எந்த ஒரு வார்த்தையில் நியாயம் இருந்தாலும் அதுபற்றி தீர ஆராய்வதுதான் சிறந்தது. நமது கொள்கை மட்டும்தான் சரி, எதிர்வாதி என்றுமே தவறு என்று வாதிடுபவது சரியல்ல. இவ்வகையில் கடவுள் உண்டென்று நாம் நபுகிறோம் ஆனால் ஒரு சிலரால் அக்கடவுளை அறியவோ உணரவோ முடியாத காரணத்தாலும் உலகில் உள்ள படைப்புகள் குரங்கு மனித குரங்கு மனிதன் என்று வரிசையாக இருப்பதாலும் எல்லாமே தானாக உருவானது, கடவுள் என்று யாரும் இல்லை என்று சாதிக்கின்றனர்.
கடவுள் நேரடியாக மனிதன்முன் வராமல் இருப்பதால்தானே நாத்திகவாதிகள் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவரை எல்லோரும் அறியமுடிந்தால் நாத்திகர் என்று யாரும் இருக்க முடியாதே. இவ்வகையில் ஏன் கடவுள் எல்லோருக்கும் தன்னை உணர்த்துவது இல்லை? எல்லோரும் அவருடைய பிள்ளைகள் தானே?
பலர் சொல்லுவதுபோல் "நான் என்ற ஒரு மாயை நிலயை கடந்து உள்ளே சென்றால் நம்முள் கடவுளை காணமுடியும்" என்ற கருத்து ஏற்ப்புடயதே.ஆனால் எத்தனைபேர் அவ்வாறு இந்த உலக நிலைகளிலிருந்து விடுபட்டு, தன்னுள் உள்ள ஆத்மா சக்தியின் உண்மை நிலயை காண்கின்றனர் என்பது மிகுந்த கேள்விக்குறியே. கண்டவர்கள் எல்லோரும் மகானாகிவிடுகின்றனர் காணதவர்கள் மண்ணாகி போகின்றனர். இவ்வாறிருக்கையில் "நான் கடவுள்" "மனிதன்தான் கடவுள்" "உன்னுள் கடவுள்" என்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் மாயையே!
ஓசியில் கிடைக்கும் ஓராயிரம் ரூபாய் பணத்துக்கும் ஒன்பது முழ சேலைக்கும் ஒரு வேளை உணவுக்கும் அடித்துக்கொண்டும் மிதித்துக்கொண்டும் சாகும் சாதாரண ஜனங்கள் நிறைந்துள்ள இவ்வுலகில், "உன்னுள் கடவுளை காண" என்று போதித்தால் புரிந்துகொள்பவர் எத்தனைபேர்? இல்லை நம்முள் கடவுளை கான்பத்தான் அவ்வளவு எளிதான செயலா? சர்வத்தையும் ஒடுக்கி, சாவை கண்டு அஞ்சாது பாசம் பற்றுக்களை துறந்து பலநாள் கஷ்டப்பட்டால்தான் பரமனை என்னுள் காணமுடியும்.
இறைவன் ஏன் தன்னை எல்லோருக்கும் வெளிப்படுத்த கூடாது?
"கண்டு விசுவாசிப்பவர்களை விட காணாது விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்" என்பது இயேசுவின் வாக்கு. காணாத ஒன்றின்மேல் விசுவாசம் வைப்பது என்பது சுலபமான காரியமா?
ஆதாம் இறைவனிடமிருந்து நேரடியாக கட்டளையை பெற்றான் அதனால் அவன் அந்த பாவபழத்தை பரித்து புசிக்கவில்லை ஏவாள் ஆதாம் மூலமே பழத்தை உண்ணக்கூடாது என்ற செய்தியை அறிந்தாள் அதனால் இறைவனின் வார்த்தையில் உள்ள சீரியஸ்நஸ் புரியாமல் பழத்தை பரித்து உண்டாள்.
இவ்வகையில் ஒரு மனிதனை நேரடியாக எச்சரிப்பதற்கும் எழுத்தின் மூலமோ அல்லது இன்னொரு நபர் மூலமோ எச்சரிப்பதில் நிச்சயம் வேறுபாடு உண்டு!
இறைவன் எல்லோரையும் நேரடியாக எச்சரித்தால் எல்லோரும் கண்டிப்பாக மனந்திரும்புவார்கள். ஆனால், பின்பு நமக்கென்ன வேலை. அவரும் அவருடைய தேவ தூத சேனையும் இவ்வுலக மனிதர்களிடம் பேச ஆரம்பித்தால் ஒரு சில மணித் துளிகளில் மாந்தர் அனைவரும் உண்மையான தேவன் யார்? எது சத்தியம்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால், அது அவருடைய சித்தம் அல்ல. ஏன் அப்படி என்று கேள்வி கேட்க முடியாது. (ரோமர் 9:20-21). இதனால் அவர் அன்பில்லாதவரோ என யாரும் எண்ணவும் முடியாது; ஏனெனில் அவருடைய அன்பின் வெளிப்பாடாகவே இந்த உலகை சிருஷ்டித்தார். எனவே அவர் நிச்சயமாகவே அன்பான தேவன். அவர் குறிப்பிட்ட சிலரை (அவருடைய பிள்ளைகளாக) தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக உலகத்திற்கு சத்தியத்தை அறிவிக்கிறார். இதற்காக தம்முடைய மகிமையுள்ள் வார்த்தையை அவர் மனுமக்களிடம் தந்திருக்கிறார்.
இதற்கு மேலும் பல ஏற்றுக்கொள்ள கூடிய காரணங்கள் இருக்கின்றன. மற்ற சகோதரர்கள் அவற்றை விவரிப்பார்கள் என எண்ணுகிறேன். நானும் முயற்சிக்கிறேன்.
-- Edited by timothy_tni on Thursday 11th of March 2010 09:27:41 PM
////////// கடவுள் நேரடியாக மனிதன்முன் வராமல் இருப்பதால்தானே நாத்திகவாதிகள் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவரை எல்லோரும் அறியமுடிந்தால் நாத்திகர் என்று யாரும் இருக்க முடியாதே. இவ்வகையில் ஏன் கடவுள் எல்லோருக்கும் தன்னை உணர்த்துவது இல்லை? எல்லோரும் அவருடைய பிள்ளைகள் தானே /////////////////
அன்பு சகோதர்களே தேவன் தன்னை எல்லோரும் விசுவாசிக்க வேண்டும்அவரை மனிதனுக்கு வெளிபடுத்த வேண்டும் என்று நினைத்தால் வானத்தை கிழித்து நான் தான்
இயேசு நானே மெய்யான தேவன் என்று சொல்வதற்கு ஒரு நிமிடம் ஆகாது
அப்படி செய்தால் விசுவாசம் என்பது வீணாய் இருக்கும்
ஒரு மனிதனுக்கும் தேவ கிருபை இருக்க வாய்ப்பில்லை........பல்லுக்கு பல் கல்லுக்கு கல் தான்
இந்த உலகத்தின் கிறிஸ்த்தவம் என்ற ஒரே ஒரு மார்க்கம் மட்டும் இல்லை. சொன்ன உடன் விசுவாசித்தோம் என்று ஏற்றுக்கொள்வதற்கு. இன்றைய நிலையில் உலகம் அனேக மார்க்கங்ககள் போதகங்கள் மற்றும் கள்ள போதகங்களால் நிறைத்திருக்கிறது.
இந்நிலையில் தேவன் நம்மை ஆண்டவரை போதிப்பதற்கு நியமித்திருந்தாலும் எது உண்மை எது பொய் என்று தீர்மானிப்பதிலும் யார் சொல்வது உண்மை யார் போதிப்பது தவறு என்று தீர்மானிப்பதிலும் எல்லோருக்குமே குழப்பம் வருவது நிச்சயம். ஏனென்றால் நாமும் அவர்களைபோல ஒரு மனிதனே.
உண்மை இறைசெய்தியை போதிப்பவர்கள்போல், ஏமாற்றுகிரவனும் நல்லவன் போலவே வேஷமிட்டு ஏமாற்றுகிறான். அப்பாவி மக்கள் நம்பி விசுவாசித்துதான் ஏமாந்து போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இறைவன் மீது நம்பிக்கை இல்லை என்றோ விசுவாசம் இல்லை என்றோ சொல்லவிட முடியாது.
இந்நிலையில் இறைவன் தம்மை எல்லோருக்கும் வெளிப்படுத்தினால் அவர்கள் நிச்சயம் மனம்திரும்ப வாய்ப்புள்ளதல்லவா?
இறைவன் இந்த உலகத்துக்குள் பிரதிட்சயமாக எல்லோர் முன்னும்
வரமுடியாது. தன்னை எல்லோருக்கும் வெளிபபடுத்தவும் முடியாது என்றே நான் கருதுகிறேன் அதற்க்கு நானறிந்த காரணங்களை இங்கு பதிக்கிறேன்.
இந்த உலகை அருமையாக படைத்த தேவன் அதில் என்றென்றும் ஆண்டுகொண்டு வாழ மனிதனுக்கு கொடுத்துவிட்டார். அதை மனிதனிடமிருந்து சாத்தான் தந்திரமாக கவர்ந்து கொண்டான். இப்பொழுது அவனுடைய ஆட்சிதான் இங்கு நடக்கிறது. எனவேதான் அநியாயமும் அக்கிரமமும் துன்பமும் கொடூரமும் தலை விரிததாடுகிறது. நல்லவனுக்கு காலம் இல்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
அடுத்தவன் ஆக்கிரமித்துள்ள இடத்தில் ஆண்டவர் அனுமதியின்றி வரமாட்டார். சாத்தானும் ஆண்டவர் உள்ளே பிரதிட்ச்சமாக வர அனுமதி கொடுக்கமாட்டான் எனவேதான் அவர் நேரடியாக கண்முன் வருவது இல்லை. மாமிசத்தில் இந்த பூமிக்குள் வந்த ஆண்டவராகிய இயேசுவுக்கு தலைசாய்க்க கூட இடம் கொடுக்காமல் அவரை சிலுவையில் அடித்து உயர்த்திவிட்டான்.
அனால் ஆண்டவருக்கு பிரியமாய் நடந்து அவரை அன்புடன் தேடும் அடியவர்கள் மனதில் மட்டும் அவர் வந்து அமரமுடியும், அன்புடன் பேசமுடியும் அவர்களுக்கு மட்டும்தான் அவரை உணர்த்தமுடியும்.
இந்த உலகில் உயர்ந்த நிலையில் இருக்கும் அதிகாரி ஒருவரை எல்லோரும் நினைத்த நேரத்தில் பார்ப்பதற்கு அனுமதிகிடையாது. அதற்கென்று தகுதியுள்ளவர்கள் மட்டுமே அவை பார்க்க முடியும். ஆனால் அந்த அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு அவர்களை நினைத்த நேரத்தில் பார்க்க அனுமதியுண்டு.
எனவே ஒருவர் ஆண்டவரை தரிசிக்க அல்லது அறிய வேண்டுமென்றால் முதலில் அவருடைய பிள்ளைகள் ஆகவேண்டும்.
அது எப்படி நடக்கும்?
யோவான்
1 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை (இயேசுவை) ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
இயேசுவை விசுவாசித்து அவருடைய பிள்ளைகளாகி விட்டோம் என்றால் அவரை தரிசிக்க வாய்ப்பு உண்டாகும்.
இவர்களை தவிர ஒரு உயர்ந்த அதிகாரிக்கு சரியான நிலையில் உள்ளவர்களும் அவரை நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் அதுபோல் தேவனின் பரிசுத்த நிலைக்கு ஒத்த பரிசுத்த நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவரும் தேவனை தரிசிக்க முடியும் மற்றபடி அவர் எல்லோருக்கும் தன்னை வெளிப்படுத்த முடியாது என்றே நான் கருதுகிறேன்.
தேவன் ஒவ்வொருவருக்கும் தன்னை வெளிப்படுத்த விருப்பம் உள்ளவராகவே இருக்கிறார்! ஆனால் ஒவ்வொரு மனிதனின் பாவமும் ஒரு மிகப்பெரிய சுவராகி பரிசுத்தராகிய அவரை பார்க்க முடியாதபடி மறைக்கிறது.
ஏசாயா 59:2உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
எனவே தவன் தன்னை எல்லோருக்கும் வெளிப்படுத்தத ரெடி அவருக்கு ஏற்ற பரிசுத்த நிலைக்கு வர நீங்கள் ரெடியா? அவருக்கேற்ற பரிசுத்த நிலைக்கு வராதவரை ஒருவரால் அவரை அறிவதென்பது இயலாத காரியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இறைவன் யாருக்கும் தன்னை மறைக்கவும் விரும்பவில்லை யாரும் தன்னை வீணாக வணங்கவேண்டும் என்றும் தான் ஒரு முதலாளிபோல இருக்கவேண்டும் என்று அவர் விரும்பவும் இல்லை.
மனிதன்தான் அவரது பரிசுத்தத்துக்கும் முன் நிற்க முடியாமல் அவரை விட்டு பிரிந்து பிரிந்து பின்னால் ஓடுகிறான். ஏனெனில் அவர் மனிதனுக்குள் வைத்திருக்கும் மனசாட்சிக்கும், அவர் உலகில் நியமித்திருக்கும் நீதி நியாயங்களுக்கும், உலகின் உள்ள சட்டதிட்டங்களுக்கும் ஏதாவது ஒரு இடத்தில் கீழ்படியாமல் நடக்கும் போதும், நாம் அவரை விட்டு ஒரு காததூரம் பின்னால போகிறோம்.
சரி! இன்றே ஆண்டவர் வந்து "நான் தான் இறைவன்" என்று எல்லோரிடமும் சொன்னால் என்ன நடக்கும்? உடனே அவர் சொல்வதை எல்லாம் கேட்டு, எல்லோரும் அவருடைய முழுமையாக கீழ்படிந்து பொய், திருட்டு, வஞ்சம், பொறாமை, எரிச்சல், இச்சை, பண ஆசை, எல்லற்றவ்ற்றையும் விட்டுவிட்டு அவரின் சொல்லுக்கு முழுமையாக கீழ்படிந்து வாழ்ந்துவிட முடியமா?
அவ்வாறு அவர் எல்லோருக்கும் தன்ன வெளிப்படித்தினால், எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதற்குத்தான் கோடி கூட்டம் நிர்க்குமேயன்றி அவருடைய விருப்பம் என்னை? அவர் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்று அறிந்து அதன்படி நடக்க ஆயிரத்தில் ஒருவர் கூட முன்வர மாட்டார்கள்.
ஒருவர் எந்த இறைவனையும் கும்பிட வேண்டிய தேவையே இல்லை, எந்த கோவிலுக்கும் போகவேண்டிய தேவையும் இல்லை. உங்கள் தேவைகளை விட பிறர் தேவையையும், உங்களை நேசிப்பதை விட பிறரை நேசிப்பதிலும், உங்களுக்காக செலவழிப்பதை விட பிறருக்கு செலவழிப்பதில் மகிழ்ச்சி உடையவராகவும், பிறருக்காக எதையும் இழக்க தயாராகும், ஒரு குழதையை போல கீழ்ப்படியும் தன்மை உடையவராகும் இருந்தால் நான் 100% உறுதியாக சொல்கிறேன் நீங்கள் எங்கு இருந்தாலும் இறைவன் உங்களை தேடிவருவார்.
அவர் மனிதனை நடத்தும் விதம் நமக்கு பயித்தியமகத்தான் தெரியும். ஏனெனில் அதில் உள்ள உண்மை என்னவென்பது நமது சாதரண அறிவுக்கு எட்டாது. அவர் தனது அறிவில் கொஞ்சம் நமக்கு தரும் போதுதான் எல்லாமே நியாயம் என்று நமக்கு புரியம். நாம் நாளைய நிலையை பற்றி சித்திப்போம் இறைவன் 400 வருடங்களுக்கு அப்பால் உள்ளதை சிந்திப்பார். எனவே நீர் ஏன் என்னை இதை செய்ய சொல்கிறீர் என்று நாம் அவரிடம் கேள்வி கேட்ககூடாது. நமது தகப்பன் நமக்கு நல்லதை தான் சொல்வார் என்ற நம்பிக்கையோடு எல்லா கட்டளைக்கு கீழ்படிந்து செயல்பட்டால் அது நமக்காக மட்டுமல்ல இந்த உலகில் எல்லோருக்கும் நன்மையாக முடியும்.
அப்படி ஒருவர் இருக்காதவரை அவர் தன்னை அவர்களுக்கு தெரியப்படுத்தினால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. "நான் எனது இஸ்டப்படி வாழ்வேன் அவர் வந்து என்னை சந்திக்க வேண்டும்" என்று நினைப்பது, எந்த தகுதியும் இல்லாமல் "எனக்கு IAS பட்டம் வேண்டும்" என்று கேட்பதற்கு சமம்.
முதலில் உங்களை நீங்கள் தகுதிபடுத்துங்கள் இறைவன் உங்களை தேடி வருவார். நாம் இறைவனை தேடுவதைவிட 100மடங்கு அதிகமாக அன்போடும் பாசத்தோடும் மனிதனை தேடிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் ஒரு அடி அவரை நோக்கி முன்னால் எடுத்து வைத்தால் அவர் பத்து அடி உங்களை நோக்கி ஓடிவருவார்.
-- Edited by SUNDAR on Saturday 8th of May 2010 01:28:58 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)