மத்தேயு 5:8இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மலைபிரசங்க வாக்கியத்தில் எடுத்து சொன்ன இவ்வார்த்தை இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் தேவனை தரிசிக்கமுடியும் என்று போதிக்கிறது.
இதை தொடர்ந்து எபிரெயர் நிரூபமும் இவ்வார்த்தைகளை உறுதி செய்கிறது
முழுக்க முழுக்க ஒரு மனிதனின் இந்த இருதய சுத்தம் என்பது தேவனாலேயே கொண்டுவர முடியும் என்றாலும் நமது தகுதிக்கேற்ப நாம் இருதயசுத்தம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.
ஒரு மனிதனின் இருதய சுத்தத்தை கெடுக்கும் காரியங்கள் என்னென்ன, அவற்றை எவ்வாறு மேற்கொண்டு தேவனை தரிசிக்கலாம் என்பதை பற்றி கொஞ்சம் ஆராயலாம்:
இருதயத்திலிருந்து புறப்பட்டு வந்து மனிதனை தீட்டுபடுத்தும் முக்கிய காரியங்களாக இயேசு கீழ்கண்டவற்றை ஏழு முக்கிய காரியங்களை குறிப்பிடுகிறார்.
பேதுரு பொறாமையை ஒழிக்க வேண்டும் என்று சுலபமாக சொல்லியிருந்தாலும்
இந்த பொறாமையை ஒழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் அது நம்மை கேட்டுக்கொண்டு உள்ளே வராது தானாகவே உருவாகும்.
பொறாமை வர முக்கியகாரணம், தனக்கு இருப்பதுடன் மனநிறைவு அடையாததும், தன்னைபோல மற்றவர்களும் சுகமாக வாழவேண்டும் என்ற மேன்மையான எண்ணம் இல்லாததும்தான் எனலாம். ஒருவர்மேல் பொறாமைபடுவதில்எந்த பயனும் கிடையாது. ஒருவர் நன்றாக வசதியாக இருந்தால்தான் நாளை நாம் ஒரு அவசர தேவைக்கு ஒரு உதவிக்கு அவரிடம் போகும்போது அவரால் உதவமுடியும் அல்லது ஒரு நேர உணவாவது கொடுக்கமுடியும். அவர் கஷ்டப்பட்டால் நமக்கு அதனால் எந்த பயனும் கிடையாது. ஆகினும் ஒருவர் முன்னேறும்போது நம்மை அறியாமலே நமக்குள் பொறாமை துளிர்விடுகிறது.
நாம் கொண்டுள்ள பொறாமை நமது இருதய சுத்தத்தை கெடுக்கும் தன்மை உடையது. தாவீதின்மேல் பொறாமை கொண்ட சவுல் சாகும்வரை அந்த ஆவியில் இருந்து விடுபட முடியவில்லை. எல்லா வேலையையும் விட்டு விட்டு தாவீதை கொல்வதிலேயே தீவிரமாக அலைந்தான்.
எனவே தான் வேதம் "பொறாமை புத்தி இல்லாதவனை அதன் பண்ணும்" "பொறாமை தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்! என்று எச்சரிக்கிறது
இந்த பொறாமையை போக்க ஒரே வழி,
யார்மீதாவது நமக்கு பொறாமை வந்தால் உடனே "ஆண்டவரே இவரை என்னைவிட 100 மடங்கு அதிகமாக அசீர்வதியும்" என்று வாய்திறந்து சொல்வது தான் அப்படி சொல்வோமாகில அது நம்மைவிட்டு ஓடியே போய்விடும்.
யார் மீதும் பொறாமை இல்லாத சுத்த இருதயமே தேவனை தரிசிக்க
வழி செய்யும் முதல்படி ஆகும்.
தொடரும்......
-- Edited by இறைநேசன் on Tuesday 9th of March 2010 09:06:55 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இருதயத்தை தீட்டுபடுத்தும் பொல்லாத சிந்தனைகளில் இரண்டாவதாக நிற்ப்பது "வஞ்சம் வைத்து பழி வாங்குதலே" ஆகும். இதற்க்கு வண்மம் வைத்தல் கசப்பு என்று பல பெயர்கள் உண்டு! யார் மீதாவது வஞ்சம் மனதில் இருக்கும்வரை நமது இருதயம் சுத்தமாகாது!
ஒருவர் செய்த தீயசெயலை மறக்க முடியாமல் ஆண்டு கணக்கில் அவர் மீது கசப்பை மனதில் வைத்துகொண்டு "இவர் எனக்கு இப்படி தீமை செய்தார்" என்று எல்லோரிடமும் சொல்வதோடு "யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வராமலா போகும்" என்றெண்ணி சமயம் வைக்கும்போது சரியாக பழிவாங்கலாம் என்று பலர் கவலையோடு காத்திருப்பதை உலகில் பார்க்கமுடியும்!
இது ஒரு சரியான காரியமா?
எபேசியர் 4:31சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
என்று போதிக்கும் வேதம் யாரையும் பழிக்கு பழி வாங்க கூடாது என்றும் எச்சரிக்கிறது.
லேவியராகமம் 19:18பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; .
வண்மம் வைத்து பழி வாங்கியவன் வரிசையில் முதலில் நிற்ப்பவன் அப்சலோமே என்று நான் கருதுகிறேன். தனது தங்கையாகிய தாமாரை அம்னோன் கெடுத்தபோது நல்லதாகிலும் தீயதாகிலும் எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் மனதிலே வைத்துகொண்டு சமயம் வைத்தபோது அம்னோனை அடித்து கொன்று பழி தீர்த்தவன்!
II சாமுவேல் 13:22அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
இப்படி வஞ்சம் வைத்து பழி வாங்கியஇந்த அப்சலோமும் இறுதியில் அநியாயமாக அற்பஆயுசில் இறந்துபோனான்
II சாமுவேல் 18:15அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.
அவன் எப்படி வன்மம் வைத்து அடித்து கொல்ல செய்தானோ அதுபோலவே அவனும் அடித்து கொல்லப்பட்டான்!
இவ்வாறு மனதின் பரிசுத்தத்தை கெடுக்கும் இந்த வஞ்சம்/வண்மம்/ கசப்பு என்ற பெயருடய இந்த பாவத்தை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?
மத்தேயு 10:29ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
என்ற வார்த்தைக்கு ஏற்ப, ஆண்டவரின் சித்தமில்லாமல் இந்த உலகில் ஒன்றுமே நடைபெற முடியாது! அதாவது உங்களுக்கு ஒருவரால் தீமை ஏற்ப்படுகிறது என்றால் அங்கு தேவனும் அதற்க்கு அனுமதியளித்திருக்கிறார் என்பதை அறியவேண்டும் (யோபுவின் சரித்திரமே இதற்க்கு சான்று)
எனவே தேவன் அனுமதித்து நடந்த ஒரு செயலில் அதற்க்கு பகடைக்காயாக பயன்பட்ட மனிதர்ககள் மேல் கசப்பு வைத்து பழிதீர்ப்பதில் எந்த பயனும் இல்லை! எயதவன் இருக்க அம்பை நோக முடியுமா? என்ற பழமொழியுண்டு அதுபோல் தீமை செய்தவர்கள்மேல் கசப்பு என்பது எய்தவனாகிய தேவனை நாம் எதிர்த்து நிர்ப்பது போன்றதே!
தேவன் எதையும் நீதியில்லாமல் ஒருகாலும் செய்யவே மாட்டார்! எனவே நமக்கு நடந்த தீமைக்கு நாமே பொறுப்பே தவிர, தேவனோ வேறு யாருமோ அல்ல என்பதை கருத்தில் கொண்டு தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மேலுள்ள கசப்பை உடனடியாக மனதை விட்டு நீக்கி அவர்களுக்காக இப்பொழுதே ஆசீர்வதித்து ஒரு அன்பான ஜெபம் ஏறெடுங்கள் கசப்பு கண்காணா இடத்துக்கு பறந்துவிடும்! இருதயமும் சுத்தமாகும்!
அடுத்ததாக இருதயத்தின் சுத்தத்தை கெடுக்கும் முக்கியகாரணி வஞ்சித்தல் ஆகும் இதற்க்கு ஏமாற்றுதல், நடித்தல், மாய்மாலம் பண்ணுதல் போன்ற பல பெயர்கள் உண்டு.
ஒருவர் தனது உண்மை நிலையை பிறருக்கு மறைத்து பொய்யான தோன்றம் ஒன்றை பிறர் மத்தியில் உருவாக்கி தனது காரியங்களை சாதிக்க நினைப்பதே வஞ்சித்தல் ஆகும்.
"ஆட்டு தொலை போர்த்தி வரும் ஓநாய்" என்ற உவமை வஞ்சித்தலை குறிக்கும் ஒரு சரியான உதாரணம் ஆகும்.
"பண ஆசை பண தேவை பணம் பிடுங்குதல்" போன்ற ஓநாய் தனத்தை மனதில் மறைத்துக் கொண்டு, ஏதோ ஆத்துமா கரிசனை உள்ளவர்கள் போலவும் அடுத்தவர்களுக்காக உருகி கண்ணீரோடு ஜெபிபவர்கள் போலவும் ஒரு ஆட்டு தொலை போர்த்தி வரும் அனேக ஊழியர்களை இன்று உலகில் பார்க்க முடிகிறது. (உலக அரசியல்வாதிகளும் இவ்வித பாவத்தில் அடிமையானவர்களே) அடுத்தவர்கள் பார்வைக்கு கனம்பெரவும் தங்கள் பண தேவையை பூர்த்தி செய்யவும் பக்திமான்கள் போல நடித்து வஞ்சிக்கும் இவர்களைதான் ஆண்டவர் அதிக ஆக்கினை அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
II கொரிந்தியர் 11:3ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல பிறரை தனது அறிவால் வஞ்சிக்கும் இந்த மாய்மாலம் என்பது இரண்டு பாவங்களில் தொகுப்பு ஆகும்
ஓன்று
ஏசாயா 58:7உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறது என்ற வார்த்தைகளுக்கு எதிராக தனது உண்மை பாவநிலையை பிறருக்கு மறைத்தல் அல்லது ஒளித்தல்.
இரண்டாவதாக
நீதிமொழிகள் 28:13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
என்ற வார்த்தைக்கு எதிராக தனது பாவஎண்ணங்களை நிலைகளை உணர்ந்து மனம்திரும்பாமல், பிறர் மத்தியில் ஒரு தவறான அபிப்ராயத்தை ஏற்ப்படுத்த நினைப்பது. .
மனிதனை வஞ்சிப்பது போதாதென்று தேவனையே வஞ்சிக்க நினைக்கும் மனிதர்களும் உலகில் உண்டு என்பதற்கு அனனியா சபீறாள் ஒரு நல்ல உதாரணம்.
ஒருவரை வஞ்சிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்க்கு ஒரு சரியான திட்டம் மற்றும் நடிப்பு தேவை அதற்காக நமது மனம் பல்வேறு திட்டங்கள் மற்றும் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மனதின் சுத்த நிலை கெடுகிறது
தனது உண்மை நிலையை அப்படியே பிறருக்கு மறைக்காமல் இருக்கும் வெளிப்படையான பேச்சு மற்றும் செயல்பாடு உள்ள நிலையே தேவனை தரிசிக்க உகந்த நிலை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)