அனேகரால் போட்டு குழப்பப்பட்ட இந்த தலைப்பை என்னால் முடிந்த அளவுக்கு குழப்ப எடுக்கப்பட்ட ஒரு சிறிய முயற்ச்சியே இந்த கட்டுரை.
சிக்கின நூல் கண்டை போல் அங்கங்கே வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த காரியத்தை புரிந்து கொள்ள நூல் கண்டின் ஒரு முனையை கண்டு பிடித்தல் அவசியம்.
அதற்கு முன்பாக எவை எவை இரண்டாம் வருகைக்கு அடையாளம் இல்லை என பார்ப்போம்.
இவைகள் அடையாளங்கள் அல்ல :
மத்தேயு 24.5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். 12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
24.6.7 உலக வரலாற்றிலே இவைகள் இல்லாத காலமே இல்லை கி.மு விலும் இவைகள் உண்டு கி.பி யிலும் இவைகள் உண்டு
5.,11 நானே கடவுள் என சொல்கிறவர்கள்,கள்ளத்தீர்க்கதரிசிகளும் இல்லாத காலமே இல்லை
12 அன்பில்லாதவர்கள் எப்போதும் உண்டு.
ஆகவே மேற்கண்ட எவைகளும் அடையாளங்கள் அல்ல பின்?
வெளீ 6.2 நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 5 -- நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். 6 அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். 10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
பூமியில் எப்போது இருக்கும் போர், பஞ்சம், மரணம் மற்றும் இவற்றுடன், கி.பி யில் நான்காவதாக ஒரு வெள்ளை குதிரை சேர்ந்து கொண்டது. இதுவே சுவிசேஷம் என்னும் குதிரை. அம்பு விடப்பட்டு எதிரி ஏற்கனவே தோற்றததினால் வில்லை மட்டும் வைத்துக் கொண்டு ஜெயிப்பவனாக இவன் புறப்பட்டான். இந்த குதிரையும் மற்றும் இரத்த சாட்சிக்களின் கதறலும் இரண்டாம் வருகையை முடிவு செய்யும்
அடையாளம் - 1
மத் 24.14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
மாற் 13.10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.
வெளி 6.11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
அடையாளம் - 2
மத்தேயு 23.39 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ரோமர் 11.25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
-- Edited by SANDOSH on Sunday 21st of March 2010 06:05:45 PM
பூமியில் எப்போது இருக்கும் போர், பஞ்சம், மரணம் மற்றும் இவற்றுடன், கி.பி யில் நான்காவதாக ஒரு வெள்ளை குதிரை சேர்ந்து கொண்டது. இதுவே சுவிசேஷம் என்னும் குதிரை. அம்பு விடப்பட்டு எதிரி ஏற்கனவே தோற்றததினால் வில்லை மட்டும் வைத்துக் கொண்டு ஜெயிப்பவனாக இவன் புறப்பட்டான். இந்த குதிரையும் மற்றும் இரத்த சாட்சிக்களின் கதறலும் இரண்டாம் வருகையை முடிவு செய்யும்
மிக அருமையான கருத்து, மனிதனால் நிதானிக்க முடியாத மனித அறிவுக்கு அப்பாற்ப்பட்ட கருத்தாக தெரிகிறது தொடர்ந்து எழுதுங்கள் சகோதரர் சந்தோஷ்.
முன்னால் எழுதியவற்றின் பின் பகுதி கடைசி நேர புரிந்து கொள்ளுதலின்படி நீக்கப்பட்டுள்ளது. பல காரியங்கள் தனியாக புரிந்து கொள்ள முடிந்தாலும், எந்த காரியத்துக்கு பிறகு எது வரும் என்பது இப்போதைக்கு குழப்பமாக இருப்பதால் முதலில் அவைகள் தனித்தனியாக விளக்கப்பட்டு பின்பு ஒன்று சேர்க்கப்படும்
வெளி 12.1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 2 அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. 4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. 5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 6 ---- 7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. 8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
ஆதி 3.15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
இந்த வார்த்தைகள் இயேசுவை குறிக்கிறது என்று சொல்லப்பட்டாலும், சர்ப்பத்தின் வித்துக்கும் ஸ்தீரியின் வித்துக்கும் உலகில் காலம் காலமாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்தீரியின் வித்து தன்னை கொல்லுவதற்கு முன்பாக ஸ்தீரியின் வித்தை கொல்ல வேண்டும் என சர்ப்பம் கிரியை செய்கிறது.
காயீன் சர்ப்பத்தின் வித்தாக மாறி ஆபேலை கொன்றான்.
எகிப்தில் பார்வோன் சர்ப்பத்தின் வித்தாக இருந்து ஸ்தீரியின் வித்தான (இஸ்ரேல்) ஆண் குழந்தைகளை சாகடித்தான் (இரத்த சாட்சிகள்). ஆனால் சர்ப்பத்தை வெல்ல பிறந்த குழந்தை வேறு இடத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உரிய நேரத்தில் வெளிப்பட்டு சர்ப்பத்தின் வித்தை அழிக்கிறது. (பார்வோன்-மோசே-பார்வோனின் அரண்மனை)
இதே போன்ற காரியம் இயேசுவின் வாழ்க்கையிலும் நடைபெற்றது. (ஏரோது - இயேசு - எகிப்து)
இந்து மதத்தில் கிருஷ்னாவின் வாழ்க்கையிலும் இது நடைபெற்றது என்பது வேறு விஷயம்)
ஒவ்வொரு முறை சர்ப்பம் தோல்வி அடையும் போதும் மனிதர்கள் மேல் அதன் பிடி தள்ர்ந்து கொண்டே வருகிறது.
எப்போதெல்லாம் சக்தி வாய்ந்த ஒரு ஸ்தீரியின் வித்து தோன்றுகிறதோ அல்லது கிரியை செய்கிறதோ அப்போதெல்லாம் அதை அழிக்க சர்ப்பம் கிரியை செய்கிறது.
எலியா, எரேமியா, பவுல் (இனனும் பலரை) போன்றவர்களை அழிக்க அது முயன்றது. கடவுளூக்காக வல்லமையாக கிரியை செய்ய கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இவர்கள், மற்றும் இரத்த சாட்சியாக மரித்தவர்கள் தேவ சபை என்னும் பெண்ணால் பெற்றெடுக்கப்பட்ட ஆண் பிள்ளைகள் எனப்படுகின்றனர். சாதாரண விசுவாசிகள் பெண் குழந்தைகள் ஆவார்கள்.
இந்த ஆண் பிள்ளைகளின் நிறைவாக பிறக்கப் போகும் ஒரு ஆண் குழந்தை சர்ப்பத்தை வானத்திலிருந்து பூமியில் கீழே தள்ள ஜெயம் கொள்ளப் போகிறது. (மோசே மற்றும் இயேசுவின் வாழ்க்கையில் நடந்ததைப் போல)
சாத்தான் ஒரு மிகவும் திறமையான வக்கீலைப் போன்றவன். தேவ மனிதர்கள் பாவம் செய்யும் போது கடவுளே அவர்களை கடுமையாக தண்டிக்க விரும்பாவிட்டாலும் கூட சாத்தான் மிகத் திறமையாக வாதாடி தேவ கோபம் அவர்களின் மேல் பாயவும், அவர்கள் கடுமையான தண்டனை அடையவும் காரணமாய் இருப்பவன்.
(இயேசு மனிதர்கள் நன்றாய் இருக்க வேண்டும் என்பதற்க்காக பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
சாத்தானைப் போலவே சக மனிதர்கள் துன்பம் அடைய வேண்டும் என்றும், தேவ கோபம் அவர்கள் மேல் இறங்கி அவர்கள் நாசமாய் போக வேண்டும் என நினைப்பவர்கள், செயல்படுபவர்கள் சாத்தானுடன் எரி நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினை அடைவார்கள்.
(எவ்வளவோ போராடின பிறகும் அனேக மனிதர்கள் தேவனை சேராதபடிக்கு வாசலை அடைத்துக் கொண்டிருக்கும் மனித சக்திகள் மேல் (தேவன் மேல் இருக்கும் வைராக்கியத்தால்) தேவ கோபம் இறங்க வேண்டும் என வேண்டுபவர்கள் மேல் எந்த குற்றமும் சுமராது)
இதுவே எல்லோருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் மத்தேயு 5.22 ன் விளக்கம்.
22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
தேவசபை என்னும் பெண் :
சங்கீதம் 89 (கேள்வி)
.29 (தாவீதின்) அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
35 ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன். 36 அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். 37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர்.
மேற்கண்ட காரியங்கள் தாவீதுக்கு பிறகு நிறைவேறவில்லையே என ஒரு தேவ மனிதன் புலம்புகிறார். ஆனால் அவை பிற்காலத்திலேயே நிறைவேறுவதற்க்காக சொல்லப்பட்டது.
(பதில்)
வெளீ 12.1 1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
இவர்கள் தேவனுக்கென்று கொண்ட வைராக்கியத்ததினாலும், தங்கள் பலியினாலும் சுயத்தை அழித்தவர்கள் ஆதலால் இவர்கள் ஆத்துமாக்கள் பாதாளத்தை வென்று பலிபீடம் என்று சொல்லக்கூடிய தேவனுடைய இடத்தில் பலிபீடத்திற்க்கு கீழே சென்று இளைப்பாறுதல் அடைகிறது.
மனிதர்கள் தேவன் சாத்தானை ஏன் முன்பே நரகத்தில் தள்ளவில்லை என கேட்கின்றனர்.
ஆனால் சாத்தானின் அக்கிரமம் நிறைவேறும் போதே, அதை காரணமாகக் கொண்டே தேவன் அவனை நியாயம் தீர்க்க முடியும்.
மத்தேயு 23.33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? 34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; 35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
வேதத்தில் அனேக இடங்களீல் பாபிலோனைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. முந்தைய பாபிலோன் ஈராக் என்பதும், நெபுகாத்னேச்சார் அதை அரசாண்டான் என்பதும் அவன் மூலமாக கடவுள் தன் கட்டளைகளை கைக்கொள்ளாத தன் மக்களுக்கு தண்டனை அளித்தார் என்பதும் தெரிந்ததே.
இன்றைய பாபிலோன் எது என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் கத்தோலிக அமைப்பு என்றும் சிலர் அமெரிக்கா என்றும் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்கா என்பதே எல்லா வசனங்களுக்கும் பொருந்தி வருகிறது.
தேவன் தன் ராஜ்யத்தை இந்த பூமியில் ஸ்தாபிக்கவே மனிதனை படைத்தார். ஆனால் சாத்தானிடம் அதனை மனிதன் இழந்தான். இருந்தாலும் சாத்தான் மனிதனை ஆட்சி செய்ய முடியாதவாறு தேவ வல்லமை தடுத்துக் கொண்டிருக்கிறது. தேவனின் காத்திருக்கும் காலம் முடிந்தவுடன் தேவ வல்லமை நீக்கப்பட்டு சாத்தானின் ஆட்சி நடைபெறும். பிறகு தேவ கோபம் அவன் மேலும் அவனை சார்ந்த மனிதர்கள் மேலும் வந்து அவன் ஆளூகை நீக்கப்படும்.
இஸ்ரவேலரை அழிக்க நினைத்த எகிப்திய,பாபிலோனிய, மற்றும் ரோம சக்திகளின் வாரிசுகள் (races) அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சேர்ந்து பெருகியுள்ளனர். (இதை அவர்களே சொல்லியுள்ளனர்) உலக முழுவதிலும் உள்ள மக்களை ஆட்சி செய்ய சாத்தான் தெரிந்து கொண்ட இடமே அமெரிக்கா. தேவனும் தன் பங்குக்கு அனேக தேவ மனிதர்கள் அந்த தேசத்தில் குடியேற செய்தார். அமெரிக்கா இந்த இரு வேறுபட்ட மனிதர்களாலும் வள்ர்ச்சியடைந்து உலக மக்கள் மேல் அதிகாரம் செலுத்தி வருகிறது.
இந்த தேசத்தின் அதிகாரம் முழுவதும் சாத்தனின் கட்டுக்குள் வந்து, அசுத்த ஆவிகளின் குடியிருப்பாக மாற போகிறது. அங்குள்ள உண்மையான தேவ மனிதர்கள் துன்பததிற்க்கு
உள்ளாகப் போகின்றனர். பிறகு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் (மேதியர்கள் (ஈரான்), ரஷ்யாவும் கூட இருக்கலாம்) சடுதியில் இந்த தேசத்தை நெருப்பினால் அழிக்க போகிறார்கள். அதனாலேயே ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளை அமெரிக்கா அழித்துக் கொண்டிருக்கிறது.
ரஷ்யாவை பிரித்து விட்டது. தேவனும் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தின் மூலம் அந்த நாட்டை எச்சரித்துள்ளார் (இரட்டை கோபுரம் - நாளைய அமெரிகா). இதற்கான ஆரம்ப அறிகுறிகள் அனேகம் தெரிய ஆரம்பித்துள்ளன. இந்து வழிபாடும், கிருத்தவ நிகழ்ச்சி ஒளீபரப்பு தடை பற்றிய செய்திகளும் வருகின்றன (கையெழுத்து போட்டவர்கள் டார்கெட் செய்யபடுவார்கள்?). டாலர் நோட்டில் உள்ள "IN GOD WE TRUST" என்ற வாசகத்தை ஒபாமா எடுத்து விடுவான் என ஊழியர் ஒருவர் தீர்க்கதரிசனம் சொல்ல கேட்டேன்.
பூமியிலுள்ள எல்லா மக்களையும் இணைக்கும் ஒன்று எது எனில் அது மதமோ அல்லது அன்போ அல்ல. அது பணமே. எல்லா மக்களையும் வெறி கொள்ள செய்யும் அது அமெரிகாவின் கையில் உள்ளது. அதாவது டாலராக உள்ளது. நாடுகள் தங்கள் செல்வத்தை டாலராகவோ அல்லது தங்கமாகவோ இருப்பாக வைத்துள்ளன. அமெரிகாவின் அழிவால் டாலர் மதிப்பை இழப்பதால் ப்ல நாடுகள் மற்றும் மனிதர்கள் சடுதியில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதன் பிறகு எந்த நாட்டு பணத்தையும் நம்ப முடியாது என்பதால், ஒவ்வொருவர் வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு (666) அவர்கள் செல்வமாக கணக்கிடப்பட்டு நவீன அறிவியலின் மூலம்உடலில் பதிக்கப்படும்.
எகிப்து போன்ற சில நாடுகள் (இஸ்லாமிய நாடுகள் மற்றும் ரஷ்யா?)சில மனிதர்கள் இந்த முறையை ஏற்றுக் கொள்ளாமல் போவதினால் அவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள்.
ஆனால் மற்றவர்களோ கடவுளின் தண்டனையால் அழிந்து போவார்கள். "மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல கடவுளுக்கும், சாத்தானுக்கும் நடக்கும் இந்த உச்ச கட்ட மோதலில் எந்த பக்கம் சாய்ந்தாலும் துன்பம் நிச்சயம்.
பாபிலோனைப் பற்றிய வசனங்கள் - மகா பாபிலோன் (USA) என்ற தொடுப்பில் கொடுக்கப்படும்.
ஆபிரகாம் மதங்களும், நித்திய சுவிஷேசமும் :
யூத, கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் ஆபிரகாம் மற்றும் ஆபிரகாமின் தேவனை
அடிப்படையாக கொண்டு பிறந்த மதங்கள். வானத்தையும், பூமியையும் படைத்த உருவமில்லாத தேவனை அவர் சொல்கிற வழியின்படி வணங்குவதே இந்த மதங்களின் குறிக்கோள். (இந்து மதத்திலும் கடவுளுக்கு உருவ்ம் இல்லை என்ற கோட்பாடு உண்டு.
ஆனால் இந்து மதம் சொல்லும் இந்த கடவுள் ஆபிரகாமின் கடவுள் அல்ல. ஏனெனில்
இந்து மதம் சொல்லும் இந்த கடவுள் உருவம் மற்றும் சுயமும் (EGO) இல்லாதவர் (க்டந்தவர்). ஆனால் ஆபிரகாமின் தேவன் தன்னை வெளிப்படுத்தும் மற்றும் தன் கட்டளைபடி செய்யாதவர்கள் மேல் எரிச்சலுள்ள தேவன்)
மனிதர் மூலமாக கொடுக்கப்பட்ட, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான யூத மதம் கடவுளின் வழியில் தன்னை சென்று தன்னை காப்பாற்றிக் கொள்ள தவறிவிட்டது.
கடவுளாலேயே கொடுக்கப்பட்ட எல்லா மக்களுக்குமான மிக உயர்ந்த மற்றும் சுலபமான வழியான கிருபையின் வழியும் வெற்றி அடையவில்லை. ஏனெனில் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படும் வேளையில் நூற்றுக்கணக்கான புதிய ஆத்துமாக்கள் இந்த உலகில் பிறந்து விடுகின்றன. இங்கும் சாத்தான் தன்னுடைய உருவ வழிபாட்டை புகுத்தி ஒரு கூட்டத்தை
வஞ்சித்துள்ளான்.
அனேக மக்களால் கிருபையின் வழியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிந்த தேவன்,
திரளான மக்களின் மூலமாக சாத்தானின் வல்லமைகள் கிரியை செய்வதை தடுக்கவும், உருவ வழிபாடு பூமியில் பெருகாதபடிக்கு தடுக்கவும், மிக குறைவான அளவில் உள்ள தேவனின் மக்கள் காப்பாற்றப்படவும், உருவ வழிபாட்டின் மேல் தன் நீதியை, கோபத்தை சர்க்கட்டவும்
மேற்கண்ட மற்ற வழிகளுக்கு (கிருத்துவ, யூத) உண்டான மேன்மையான பலன்கள் இல்லாத ஒரு வழியை தேவ தூதன் மூலமாக, அதற்கேற்ற ஒரு மனிதன் வழியாக (முகம்மது) இந்த பூமியில் கொடுத்திருக்கிறார். இதுவே இஸ்லாமிய மார்க்கமாகும். சில கிருத்துவ பிரிவுகளும்
இந்த வழியையே வேதாகமத்தை கொண்டு அறிவிக்கின்றன. ஆனால் இங்கும் சாத்தான் இறந்தவர் வழிபாட்டை (தர்க்கா) புகுத்தி விட்டான். இந்த மதம் அனேக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஏற்றுக் கொள்ளும்படியும் செய்யப்பட்டது.
ஆனால் இந்த மூன்று மதங்களும் ஒன்றுக்கொன்று எதிரிகளாக உள்ளன.
இந்தியாவில் எதிர்ப்பில்லாமல் சுவிஷேசம் சொல்லப்படுவதற்க்கு இங்கு வாழும் இஸ்லாமியரே காரணம். கிருத்துவத்திற்க்கு இஸ்லாமும், இஸ்லாமிற்க்கு கிருத்துவமும் நம் நாட்டில் பாதுகாப்பாக உள்ளன.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு, புற ஜாதிகளுக்கான கிருபையின் வாசல் அடைக்கப்படும். அதன் பிறகு உள்ள மக்களுக்கு "நித்திய சுவிஷேசம்" (எப்போதும் செல்லுபடியாகும், பூமிக்குரிய ஆசிர்வாதங்களுக்கு மட்டுமே வாக்கு பண்ணும்) தேவதூதன் மூலமாக அறிவிக்கப்படும்.அது என்னவென்றால், வெளி 14.6,7
SANDOSH WROTE" ////அனேக மக்களால் கிருபையின் வழியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிந்த தேவன், திரளான மக்களின் மூலமாக சாத்தானின் வல்லமைகள் கிரியை செய்வதை தடுக்கவும், உருவ வழிபாடு
பூமியில் பெருகாதபடிக்கு தடுக்கவும், மிக குறைவான அளவில் உள்ள தேவனின் மக்கள் காப்பாற்றப்படவும், உருவ வழிபாட்டின் மேல் தன் நீதியை, கோபத்தை சர்க்கட்டவும் மேற்கண்ட மற்ற வழிகளுக்கு (கிருத்துவ, யூத) உண்டான மேன்மையான பலன்கள் இல்லாத ஒரு வழியை தேவ தூதன் மூலமாக, அதற்கேற்ற ஒரு மனிதன் வழியாக (முகம்மது) இந்த பூமியில் கொடுத்திருக்கிறார். இதுவே இஸ்லாமிய மார்க்கமாகும்.////
தேவன் வேண்டுமென்றே எந்த ஒரு மாற்று மார்க்கத்தையும் உருவாக்கிவிடவில்லை
மாற்று மார்க்கங்கள் எல்லாமே மனிதனை எப்படியாவது வழி தவற பண்ணுவதற்காக சாத்தானின் தந்திரத்தால் உருவானவைகள் என்றே நான் கருதுகிறேன்.
சரியான வழி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அது
யோவான் 10:9நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன்
சகோதரர் சுந்தர் எழுதியது //சரியான வழி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அது யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். இந்த ஒரே வழிதான் இன்றைய நாட்களில் மனிதனுக்காக திறந்திருப்பது மற்றெல்லா வழியும் பிரயோஜனமற்றது. மேலும் அது தேவனால் உண்டானது அல்ல. I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல;// நீங்கள் எழுதியது சரியே. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளிலே மற்ற மனிதர்கள் இயேசுவை அறிக்கை பண்ண மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்க்கு என்ன நிச்சயம்?
SANDOSH wrote:நீங்கள் எழுதியது சரியே. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளிலே மற்ற மனிதர்கள் இயேசுவை அறிக்கை பண்ண மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்க்கு என்ன நிச்சயம்?
சகோதரர் சந்தோஷ் அவர்களே,
தங்களின் இந்த கருத்தில் உண்மை இருக்கிறது. ஆண்டவரும் இதைப்பற்றி எனக்கு தெரிவித்திருக்கிறார், ஆகினும் இவ்விடயங்கள் பலருக்கு இடரலை ஏற்ப்படுத்தலாம் என்பதால் அது பற்றி இப்பொழுது வெளிப்படையாக பேச நான் விரும்பவில்லை.
எனக்கு உடன்படாத தங்கள் கருத்து என்னவெனில் இஸ்லாம் போன்ற பிற மதத்தை தேவனே உருவாக்கினார் என்பதுதான்.
தேவன் கலகத்தின் தேவனல்ல என்று வசனம் சொல்கிறது எனவே அவர் காண்பித்திருக்கும் ஒரே சரியான வழி வேதாகமமே என்று நான் கருதுகிறேன். அதை தவிர உலகில் உள்ள பல வழிகள் மனிதனை திசைதிருப்ப சாத்தானால் உண்டானது என்பதே எனது கருத்து.
இது சம்பந்தமாக சற்று விளக்கம் தந்துவிட்டு பின்னர் தொடருங்கள். அல்லது இது பற்றி வேறு திரியில் விவாதிக்கலாம்.
-- Edited by SUNDAR on Wednesday 7th of April 2010 12:06:33 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உங்களுக்கு என் நன்றிகள். நான் எழுதியது எது தவறாக இருக்கிறது? என்று கேட்டதற்க்கு குறைந்த பட்சம் நீங்களாவது பதில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு என் பதில்கள்.
//ஆனால் நியாயத் தீர்ப்பு நாளிலே மற்ற மனிதர்கள் இயேசுவை அறிக்கை பண்ண மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்க்கு என்ன நிச்சயம்?// வசனத்துக்கு எதிரடையாய் உங்கள் வார்த்தைகள் உல்ளதே! ஏன்??? வெளி 14:6 ,7 பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.//
நித்திய சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கூட்ட ஜனங்கள், ஆயிரம் வருட ஆட்சி காலத்தில், வாசம் செய்ய தகுதி பெற்றார்கள் என்பதற்கான வசனம், இதோ,
வெளி. 15.2. அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். 3. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். 4. கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
வெளி 20.4 4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
"நித்திய சுவிசேஷம்" என்பது கிருபையின் கால கட்டம் முடிந்த பிறகு தேவனால் கொடுக்கப்படும் சுவிசேஷமாகும். இதில் ஜெயம் கொள்கிறவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் பங்கு பெறுவார்கள்.
//மேற்கண்ட மற்ற வழிகளுக்கு (கிருத்துவ, யூத) உண்டான மேன்மையான பலன்கள் இல்லாத ஒரு வழியை தேவ தூதன் மூலமாக, அதற்கேற்ற ஒரு மனிதன் வழியாக (முகம்மது) இந்த பூமியில் கொடுத்திருக்கிறார். இதுவே இஸ்லாமிய மார்க்கமாகும். //
திருக்குரானில் இயேசு கிருஸ்துவை பற்றியும் அவர் கன்னி மகனாக பிறந்ததை பற்றியும், அவரது வழி இன்சில் என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும், அதை படிக்க சொல்லியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சொல்லப் போனால், அதில் சுருக்கமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுள்ளது. (அவர்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறார்கள் எனவும், எப்படி புரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதும் வேறு விஷயம்) இந்த கட்டளையை அவர்களுக்கு சாத்தான் கொடுத்தான் என நான் நம்பவில்லை.
-- Edited by SANDOSH on Thursday 13th of March 2014 02:13:37 AM
//மேற்கண்ட மற்ற வழிகளுக்கு (கிருத்துவ, யூத) உண்டான மேன்மையான பலன்கள் இல்லாத ஒரு வழியை தேவ தூதன் மூலமாக, அதற்கேற்ற ஒரு மனிதன் வழியாக (முகம்மது) இந்த பூமியில் கொடுத்திருக்கிறார். இதுவே இஸ்லாமிய மார்க்கமாகும். //
திருக்குரானில் இயேசு கிருஸ்துவை பற்றியும் அவர் கன்னி மகனாக பிறந்ததை பற்றியும், அவரது வழி இன்சில் என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும், அதை படிக்க சொல்லியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சொல்லப் போனால், அதில் சுருக்கமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுள்ளது. (அவர்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறார்கள் எனவும், எப்படி புரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதும் வேறு விஷயம்) இந்த கட்டளையை அவர்களுக்கு சாத்தான் கொடுத்தான் என நான் நம்பவில்லை.
-- Edited by SANDOSH on Thursday 13th of March 2014 02:13:37 AM
சகோ. சந்தோஷ் அவர்களே என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன் கேளுங்கள்.
ஆண்டவராகிய இயேசு மரித்து பரிசுத்த ஆவி அருளபட்ட பிறகு பேதுருவின் ஒரே பிரசங்கத்தில் 3000 பேர் மனந்திரும்பினார்கள். என்பதை பார்க்கிறோம்.
அதை தொடர்ந்து, கல்லெறிந்து கொன்றும் கடைசிவரை கர்த்தரின் சாட்சியில் உறுதியாக நின்று கர்த்தருக்குள் மரித்த ஸ்தேவன்.
அவரை தொடர்ந்து, ஆண்டவரால் தொடப்பட்டு அனேக இடங்களுக்கு சுவிசேஷத்தை சுமது சென்ற பவுல் அதன் மூலம் ஸ்தாபிக்க பட்ட சபைகள்.
அத்தோடு ஆவியானவரின் கிரியைமூலம் சபைகளில் ஏற்ப்பட்ட அபரிமிதமான வளர்ச்சி.
இவற்றை எல்லாம் கண்நோக்கிய சாத்தானுக்கு ஒன்றுமே புரியவில்லை அவன் அஸ்திபாரமே ஆடுவது தெரிந்தது. ஆவியானவரின் கிரியைகளை எப்படி தடை செய்வது என்றே தெரியவில்லை. இதை இப்படியே விட்டால் தனக்கு முடிவு நிச்சயம் என்றும் தன பணியை செய்ய உலகில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று எண்ணிய சாத்தான் இயேசுவுக்கு பின்னால் சுமார் 500 ஆண்டுகள் யோசித்து புதிதாக ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தான்.
அதுதான் அவன் உண்டாக்கிய டூப்ளிகேட் மதம்!
இதை குறித்து ஆண்டவரே எனக்கு விளக்கினார்.
டூப்ளிகேட் என்றால் ஒரிஜினல் போலவே இருக்கும் ஒரிஜினல் போலவே செயல்படும் ஆனால் அது எதற்க்காக செய்யபட்டதோ அந்த நோக்கத்தை மட்டும் சரியாக செய்யாது.
அதாவது ஒரு டூப்ளிகேட் சோப்பை எடுத்துகொண்டால் அதன் நிறம் வடிவம் எல்லாமே ஒரிஜினல் போலதான் இருக்கும் ஆனால் அதை வைத்து சோப்பு போட்டால் அழுக்கு மட்டும் போகாது.
சோப்பு வாங்குவதன் முக்கிய நோக்கமே அழுக்கு போகத்தானே அது போகவில்லை என்றால் அந்த சோப்பால் பயன் என்ன?
அதேபோல் தாங்கள் குறிப்பிடும் இந்த மதமும்!
கிரிஸ்டியனை போலவே இருக்கும். தேவனை பற்றியும் சொல்வார்கள், வேதத்தில் உள்ளதையும் சொல்வார்கள். இயேசுவை பற்றியும் சொல்வார்கள் ஆனால் எங்கு செக் வைப்பான் என்றால் எங்கு முக்கியமோ அங்கு மாத்திரமே!
அதாவது இயேசுவின் சிலுவை மரணமே கிறிஸ்த்தவத்தின் அஸ்திபாரம். இயேசுவின் இரத்தம் மட்டுமே மனுஷனின் பாவங்களை கழுவி சுத்திகரிக்க முடியும்.
இந்த முக்கிய கருத்தை மறுப்பதன் மூலம் "பாவ மன்னிப்பு" என்ற தேவனின் அடிப்படை திட்டத்தையே மறுக்கிறார்கள். பாவம் சுத்திகரிக்கபடாத மனுஷன் என்றும் பாவியே. அவனுக்கு என்றும் மீட்பு இல்லை அங்கு சாத்தனின் தந்திரம் நிறைவேறிவிடுகிறது.
"நானும் ஒரு மதத்தில் இருக்கிறேன், கடவுளை கும்பிடுகிறேன் என்ற பெயருக்கு சில ஆன்மீக சடங்குகளை வேண்டுமானால் வேளை தவறாமல் நிறைவேற்றலாமே அன்றி பயனில்லாத டூப்ளிகேட் சோப்புபோல ஆண்டவரின் அடிப்படை நோக்கத்தை அம்மதம் நிறைவேற்றாது.
கிறித்துவின் சுவிஷேசத்தை தவிர வேறொரு சுவிசேஷம் இல்லை என்று வேதம் சொல்கிறதே.