நான் என் வாழ்விலே என்ன முயற்ச்சி செய்தும் சில காரியங்களை அடைய முடியாமல் போனதுண்டு. நான் மற்றவர்களை விட தகுதியானவன் என இருந்தாலும், நான் எனக்காக வேண்டுதல் செய்தும் அவைகளை அடைய முடியாமல் போனதுண்டு. இதனால் அந்த காரியங்களை அடைந்தவர்களின் மேல் பொறாமை உண்டானது.
பொறாமையினால் என் துன்பம் நான்கு மடங்காகியது அதாவது காரியங்களை அடைய முடியாமல் போனது முதல் துன்பம். பொறாமை மற்றும் வயிற்றெரிச்சல் இரண்டாம் துன்பம். பொறாமையினால் வரும் குற்ற உணர்வு மூன்றாம் துன்பம், பொறாமை கொள்ளக் கூடாது என்ற பிரயாசம் நான்காம் துன்பம். அதிலும் பொறாமை கொள்ளக் கூடாது என நினைத்தால், 'குரங்கை நினைக்கக் கூடாது என முடிவெடுத்த கதையாக' பொறாமை மேலும் மேலும் தலை தூக்கியது.
இப்படிப்பட்ட பொறாமையை எப்படித்தான் வெல்வது? ஆனால் ஒரு
வழி எனக்கு தோன்றியது. அந்த வழியை பின்பற்றினவுடன் பொறாமை என்னை விட்டு போனது. அது என்ன வழி?
அதற்கு முன்பாக வேறு வழிகளை பற்றி பார்க்கலாம்.
மற்றவரின் பிரச்சனைக்காக, கஷ்டத்திற்காக நாம் வேண்டலாம். ஆனால் ஏற்கனவே நல்ல நிலைமையில் உள்ளவர் இன்னும் பல மடங்கு நல்ல நிலைமை அடைய வேண்டும் என வேண்டுவது எப்படி சரி என எனக்கு தெரியவில்லை. நமக்கு வந்திருக்கும் பிரச்சனையே அவர் நம்மை விட பல மடங்கு நல்ல நிலைமையில் இருப்பதுதான். (நான் அந்த அளவுக்கு பூரண சற்குனன் இல்லீங்கோ ! (அன்பு அவர்களே நோட் பண்ணிக் கொள்ளுங்கள்) )
அப்படியானால் என்னதான் செய்வது?
பொறாமைப்பட வேண்டும். நம்மால் எவ்வளவு அதிகமாக பொறாமைப்பட முடியுமோ அவ்வளவு அதிகமாக பொறாமைப்பட வேண்டும். (ஐயோ1 என்ன இப்படி சொல்றீங்க?)
ஆனால் யார் மேல் பொறாமைப்பட நினைக்கிறோமோ அவர்கள் மேல் அல்ல, எந்த காரியத்துக்காக பொறாமைப்பட நினைக்கிறோமோ அந்த காரியத்தில் சாதனை செய்தவர்களைப் பார்த்து.
அதாவது,
நமக்கு தெரிந்த, சமமான ஒருவர் கார் வாஙகி விட்டார், நம்மால் வாங்க முடியவில்லை என வைத்துக் கொள்ளுங்கள் நம்க்கு பொறாமை வரும் போது (அவரைப் பார்க்கும் போது) நாம் நம்க்குப் பக்கத்தில் இருக்கும் இந்த அரை குறைகளின் மேல் பொறாமை கொள்ளாமல், ஒரு
கார் தொழிற்சாலையே வைத்திருக்கும் டாடாவைப் பார்த்து (நினைத்து) பொறாமை கொள்ள வேண்டும். இதுவே சரியானதும் கூட.
நமது பொறாமை என்னும் மிக உயர்ந்த, பெரிய குணத்தை பெற்றுக் கொள்ளும் தகுதி ந்ம்மை சுற்றியுள்ள மிகவும் கீழ்தரமான, அரை குறைகளுக்கு இல்லை என்பதை உண்ர்ந்து நம்முள் பொங்கும் இந்த சக்தியை அதற்க்கு தகுதியானவர்கள் மேல் மட்டுமே உபயோகிக்க வேண்டும். (உ.ம். அம்பானி, அப்துல் கலாம், பால் யாங்கி சோ etc.,)
இந்த வழியை பின்பற்ற ஆரம்பவித்தவுடன் பொறாமை என்னை விட்டு போனது
இதற்கு பிறகு, பொறாமை என்பது காரியம் சம்பந்தமாக வருவது போல் தோன்றினாலும், அது காரியம் சம்பந்தமாக வருவது இல்லை என்றும், நம்மை சுற்றியுள்ளவர்களின் மேல் நாம் அன்பு செலுத்தக் கூடாதவாறு நமக்குள் சாத்தான் ஏற்படுத்தும் ஒரு மாயையான உண்ர்வே அது என புரிந்து கொண்டேன்.
இந்த வழி பிடித்திருந்தால், பின்பற்றுங்கள்.......
(தொடராது)
-- Edited by SANDOSH on Thursday 11th of March 2010 11:01:39 PM
/////கார் தொழிற்சாலையே வைத்திருக்கும் டாடாவைப் பார்த்து (நினைத்து) பொறாமை கொள்ள வேண்டும். இதுவே சரியானதும் கூட.
நமது பொறாமை என்னும் மிக உயர்ந்த, பெரிய குணத்தை பெற்றுக் கொள்ளும் தகுதி ந்ம்மை சுற்றியுள்ள மிகவும் கீழ்தரமான, அரை குறைகளுக்கு இல்லை என்பதை உண்ர்ந்து நம்முள் பொங்கும் இந்த சக்தியை அதற்க்கு தகுதியானவர்கள் மேல் மட்டுமே உபயோகிக்க வேண்டும். (உ.ம். அம்பானி, அப்துல் கலாம், பால் யாங்கி சோ etc.,)//////////
கொலோசெயர் 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
I பேதுரு 2:2 சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
லேவியராகமம் 19:18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
எசேக்கியேல் 35:11 நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குதக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
சந்தோஷ்
திருட்டு குணம் உள்ளவன் எப்படி திருட்டு குணத்தை போக்குவது
என்றால் சிறிய வீட்டில் திருடாமல் பெரிய வீட்டில் திருடினால்
திருட்டு தனம் போய் விடும் என்று கூற முடியுமா நீங்கள் சொல்வது
அப்படி தான் இருக்கிறது சந்தோஷ் அவர்களே
நாம் எந்த ஆவியிலும் நடவாமல் தேவன் நமக்கு தந்த பரிசுத்த ஆவியிலே நடந்து
சிறியவர்களே பெரியவர்களே எல்லோரிடத்திலும் அன்பாய் நடக்க வேண்டும்
கொரிந்தியர் 13:4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
தேவன் அன்பாய் இருக்கிறார் ( அன்பு இல்லாதவன் தேவனை அறியான் )
பொறாமையை எப்படி வெல்ல வேண்டும் என்றால் எபேசியர் 6 அதிகாரம்13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்................
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 12th of March 2010 08:34:13 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
//நமது பொறாமை என்னும் மிக உயர்ந்த, பெரிய குணத்தை பெற்றுக் கொள்ளும் தகுதி ந்ம்மை சுற்றியுள்ள மிகவும் கீழ்தரமான, அரை குறைகளுக்கு இல்லை என்பதை உண்ர்ந்து //
இது வன்ஜ புகழ்ச்சியாகும்.
ஆவிக்குரிய வழியில் ஒருவரால் பொறாமையை வெல்ல முடிந்தால் அது மிகவும் மகிழ்ச்சியான காரியம். அதுவே சரியானதும் கூட. என்னால் ஆவிக்குரிய வழியில் வெல்ல முடியவில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தடவை நான் கூறியதை செயல்படுத்திய பிறகு பொறாமை எனக்கு வரவில்லை.
-- Edited by SANDOSH on Friday 12th of March 2010 10:32:02 PM
எவ்விதத்திலும் பொறாமை கொள்வது தவறு என்று வேதம் சொல்லும் அனேக வசனங்களை சகோதரர் எட்வின் சுட்டியிருக்கிறார். அவ்வசனங்கள்படி யார் மீதும் பொறாமைபடுவது எவ்விதத்திலும் சரியானதல்ல! .
ஆனால் அவ்வசனங்களின் அடிப்படையில் பொறாமையை விட்டுவிட சகோதரர் சந்தோஷ் சொல்வதும் ஒரு நல்ல வழிபோலவே இருப்பதால் வேறு வழியில் பொறாமையை விட முடியாதவர்கள் இவ்விதத்தில் முயற்ச்சிக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில் அவர் சொல்வதுபோல் நமக்கு அணில் அம்பானி மேலோ அல்லது டாட்டா பிர்லா மேலோ நாமாக முயற்ச்சித்தால்கூட ஒருநாளும் பொறாமை வரவே வராது.
பொறாமை வந்தால்தானே பாவம்.
பக்கத்து வீட்டுகாரன் மேலும் பக்கத்து சீட்காரன் மேலும் சொந்த பந்தங்கள் மேலும்தான் பொறாமை வரும் அது ஒரு சாத்தனின் சதிசெயல்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பொறாமை என்பது த்ன்னைவிட உயர்நிலையை அடைந்தவர் மீதான இயலாமை கலந்த தாழ்வு மனப்பான்மையாக இருக்குமானால் அதிலிருந்து விடுபட்டு மேம்பட்ட நிலையை- அதாவது யார் பாதித்தாரோ அவரைவிட மேலான நிலைக்கு உயர என்ன செய்யவேண்டும் என்பதையும் சிந்திக்கவேண்டும்;
ஏனெனில் போட்டி மனப்பான்மையே சிறப்படைய உதவுகிறது; போட்டி மனப்பான்மையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதமாவது பொறாமையுணர்வு கலந்தே இருக்கும்;
எனவே வேதத்தின் அடிப்படையிலும் வாழ்வியல் ஆதாரத்தின்படியும் மாற்று உத்வேக உணர்வையூட்டும் ஆலோசனைகள் சொல்லப்படுமானால் இந்த பகுதியானது நிறைவடையும்.
நீதிமொழிகள் 27:4 உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
இப்படி வேதம் அழகாய் கூறி இருக்கும் போது நம் அறிவக்கு எட்டியபடி சுயத்தால் சிந்திக்கிற
காரியம் வீணாய் இருக்கும்
சகரியா 4:6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும்அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆனால் அவ்வசனங்களின் அடிப்படையில் பொறாமையை விட்டுவிட சகோதரர் சந்தோஷ் சொல்வதும் ஒரு நல்ல வழிபோலவே இருப்பதால் வேறு வழியில் பொறாமையை விட முடியாதவர்கள் இவ்விதத்தில் முயற்ச்சிக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.
சுந்தர் அவர்களே பொறாமை என்பதே தவறு அம்பானி மிது அணில் மிது பொறாமை வைத்தாலும்
பொறாமை பொறாமை தானே வேதத்தில் பொறாமை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும்
என்று எழுதி இருக்கிறதா சந்தோஷ் ஆவிக்குரிய விசயத்தில் முடிய வில்லை என்று கூறும் போது
எப்படி முடியாது என்று சொல்லி அனேக வசனங்களை எடுத்து கூறி இருக்கலாமே
நான் இயேசுவை ஏற்று கொள்ளாத போது சிகரெட் பிடிக்கின்ற பழக்கம் அதிகமாய் இருந்தது
நான் விட வேண்டு என்று நினைத்தேன் என்னால் முடிய வில்லை எத்தனை முறை
நான் தனிமையில் என் அம்மா மீது ஆணை இனி நான் சிகரெட் புடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணி
இருக்கிறேன் என்னால் முடிய வில்லை ஒரு முறை வீட்டில் ( இயேசுவின் பாடுகள் ) என்ற படத்தை இரவு 11 மணிக்கு பார்த்து கொண்டு இருந்தேன் படம் முடிந்த பிறகு எனக்கு அழுகை வந்து விட்டது நான் அளவில்லை ஆனால் கண்களில் ஒரு குழந்தை அழுவது போல் கண்ணீர் ஓடி கொண்டு இருந்தது மாறு நாள் கலை நான் ஒரு போதகரிடம் இயேசுவை இப்படியா அடித்தார்கள்
என்று கேட்டேன் அந்த போதகர் எனக்கு பல விளக்க்கள் சொன்னார் அதன் பிறகு நான் பைபிள் படிக்க ஆரம்பித்தேன் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் சிகரெட் பிடித்து பிறகு வந்து தான் பைபிள் படிப்பேன் இப்படிதான் 10 நாட்களில் பைபிளை படித்து முடித்தேன் சிகரெட் பழக்கம் என்னை விட்டு நீங்க வில்லை
நான் எவ்வளவு கஷ்ட பட்டேன் என்று எனக்கு தான் தெரியும் பாத்ருமில் உட்காந்து கொண்டு ஆண்டவரே இந்த பழக்கத்தை என்னை விட்டு நீக்கும் என்று எத்தனை முறை கதறி இருக்கிறேன் என்னால் முடிய வில்லை என் சுயத்தால் போராடினேன் ஒன்றும் மாற வில்லை அதன் பிறகு தேவனுடன் பழக பழக சிகரெட் பழக்கம் மட்டும் அல்ல
பெருமை, மேட்டிமை பொறாமை அகந்தை போன்ற அனேக காரியங்கள் தேவனிடம் பழக பழக ஓடி விட்டன
இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் ஆவிக்குரிய வழியில் வெல்ல முடியவில்லை
என்றதினால் தான் மாம்சத்தில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது
உலகம்
- இவை இரண்டும் சாத்தானின் அடியாட்கள்என்றுகூறலாம்
மாம்சம்
மாம்ச சிந்தயோ மரணம என்று அறிந்து நாம் தேவனுடைய ஆவியினாலே நடப்போமானால்
போக வேண்டியது நம்மை விட்டு போய் விடும் வர வேண்டியது நம்மிடத்தில் வந்து சேரும்
நிறைவானது வரும் போது குறைவானது நம்மை விட்டு ஓடி போய்விடும்..........என்பது என் கருத்து ........
தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 15th of March 2010 03:59:03 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
actually neengal sonnathu PORAMI velvatharku naam BIG VIP-in male like AMBANI BILL GATES Athai vaikalam Engireer But That is too PORAMAI know!, But Athu pola Big Vip-in Male NAAM PORAMAIKU Pathilaga Poti( comption)idalam idhu ennudaiya KARUTHU.