இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவனை பற்றிய கவிதை


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
இறைவனை பற்றிய கவிதை
Permalink  
 


இறைவனின் சிலைவடித்த மனிதனைப் பார்க்கின்றேன்;
மனிதனைப் படைத்த இறைவன் எங்கே?!...
விடையில்லா வினாக்கள்.
ஃ

இறைவன் கருணை வடிவானவன்;
மன்னிக்கும்படி மனமுருகி வேண்டினான்...
சிலை திருடியவன்.

ஃ

பாவங்கள் கரைந்துபோக காணிக்கை செலுத்தினான்
உண்டியலில் விழுந்த காசு சொல்லி நகைத்தது
நான் லஞ்சத்தில் வந்த காசென்று.

ஃ

உளியின் உரசலை பொறுத்திருந்தது கல்லாக...
அமைதியாக ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றது இப்போது...
கடவுள் சிலையாக....

ஃ

தெய்வம் மன்னித்துக்கொண்டுதான் இருக்கின்றது
தவறுகள் செய்யும் போதெல்லாம்;
அன்னையின் வடிவாக...

ஃஃஃ

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard