டப்பட்டு இருந்தது. என்னோடு கூட இருந்தவர் என் அருகில் நெருங்கி வந்து என் கையில் ஒரு கத்தியையும் கொடுத்தார் அந்த கத்தியானது ராஜாக்கள் வைத்திருக்கும் கத்தியை போல் இருந்தது. ஆனால் அவைகளின் இரண்டு முனையும் மிகவும் மின்னியது. இரண்டு புறமும் மிகவும் கூர்மையாக இருந்தது.
என்னை அறியாமலே என் உதடுகளில் இருந்து எண்ணிலடங்கா ஸ்தோத்திரங்கள் வந்து கொண்டே இருந்தது. என் உடம்பு முழுக்க அக்கினி பற்றி எரிவது போல் இருந்தது. ஆனால் அவைகளினால் எனக்கு எந்த பாதிப்பும் நேரிடவில்லை.
என்னை அவர் கல்லினால் கட்டப்பட்டு இருந்த விழுதுகளிடத்தில் கொண்டு வந்து இந்த கட்டானது ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக கட்ட பட்டு இருக்கிறது என்று கூறி அதை என் கையில் உள்ள பட்டயத்தினால் வெட்டும் படி கூறினார். நான் சொன்னபடியே செய்தேன். அப்போது அந்த குறிப்பிட்ட இடம் வரைக்கும் பயங்கரமான வெளிச்சம் உண்டானது.
தொடரும்........
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
இப்படியாக ஒவ்வொரு கட்டப்பட்டு இருந்த விழுதையும் ஒவ்வொரு காரியத்திற்காக என்று சொல்லி அவைகளை வெட்டும் படி அவர் என்னோடு சொன்னார் அப்போது அந்த வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என்னிடத்தில் இருந்தது.
மற்றபடி யார் இப்படி செய்தார்கள் அல்லது எதற்காக இப்படிய செய்யபட்டுள்ளது என்ற எந்த எண்ணமும் என்னிடத்தில் எழ வில்லை. அவர் காரணங்களை சொல்ல சொல்ல நான் வெட்டி கொண்டே வந்தேன். ஒவ்வொரு விழுதும் வெட்ட வெட்ட அந்த வெட்டுகின்ற இடம் பயங்கர வெளிச்சமாகிகொண்டே வந்தது.
நாங்கள் இருவரும் அப்படியே ஒரு வட்டமான வடிவத்தில் வந்து கொண்டு இருந்தோம் எங்களுக்கு முன்பாக இருக்கும் இடம் மிகவும் இருட்டாகவும் எங்களுக்கு பின்பாக இருக்கும் இடம் மிகவும் வெளிச்சமாகவும் இருந்தது. நாங்கள் முன்னோக்கி சென்று கொண்டும் நான் ஒவ்வொன்றாக வெட்டிக்கொண்டும் சென்று கொண்டிர்ந்தோம்.
இவைகள் நடந்து கொண்டு இருக்கும் பொது என் நாவில் இருந்து ஸ்தோத்திரங்கள் குறையாமல் மிகவும் அதிகமாகவும் வந்து கொண்டு இருந்தது. ஒவ்வொருமுறையும் வெட்டும் பொது வெளிச்சம் வந்ததை பார்த்து நான் மிகவும் சந்தோச பட்டு அவரை பார்த்தேன். அங்கு நான் செய்தது என்னவென்று எனக்கு புரியவில்லை எல்லாம் அவருடைய வல்லமையால் தான் நடந்தது. அவர் சொன்னதை நான் செய்தேன். அவருக்கே மகிமை உண்டாவதாக....
நாங்கள் முழுவதுமாக அந்த மரத்தை சுற்றி வந்த பிறகு அந்த இடம் முழுமையாக வெளிச்சத்தினால் நிரம்பி இருந்தது. அந்த பகுதி முழுவதும் எங்கும் வெளிச்சம் சுற்றிலும் பிரகாசித்தது.
என்னுடைய வலது பக்கமாக நான் திருபியதும் எனக்கு மிகவும் நன்றாக தெரிந்த முகம்போல் ஒருவரை கண்டேன். ஆனால் என்னால் அவர் யார் என்று விளங்கி கொள்ள முடியவில்லை அப்போது என் அருகில் இருந்தவர் என்னை நோக்கி பார்த்தார் நான் அவரை பார்த்து இது யார் என்று கேட்டேன் அதற்க்கு அவர் இது மனுஷ கொலை பாதக ஆவி என்று கூறினார் ஆனால் எனக்கு அப்போது அதற்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லை இருந்தாலும் நான் அதற்குமேல் வேறொன்றும் கேட்கவில்லை.
அதன் பிறகு என்னோடு இருந்தவரையும், பார்க்க முடியவில்லை. அந்த மனுஷ கொலை பாதக ஆவியையும் என்னால் பார்க்க முடியவில்லை. எனது இடது பக்கமாக திரும்பி நன் பார்த்த கட்சி என்னை அதிர செய்தது. அதை பார்த்து நான் உறைந்து போனேன்.
தொடரும்..........................
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
சற்று நேரத்தில் என் அருகில் இருந்தவரையும் காணவில்லை மனுஷ கொலை பாதக ஆவியும் காணவில்லை. நான் எனக்கு இடது புறத்தில் பார்த்தவைகள் என்னவென்றால் என் கண்களுக்கு முன்பாக வானம் திறந்து இருந்தது. அதில் இருந்து ஆயிரக்கனக்கானோர் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அது எப்படி இருந்தது என்றால் ஒரு பெரிய கம்பனியில் மேலிருந்து கீழே வருவதற்கு ஒருபுறம் படி இருக்கும். இன்னொருபுறம் வாகனங்கள் இறங்குவதருக்கு வசதியாக சறுக்கலாக இருக்கும். நான் பார்த்தது அவர்கள் படியில் இறங்குவதுபோல் அல்ல சறுக்கலான பாதையில் மெதுவாக வரிசையாக மிகவும் அழகாக நேர்த்தியாக வென்னுடை அணிந்தவர்களாக இறங்கி கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய ஆரம்பம் எங்கே என்று என்னால் சரியாக பார்க்க முடியவில்லை ஆனால் என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக தெரிந்தார்கள் அவர்களுடைய ஒரு முனை வானத்தில் இருந்தும் இன்னொரு முனை நான் நிற்பதுக்கு சற்று முன் உள்ள அந்த ஆலமரம் வரைக்கும் இருந்தது. அவர்களுடைய வரிசை சரியாக நேர் கோடு போட்டது போல் இருந்தது.
சரியாக நாடு மத்தியில் ஒரு வெள்ளை சிங்காசனம் இருந்தது. இப்படி நான் பார்த்து கொண்டிருக்கையில் அந்த வெண்மை மயமான கூட்டத்தில் இருந்து ஒரு சத்தம் வந்தது. அந்த சத்தம் என்னவெனில் "நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பகுதியில் சாத்தனை வென்று ஜெயம் எடுத்தார்"வாருங்கள் ஆர்பரிபோம் என்பதே
இதை பார்க்கும் போது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஆனால் என்னால் கொஞ்ச நேரம் தன அதை பார்க்க முடிந்தது. கொஞ்ச நேரத்திற்குள்ளாக அவைகள் எல்லாம் மறைந்து போயின. நான் இப்போது என் கண்களை திறந்து பார்க்கும்போது நான் என் சபையில் எழுந்து உட்கார்ந்த நிலையில் தான் இருந்தேன்.
ஆனால் என்னுடைய இருதயத்தின் படபடப்பு மிகவும் அதிகமாக துடித்து கொண்டு இருந்தது. என்னால் அதை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை அதற்கு மேல் என்ன செய்வதென்றும் எனக்கு தெரியவில்லை அதன் பின்பு எப்படி நன் மறுபடியும் படுத்தேன் எப்படி தூங்கினேன் என்பது எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.
மறுநாள் காலையில் நடந்த எல்லாவற்றையும் என்னுடைய பாஸ்டர் இடம் கூறினேன் அவர்களோ மிகவும் ஆச்சர்யபட்டு உன்னுடனே வானத்தில் இருந்து ஒருவர் பேசினார் என்று சொன்னியே அவர் என்ன பேசினார் என்று கேட்டார். அவர் பேசினது மிகவும் நன்றாக புரிந்த எனக்கு அதை சொல்ல தெரியவில்லை ஏனென்றால் அது வரைக்கும் நான் வேதம் வாசிப்பதும் அதில் வசனம் எங்கு இருக்கிறது என்றும் எனக்கு தெரியாது.
அவர் என்னிடத்தில் சொன்னது ஒரு வசனம் தான் என்பதை மூன்று மாதங்கள் கழித்துதான் என்னால் கண்டு பிடிக்கப்பட்டது. இது நடந்து ஒரு சில நாட்களுக்குள்ளாக நான் ஞானஸ்நானம் எடுத்தேன். அதன் பிறகு வசனம் படிக்கச் வேண்டிய ஆவல் எனக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.
இது வரைக்கும் வேதத்தை கையில் தொடுவதற்கே வெட்க பட்டு கொண்டிருந்தேன் நான் என்னை அறியாமலே அதை அதிக நேரம் படிக்க ஆரம்பித்தேன். எப்போது பார்த்தாலும் எறும்பு எப்படி இனிப்பை சுற்றியே இருக்குமோ அதுபோல நான் சபையிலே இருக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய உடை மாற்றுவதற்கு மட்டுமே நான் வீட்டிற்கு போவேன் மற்ற படி எப்போதும் சபையிலேயே இருக்க ஆரபித்தேன். இப்படி நான் வேதத்தி படித்து கொண்டிருக்கும்போது நான் கண்ட காட்சி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தொடரும்....................
-- Edited by Stephen on Thursday 11th of March 2010 03:12:45 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
நான் வேதத்தை படித்து கொண்டிருக்கும் போது எனக்கு அவைகள் சரியாக புரியவில்லை இருந்தாலும் அதில் உள்ள சம்பவங்களும் உவமைகளும் படிப்தற்கு சுலபமாக இருந்தபடியால் அதை படித்து கொண்டிருந்தேன்.
எனக்கு புரிந்ததோ இல்லையோ தெரியவில்லை ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.
இப்படி படித்து கொண்டிருக்கும்போது என் கண்களுக்கு முன்பாக ஒரு வசனம் மாத்திரம் மிகவும் பளபளப்பாக மின்னியது.
அது என்னவென்று நான் படிக்கும்போதே என்னுடனே வானத்தில் இருந்து பேசினார் என்று நான் சொன்ன வார்த்தை அதுதான் என்பதை புரிந்து கொண்டேன்.
அந்த வசனம் இதுதான்.
ஆதியாகமம் - 17 ம் அதிகாரம்
நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
இந்த ஒரு வார்த்தை மட்டும் தான் என் கண்களுக்கு முன்பாக மின்னியது மற்றவைகள் எனக்கு தெரியவில்லை அவைகள் என் நினைவில் இல்லை.
இவைகளுக்கு பின்பு ஒரு சில இரவுகளில் என்னுடனே அருகில் இருந்தார் என்று நான் சொல்லி இருந்தேனே அவர் எனக்கு ஒரு நாள் விசுவாசத்தை குறித்து போதகம்பண்னினார்.
இன்னொரு நாள் இரவில் வைராக்கியத்தை குறித்து போதகம்பண்னினார். அதன் பிறகு எனக்கு வேதத்தின் மேல் அளவுகடந்த பிரியம் ஏற்பட்டது. இதனால் நான் இன்னும் ஆண்டவரை பற்றி அதிகமாய் தெரிந்து கொள்ள ஆசைபட்டேன்.
பரிசுத்த ஆவி என்றால் என்ன அது எப்படி இருக்கும் ஆவியில் நிறைதல் என்றால் என்ன அப்படி நிறையபடும் போது என்ன நடக்கும் அது எப்படி பட்ட உணர்வு என்றும் அதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் வந்தது.
அதற்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியாத படியால் ஆவியில் நிரம்பும் எல்லாரிடமும் சென்று அது என்ன எப்படி இருக்கும் என்று அனேக கேள்விகளை கேட்டு கொண்டிருந்தேன்.
அநேகர் அனேக விதமான் பதில்களை சொன்னார்கள் எனக்கோ ஆவல் அதிகமாய் ஆனது. அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையே எப்போதும் என் மனதில் ஓடி கொண்டிருந்து.
ஒரு நாள் வந்தது.அது ஏன் வாழ்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாகவும் தருணமாகவும் மாறியது.
தொடரும் ...............................
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
பரிசுத்த ஆவி என்றால் என்ன அது எப்படி இருக்கும் ஆவியில் நிறைதல் என்றால் என்ன அப்படி நிறையபடும் போது என்ன நடக்கும் அது எப்படி பட்ட உணர்வு என்றும் அதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் வந்தது.
அதற்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியாத படியால் ஆவியில் நிரம்பும் எல்லாரிடமும் சென்று அது என்ன எப்படி இருக்கும் என்று அனேக கேள்விகளை கேட்டு கொண்டிருந்தேன்.
அநேகர் அனேக விதமான் பதில்களை சொன்னார்கள் எனக்கோ ஆவல் அதிகமாய் ஆனது. அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையே எப்போதும் என் மனதில் ஓடி கொண்டிருந்து.
ஒரு நாள் வந்தது.அது ஏன் வாழ்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாகவும் தருணமாகவும் மாறியது.
தொடரும் ...............................
சகோ. ஸ்டீபன் உங்களை ஆவியானவர் எவ்விதத்தில் அபிஷேகித்தார், ஆவியானவர் மூலம் பெற்ற அனுபவத்தையும் தொடர்ந்து எழுதுங்கள்.
அறிய ஆவல்!
-- Edited by இறைநேசன் on Monday 15th of March 2010 07:01:44 PM
ஒரு ஞாயிற்றுகிழமை எப்போதும் போல சபைக்கு சென்றேன் சபை முடிந்ததும் என்னடைய ஊழியக்காரரின் மனைவியிடம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பற்றி பேச வேண்டும் என்று நினைதித்ருந்தேன்.
ஆனால் எனக்கோ கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அதற்கு காரணம் அது வரைக்கும் ஸ்டீபன் என்றால் அடங்காதவன் , கீழ்படியாதவன், திமிருபிடிதவன், என்று தோரணையில் தான் நான் சபையில் இருந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் எனக்கு பரிசுத்த ஆவியின் மேலுள்ள அலாதி பிரியத்தினால் என்ன நடந்தாலும் எப்படி நினைச்சாலும் பரவாயில்லை என்று நான் அவர்களிடத்தில் அதை பற்றி பேசும்படி தனியாக சென்றேன்.
நான் அவர்களிடத்தில் மெல்ல தயங்கி தயங்கி ஆண்டி நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டேன். நான் அப்படி கேட்டதும் என்னை அவர்கள் பார்த்து ஆச்சர்யத்துடன் நிச்சயம் கர்த்தர் தருவார்.
அவர் தம்மிடத்தில் கேட்கிற யாவருக்கும் பரிசுத்த ஆவியை தருவார் என்று சொல்லி ஒரு சில வசனங்களை சொல்லி அடுத்த வாரம் இதை பற்றி சபையில் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்கள் எனக்கோ மிகுந்த சந்தோஷம் . எனக்கு அடுத்த வாரம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து கொண்டிருந்தேன்.
சபை தொடங்குவதற்கு முன்பாக என்னுடைய ஆண்டி யார் யார் பரிசுத்த ஆவி பெறலையோ , யாரெல்லாம் பரிசுத்த ஆவி பெற்று கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எல்லாம் தங்கள் கைகளை உயர்த்தி காண்பிக்கும் படியாக கூறினார்கள் முதலாவது உயர்ந்தது என்னுடைய கரம்தான் என்னுடன்கூட ஒருசிலரும் கரத்தை உயர்த்தினார்கள்.
எங்களை பார்த்து நீங்கள் எல்லாரும் சாயங்காலம் 3 .30 மணிக்கு இதற்காக வரும்படியாகவும் ஜெபதொடும் விசுவாசதொடும் வாஞ்சையோடும் வரும்படி கூறினார்கள். நான் மிகுந்த சந்தோசத்துடன் வீட்டிற்கு சென்றேன். ஆனால் எனக்கோ ஒரு அதிர்ச்சி காத்து கொண்டிருகிறதை அறியாமல் சென்று கொண்டிருந்தேன்.
அது என்னவென்றால் ஒரு ஊழியக்காரர் தான் நடத்துகிற அனாதைகள் காபகத்திராகவும் குழந்தைகள் காபகத்திர்காகவும் ஒவ்வொரு மாதமும் காணிக்கையை சேகரிக்கும் படி எங்கள் பகுதிக்கு வருவார்கள் அப்படி அவர் வரும்போதெல்லாம் நான் தான் அவரை வாகனத்தில் கூடிக்கொண்டு போய் வருவேன்.
ஆனால் இன்று நான் 3 .30 மணிக்கு சபைக்கு போக வேண்டியுள்ளதால் அவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தேன். கொஞ்ச நேரதிருக்கு பிறகு அவரிடத்தில் சொல்லியும் விட்டேன் ஆனால் அவரோ நாம் சீக்கிரம் போய் சீக்கிரத்தில் வந்து விடலாம் என்று என்னை அழைத்து கொண்டு போய்விட்டார்.
தொடரும்.......................
-- Edited by Stephen on Wednesday 17th of March 2010 08:48:00 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
வேறுவழி இல்லாமல் நான் அவருடன் இருந்தாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் என் சபையிலே இருந்தது ஐயோ இந்நேரம் எல்லாரும் வந்துஇருப்பார்களே யார் யார் பெற்று கொண்டார்களோ தெரியவில்லையே என் உள்ளமோ மிகவும் துடித்து கொண்டு இருந்தது. எப்படியோ ஒருவேளையாக முடிந்து நான் மிகவும் வேகவேகமாக ஓடி வந்து நேராக சபைக்கு ஓடினேன்.
என்னுடைய ஆண்டி என்னை பார்த்ததும் ஏம்ப்ப லேட் இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கிறது நான் கிளம்ப போகிறேன் என்று சொன்னார்கள் எல்லாரும் நேராக் முட்டி போட்டு கொண்டு ஜெபித்து கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு சில அபிஷேகத்தை பெற்று கொண்டு ஆவியில் நிரந்து கொண்டு இருந்தார்கள் அதை நான் பார்த்ததும் எனக்கோ மிகவும் சந்தோசமாகவும் ஒருபுறம் மிகவும் கவலையாகவும் இருந்தது.
ஏனென்றால் ஒருவேளை நானும் சீக்கிரமாய் வந்து இருந்தால் நானும் பெற்று கொண்டிருபெனோ என்று என்ன தொடங்கியது. நாங்கள் எல்லாரும் நேர் வரிசையில் முழங்காலிட்டு தேவனை துதித்து கொண்டிருந்தோம் என்னுடைய ஆண்டி ஒவ்வொருவர் தலையிலும் கை வைத்து அதற்காக ஜெபித்து கொண்டே வந்தார்கள் அதில் ஒருசிலர் புதிதாக அபிஷேகம் பெற்று மிகவும் சந்தோசமாய் ஆவியானவர் அவர்களுக்கு தந்தருளின பாஷைகளில் பேசினார்கள் அதை கேட்ட எனக்கோ மிகவும் ஆசையாகி போனது.
என் தலையிலும் கை வைத்து ஜெபித்தார்கள் ஆனால் எனக்கோ எந்த வித்தியாசமும் தெரியவில்லை இதனால் எனக்கோ மிகவும் வருத்தமாய் போனது. மறுபடியும் முன்பு போலவே எல்லார் தலையிலும் கை வைத்து ஜெபித்து கொண்டு வந்தார்கள் இடையிடையேஆவியானவர் உணர்த்தும் காரியங்களை அவரிடம் சொல்லி மனிப்பு கேளுங்கள் என்றும் சொல்லி வந்தார்கள் நான் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன்.
அப்போது என் மனதிற்குள் ஒரு எண்ணம் ஓடினது அதுஎன்னவேன்றால் முன்பெல்லாம் நான் ஆவியில் நிறைகிரவர்களை பார்த்து கிண்டல் பண்ணியிருக்கிறேன். அவர்களை பார்த்து சிறிதும் இருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு அந்த ஞாபகம் வந்தது உடனே நான் அதை அறிகை செய்து நான் தெரியாமாயில் அப்படி செய்து விட்டேன் என்னை மன்னிக்கும்படியாக ஜெபமும் செய்தேன்.
ஆனாலும் எனக்கோ எந்த மாறுதலும் நடக்கவில்லை.
வெளியில் சென்று வந்த களைப்பு ஒருபுறம் அபிஷேகம் பெறலையே என்ற ஏக்கமும் என்னை அதிக சொர்வுகுல்லாக்கியது. இதுதான் கடைசி நாம் யாவரும் கிளம்பலாம் என்று சொல்லி விட்டார்கள் எனக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை எப்படியாகிலும் பெறவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் ஓடிகொண்டிருந்தது.
அப்போதுதான் எனக்கு என் ஊழியக்காரர் சொன்னது ஞாபகம் வந்தது. அவர் ஒருமுறை பிரசங்கத்தில் தான் ஞானசானம் எடுத்த 14 ம நாள் அபிஷேகத்தை பெற்றேன் என்று கூறியது ஞாபகதிருக்கு வந்தது. உடனே நான் ஒரு மனிதனிடத்தில் கேட்பதுபோல் நான் கேட்க ஆரம்பித்தேன்.
அது என்னவெனில் ஆண்டவரே ஊழியர்களுக்கும் பெரிய ஆட்களுக்கும் தாம் அபிஷேகம் தருவீங்களா என்னை போன்ற சின்ன பசங்களுக்கு தரமாட்டிங்களா நான் ஞானசானம் எடுத்து இன்றோடு 18 நாட்கள் ஆகிவிட்டதே என்று கேட்டதுதான் தாமதம் என் கண்களுக்கு முன்பாக ஒரு பெரிய வெளிச்சம் தோன்றியது என் நாவுகள் என் control லை இழந்தது.
என்ன பேசுகிறேன் என்று எனக்கு புரியவில்லை ஆனால் என் உடம்பு முழுவதும் வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு ஆனந்தம் நிச்சயமாய் அதை பெற்றவர்களால் இதை புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
தொடரும்............
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
மிகவும் தத்ரூபமாகவும், படிப்பவர்களுக்கும் ஆவியானவரை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற வாஞ்சை வரும் வண்ணமாகவும் அமையபெற்ற தங்களின் பதிவு ஆவியானவரின் அபிஷேகம் பெற்றவர்களுக்கு நிச்சயம் புரிந்துகொள்ள கூடியதாகவும் அபிஷேகம் பெறாதவர்கள் அதை பெறவாஞ்சிக்கும் வண்ணமாகவும் அமைந்துள்ளது.
அறியவேண்டியவர்கள் அறிந்து, ஆவியானவருக்காக தனியாக பிரயாசப்பட்டு அவரை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் என்பதுவே எனது அவா!
இறைநேசன் எழுதியது ------------------------------------------------------------------------------------------------------ மிகவும் தத்ரூபமாகவும், படிப்பவர்களுக்கும் ஆவியானவரை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற வாஞ்சை வரும் வண்ணமாகவும் அமையபெற்ற தங்களின் பதிவு ஆவியானவரின் அபிஷேகம் பெற்றவர்களுக்கு நிச்சயம் புரிந்துகொள்ள கூடியதாகவும் அபிஷேகம் பெறாதவர்கள் அதை பெறவாஞ்சிக்கும் வண்ணமாகவும் அமைந்துள்ளது.
அறியவேண்டியவர்கள் அறிந்து, ஆவியானவருக்காக தனியாக பிரயாசப்பட்டு அவரை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் என்பதுவே எனது அவா! ----------------------------------------------------------------------------------------------------
ஆம் சகோதரரே என்னுடைய எண்ணமும் அதுதான் அதற்காகதான் என்னுடைய சாட்சியை இங்கு பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.
நான் அபிஷேகம் பெற்றதும் எனக்கு இருந்த மகிழ்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தையே தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் திரும்பி வீட்டிற்கு சென்றோம் என்னால் சும்மாவே இருக்க முடியவில்லை எனக்கு ஏதோ கோடி கணக்கில் புதையல் யாருக்குமே கிடைக்காதது எனக்கு கிடைத்தமாதிரி ஒரு சந்தோஷம் இருந்தது
நான் முன்பு யார் யாரிடதிலேல்லாம் பரிசுத்த ஆவியை குறித்து விசாரித்து கேட்டேனோ அவர்களிடத்தில் எல்லாம் ஓடி சென்று கர்த்தர் என்னை தம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகித்தார் என்று மிகவும் சந்தோசத்துடன் சொல்லி கொண்டிருந்தேன்.
என்னால் அதை அடக்கி வைக்க முடியவில்லை யாராவது ஜெபித்தால் நான் உடனே அங்கு போய்விடுவேன் ஏனென்றால் நான் ஜெபிக்க தொடங்கினதும் ஆவியில் நிரந்து விடுவேன் அப்படி நிறையும் போது எல்லையில்லாத மகிழ்ச்சி எனக்கு உண்டாகும் புதிதாக பிறந் கன்று குட்டியை போல நான் துள்ளி கொண்டிருந்தேன்.
சபைக்கு வரும் எல்லாரிடமும் இதை குறித்து சொல்லி நான் மகிழ்ந்தேன். யாரவது ஜெபிக்க் கூபிடால் ஓடி விடுவேன் பார்க்கும் இடமெல்லாம் ஜெபிக்க தோன்றினது. இதனால் ஏன் வாழ்கையில் அந்த நாள் என்றுமே மறக்க முடியாத நாளாக மாறினது.
அபிஷேகத்தை பெற்றவுடன் ஏன் வாழ்கையே மாறினது.
தொடரும்....................
-- Edited by Stephen on Thursday 18th of March 2010 10:33:28 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
அபிஷேகத்தை பெற்ற நாள் முதல் என்னுடைய அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் மாறியது. அதற்கு முன்பு வரை சபைக்கு போனதும் எப்போது என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோதரி முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோதரி என்று எப்போது சொல்வார்கள் என்றுதான் காத்து கொண்டிருப்பேன்.
ஏனென்றால் எனக்கு அங்கு நடப்பது எதுவுமே பிடிக்காது ஆனால் அபிஷேகம் பெற்ற பிறகு மிகவும் ஆவலாக சபைக்கு போக ஆரம்பித்தேன். பிரசங்கங்களை மிகவும் விரும்பி கேட்க ஆரம்பித்தேன். அப்படி கேட்கம் போது கர்த்தர் மனிதர்களிடத்தில் பேசினார் என்றும் நம்மிடத்திலும் பேசுவார் என்றும் யார் வேண்டுமானாலும் அவர் வார்த்தையை கேட்க முடியும் என்று கேள்விபட்டேன்.
இதனால் எனக்கு அவர் பேசுகிற சத்தத்தை கேட்க ஆசைப்பட்டேன். அவர் பேசினால் எப்படி இருக்கும் என்ற ஆவல் எனக்குள் ஏற்பட்டது. இதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஜெபிக்கும்போது என்னோடு பேசும் என்று எப்போதும் கேட்க ஆரம்பித்தேன். அதிகமாக வேதமும் வாசிக்க ஆரம்பித்தேன்.
கர்த்தர் பேசுகிறதை கேட்க முடியுமா அவர் எப்படி பேசுவர் என்று ஒருசிலரிடம் கேட்க ஆரம்பித்தேன். ஒருசிலர் சொனார்கள் அவர் தரிசனத்தில் பேசுவார் என்றும் சொப்பனத்தில் பேசுவார் என்றும் வேதத்தில் இருந்து பேசுவார் என்றும் ஊழியக்காரர்கள் மூலமாய் பேசுவார் என்றும் சொனார்கள்.
ஆனால் எனக்கோ அவருடைய சத்தத்தை நேரடியாக கேட்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அந்த நாளும் வந்தது என் ஆசையும் நிறைவேறியது.
தொடரும்...............
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
இப்படி என்னுடைய வாழ்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவத்துடன் ஓடிகொண்டிருந்தேன். அனேக நாள் நான் கர்த்தர் பேசுவதை கேட்கவேண்டும் என்று அதிக மணி நேரம் ஜெபித்ததுண்டு ஆனால் சோர்வுதான் மிஞ்சியது. இருந்தாலும் அவர் பேசுவதை கேட்க முடியும் என்ற நம்பிக்கை என்மனதில் அசையாமல் உறுதியாய் இருந்தது.
அந்நாட்களில் நான் இரண்டு சபைக்கு போய்கொண்டிருந்தேன். ஒன்று நான் வழக்கமாக போகிற சபை இன்னொன்று என்வீட்டிருக்கு மிகவும் அருகில் உள்ள என்னுடைய் அங்கிள் (uncle ) சபை நான் படுப்பது ஜெபிப்பது இருபது எல்லாமே என் அங்கிள் சபையில்தான்.
அந்த சபையை சுற்றிலும் தேவனை அறியாத மக்கள் இருந்தபடியால் எப்போது பார்த்தாலும் சினிமா பாடல்கள்தான் ஓடிகொண்டிருக்கும். ஜெபிபதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் அப்படி இருந்தாலும் நான் ஜெபிபதை விடுவதில்லை தொடர்ச்சியாக ஜெபித்து கொண்டுதான் இருந்தேன்.
ஒருநாள் இன்று எப்படியாகிலும் தேவன் பேசுகிறதை கேட்க வேண்டும் என்று ஒரு முடிவோடு சபைக்கு ஜெபிக்க சென்றேன் ஆனால் பக்கத்தில் பயங்கர சத்தமாக சினிமா பாடல்கள் பாடிகொண்டிருந்தது. என்னால் சரியாக ஜெபத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை என்னபண்றதுன்னு தெரியாமல் என் காதுகளுக்குள் இரண்டு பக்கமும் இரண்டு விரல்களை வைத்து ஜெபித்து பார்த்தேன்.
அப்படியும் அந்த சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நான் மிகவும் சத்தமாக ஸ்தோத்திரங்களை சொல்ல ஆரம்பித்தேன். அதிகமாக ஸ்தோத்திரங்களை சொல்ல சொல்ல என்னை அறியாமல் நான் ஆவியில் நிறைந்து மிகவும் உற்சாகத்துடன் ஜெபித்து கொண்டிர்ந்தேன்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருக்கும் என்று நினைக்கிறன். நான் ஆவியிலே நிறைந்து அந்நிய பாஷைகளை பேசிகொண்டிருந்தேன். என் உடம்பு முழுவதும் அனல் பற்றிகொண்டிருன்தது. என்னால் அதை விட்டு வெளியே வரவே முடியவில்லை அந்த பிரசனத்தை அனுபவித்து கொண்டிர்ந்தேன்.
நிச்சயமாக இந்த அனுபவம் உள்ளவர்களும் என்னுடைய சந்தோசத்தின் உணர்வை புரிந்து கொள்ளள முடியும் என்று நம்புகிறேன். அப்படியே அந்த உணர்வில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தேன் அது வரைக்கும் எனக்கு பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை மறந்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்கு பிறகு மிகவும் மெதுவாக ஸ்தோத்திரங்களை சொல்ல ஆரம்பித்தேன்.
என் முழு எண்ணம் நினைவு சிந்தனை எல்லாமே நான் ஒரே மாதிரியாக இருந்தது. தொடர்ச்சியாகவும் மிகவும் மெதுவாகவும் சொல்லி கொண்டே இருந்தேன். இப்படியே நடந்து கொண்டிருக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக என் உடம்பு என்னை அறியாமலே நடுங்க ஆரம்பித்தது.
என்னை சுற்றிலும் ஒரு இனம் புரியாத பிரசன்னம் அதை எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை அது என்னை சுற்றிலும் மூடியது. அதன் பிறகு நான் என்னையே மறந்து அந்த பிரசன்னத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன்.
தொடரும்.............................
(அடுத்த பாகம் பார்க்கவும் )
-- Edited by Stephen on Friday 26th of March 2010 07:47:33 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )