மரணதிட்கு பின்னர் மனுஷனின் உண்மையான நிலை எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக நீங்கள் சொல்லுங்கள்.
உங்கள் சுருக்கமான தெளிவான வேத ஆதரத்துடனான கருத்து எனக்கு இலகுவாக புரிந்துகொள்ள கூடியதாக இருக்கும்
ஆண்டவராகிய இயேசுவின் மரணத்துக்கு பிறகுள்ள தற்போதைய நிலையில், மரணத்துக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை வெளிப்பாடு மட்டும் வசனம் அடிப்படையில் நான் அறிந்ததை தருகிறேன்.
1. இயேசுவை ஏற்றுக்கொண்டு மரிப்பவர்கள்.
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை பெற்று ஆண்டவர் சபையின் அங்கமாக இருந்து மரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளுவது இல்லை.
மத்தேயு 16:18இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
அவர்கள் மரித்தஉடன் பரதீசு என்றோரு இளைப்பாறும் இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்கள் இறுதி நியாயத்தீப்பு நாள்வரையிலும் இளைப்பாறும் நிலையில் இருக்கிறார்கள்
லூக்கா 23:43இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
II கொரிந்தியர் 12:2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
இயேசுவின் ஏற்றுக்கொண்டு மரிப்பவர்கள் உடனே போகும் ஸ்தலம் "பரதீசு" அது பூமிக்கு மேலே இருக்கிறது
2. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதோரின் நிலை!
இயேசுவுவை ஏற்றுக்கொள்ளாதோர் மரித்ததும் போகும் இடம் "பாதாளம்" எனப்படும் அதும் பூமிக்கு கீழே இருக்கிறது
இந்த பாதாளம் மூன்று அடுக்குகளை கொண்டது "கீழான பாதாளம்" "தாழ்ந்த பாதாளம் மற்றும் நரக பாதாளம்
நானும் ஒருமுறை மரித்தவன்போலாகி இந்த பாதாளத்தை நேரில் சென்று பார்த்ததுபோல் பார்த்திருப்பதால் அது குறித்த அனைத்து விளக்கங்களையும் வசன ஆதாரத்துடன் கீழ்கண்ட தொடுப்பில் விரிவாக எழுதியிருக்கிறேன்
பாதாளம் மற்றும் பரதீசு இரண்டு இடங்களில் தங்கியிருக்கு மரித்த ஆத்துமாக்களை இறுதி நியாயத்தீர்ப்புநாளில் நியாயத்தீர்ப்பு அடைந்து
நித்திய ஜீவனுக்கோ அல்லது நித்திய நரகத்துக்கோ அனுப்பப்படும்.
வெளி 20:12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)