இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :
Permalink  
 


மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :

இந்த கேள்வி கிருத்தவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக சிந்தனையுள்ள அனைவராலும் கேட்கப்பட்டதும் ஆராய்ச்சி செய்யப்பட்டதுமாகும். பலர் இந்த அனுபவங்களை பெற்று உள்ளனர். இந்த கேள்விக்கு விடை இதோ

      வெங்காய சருகு போல் பல உடல்களால் ஆக்கப்பட்டவன் மனிதன். (இது பற்றி தனி கட்டுரை எழுதப்படும்) அதாவது நாம் காணும் சரீரம், பிராண சரீரம், ஒளீ சரீரம், இச்சை சரீரம், ஆசை சரீரம், உண்ர்ச்சி சரீரம், சிந்தனை சரீரம், ஆத்தும சரீரம் ஆகியவையே.

இறந்த பிறகு ஒளி சரீரமானது நாம் காணும் சரீரம், பிராண சரீரம் ஆகியவைகளை துறந்து விட்டு மற்ற உள்ளான சரீரத்தோடு தன் பயணத்தை தொடர்கிறது. இதை புரிந்து கொள்ள நினைத்தால் உங்கள் உடல் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஆசை, இச்சை, உணர்வுகள் முதலியவை அப்படியே உள்ளன. இப்போது ஆசை அல்லது இச்சையை நிறைவேற்ற நினக்கும் மனிதன் அதை நிறைவேற்ற சரீரம் இல்லாததால் துன்பம் அடைகிறான். மூளை இல்லாததனால் அவனால் சிந்திக்கவும் முடியாது.

பாதாளமும், மனிதனும் :

பிரசிங்கி 9.10 : செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

     இந்த துன்பமானது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இறக்கும் நேரத்தில் அந்த மனிதனுடைய நிலையை பொறுத்து இது வேறுபடுகிறது. அதாவது விபத்தில் சடுதியில் இறக்கும் மனிதன், தான் இறப்போம் என்று தெரிந்து இறக்கும் மனித்னை விட பல மடங்கு துன்பப்படுகிறான். நோய் வாய்ப்பட்டு இறக்கும் மனிதன் நோயின் துன்பத்தின் காரணமாக தன் ஆசை அல்லது இச்சை சரீரம் வாழும் போதே அழிக்கப்படுகிறான். அதனால் அவனும் அவ்வளவு துன்பப்படுவதில்லை. உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதர்கள், ஆசையை வென்றவர்கள் துன்பப்படுவதில்லை. இதனால் சாதாரண நிலையிலிருந்து மிக மிக அதிகமான துன்ப நிலை வரை பல்வேறு ஆத்துமாக்கள் காணப்படுகின்றன. ஏறக்குறைய ஒரே மாதிரியான துன்பத்தை அனுபவிக்கும் ஆத்துமாக்கள் ஒன்றாக உள்ளன, ஆகவே பல்வேறு துன்ப நிலைகளில், பல்வேறு அடுக்குகளில் ஆத்துமாக்கள் காணப்படுகின்றனர். இந்த துன்பம் கடவுளின் தண்டனை அல்ல. அந்த அந்த ஆத்துமாக்கள் தங்களுக்கு தாங்களே ஏற்றுக் கொள்ளும் தண்டனை. ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையில் இறந்த மனிதனின் ஆத்துமா அதே உணர்வு நிலையில் உள்ள ஆத்துமாக்கள் இருக்கும் இடத்தை நோக்கி இழுக்கப்பட்டு ஏற்கனவே இருக்கும் ஆத்துமாக்களால் வரவேற்க்கபடுகிறது. பல்வேறு உணர்வு நிலைகளில் கூட்டம் கூட்டமாக ஆத்துமாக்கள் உள்ள இடத்தை அவரவர் இஷ்டப்படி என்ன பேரிட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம் வேதத்தில் இது பிரேதக் குழி என்றும், பாதாளம் என்றும் சொல்லப்படும். இதற்கும் நரகத்துக்கும் தொடர்பில்லை. (நரகம் பற்றி பரபரப்பு மிக்க ஒரு தொடர் விரைவில் வெளிவரும்). இந்த இடத்திற்கு எல்லா மதத்தை சார்ந்த நுண்ணுண்ர்வு மிக்க மக்களும் தரிசனத்திலோ அல்லது சொப்பனத்திலோ சென்று வந்துள்ளனர் (என்னவென்று தெரியாமலேயே). மரணத்தை பற்றிய தியானமும், ஆசை ஒழிப்பும், நல்ல எண்ணங்களும், கடவுள் பற்றிய நினைப்புமே (எந்த மதத்தில் இருந்தாலும்) இந்த துன்பத்திலிருந்து தப்ப வழி. எல்லா மதங்களும் இவைகளை பற்றி வலியுறுத்துகின்றன.

மேற்கண்ட பகுதி பொதுவான பகுதியாகும். இப்போது வேதத்தில் பாதாளம் பற்றீயும், கிருத்தவர்கள் நிலைமை பற்றியும் ஆராய்வோம்.

துன்மார்க்கரின் நிலைமை :

யோபு 21.13 (துன்மார்க்கர்) அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். 14 அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்; 15 சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள். 16 ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 17 எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். 18 அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.

யோபு 24.19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.

தேவனை நம்புகிறவர்களின் நிலைமை: 

கேள்வி:சங்கீ 89.48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.) 

பதில் : 49.15 ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

சங்கீ 86.13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

15.24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்..

ஒசியா 13.14 அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

பாதாளமும், இச்சையும் :

பெண்ணாசை :

5.5 அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தை பற்றிப்போகும்

7.27 அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

பணஆசை, மண்ணாசை உள்ளவர்கள் :

சங்கீ 49.14  ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

நிந்தனைக்காரர்கள் : (ஏசாயா 28)

9 அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே. 10 கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். 11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். 12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 14 ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 15 நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. 16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். 17 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும். 18 நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். 19 அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும். 20 கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது. 21 கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். 22 இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

சாமுவேலின் ஆவி :

கர்த்தர் பாதாளத்தில் அவரை நம்புகிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை காண்பிக்க, சவுல் குறி சொல்லும் பெண்ணிடம் குறி கேட்க போன போது விஷேச விதமாக சாமுவேலின் ஆவியை எழும்ப செய்து, (குறி சொல்லும் பெண்ணே எதிர்பார்க்காத வண்ணம்) சாமுவேலின் மூலமாக சவுலுக்கு தண்டனை அளித்தார். (மற்ற மரித்தோர் ஆவி பேசுவது பற்றி தனி கட்டுரை எழுதப்படும்) இதையே கீழ்கண்ட வசனம் சொல்கிறது.

1.சாமுவேல் 2.6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

 

(தொடரும்)



-- Edited by SANDOSH on Monday 8th of March 2010 10:44:59 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ஐஸ்வரியவானும். லாசருவும் : லூக்கா 16. 19-31

இயேசுவால் சொல்லப்பட்ட இந்த விஷயத்தில் அவர்களின் உணர்வுக்கு அவர்களின் ஆன்மிக வாழ்க்கை ஒரு காரணமாக சொல்லப்படவில்லை. லாசரு தனக்கு வந்த துன்பத்தால் இச்சை சரீரம் வாழும் போதே அழிக்கப்பட்டவன். அதனால் அவன் தேற்றப்பட்டான். ஆனால் ஐஸ்வரியவானோ தன் செல்வ மிகுதியால், இன்பங்களை அனுபவிக்கும் ஆசையால், இச்சை சரீரம் வளரப் பெற்றவன். இறக்கும் போது "தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல்" இறந்தவனாக கூட இவன் இருக்கக் கூடும். இவன் அக்கினியில் தவிப்பதாக சொல்வது இவனுக்கு மட்டும் உண்மையான இவனே ஏற்படுத்திக் கொண்ட கற்பனையான ஒன்று. (சில ஆத்துமாக்கள் பனிகட்டியினால் வேதனை அடைந்து தணலுக்காக வேண்டவும் கூடும்) ஆயினும் தன் சாப்பாட்டு மேஜை வரை லாசருவை அனுமதித்ததாலேயே அவனுக்கு லாசருவை சந்திக்கும் வய்ப்பு கிடைத்தது. தன் கையால் லாசருவுக்கு ஏதேனும் அவன் தந்திருந்தால் இங்கே அவனுக்கு லாசரு கையால் தண்ணீர் கிடைத்திருக்கும். இதிலிருந்து ஐஸ்வரியவான் துன்பப்படுவது நரகத்தில் இல்லை என் அறியலாம்.

ஐஸ்வரியவானாய் இருப்பது தவறு என இந்த உதாரணம் சொல்லுவதாக இருந்தாலும், இவ்வுலகத்திலே தன் நடவடிக்கையை பொறுத்து மேற்கண்ட இருவரும் இடம் மாறவும் வாய்ப்பு உண்டு.

ஐசுவரியவான்கள் : (ஏசாயா 5 )

8 தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!---11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! 12 அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. 14 அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள். 13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள்.

 

நரக பாதாளம் :

மிக அதிகமான பெண்ணாசை மற்றும் சரீர இச்சையோடு இறப்பவர்கள், அசுத்த ஆவிகளோடு உள்ளவர்கள் உடலெல்லாம் அக்கினியில் எரிவது போல் உணர்வார்கள். இது நரக பாதாளம் எனப்படும்.

நீதி 9.18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

 

பாதாளத்தின் துன்பத்தை வாழும் போதே உணர்தல் :

இவ்வுலகத்தில் சில (பல?) பரிதாபத்திற்குரிய மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் மிகுதியான துன்பத்தாலும, அசுத்த ஆவியின் பிடியினாலும், வாழும் போதே பாதாளத்தின் அனுபவங்களை பெறுகின்றனர். சிலர் தூக்கத்தில் அடிக்கடி இந்த பகுதிக்கு விசிட் அடிப்பதும், திகில் கனவு கண்டதாகவும் சொல்வது உண்டு. இதோ இவர்களின் அனுபவங்கள் :


88.3 என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது..

88.6 என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.

116.3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்தை முதன் முதலாக ஜெயம் கொண்டது :

அப்போஸ் 2.31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

16.10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

30.3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

நான் பாதாளத்தை பற்றி நடுனிலைமையோடு ஆராயப் போய், நானே எதிர் பார்க்காத பல திருப்பங்களை பார்க்கிறேன். இப்படித்தான் இருக்கும் என் நினைத்திருந்த பல காரியங்கள் வேறு மாதிரி இருப்பதை பார்க்கிறேன். ஆனால் அவை அனைத்தும் தேவ மகிமையை மேலும் மேலும் அதிகப்படுத்துபவையாகவே உள்ளன.

நரகமும், பாதளமும் :


நரகத்தில் எப்போதும் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கும். இயேசுவை ஏற்றுக் கொள்ளாத மனிதர்கள் இறந்த பிறகு அந்த அக்கினியில் போடப்பட்டு மீளவே முடியாத நித்திய ஆக்கினை அடைவார்கள் என  பல போதகர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த உபதேசம் (அனேக நேரங்களில் தெளீவில்லாமல் சொல்லப்படும்) கீழ்கண்ட எண்ணங்களை எனக்குள் கொண்டு வந்தது.

1. என்னை சுற்றிலும் பல அப்பாவி மனிதர்கள் (பெரிய பாவம் எதையும் செய்யாத) பல மதங்களீலும் இருப்பதால், அவர்களில் அனேகர் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் அவர்களுக்கு வரும் இந்த நித்திய ஆக்கினை மகா கொடூரமாக எனக்கு தெரிந்தது.

2. இயேசுவை ஏற்றுக் கொள்ளாத எல்லா மனிதர்களும் ஒருவர் போலவே அக்கினியில் போடப்படுவதால் மற்றும் இவர்களீன் பாவம் இங்கே கணக்கில் எடுக்கபடாததால் இவர்கள் எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம். இங்கே நியாயம் எங்கே?

3. இயேசுவை ஏற்றுக் கொள்ளாத எல்லா மனிதர்களும் ஒருவர் போலவே அக்கினியில் போடப்படுவதால் மற்றும் இவர்களீன் புண்னியம் இங்கே கணக்கில் எடுக்கபடாததால் இவர்கள் புண்ணீயம் செய்வதனால் எந்த பயனும் இல்லை ஆதலால் இவர்கள் புண்ணீயம் செய்வதை

நிறுத்தலாம். இங்கே நியாயம் எங்கே?

4. அனேக மக்கள் துன்பத்தை தங்கள் வாழ்னாளில் அனுபவிக்கின்றனர். இவ்வளவு துன்பம் அனுபவித்தும் மறுபடி அக்கினியில். இது என்ன கொடுரம்?

5. இயேசுவை பற்றி சொன்னாலும் அறிந்து கொள்ள முடியாத, பைத்தியங்கள், குழந்தைகள் இவர்களீன் நிலை என்ன?

6. என் வீட்டில் நான் ஒருவனே இயேசுவை ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர் எனக்கு சொர்க்கத்தை அளீக்கும் போது, அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு நரகத்திற்க்கு போய் விடலாம் (சொந்தங்களோடு இருப்பதற்க்கு) என நினைத்திருக்கிறேன். என் சொந்தங்கள் அக்கினியில் எரியும் போது எனக்கு எதற்க்கு சொர்க்கம்?

7. தன் வாழ்னாளீல் போராடி, போராடி எவ்வளவுதான் முயன்றாலும் ஏழ்மையை விட முடியாத ஏழை, தன்னோடு ஒன்றாக சேர்ந்து நெருப்பில் எரியும் உலகிலேயே மிகவும் பணக்கார மனிதனை கண்டு நரக நெருப்பிலும் சந்தோஷப்படுவதை மனக் கண்ணால்

கண்டிருக்கிறேன்.

8. போதகர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லும், இதை கேட்டு கேட்டு பழகி விட்டதனால் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கும் மனிதர்களை பார்த்துள்ளேன்.

9. இந்த போதகத்தை கேட்டு எத்தனை பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என வியந்திருக்கின்றேன். ஏனெனில் இந்த நரகம் எல்லா மதங்களீலும், எல்லா தேசங்களீலும் உண்டு. கடவுளை பற்றி சொல்லாத மதங்களூம் கூட நரகத்தை பற்றி சொல்லியிருக்கின்றன.

மற்ற மதங்களின் நரக கொடூரங்களூக்கு முன் எப்போதும் எரியும் நரகம் எவ்வளவோ மேல். ஆகவே இதை கேட்டு எத்தனை பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என எனக்கு தெரியவில்லை.

 

ஒரு மனிதனுக்கே இவ்வளவு நியாயங்கள் தெரியும் போது, சர்வ லோக நியாயாதிபதிக்கு நியாயம் தெரியாதா? அதனாலேயே அவர் பாதாளத்தையும், நியாயத்தீர்ப்பையும் நரகத்துக்கு முன்பாக வைத்திருக்கிறார்.


அப்படியானால் நரகத்திற்கு யாரும் செல்வது கிடையாதா?

நரகத்திற்க்கு என்று ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் யார் என பார்ப்பதற்க்கு முன் பாதாளம் பற்றியும் நியாயத்தீர்ப்பை பற்றியும் முதலில் பார்ப்போம்.


அப்படியானால் பாதாளத்தில் கஷ்டம் இல்லையா?

"பாதாளத்தின் வாதைகள் நரகத்தை விட கொடிதானது"

ஆனால் இந்த வாதைகளீன் அளவு மனிதனின் செயல்களூக்கு தக்கவாறு இருக்கும். இங்கே தேவனின் நியாயம் குறைவில்லாமல் நிறைவேறும்.மேலும் மனிதனுக்கு அருகாமையில் இருக்கும் நியாயத்தீர்ப்பு இதுவே.


அப்படியானால் பாதாளத்தை பற்றி ஏன் போதிக்கப்படுவதில்லை?

இந்த பகுதி எல்லா மதங்களீல் இருப்பதனால் இருக்கலாம். அல்லது இதன் வாதைகளிலிருந்து தப்ப கட்டாயம் இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் இருப்பதனால் இருக்கலாம் அல்லது இதை பற்றி சரியான தெரிந்து கொள்ளூதல் இல்லாமல் இருக்கலாம். 
(SPACE ADJUSTED)

 



-- Edited by SANDOSH on Sunday 14th of March 2010 01:36:01 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தங்களின் இந்த பதிவைப்பற்றி எனக்கு பல சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள்   இருக்கின்றன அவற்றைப்பற்றி தனியாக ஒரு திரி துவங்கி ஆராயலாம் என்று கருதுகிறேன். 
 
இந்நிலையிலேயே வாதிடுவதைவிட, முழு பதிவும் முடிந்தவுடன் வாதிடலாம் என்று கருதுகிறேன்  எனவே  உங்கள் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி நீங்கள் இங்கு தொடர்ந்து பதிவிடுங்கள். 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

கிருஸ்துவுக்குள் மரித்தவர்கள் :

கிருஸ்துவுக்குள் மரித்தவர்கள் இறந்த உடனே எங்கே போவார்கள் என்ற கேள்விக்கு அனேகர் பரதீசு அல்லது பரலோகம் என்று சொல்லுகிறார்கள். தலைப்பு செய்தியாக வந்திருக்க வேண்டிய இந்த விஷயம் வேதத்தில் வெளீப்படையாக எங்கும் சொல்லப்படவில்லை. எல்லாம் சொன்ன பவுல் இதைப் பற்றி சொல்லாமல் நேராக கடைசி எக்காளம் பற்றி சொல்லுகிறார். இடைப்பட்ட காலம் மறைக்கப்பட்டுள்ளது.


அப்படியானால் இடையில் என்ன நடக்கும்?


கிருபையை பெற்ற அனவரும் செல்லும் இடம் பாதாளமே. பல அடுக்குகளை கொண்ட இந்த பாதாளத்தின் வழியே கடந்து சென்றுதான் பரலோகத்தை அடைய முடியும். ஒவ்வொரு இடத்திலும் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஆத்துமா அந்த சோதனையை வென்ற பிறகே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும். (தருமம் நரகத்தை சுற்றி பார்த்தது என்ற மகாபாரத கதை நினைவில் கொள்ளவும். தருமர் நல்லவர் இல்லை என்பது வேறு விஷயம்) எந்த சோதனையை அந்த ஆத்துமாவால் வெல்ல முடியவில்லையோ அங்கே அந்த ஆத்துமா மாட்டிக் கொண்டு அந்த சோதனையை வெல்லும் வரை அங்கேயே தங்கி விடும். அதாவது

ஒரு பகுதியில் ஒரு அழகான பெண்ணை பார்க்கும் ஆத்துமா அந்த பெண்ணின் மேல் ஆசை கொண்டால் அங்கேயே மாட்டிக் கொள்ளூம். அந்த பெண் பிறகு பேயாக மாறும் என்பது வேறு விஷயம். இது போலவே பண ஆசையும. (இதே கருத்தை மனதில் கொண்டுதான் ஜாமக்காரன் புஷ்பராஜ் D.G.S. தினகரன் ஆத்துமாவை பற்றி சொல்லுகிறார் என நினைக்கிறேன்)

இந்த பூமியில் கிருஸ்துவால் எல்லா பாவமூம் மன்னிக்க பெற்றதனாலாயே நாம் ஆசை ஒழித்தவர்கள் என ஆகி விடாது. இந்து, புத்த மற்றும் பல மதத்தவர்கள் ஆசையை, சுயத்தை ஒழிக்க எத்தனையோ கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருக்க (அவர்கள் என்ன முட்டாள்களா) சுலபமாக இரட்சிப்பை பெற்றுக் கொண்டு பரலோகம் போய் விடலாம் என எண்ணுவது மதியீனமாகும். அதிலும் கிருஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர்கள் (சிலர்) சிறிது கூட துன்பமின்றி வெகு சுலபமாக இரட்சிப்பை பெற்றுக் கொண்டதாக நினைத்து, ஆசை உள்ளவர்களாகவும், சுயத்தை அழிக்க எந்த பிரயாசமும் செய்யாதவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு இந்த செய்தி ஒரு பேரிடியாகும். இதையே கீழ்கண்ட வசனங்கள் சொல்லுகிறது. 

ரோமர் 8.13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

ரோமர் 8.1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

கொலோ 3. 3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். 5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். 7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். 8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, 10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

கொலோ 3.25 அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

கலா 6.7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

கலா 5.18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல

கலா 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.

வெளி 12 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். 13 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
(இது முதல் - இதற்கு முன்பு வரை ஆத்துமாக்கள் பூரணம் அடைய பிரயாசப்பட வேண்டும்)

1கொரி 15.51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். 54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். 57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

சோதனையைப் பற்றின வசனங்கள் :

இந்த சோதனை அக்கினியை போன்றது என்று பெரும்பான்மையான இடத்தில் சொல்லப்படுகிறது.

மத் 8.19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

மத் 7.24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

1.கொரி 3.11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. 12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், 13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். 15 ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.

210. What is purgatory? (கத்தோலிக் டிக்க்ஷனரி)   
Purgatory is the state of those who die in God’s friendship, assured of their eternal salvation, but who still have need of purification to enter into the happiness of heaven. 
 

மத்தேயு 5.27 - 30 ந் விளக்கம் :

27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. 29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 30 உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 

5.28 வெகு வெகு குறைவு, 5.29,30 மிக மிக அதிகம் என எல்லோருக்கும் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணும் (மத்தேயு 5 முழுவதுமே) இந்த வசனத்தின் விளக்கம் என்னவெனில்

மனுஷரால் நிறைவேற்ற முடியாத இப்படிப்பட்ட கடுமையான உபதேசத்தை நமக்கு தந்ததின் மூலம் இயேசு தேவ ஐக்கியத்தின், ஆவியானவரின் அவசியத்தை நமக்கு உண்ர்த்துகிறார்.

ஏனெனில் மனுஷரால் கூடாதது தேவனால் கூடும்.

ஆவியான மனுஷனில் வளரும் மனிதன் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழிக்க வேண்டும். சுயத்தை வெல்ல வேண்டும். இப்படியே நம் கண்ணுக்குப் புலனாகாத இச்சையின் அவயங்களை (இச்சை சரீரத்தை, துர்குண சரீரத்தை) அழித்துப் போட வேண்டும். பிறக்கும் போது ஜென்ம சுபாவம், இச்சை, காணும் உடல் என்னும் சட்டையை போட்டுக் கொண்டு வரும் ஆத்துமா நித்திய ஜீவனை அடைய தன் ஒவ்வொரு சட்டையையும் கழற்றி போட வேண்டும்

தேவனின் கரத்தில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன ஒன்று கிருபை மற்றொன்று நம் வாழ்னாள். கிருபையை பெற்றிருந்தாலும் கூட நாம் இறக்கும் நேரத்தில் கர்த்தருக்குள் நம் நிலைமையைப் பொறுத்து, பாதாளத்தில் நம் பிரயாசத்தை தேவனால் கூட்டவோ, குறைக்கவோ முடியும். ஆகவே எப்போதும் ஆவிக்குரிய மனிதனில் நாம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

5.30 - இச்சை சரீரம், ஜென்ம சுபாவ சரீரம் களையப்படாமல் பாதாளத்திற்க்கு போகும் மனிதன் அங்கே அக்கினியின் சோதனக்கு உட்படுத்தப்படும் போது இச்சை சரீரம் அக்கினியில் எரிவதால் உண்டாகும் வேதனையை அனுபவிக்க வேண்டும். அங்கே இச்சை சரீரம் எரிந்து சாம்பலான பிறகே அவன் நித்திய ஜீவனை நோக்கி முன்னேற முடியும்.

(இந்த இச்சை, ஜென்ம சுபாவ சரீரங்களே அந்த சரீரம் உள்ள மனிதன் மற்றும் புதிய மனிதன் பிறப்பதற்க்கு காரணமாக உள்ளன என்பது வேறு விஷயம். அது பற்றி தனி கட்டுரையில்)

வாழும் போதே இச்சை சரீரத்தை ஜெயம் கொண்டவர்கள் தானியேல் போல அக்கினியின் மணம் வீசாமல் வெளிவருவார்கள்.

அப்படியானால் இந்த இச்சையை எப்படி வெல்வது?

அனியாயமான இச்சை நமக்குள் தோன்றும் போது இந்த நேரத்தில் நம்மை கர்த்தர் பாதாளத்திற்க்கு எடுத்துக் கொண்டால் நம் நிலை என்ன என்று மரணத்தை நினைவு கூறுவதின் மூலமாக மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதின் மூலம்.

 மற்ற மதங்கள் முதலிலேயே ஊசியை காட்டி பயமுறுத்த, கிருத்துவம் மட்டுமே முதலில் மிட்டாய் கொடுத்து பிறகு ஊசி போடுகிற மதம். நித்திய ஜீவன் சுலபமல்லவென்றும், ஆனால் ஆவியானவராலே அது சுலபமாக முடியும் என்றும் உணர்ந்து வாழும் போதே அதற்க்குரிய முயற்ச்சிக்களை செய்து பாதாள்த்தின் வல்லடிக்கு நீங்குவோமாக.  மத்தேயு 5.25,26  

25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. 26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.   

இந்து மதத்தில் பாதாளம் (நரகம்) :

இந்து மதத்தில் (அனேக மதங்களில்) நரகம்என்று சொல்லப்படுவது கிருத்துவ பாதாளத்திற்க்கு இணையானதாகும். உயிரை எடுக்கும் மற்றும் அந்த உயிரின் இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப நரகத்தில் தண்டனை தரும் சக்திக்களூக்கு தலைவனாக சொல்லப்படும் யமனை இந்து மதம் தர்ம ராஜா என்று போற்றுகிறது

Thus the "Padma Purana" says: "Yama fulfils the office of judge of the dead, as well as sovereign of the damned; all that die appearing before him, and being confronted with Chitragupta the recorder, by whom their actions have been registered. The virtuous are then conveyed to Swarga (Indra's heaven), whilst the wicked are driven to the different regions of Naraka (hell)."  In the "Vishnu Purana" the names of the different hells are given, and it is there stated that " there are many other fearful hells which are the awful provinces of Yama, terrible with instruments of torture and fire." In the same Purana  it is said that all men at the end of their existence (life) become slaves to the power of Yama, by whom they are sentenced to painful punishments."    Names of yama

Dharmaraja, "King of righteousness.", Pitripati, "Lord of the fathers." ,Samavurti, "He who judges impartially."

இந்து மதத்தை போன்றே கிருத்துவத்திலும் ஒரு புத்தகம் பாதாளத்தோடு தொடர்புடையது. இங்கேயும் சித்ரகுப்தர்கள் உண்டு. யார் அவர்கள்? என்ன புத்தகம்? 



-- Edited by SANDOSH on Monday 15th of March 2010 10:16:19 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

SANDOSH wrote:

கிருஸ்துவுக்குள் மரித்தவர்கள் :

கிருஸ்துவுக்குள் மரித்தவர்கள் இறந்த உடனே எங்கே போவார்கள் என்ற கேள்விக்கு அனேகர் பரதீசு அல்லது பரலோகம் என்று சொல்லுகிறார்கள். தலைப்பு செய்தியாக வந்திருக்க வேண்டிய இந்த விஷயம் வேதத்தில் வெளீப்படையாக எங்கும் சொல்லப்படவில்லை. எல்லாம் சொன்ன பவுல் இதைப் பற்றி சொல்லாமல் நேராக கடைசி எக்காளம் பற்றி சொல்லுகிறார். இடைப்பட்ட காலம் மறைக்கப்பட்டுள்ளது.


அப்படியானால் இடையில் என்ன நடக்கும்?


கிருபையை பெற்ற அனவரும் செல்லும் இடம் பாதாளமே. 


பவுல் மற்றும் அப்போஸ்தலர்கள்  சொல்லவில்லை என்றால்   வேத புத்தகத்தின் வேறு பகுதியில் இருந்து அதற்க்கு வசனம் தேடலாமே! ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்த்து இரண்டு இடங்களில்  அதைப்பற்றி சொல்லியிருக்கிறாரே. 
 
சிலுவையில் தன்னுடன் தொங்கிய கள்ளனை பார்த்து: 
 
லூக்கா 23:43  இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இதன் அடிப்படையில் கிறிஸ்த்துவின் ரட்சிப்போடு மரிப்பவர்கள் பரதீசு என்னும் இடம் போகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியாதா?
 
இரண்டாவது லாசரு என்னும் தரித்திரன்பற்றி சொல்லும்போதும் அவன் மரித்தபின் ஆபிரகாமின் மடிக்கு போனான் என்கிறது.
 
லூக்கா 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
 
இது ஒரு உவமையாக இருந்தால்கூட ஏதோ ஒரு இளைப்பாறும் இடத்துக்குதான் போகிறார்கள் என்று பொருள்கொள்ள முடியும் அல்லவா?
 
கிருபை பெற்று மரித்தவர் கூட  எல்லோருமே பாதளத்துக்குதான் போகிறார்கள் என்றால் பாதாளத்தை ஜெயம்கொண்ட  இயேசுவின் வல்லமையின் அடிப்படையில் பவுல் சொல்லும்  
 
I கொரிந்தியர் 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

என்ற வசனத்தின் பொருள்தான்  என்ன?
 
மேலும் கிருபைக்குள் இருப்பவர்களை மீதும் இச்சையும் பாவமும் ஆட்கொண்டு பாதாளம் கொண்டுபோகுமாயின்  பாவம் மேற்கொள்ள முடியாது என்று பவுல் சொல்லும் கூற்றின் அடிப்படைதான் என்ன?
 
ரோமர் 6:14  நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

பாதாளத்தில் அவிசுவாசிகள் :

மத்தேயு 5.3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

 

மேற்கண்ட வசனம் போல பாவமன்னிப்பை, இரட்சிப்பை பற்றி சொல்லாமல் நல்ல குணங்களை பற்றி சொல்லி பரலோக ராஜ்யம் அவர்களுடையது என சொல்லப்படும் பல வசனங்கள் வேதத்தில் உண்டு. இந்த வசனங்கள் பல்வேறு விவாதங்களூக்கும், சந்தேகங்களுக்கும் காரணமாக உள்ளன.

 

அதே போல இரட்சிப்பை பெற்றவர்கள் சில நல்ல காரியங்களை செய்யாமல் இருந்தால், கெட்ட குணங்களை அழிக்காமல் இருந்தால் அவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை என்ற வசனங்களும் உள்ளன். (இவைகளை பற்றி முன் தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது.)

 

கர்த்தரை ஏற்றுக் கொண்ட அனேகர் எந்த காரியத்துக்காக அவரை ஏற்றுக் கொண்டார்கள் என ஒரு ஆய்வு நடத்தினால் அது அதிகம் பேர் தங்கள் கழுத்துக்கு கத்தி வந்ததினால்தான் என்பதாக இருக்கும். அதாவது அசுத்த ஆவி, பில்லி சூனியங்கள் மற்றும் நோய்கள் முதலியவற்றால் பாதிக்கப்பட்டு வந்தவர்களே அதிகம். அதிலும் ஒரு வீட்டு தலைவரே கர்த்தரை ஏற்றுக் கொண்டால் அவரை தொடர்ந்து அந்த சந்ததியே கிருத்துவர்களாகி விடுகிறார்கள். இதற்கு பிறகு கிருத்தவர்களீன் சேவையை பார்த்து, உண்மையான தேவனை தேடி, சுவிஷேசத்தினால் ஈர்க்கப்பட்டு மற்றும் தேவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். பூமியில் தங்களுக்கு கஷ்டம் வராததினால் தேவ செய்திக்கு கீழ்படியாதவர்கள் பாதாளத்தில் துன்பம் அனுபவிக்கும் போது பூமியில் கேட்டது நினைவுக்கு வர கர்த்தரை ஏற்றுக் கொள்ளுவார்கள். அல்லது அங்கே சொல்லப்படும் சுவிஷேசத்தை கேட்டு கர்த்தரை ஏற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் அங்கேயும் சிலர் கர்த்தரை மறுதலிப்பார்கள். இந்த பூமியில் நல்லது செய்தவர்கள், நல்லது நினைத்தவர்கள், கடவுள் பயம் உள்ளவர்கள், துன்பமடைன்தவர்கள் சுவிசேஷத்திற்க்கு நெருக்கமாக இருப்பதால் அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். இங்கே பல நல்ல காரியங்கள் செய்திருந்தும் இயேசுவை தூஷணமாக பேசினவர்கள் அங்கே அசுத்த ஆவியின் கூட்டுறவால்  கெட்டுப் போய் இயேசுவை புறக்கணிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு நல்ல காரியமும், நல்ல செயல்களூம் நித்திய ஜீவனுக்கு அருகில் நம்மை சேர்க்கும் என்றும், நன்மை இல்லாதவைகளினால் நித்திய ஜீவனுக்கு அருகில் நம்மால் செல்ல முடியாது என்றும் அறிய வேண்டும்.

 

மத்தேயு 5.3. முதல் 5.10 வரை பூமியில் மட்டுமல்லாமல் பாதாளத்திலும் நிறைவேறும். அப்படியே பூமியில் நிறைவேறவில்லையே என நினைப்பவர்கள் இவைகள் பாதாளத்தில் நிறைவேறுவதைப் பார்க்கலாம்..

 

லூக்கா 20.1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். 3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: 4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். 6 பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். 8 சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9 அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். 10 முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். 11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். 13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். 15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். 16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

(ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை - ஒருவரும் எங்களுக்கு சுவிசேசம் சொல்லவில்லை)

 

1000 வருட அரசாட்சியும், ஜீவ புஸ்தகமும் :

 

ஆனால் இந்த பாதாளத்தில் அவிசுவாசிகள் சுமார் 1000 வருடங்களுக்கு (1000 + இறந்தது முதல் 1000 வருட அரசாட்சி வரை) மேல் துன்பம் அனுபவிக்கவும், பரிசுத்தத்திற்க்காக பிரயாசப்படவும், இயேசுவை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அவர்கள் முன்னேற முன்னேற துன்பம் அதிகமாக உள்ள கீழ் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு செல்வார்கள். சிலர் மேலிருந்து கீழே போகவும் கூடும்.

இவர்கள் அனைவருடைய பிரயாசமும் 1000 வருட அரசாட்சியில் ஆளுகை செய்கின்ற ஒரு கூட்டத்தால் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு அரசாட்சியின் முடிவில் புதிய பூமிக்கு அனுமதிப்பதோ அல்லது அக்கினி கடலில் தள்ளப்படுவதோ முடிவு செய்யப்படும்.

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருடைய பெயரும், அவர்கள் செய்யும் செயல்களும், பாவ புண்ணீயங்களூம் ஜீவ புஸ்தகம் என்னும் புத்தகத்தில் எழுதப்படும். யார் நித்திய ஜீவனுக்கு தகுதியானவர்கள் இல்லையோ அவர்கள் பெயர் இந்த ஜீவ புஸ்தகத்திலிருந்து

அடிக்கப்படும். யாருடைய பெயர் அடிக்கப்பட்டதோ அவர்கள் அரசாட்சியின் முடிவில் அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள்.

1000 வருட அரசாட்சின் நோக்கம் :

1. பூமிக்கு உண்மையான ராஜாவான தேவனே பூமியை ஆளூவது.

2. சத்திய யுகத்தை மறுபடியும் மலர செய்வது (கலியுகத்திற்கு பிறகு சத்ய யுகம் வரும் என் இந்து மதமும் சொல்கிறது) பரதீசை பூமியில் நிறுவுவது.

3. மனிதரின், சாத்தானின் வினைகளை சரிப்படுத்துவது.

4. பிதாவுக்காக, யேசுவுக்காக இரத்த சாட்சியாய் மரித்து பூமியில் தங்கள் வாழ்னாளை இழந்தவர்களுக்கு அதற்க்கு பலனாக பூமியில் வாழ மறுபடியும் வாய்ப்பு அளீப்பது.

5. இஸ்ரவேலருக்கு ஜாதிகள் மேல் ஆளூகை செய்ய வாய்ப்பு அளிப்பது

6. மிருகத்தின் முத்திரையை தரிக்காமல் துன்பமடைந்தோர் வாழ  வாய்ப்பு அளிப்பது

7. மற்ற கிருத்துவுக்குள் மரித்தவர்களுக்கு இளைபாறுதல் மற்றும் பல.

 

இங்கு இருக்கும் மூன்று கூட்டத்தினர் :

1. இரத்த சாட்சிகள்

2. தெரிந்து கொண்ட இஸ்ரவேலர்கள் (1,44,000 பேர்)

3. மிருகத்தின் முத்திரையை தரிக்காமல் துன்பமடைந்தோர்.

.

. (தொடரும்)

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் கேள்விக்கு பதில்

1 கொரிந்தியர் 55.15 யின் நேரம் :

இந்த வார்த்தை சொல்லப்படுவது கடைசி எக்காளம் தொனிக்கும் போதே. அதுவரை ஆத்துமா பாதாளத்தில் பிரயாசப்படவேண்டும். (முன்பே சொல்லியிருப்பது போல)

பாதாளத்தில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் :

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் மூடப்பட்டது. இயேசு ரத்தம் சிந்தின பிறகே அவர்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டது. இயேசு வரும் வரை அவர்கள் பாதாளத்தில் பாதாளத்தின் தூதுவனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இங்கே அவர்களுக்கு துன்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் இன்பம் அடைய முடியாமல் சிறைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இயேசு தன் மரணத்திற்க்கு பிறகு அவர்களை பாதாளத்திலிருந்து விடுதலையாக்கி பரதீசு எனப்படும் இடத்தில் (பரதீசு பரலோகம் அல்ல பரலோகத்திற்க்கு சென்றவர் இயேசு மட்டுமே. இதற்கு விசேஷித்த சரீரம் வேண்டும்) கொண்டு வைத்தார். இது பாதாளத்தின் உயர்ந்த பகுதி ஆகும். அவர்கள் பாதாளத்தை வெல்ல பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது.

பாதாளத்தில் கள்ளன் :

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் பாலமாய் உள்ளவன். இயேசுவின் வாக்குப்படி பரதீசு சென்ற இவன் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் இங்கே இருந்து விட்டு பிறகு பாதாளத்திற்க்கு அனுப்பப்பட்டான்.

From lost book of bible :

1 Christ takes Adam by the hand, the rest of the saints join hands, and they all ascend with him to Paradise.

THEN Jesus stretched forth his hand, and said, Come to me, all my saints, who were created in my image, who were condemned by the tree of forbidden fruit, and by the devil and death;

2 Live now by the wood of my cross; the devil, the prince of this world, is overcome, and death is conquered.

3 Then presently all the saints were joined together under the hand of the most high God; and the Lord Jesus laid hold on Adam's hand and said to him, Peace be to you, and all YOUR righteous posterity, which is mine.

4 Then Adam, casting himself at the feet of Jesus, addressed himself to him, with tears, in humble language, and a loud voice, saying,

5 I will extol YOU, O Lord, for YOU hast lifted me up, and have not made my foes to rejoice over me. O Lord my God, I cried unto YOU, and YOU have healed me.

6 O Lord YOU hast brought up my soul from the grave; YOU have kept me alive, that I should not go down to the pit.

7 Sing unto the Lord, all ye saints of his, and give thanks at the remembrance of his holiness. For his anger endureth but for a moment; in his favour is life.

8 In like manner all the saints, prostrate at the feet of Jesus, said with one voice, YOU art come, O Redeemer of the world, and hast actually accomplished all things, which YOU didst foretell by the law and YOUR holy prophets.

9 YOU hast redeemed the living by YOUR cross, and art come down to us, that by the death of the cross YOU mightest deliver us from hell, and by YOUR power from death.

10 O, Lord, as YOU hast put the ensigns of YOUR glory in heaven, and hast set up the sign of YOUR redemption, even YOUR cross on earth! so, Lord, set the sign of the victory of YOUR cross in hell, that death may have do minion no longer.

11 Then the Lord stretching forth his hand, made the sign of the cross upon Adam, and upon all his saints.

12 And taking hold of Adam by his right hand, he ascended from hell, and all the saints of God followed him.

1. THEN the Lord holding Adam by the hand, delivered him to Michael the archangel; and he led them into Paradise, filled with mercy and glory;

2 And two very ancient men met them, and were asked by the saints, Who are ye, who have not yet been with us in hell, and have had your bodies placed in Paradise?

3 One of them answering, said, I am Enoch, who was translated by the word of God:and this man who is with me, is Elijah the Tishbite, who was translated in a fiery chariot.

4 Here we have hitherto been, and have not tasted death, but are now about to return at the coming of Antichrist, being armed with divine signs and miracles, to engage with him in battle, and to be slain by him at Jerusalem, and to be taken up alive again into the clouds, after three days and a half.

5And while the holy Enoch and Elias were relating this, behold there came another man in a miserable figure carrying the sign of the cross upon his shoulders.

6 And when all the saints saw him, they said to him, Who art YOU? For YOUR countenance is like a thief's; and why dost YOU carry a cross upon YOUR shoulders?

7 To which he answering, said, Ye say right, for I was a thief who committed all sorts of wickedness upon earth.

8 And the Jews crucified me with Jesus; and I observed the surprising things which happened in the creation at the crucifixion of the Lord Jesus.

9 And I believed him to be the Creator of all things, and the Almighty King; and I prayed to him, saying, Lord, remember me, when YOU come into YOUR kingdom.

10 He presently regarded my supplication, and said to me, Verily I say unto YOU, this day YOU shalt be with me in Paradise.

11 And he gave me this sign of the cross saying, Carry this, and go to Paradise; and if the angel who is the guard of Paradise will not admit YOU, shew him the sign of the cross, and say unto him: Jesus Christ who is now crucified, has sent me hither to YOU.

12 When I did this, and told the angel who is the guard of Paradise all these things, and he heard them, he presently opened the gates, introduced me, and placed me on the right-hand in Paradise,

13 Saying, Stay here a little time, till Adam, the father of all mankind, shall enter in, with all his sons, who are the holy and righteous servants of Jesus Christ, who was crucified.

14 When they heard all this account from the thief, all the patriarchs said with one voice, Blessed be YOU, O Almighty God, the Father of everlasting goodness, and the Father of mercies, who hast shown such favour to those who were sinners against him, and hast brought them to the mercy of Paradise, and hast placed them amidst YOUR large and spiritual provisions, in a spiritual and holy life. Amen.

பாதாளமும், நேசமும் : (உன்னத பாட்டு 8.6 ன் விளக்கம்)

கர்த்தரின் மேல் கொள்ளும் மிக அதிக நேசமானது வாழும் போதே இச்சை சரீரத்தையும், ஜென்ம சுபாவத்தையும், ஆசைகளையும் எரித்து விடுவதால் பாதாளத்தின் அக்கினி சோதனை அந்த ஆத்துமாவுக்கு இல்லை அல்லது மேற்கொள்ள முடியாது. இந்த நேசமானது பாதாளத்தின் அக்கினியைப் போல கொடிதாயிருக்கிறது. (ஆனால்...... மேலும் விளக்கம் பேரின்பம் என்னும் கட்டுரையில்)

பாதாளத்தில் அவிசுவாசிகள் : (தொடர்ந்து..)

மேற்கண்ட தலைப்பில் நான் எழுதியதற்க்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்து பிறகு சொல்ல சில வசனங்களை வைத்திருந்தேன். ஆனால் எந்த விமரிசனமும் வராததால் அந்த வசனங்கள் இப்போது...

வெளீ 3.1 முதல் 3.5 வரை

சர்தை என்ற சொல்லுக்குremainder, reformஎன அர்த்தமாம்

பாதாளத்தில் யோனா :

கர்த்தருடைய வார்த்தையை சொல்ல மாட்டேன என துணிவாக விலகி ஓடிய இந்த தீர்க்கதரிசி யார்? கர்த்தரிடம் சண்டை போட அவ்வளவு தைரியம் எப்படி யோனாவுக்கு வ்ந்தது? கர்த்தரும் யோனாவை விடாமல் இருந்தது ஏன்?

(தொடரும்)



__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// பாதாளத்தில் கள்ளன் :
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் பாலமாய் உள்ளவன். இயேசுவின் வாக்குப்படி பரதீசு சென்ற இவன் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் இங்கே இருந்து விட்டு பிறகு பாதாளத்திற்க்கு அனுப்பப்பட்டான். //

இந்த கூற்றை வேதத்தின் ஆதாரத்துடன் சொல்லுகிறீர்களா?

// பல அடுக்குகளை கொண்ட இந்த பாதாளத்தின் வழியே கடந்து சென்றுதான் பரலோகத்தை அடைய முடியும். //

பாதாளம் கீழான இடத்தையும் பரலோகம் மேலான இடத்தையும் குறிக்கிறது என்பது எனது புரிதல்;ஆனால் நீங்கள் கூறுவதோ விட்டலாச்சார்யா படம் போல இருக்கிறதே..!

இதுபோன்ற சுய முயற்சியினாலான போதனைகளே மார்க்கபேதங்களுக்குக் காரணமாக இருப்பதால் அஞ்சுகிறேன்;

மேலும் தங்களது விசுவாசத்தையும் சபைப் பின்னணியினையும் அதாவது தங்களை ஆவிக்குரிய வாழ்வில் வழிநடத்திய ஊழியரையும் குறிப்பிட்டால் இன்னும் அதிக பிரயோஜனமாக இருக்கும்;நன்றி.






__________________

"Praying for your Success"


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

பாதாளத்தை பற்றி புரிந்து கொள்வது மிகவும் சுலபமானது. இதை புரிந்து கொள்ள போதை மருந்துக்கு அடிமையான ஒருவனை எடுத்துக் கொள்வோம். ஒரு நாள் போதை மருந்து கிடைக்கவில்லையெனில் அவன் தவிக்கும் தவிப்பு நரகத்துக்கு சமமானது. பாதாளத்தில் இதே நிலைமைதான். ஆசை மட்டும் இருக்கும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில் அங்கே உடலும் இல்லை. போதை மருந்தும் இல்லை. மிகுந்த பெண்ணாசை உள்ளவனின் எதிரில் அழகான பெண் இருக்க அவன் நகர முடியாமல் கையையும் காலையும் கட்டி போட்டால் அவன் நிலைமை எப்படியோ அப்படித்தான் பெண்ணாசை உள்ளவனின் நிலைமை அங்கே இருக்கும். புகழின் போதையில் சிக்கிய ஒருவன் அங்கே சென்றால் அவனை சீண்ட ஆள் இருக்காது. பணம், பணம் என்று எப்போதும் பணத்தை சேர்பதிலேயே குறியாக இருந்தவனுக்கு ஏதோ குறைவுபடுவது போலவும் அதற்கு ஏதோ செய்ய வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் என்ன செய்வது என்று தெரியாது. கொலை வெறியோடு இறந்தவனுக்கு யாரையாவது தாக்க வேண்டும் என்று தோன்றும் எதிரியை கத்தியால் குத்துவதை போல செய்வான் ஆனால் அங்கே காற்றுதான் இருக்கும் ஆகவே மறுபடியும் அதே போல செய்வான். நாம் இங்கே பூமியில் பார்க்கும் ஒரு சில பைத்தியங்களை போல ஒரே செய்கையை திரும்ப திரும்ப ரோபாட்டை போல செய்து கொண்டிருப்பார்கள். இது போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மரணம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும் அங்கே நமக்கு தெரிந்தவர்கள் யாரும் கூட வர மாட்டார்கள். அனேகம் பேர் இன்னும் இந்த தனிமைக்கே தயாராகவில்லை. இது எப்படியன்றால் மனிதர் யாரும் இல்லாத காட்டில் இரவில் தங்குவதைப் போன்றது.

இது போன்று இதுவரை அனுபவிக்காத ஒரு அனுபவமே நரகம்தான். எத்தனை பேருக்கு ஒரு பத்து நாள் குடும்பத்தை விட்டு தனியாக இரவில் தூங்கும் தைரியம் இருக்கிறது?


பாதாளத்தில் ஒருவனை வேதனைக்குள்ளாக்குவது

1. திருப்தியடையாத ஆசைகள் 2. இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் தீட்டுகள் 3.புகழ், பெருமை 4. செய்வதெல்லாம் வாய்ப்பதினால் தோல்வியைப் பற்றி, பிறரின் துன்பங்களை பற்றி நினைக்காத வாழ்க்கை 5. தனக்கு மேலான சக்தியை பற்றி, மரணத்தை பற்றி சிந்திக்காத வாழ்க்கை 6. செய்த பாவத்தின் குற்ற உணர்வு 7. தன்னால் துன்பப்பட்டவர்கள் பூமியிலிருந்து கொடுக்கும் சாபம் 8. தன் மேல் அன்பு வைத்தவர்கள் பூமியில் படும் துன்பம்

 

கடவுளால் இரட்சிக்கப்பட்டவர்கள் 3 லிருந்து 7 வரையான பகுதியிலிருந்து விடுதலை பெற்றதாக கொள்ளலாம்

1 மற்றும் 2 வது பகுதியை வாழ்க்கை பயணத்திலே வெற்றி கொள்ள வேண்டும். 8 வது நமது கரத்தில் இல்லை.

 

எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை வித்தியாசமான அனுபவங்கள் உள்ள இடமே பாதாளம். யார் யாருக்கு எந்த எந்த பகுதி பிடித்திருக்கிறதோ இந்த பூமியிலேயே அதை தெரிந்து கொள்ளலாம். பாதாளத்தின் அனுபவம் சில கதைகளில் சொல்லப்பட்டுள்ளன. அவை அடுத்த பதிவில்..

 

(பின் குறிப்பு : இந்த ஆத்துமாக்களின் துன்பத்தை குறைக்க அந்த ஆத்துமா அனுபவிக்க வேண்டியது சில சமயம் அடுத்த தலைமுறை முதல் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை உள்ள சிலரின் தலையில் கட்டப்படுகிறது.)



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

உலகில் உள்ள எல்லா மதத்தை சார்ந்த மனிதர்களும் இறப்புக்கு பிறகு ஒரு தொல்லையில்லாத, இன்பமான இடத்துக்கு செல்லவும், அந்த அனுபவத்தை பெறவும் விரும்புகின்றனர்.

எல்லா மதங்களிலும் இறப்புக்கு பிறகு செல்லும் இடம், அடையும அனுபவம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதில் மிகவும் உயர்வாக இந்துக்களால் சொல்லப்படுவது முக்தி அடைவதாகும். புத்த மதத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாணமும், ஜைனர்களுக்கு சித்த நிலையும் சொல்லப்படுகிறது. இந்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலைக்கு தகுதியடையாமல் இறந்தால் அவர்கள் நல்லது செய்திருந்தால் சொர்க்கம் என்னும் இடத்தில் மகிழ்ச்சி அனுபவிக்கவும், கெட்டது செய்திருந்தால் நரகத்தில் துன்பம் அனுபவிக்கவும் வேண்டும் என சொல்கிறார்கள்.

தாங்கள் செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப சொர்கத்திலேயோ அல்லது நரகத்திலேயோ குறிப்பிட்ட காலம் இருந்து விட்டு பிறகு இந்த பூமியில் மறுபடி பிறக்க வேண்டும் என சொல்கின்றனர். அதாவது முக்தி அடையும் வரை இறபபு-பிறப்பு சுழற்ச்சியிலிருந்து மீள முடியாமல் அதிலேயே சுற்றி கொண்டிருக்க வேண்டும்.

இந்த மதங்களில் மிகவும் உயர்ந்த நிலையை அடைய அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் ஆசை மற்றும் சுயம் அழிக்க பெற வேண்டும் என்பதே. இத்தகைய காரியத்தை செய்து அந்த, அந்த மதம் சொல்லும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் மிக மிக சொற்பமானவர்களே. அந்த அந்த மதத்தில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கையை எடுத்து கொண்டால் 1% அல்லது 2% கூட வருவது கடினம்.

மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தை கிருத்துவத்தில் மட்டுமல்ல. எல்லா மதங்களிலும் இருக்கிறது. இந்த வார்த்தை இயேசுவுக்கு முந்தினது. இந்து, புத்த, ஜைன மார்கங்களில் சன்னியாசம் அல்லது துறவறம் அடைவது என்பது மறுபடி பிறத்தல் எனப்படுகிறது. தன் வாழ்னாளில் சுமார் ஒரு 60 வயது வரை தன் கடமைகளை செய்யும் மனிதன் அதன்பிறகு

சன்னியாசம் அல்லது துறவறம் மேற்கொண்டு தன் சுயம் அழிய தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது அந்த காலத்தில் பிராமண சமுதாயத்தில் இருந்த வழக்கமாகும்.

மறுபடி கள்ளம் கபடு இல்லாத, இறந்த கால நினைவுகள் அழுத்தாத, எதிர்கால ஆசைகள் இல்லாத ஒரு நிலையை அடைவதே மறுபடி பிறத்தலின் குறிக்கோளாகும்.

இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டவர்கள், மரணத்துக்கு பின் போகும் இடம் பரலோகம் என்று சிலர் சொல்ல, நித்திய வாழ்வு என்று சிலர் சொல்ல, புதிய பூமி என்று சிலர் சொல்கின்றனர். அவ்வாறு இல்லாதவர்களுக்கு நரகத்தில் நித்திய வேதனை என்றும் சொல்கின்றனர். கிருத்துவத்தில் சொல்லப்பட்ட உயர்னிலையை அடைய ஒரு மனிதன் செய்ய வேண்டியது இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்வது மட்டுமே என்று அனேகரால் சொல்லப்படுகிறது. அப்படியானால் மிகவும் சுலபமாக ஒரு உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று அனேகர் நம்புகின்றனர். பரம்பரை கிருத்துவர்களுக்கு இந்த நிலையை அடைவதில் ஒரு பிரச்சனையும் இல்லை இது அவர்களுக்கு மிகவும் இயல்பானது. இந்த நிலைமை இவவளவு சுலபமென்றால் சபைக்கு கூட செல்ல தேவையில்லை.

ஆனால் வேதத்தின்படி பார்த்தால் அவர்கள் நினைப்பது போல் சுலபமல்ல என்பது தெரிய வரும்.

நித்திய வாழ்வுக்கு வேதம் சொல்லும் பல தகுதிகளில் ஒன்றே கிருபையை பெற்றிருப்பதாகும். இதை தவிர மற்ற தகுதிகளும் தேவை. மற்ற தகுதிகள் என்னவெனில் ஒரு மனிதனில் சட்டை போல் இருக்கும் ஆசை சரீரத்தையும், அவனுடையை துர்குண சரீரத்தையும் அவன் இந்த பூமியிலேயே இறக்கும் முன்பாக கழட்டி போட்டிருக்க வேண்டும். அதாவது ஆசையும், துர்குணமும் நீங்க பெற்று இருப்பவர்கள் மாத்திரமே தேவனால் நித்திய வாழ்வுக்கு தகுதியாக்கபடுவார்கள்.

அதாவது மற்ற மதத்தில் சொல்லப்படும் தகுதிகளோடு, தேவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தகுதி அதிகமாக்கபட்டுள்ளது அவ்வளவே.

ஒரு குழந்தையாய் தன் அறியாமையினால் கள்ளம் கபடம் இல்லாமல் இந்த பூமிக்கு வரும் மனிதன், வளர்ந்து தன்னை அறிந்து கொண்டு, பிறகு கள்ளம் கபடம் இல்லாத, அறிவுள்ள குழந்தையாய் மாற வேண்டும்.

மத்தேயு 5.3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

மத்தேயு 18.2. இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
3. நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

மத்தேயு 19.13. அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14. இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
15. அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார்.

மாற்கு 10.14. இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

லூக்கா 18.15. பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
16. இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது;
17. எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

1.கொரி.14.20. சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

1.பேதுரு.2.1. இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
2. சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
3. நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

ஒரு மனிதன் இறந்த பிறகு என்ன நடக்கிறது என்றால், அந்த மனிதனின் உடல் மட்டுமே இல்லை. மற்ற அனைத்தும் அவன் இறக்கும் போது இருந்த நிலையிலேயே இருக்கின்றன. அதாவது அவன் ஆசை, சிந்தனை. துர்குணங்கள் எல்லாமே அவனோடு கூடவே செல்கின்றன. இவைகள் அந்த மனிதனை நிம்மதியாக இருக்க விடாமல் பூமியை நோக்கி இழுத்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவன் விரும்பியதை செய்ய அவனுக்கு உடல் இல்லை. இதனால் அந்த ஆத்துமா அடையும் துன்பத்துக்கு அளவில்லை. எல்லா மதங்களும் இந்த உண்மையை சொல்கின்றன. கல்லறையில் வாதிக்கபடுதல் என்று முகம்மது பயந்ததும் இதற்கே. பாதாளத்தில் துன்பபடும் ஆத்துமாக்கள் பற்றி வேதத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்களின் பாவத்தை மட்டுமே இயேசு சிலுவையில் சுமந்தார். அவர்களின் ஆசைகள், துர்குணங்களை அவர் சுமக்கவில்லை. இவைகளிலிருந்து மனிதன் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே பரிசுத்த ஆவியானவர் இந்த பூமியில் வந்தார். அவரோடு கொண்ட ஐக்கியத்தினார்ல் இந்த நிலைக்கு வராதவர்கள் இயேசுவை ஏற்று கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பாதாளத்தில் தண்டனை உண்டு.

அனேகர் பாதாளத்திலும், நரகத்திலும் துன்பப்படும் ஆத்துமாக்களை கடவுள் தண்டிப்பதாக சொல்லுகின்றனர். கடவுளை ஒரு தண்டனைக்காரராக சித்தரிக்கும் இவர்கள் இந்த உலகத்தில் உயிரோடு உள்ள மக்களுக்கு நன்மையும். தீமையும் நானே செய்கிறேன் என்ற வேதத்தில் உள்ள வசனத்தை ஏற்று கொள்வதில்லை. அதாவது வாழும் போது தீமை செய்யாத நல்லவரான தேவன் இறப்புக்கு பின் தனக்கு பிடிக்காதவர்களுக்கு தீமை செய்வார் என்று சொல்கின்றனர்.

நீதி 14.31. தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

ஆனால் அது சரியானது அல்ல. பூமியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்னாளில் தங்களின் முன்னேற்ற மாறுதலுக்கு உண்டான காரியங்கள் எதுவும் செய்யாதவர்களை அவர்கள் துர்குணங்கள், ஆசைகள், பாவங்களே பிடித்து கொள்ளுகின்றன. இதன்படியே அவர்கள் தண்டனை அடைகிறார்கள். அதாவது இது ஒரு கடவுள் உண்டாக்கின இயற்கை விதியாகும். மின்சாரம் பாயும் கம்பியில் கை வைத்தால் ஷாக் அடிப்பது எவ்வளவு நிச்சயமோ அது போலவே செய்ய வேண்டிய காரியங்களை செய்து வர வேண்டிய நிலைக்கு வராவிட்டால் பாதாளத்திலும், நரகத்திலும் துன்பம் அனுபவிப்பது உறுதி.

பூமியில் நடக்கும் காரியங்களுக்கே கர்த்தர் பொறுப்பு. இறந்த பிறகு துன்பம் அனுபவிப்பது என்பது அந்த மனிதன் தன் வாழ்னாளில் சம்பாதித்து கொண்டது. இதற்கு கர்த்தர் பொறுப்பல்ல. அந்த மனிதனே பொறுப்பு.

மனிதன் இறப்புக்கு பின் மோசமான நிலையை அடையாமல் இருக்க இயற்கையும் உதவி செய்கிறது. ஒரு மனிதன் தன் பூரண ஆயுள் வரை வாழ்வான் (70,80 க்கு மேல்) எனில் அவனுடைய உடல் கொஞ்சம், கொஞ்சமாக தளர்ந்து உடலாலும் ஒரு குழந்தையின் நிலைமையை அடைகிறான். உடல் தளர்ச்சி அடைவதால் ஆசை அவனை விட்டு போகிறது. (உடல் ஒத்து போகாவிட்டாலும் மனதில் ஆசை நீங்காமல் இருப்பவர்கள் இந்த வயதிலும் உண்டு)

இறந்த பிறகு மனிதனின் நிலைமை என்ன என்பதை அறிய, வேதத்தில் மூன்று மனிதர்களின் நிலை பற்றி சொல்லப்பட்டுள்ளது. முதலாவதாக சாமுவேல்

1. சாமுவேல் ஒரு இன்பமான உறக்கத்தில் இருந்தாக சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் தான் பூமியில் வாழ்ந்த நாட்களில் பூமியுடனான தன் கணக்கை சாமுவேல் சரியானபடி முடித்து கொண்டதே. பூமியில் வாழ்ந்த போதே கர்த்தரால் தன் ஆசையும், துர்குணங்களும் அழிக்க பெற்று நித்திய வாழ்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானதே.


1.சாமுவேல்.12.2. இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன்.
3. இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
4. அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.

பெண்ணாசையால் பாவம் செய்த தாவீது, தன் இறுதி காலத்தில் தாங்க முடியாத குளிரினால் அவதிப்பட்டான். அப்போது அனல் கொள்ளும்படி தன்னருகே வந்த அந்த நாட்டிலேயே மிகவும் அழகான பெண்ணை சேராமல் இருந்தான். அவனுடைய பெண்ணாசை நசிந்து போயிருந்தது. அவன் வயதானதினால் பெண்ணை சேரவில்லை என்றும் சிலர் சொல்லலாம். ஆனால் தன் பாவத்திற்காக தண்டிக்கப்பட்ட அவன் அதற்கு பிறகு எந்த பெண்ணையும் சேரவில்லை என்பதை வேதத்தினால் அறியலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதை தாவீது தன் வாழ்னாளில் நிரூபித்தான்.

தன் ஆசைகளையெல்லாம் பூரணமாக நிறைவேற பெற்ற சாலமோன் தன் ஆசைகளினால் ஒரு பயனும் இல்லை என்று ஆசைகளின் மேல் வெறுப்பு கொண்டவனாய் இறந்தான்.

2. லாசரு என்னும் மனிதனின் ஆன்மிக நிலை பற்றி வேதத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் அவன் மிகவும் கேவலமான நிலையில், பிச்சைகாரனாக இருந்தான். இப்படிப்பட்ட மனிதன் இளைப்பாறுதல் அடைந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு உயர் நிலையை அடைய ஒரு சொறி பிடித்த பிச்சைகாரனாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்ப கூடும். ஆனால் இதன் அர்த்தம் என்னவெனில், தினமும் தான் உயிர் வாழ தேவையான உணவே கிடைக்க பெறாத நிலையில் இருந்ததனால் இவனில் மற்ற ஆசைகள், அகங்காரம் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. உடல் முழுவதும் நோவுகளோடு இருந்ததால் உடலை விட்டு நீங்கின உடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் இளைப்பாற்தல் அடைந்தான். ஆனால் பிச்சைகாரர்கள் எல்லாம் லாசருவை போல் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிச்சைகாரர்களாக இருந்தாலும் திமிர், அகங்காரம் பிடித்தவர்களும் உண்டு. அதே போல் மிகுந்த செல்வந்தரானாலும் தாழ்மை உடையவர்களும் உண்டு.

அப்படியானால் நியாய தீர்ப்பு நாளில் லாசரு போகும் இடம் எங்கே என ஒரு கேள்வி வர கூடும். இதற்கு இரண்டு விதமான தீர்வுகள் உண்டு.

1. நியாயத்தீர்ப்பு நாளில், நியாயத் தீர்ப்பு செய்கின்ற தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தும், அவரால் மன்னிக்கப்பட்டும் இருந்தால் நித்திய வாழ்வுக்கு தகுதி உடையவனாவான்.

2. அவ்வாறு இல்லாவிடில் நரகத்துக்கு தகுதி உடையவனாவான்

(பாதாளத்தில் உடல் இல்லாததால் பேச முடியாது, லாசரு-ஐசுவரியவான் சந்திப்பு ஒரு உணர்வுகளின் பரிமாற்றமே. இதுவே இயேசுவால் மொழி மாற்றம் செய்யப்பட்டது

நீதி 22.2. ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.)

3. ஐஸ்வரியவான் -எல்லாராலும் மோசமானவன் என சொல்லப்படும்

இவன் தான் கொண்டிருந்த ஏராளமான செல்வத்தால் பிறருக்கு எந்த நன்மையும் செய்யாமல், சுகபோகமாய் வாழ்ந்தவன். இவன் குடிக்கு அடிமையானவன் என தெரிய வருகிறது. இறந்த பிறகு அந்த ஆசை விட்டு போகாமல் அவனுக்கு தாகத்தை ஏற்படுத்துகிறது. தன் ஆசை தன்னை இந்த நிலையில் கொண்டு வந்து விடும் என தன் வாழ்னாளில் அவன் எதிர்பார்க்கவில்லை. இவனுக்கும் இரண்டு தீர்வுகள் உண்டு.

1. நியாயத் தீர்ப்பு நாளில் தேவனை ஏற்று கொள்ளாவிடில் - நியாயத்தீர்ப்பு நாளில் நரகத்தில் ஆத்தும அழிவு

2. ஏற்றுக் கொண்டால் - தேவ சித்தப்படி அவனுடைய தண்டனையின் நாட்களை பாதாளத்தில் அனுபவித்து முடித்திருந்தால் நித்திய வாழ்வு

அவ்வாறு இல்லாவிடில் அவனை நித்திய வாழ்வுக்கு தகுதியாகும்படிக்குஅவன் ஆசை சரீரம், துர்குண சரீரம் அவனுடைய ஆத்துமாவிலிருந்து வெட்டப்படும்.

இது அந்த மனிதனுக்கு உண்மையான இறப்பு போலவே இருக்கும். அதாவது உயிருள்ள ஒருவரிடம் சென்று நீங்கள் உண்மையில் ஒரு தேவ தூதர் ஆனால் மனிதன் என்று உங்களை நினைத்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இறந்தால் தேவ தூதர் ஆகி விடலாம் ஆகையால் இறந்து விடுங்கள் என்று சொன்னால் ஒருவர் கூட இறப்பதற்கு முன் வர மாட்டார்கள். அது போலவே ஆசை சரீரம், துர்குண சரீரம் வெட்டப்படும் மனிதன் ஒரு உண்மையான சாவை தான் பெற்றதாக நினைப்பான். இத்தகைய ஒரு காரியம் வேதத்தில் "இரண்டாம் மரணத்தின் சேதம்" என்றழைக்கபடுகிறது. நம்புவதற்கு கடினமாக இருக்கும் இந்த சேதததை பற்றி வாட்ஸ்மேன் நீ என்ற தேவ ஊழியர் சொன்னது. (IN NEXT POST)

இந்த இரண்டாம் மரணத்தின சேதம் கல்லறையில் வாதிக்கப்டுதல் போன்றவை முகம்மதுக்கு மட்டுமல்ல, தங்கள் வாழ்னாளில் ஒரு உயரிய நிலையை அடையாத கிருத்துவர்களுக்கும் உண்டு. ஆகவே நித்திய வாழ்வுக்கு மூன்று காரியங்கள் அவசியம்.

1. இந்த பூமியிலேயே தேவனை அறிந்து அவருக்கு ஒப்புக் கொடுத்தல் (அவ்வாறு இல்லாவிடில் இறந்த பின் கடவுள் கொடுக்கும் வாய்ப்பை கொண்டு அவரை அறிய வேண்டும் இது பற்றி தனி கட்டுரையில்)

2. ஆசை மற்றும் துர்குண சரீரத்தை இந்த பூமியிலேயே இழத்தல் (அவ்வாறு இல்லாவிடில் முதல் காரியத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள்இரண்டாம் மரணத்தின் சேதத்தை அனுபவிக்க வேண்டும்)

3. இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு உடல் ரீதியான மற்றும் ஆன்மிக ரீதியான தொண்டு / உதவி செய்வதன் மூலம், நாம், நம் குடும்பம் என இருக்கும் அன்பு அதிகமாகி உலக மக்களின் மீதான அன்பாக மாறுவதால் ஆசை, துர்குண சரீரத்தை இழத்தல் மற்றும் பரலோகத்தில் பொக்கிசத்தை சேர்த்து வைத்தல். இந்த பொக்கிசங்கள் நம்மை பாதாளத்தின் தண்டனையிலிருந்து காப்பாற்றவோ அல்லது நித்திய வாழ்வுக்கு நம்மை தகுதியாக்கவோ உதவும். (எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் தொண்டு அவர்கள் நித்திய வாழ்வுக்கு உதவி செய்வதாக அமையும்)

இரண்டாம் மரணத்தின் சேதம் என்னும் ஆபத்தை பற்றி கிருத்துவர்கள் அனேகர் (ஊழியக்காரர்கள் உட்பட) அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த ஆபத்து நிச்சயம் உண்டு. இதை மனிதில் கொண்டு கிருததுவர்கள் தேவனுடனான ஐக்கியத்தில் பலப்பட வேண்டும்.

ஐக்கியத்தினால் உயர் நிலை அடையாதவர்களுக்கு இந்த சேதம் இல்லாமல் தேவனாலும் அவர்களை நித்திய வாழ்வுக்கு தகுதி உடையவர்களாய் மாற்ற முடியாது.

பாதாளத்தில் அடையும் வேதனை பற்றி பவுல் சொல்லியுள்ளார். (என்னுடைய முதல் கட்டுரை). ஆனாலும் இதை பளிச்சென்று சொல்லாமல் சொல்லியுள்ளார். இதற்கு காரணம்

இயேசுவை ஏற்று கொள்ள வரும் கொஞ்ச நஞ்ச ஆத்துமாக்கள், இதனால் பயந்து வராமல் போக கூடும் என்ற எண்ணமே. இயேசுவை ஏற்று கொண்டவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை. ஆனால் இரண்டாம் மரணத்தின் சேதம் உண்டு (அவர்கள் தகுதியின் அடிப்படையில்)

(தொடரும்)



-- Edited by SANDOSH on Saturday 11th of September 2010 08:29:40 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

CONTINUATION FROM PREVIOUS POST :


WITNESS LEE ABOUT HURT OF SECOND DEATH :

B. Not Hurt of the Second Death

In verse 11 the Lord says, “He who overcomes shall by no means be hurt of the second death.” To overcome in this epistle means to overcome persecution by being faithful unto death. The promise to the overcomer in this epistle has both a positive side—receiving the crown of life—and a negative side—not being hurt of the second death.

Verse 11 has been a great problem to the expositors of the book of Revelation. Due to the fall and the entering in of sin, every man must die once (Heb. 9:27). This first death, however, is not the final settlement. All the dead, except those who through faith in the Lord Jesus have been recorded in the book of life, will be resurrected and pass through the judgment of the great white throne at the close of the millennium, that is, at the conclusion of the old heaven and the old earth. As a result of this judgment, they will all be cast into the lake of fire, which is the second death as the final settlement (Rev. 20:11-15). The second death is God’s dealing with man after man’s death and resurrection. Since the overcomers have overcome death through their faithfulness unto death under persecution and have left nothing requiring further dealing by God after their resurrection, they will be rewarded with the crown of life and will not be touched, or “hurt,” anymore by the death after resurrection, which is the second death.

Nearly every Christian teacher has a problem here, thinking that after the believers are resurrected there will be no further settlement required of them. Let me ask you this question: If you were to die today, could you say that you have nothing which requires the Lord’s further dealing? Probably you cannot say this. This means that if you died today, you would still have something which requires the Lord’s further dealing. This does not mean that you would be lost. Nevertheless, this further dealing would not be something positive; it would surely be negative. Every negative thing comes from death. Thus, if you require a further negative dealing, it means that you can still be touched by death. This does not mean that you will perish, but it does indicate that you will suffer something. We must hear the word of the Lord. If we overcome persecution, on the positive side, we shall receive the crown of life and, on the negative side, we shall not be hurt by the second death.

We all need to be overcomers. If you are not an overcomer in this age, you will be hurt by the second death in the next age. It is difficult for anyone to say clearly what it means to be hurt by the second death. Nevertheless, one thing is clear: if you do not overcome persecution, something will hurt you. I say again that this does not mean that you will be lost, that you will suffer perdition. No, every saved one is saved for eternity. John 10:28 and 29 show that no saved one can ever perish again. However, after we have been resurrected, we may suffer some dealing from the Lord. Do not hold to the traditional theology which teaches that after you have been resurrected everything will be all right. After the unbelievers are resurrected, they will be dealt with by God regarding their eternal destiny. In the same principle, after our resurrection, there will still be some dealings from the Lord. It all depends upon how we live and walk today. If we live and walk in an overcoming way, this will indicate that we have overcome death and that nothing remains requiring a further dealing from the Lord.

We must take the Lord’s clear word. Do not accept the teaching which says that if you fail after being saved you will be lost again and perish. This is not true. At the other extreme is the teaching which says that after you have been saved you can have no problems with the Lord. However, a person who has been eternally saved may still need to be dealt with by Him. This is the full gospel. The full gospel is the whole New Testament, not just John 3:16. Here in Revelation 2:11 is a portion of the full gospel which says that we must overcome all persecution. If you do not overcome, you will not receive the crown of life; instead, you will be hurt by the second death. If you do overcome persecution and tribulation by the resurrection life within you, you will receive the crown of life positively and you will not be touched by the second death negatively. This is the Lord’s clear promise with His clear word, and we all must take it. Whether we understand it or not, we all must accept the word of the Lord. If you believe John 3:16, then you must believe Revelation 2:11. Both are the Lord’s word. I say again that this is the full gospel.

This matter has been veiled for a long time, and few Christians dare to touch it. Since they have been unable to understand it, their practice has been always to neglect it, to ignore it. But the Lord will never ignore His word. He will follow through with whatever He says. Therefore, be warned that we must overcome tribulation, suffering, and persecution, that we may receive a crown of life and not be hurt by the second death. If we overcome in this way, we shall have nothing remaining that will require the Lord’s further dealing in the future.



-- Edited by SANDOSH on Saturday 11th of September 2010 08:35:09 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். (ரோமர் 11:22). ”

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :

இப்பதிவின் கேள்விக்கு சுந்தர் அண்ணாவின் பதிலை வாஞ்சிக்கிறேன்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :

இப்பதிவின் கேள்விக்கு சுந்தர் அண்ணாவின் பதிலை வாஞ்சிக்கிறேன்


 

 

சிஸ்ட்டர் சகோ. சந்தோஷ் எழுதியிருப்பதில் அநேக உண்மைகள் இருக்கின்றது சிலவற்றை நம்பமுடியாமலும்  இருக்கிறது.
 
இப்படி கருத்துக்களை வள்ளலார் / ரமணா மகரிஷி போன்ற அநேக மகான்கள்  பல பல கருத்துக்களை அன்றில் இருந்து இன்றுவரை தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்க்கு எல்லாம் விளக்கம் கொடுக்கவோ அல்லது அது தவறு என்று சொல்லவோ எனக்கு அனுமதி இல்லை.
    
காரணம் தேவன் எதை எப்படி வேண்டுமானாலும் வளைத்து நிரூபிக்க கூடியவர்.
 
நான் ஒரு காரியத்தை தவறு என்று சொன்னால் அதே காரியத்தை உண்மை என்று நிரூபிக்க தேவனால் ஆகும்.
 
எனவே நான் எனக்கு என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் முழுமை இருக்கிறதா எனக்கு எழும் சந்தேகம் என்ன அதற்கான பதில் என்ன என்பதை மட்டுமே தேவனிடம் விசாரித்து அறிகிறேன்.
 
சகோதரர் சந்தோஷ் எழுதியதில் எந்த ஒரு குறிப்பிடட பகுதிக்கு தங்களுக்கு விளக்கம் தேவை என்று சுட்டி காட்டுங்கள் அதன் உண்மை தன்மை என்ன என்பதை வசன அடிப்படையில் ஆராயலாம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard