1. உலகத்தை தினமும் சந்தித்து ஜெயிக்கிற அளவு விசுவாசமும், தைரியமும் உடையவனாயிரு. 2. தேவனோடு அல்லாமல், எதையும் என்னால் தனியாய் செய்ய இயலாது என்ற அளவு பெலவீனத்தோடிரு. 3. உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்ய தாராளமாயிரு. 4. உனக்குத் தேவைப்படுகிறவற்றில் சிக்கனமாயிரு. 5. எல்லாம் உனக்குத் தெரியாது என்பதை புரியும் அளவு ஞானத்தோடிரு. 6. அற்புதங்களை சந்தேகமின்றி எதிர்பார்க்கிற அளவு தேவன்மேல் அசாத்தியமான நம்பிக்கையுடையவனாயிரு. 7. உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தயாராயிரு. 8. மற்றவர்களின் துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆயத்தமாயிரு. 9. பாதையை தவறவிட்டு தவிப்பவருக்கு பாதையை காட்டி வழிநடத்துகிற தலைவனாயிரு. 10. உன்னை மனம் நோகவைத்த நபராயிருந்தாலும், அவர் வெற்றி பெறும்போது அவரை பாராட்டுவதில் முதன்மையாயிருந்து மன்னிப்பை பிரதிபலித்துக் காட்டு. 11. தோல்வியடைந்த உன் சகாவை விமர்சிக்கிறதில் உன் வருத்தம்மட்டும் வெளிப்படட்டும் அல்லது விமர்சிப்போரின் பட்டிய லில் உன் பெயரே இடம்பெறாமல் போகட்டும். 12. நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியிலும் தேவ ஒத் தாசையை நாடுவாயானால், நீ இடறமாட்டாய். 13. தவறான வழியில் சென்றால் அதனால் வரக்கூடிய முடிவைக் குறித்து நன்கு ஆராய்ந்து பார். அப்பொழுது நீ சரியான வழியில் நடக்கிறவனாய் இருப்பாய். 14. உன்னை நேசிக்கிறவர்களைமட்டும் நீ நேசியாமல், உன்மேல் அன்பு இல்லாதவர்கள்மேலும் நீ அன்பாயிரு, அன்பற்றவர்களும் மாறக்கூடும். 15. எல்லாவற்றிற்கும் மேலாக உன் காலடிகள் இயேசு மாதிரியாய் விட்டுச்சென்ற கால்தடத்தில் நடக்கட்டும்.