இறைவன் எந்த ஒரு மதத்தையும் உருவாக்கவில்லை. மதம் என்பது மனிதர்களால் பின்னப்பட்ட ஒரு மாயவலை என்றே நான் கருதுகிறேன்! எந்தமதமும் அதைபின்பற்றும் எல்லோரையும் ஏக இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுவதில்லை. இறைவன் மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட மகத்தானவர்! எனவே மதம் என்ற போர்வையைவிட்டு வெளியேவந்து எல்லாவற்றிக்கும் மேலான ஏக இறைவனை மாத்திரம் தேடுவோமாக.
எல்லா மதங்களின் அடிப்படை கோட்பாடும் "அன்பே பெரிது" என்ற்றியன்புகின்ற போதிலும், அவற்றுள் சடங்கு சம்பிரதாயங்களும் மனித கருத்துக்களுமே மலிந்து கிடக்கின்றன. எனவே ஆண்டவரை அறிந்து அவருக்கு கீழ்படிந்து வாழும் மகத்தானத்தை விட்டுவிட்டு சடங்கு சம்பிரதாயம் போன்ற மாயமான காரியத்தை மட்டும் பின்தொடர, மதம் மனிதர்களை திசை திருப்புகிறது.
சென்னையில் இருந்து மதுரை போகும் போது "அம்புக்குறியோடு மதுரை 450KM" என்று எழுதப் பட்டுள்ள வழிகாட்டிகளை வழிகளில் காணலாம். அதுபோல் இறைவனை அடைய வழியை காட்டும் ஒரு வழிகாட்டியாகவே மதங்களை நான் கருதுகிறேன். அவை காட்டும் வழியில் அதி வேகமாக முன்னேறுவதை விட்டுவிட்டு அந்த வழி காட்டியை சுற்றி சுற்றி வருவதாலோ அல்லது உன்னுடையது என்னுடையது என்று உரிமை கொண்டடுவதலோ அல்லது அதைபிடுங்கி ஒருவரைஒருவர் தாக்கிக் கொள்வதாலோ இலக்கை ஒருபோதும் அடைய முடியாது!
இறைவனை அறியவேண்டும் என்ற தணியாத தாகம் உள்ளவருக்கு மதம் என்ற வழிகாட்டியை தேட தேவையே இல்லை! ஒருவர் எந்த மதத்தில் இருந்தாலும் தன்னை தாகத்துடன் தேடுபவர்களுக்கு தானாகேவே வந்து தன்னை வெளிப்படுத்தும் தன்மை உள்ளவர் இறைவன் என்பது என் அனுபவ கருத்து!
-- Edited by இறைநேசன் on Tuesday 23rd of March 2010 10:20:32 PM
மதங்களைப் பற்றி சிறப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.
ஆயினும்.... இப்படிப்பட்ட (மதங்களே தேவையில்லை) நம்பிக்கையை கொண்டிருக்கும் அனேகர், இறைவனைத் தேடும் பாதையில் முன்னேற முடியாமல் தங்கள்மனசாட்சியின் படி வாழ்ந்தால் போதும் எனும் நிலைக்கு வந்து பின் மனம்போனபாதைக்கு சென்று விடுகின்றனர். பல சமயங்களில் இறைவனே இல்லை எனும் நிலைக்கு வரும் ஆபத்தும் உண்டு.
எனவே, இறைவனைப் பற்றியும் இறைவனை தேடும்பாதையில் (நடைமுறை வாழ்வில்) உள்ள தடைகளை மேற்கொள்வது பற்றியும் பயில சபை வாழ்க்கை அவசியம்.
இறைவனைத் அறியவேண்டும் என்ற தணியாத தாகம் உள்ள ஒருவருக்கு அனுபவசாலிகளின் (பரிசுத்தவான்களின்) ஐக்கியம் நிச்சயம் உதவும் என்பது என் கருத்து..
இயேசு கிறிஸ்துவுக்குகிறிஸ்தவம் தேவை இல்லை. கிறிஸ்தவனே தேவை. (கிறிஸ்துஒருவனுக்குள்ளிருந்தால் அவனே கிறிஸ்தவன்)
-- Edited by timothy_tni on Wednesday 24th of March 2010 04:12:10 PM
////ஆயினும்.... இப்படிப்பட்ட (மதங்களே தேவையில்லை) நம்பிக்கையை கொண்டிருக்கும் அனேகர், இறைவனைத் தேடும் பாதையில் முன்னேற முடியாமல் தங்கள்மனசாட்சியின் படி வாழ்ந்தால் போதும் எனும் நிலைக்கு வந்து பின் மனம்போனபாதைக்கு சென்று விடுகின்றனர். பல சமயங்களில் இறைவனே இல்லை எனும் நிலைக்கு வரும் ஆபத்தும் உண்டு.////
சகோதரரே உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் அனுதின நடவடிக்கையும் இறைவனால் துல்லியமாக கண்காணிக்கபடுகின்றது.
ஒருவன் தன் மனசாட்சிக்கு பயந்து சரியாக நடந்தாலே போதும், அவனிடம் சரியான வழியை எடுத்துசொல்ல ஆண்டவர் ஆட்களை அனுப்பி கொண்டே இருப்பார். சும்மா "அன்புதான் பெரிது" என்று பிதற்றிக்கொண்டு, அயோக்கியத்தனமாக நடக்கும் மனிதர்களை தேவன் தன்வசம் சேர்க்க விரும்புவது இல்லை. அதனாலேயே அவர்கள் இறுதியில் விழுந்துபோய் விடுகின்றனர். ஒரு உத்தமனை/ ஒரு உண்மையானவனை அவன் எந்த மதத்தில் இருந்தாலும் தேவன் விட்டு விடுவதில்லை. உதாரணமாக நமது பவுலை எடுத்து கொள்ளலாம் அவன் என்னதான் தேவ ஜனங்களுக்கு விரோதமாக செயல்பட்டாலும் அவன் மனதில் தேவன் மேலிருந்த வைராக்கியத்தைதன் தேவன் பார்த்தார். எனவே எனது கருத்துப்படி நல்லவன் எம்மதத்தில் இருந்தாலும் உண்மை வழியை கண்டுகொள்ள முடியும். துன்மார்க்கன் எந்த மதத்துக்குள் இருந்தாலும் தண்டனைக்கு தப்புவதில்லை.
timothy_tni wrote: ////எனவே, இறைவனைப் பற்றியும் இறைவனை தேடும்பாதையில் (நடைமுறை வாழ்வில்) உள்ள தடைகளை மேற்கொள்வது பற்றியும் பயில சபை வாழ்க்கை அவசியம்.////
கிறிஸ்த்தவம் என்ற மதத்துக்குள் இருந்துகொண்டு கிறிஸ்த்துவுக்கு சம்பந்தம் இல்லாமல் நடக்கும் மனிதர்களுக்கு எச்சரிப்பாகவே இப்பதிவு இடப்பட்டது. "கிறிஸ்த்தவன்" என்பவன் "கிறிஸ்த்து அவனாக" இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மற்றபடி அந்த பெயரால் அவனுக்கு பயனேதும் இல்லை.
timothy_tni wrote: ///இறைவனைத் அறியவேண்டும் என்ற தணியாத தாகம் உள்ள ஒருவருக்கு அனுபவசாலிகளின் (பரிசுத்தவான்களின்) ஐக்கியம் நிச்சயம் உதவும் என்பது என் கருத்து..///
நிச்சயமாக! ஒருவன் பரிசுத்தமாக நடந்தால் அவனுக்கு யாருடன் ஐக்கியம் தேவைபடுகிறதோ அதை ஆண்டவரே ஏற்ப்படுத்தி கொடுப்பார் என்பது எனது கருத்து. அசுத்தமான நிலையில் வாழும் ஒருவன் பரிசுத்தவானின் ஐக்கியத்தை தேடினாலும் கிடைப்பதில்லை.
timothy_tni wrote:///இயேசு கிறிஸ்துவுக்கு கிறிஸ்தவம் தேவை இல்லை. கிறிஸ்தவனே தேவை. (கிறிஸ்துஒருவனுக்குள்ளிருந்தால் அவனே கிறிஸ்தவன்)///
இதே கருத்தைதான் சற்று மாற்றி, "இறைவனுக்கு மதங்கள் தேவையில்லை உண்மையான மனிதன்தான் தேவை" என்று கூறியிருக்கிறேன்.
மனிதனை இறைவனிடம் சேர்ப்பது யார்/ எப்படி? என்பதைப் பற்றிய கருத்தை எடுத்து வைத்தால்தான் இப்பகுதியை வாசிப்போர்க்கு பயன் தரும். அதை தாங்களே கூறும்படி வேண்டுகிறேன்..
-- Edited by timothy_tni on Saturday 27th of March 2010 03:52:00 PM
மனிதனை இறைவனிடம் சேர்ப்பது யார்/ எப்படி? என்பதைப் பற்றிய கருத்தை எடுத்து வைத்தால்தான் இப்பகுதியை வாசிப்போர்க்கு பயன் தரும். அதை தாங்களே கூறும்படி வேண்டுகிறேன்..
இறைவனை அடைவதற்கு அவரே ஏற்ப்படுத்தி கொடுத்த மிக சுலபமான வழி இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் வழங்கும் ஆவியானவரை பெற்று, அவர் பலத்தில் பரிசுத்த வழக்கை வாழ்வதுவே.
ஆகினும், அனேக பிறமத சகோதரர்கள் எல்லா கடவுளர்கள் போல இயேசுவையும் நினைத்து, அவரை தங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், எவ்வழியில் சென்றாலும் எல்லாமே ஒரே இறைவனைத்தான் சென்று சேரும் என்ற எண்ணம் கொண்டிருப்பதாலும் சற்று மாற்று பாதையை நான் மேலே காண்பித்துள்ளேன்.
அதாவது ஒருவர் எந்த மதத்தில் இருந்தாலும், ஆண்டவரை அறிந்து அவர் காட்டிய வழியில் வாழவேண்டும் என்ற தணியாத தாகமும், மிக உத்தமமான நடத்தையும் கொண்டிருந்தால் தகுந்த நேரத்தில் ஆண்டவர் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சரியான வழியை கண்பிக்க முடியும்/ காண்பிப்பார் என்றே நான் கருதுகிறேன்.
தேவன் விரும்புவது மதமாற்றமல்ல மனம் மாற்றம். தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, அவர் செய்து முடித்து வைத்த இரட்சிப்பின் அடிப்படையில், விசுவாசித்து ஏற்றுக் கொள்வதுதான்.
ஒளியாய் இருந்தது. அந்த ஒளியை பகைக்கிற எவனும் இருளில் இருக்கிறான். பைபிளைத் தவிர வேறே எந்த புத்தகத்திலும் அந்த ஒளியைத் தேட முடியாது. பைபிள் மாத்திரமே தேவனுடைய வார்த்தை என்பதற்கு இந்த உலகமும் அதின் சரித்திரமும் சாட்சி கூறும். சாத்தான் தனக்கு இன்னும் கொஞ்ச காலம் உண்டென்று எண்ணி இந்த தேவ வார்த்தைக்கு விரோதமாகவும் முரணாகவும் அனேக மக்களையும் மதங்களையும் உண்டாக்கி இருக்கிறான். இயேசு கிறிஸ்து மனித சரித்திரத்தை தம் பெயரிலேயே இரண்டாக பிரித்திருக்கிறார். கிறிஸ்துவுக்கு முன் / கிறிஸ்துவுக்கு பின் என்று. இயேசு கிறிஸ்துவே "உலக இரட்சகர்" "இரட்சிப்பின் அதிபதி" "இராஜாதி இராஜா" "கர்த்தாதி கர்த்தர்" - அவரை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாத எவனும் இறுதியில் நரகமாகிய அக்கினி கடலில் பங்கடைவது திண்ணம்.
வேறு எந்த புத்தகமும் மனுக்குலத்திற்கு ஒளியையோ, பாவமன்னிப்பையோ, இரட்சிப்பையோ கொண்டுவரவில்லை. ஆதலால்தான் மனுக் குலத்தின் பொது எதிரியான சாத்தான் அனேக மதங்களையும், மற்ற இணையான காரியங்களையும் ஏவி விட்டுக் கொண்டிருக்கிறான். மனுக் குலமே இயேசு கிறிஸ்துவை தேடு, அவரை அறிந்து கொள், அண்டிக்கொள், உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாகும்.....................
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்: உத்தமனாய் நடக்கிறவனை இரட்ச்சிக்க இயேசு கிறிஸ்து பூவுலகு வரவில்லை. பாவியை இரட்சிக்கவும், அவனை நீதிமானாக்கவுமே கிறிஸ்து மாம்சமும் இரத்தமும் ஆனார். பாவப் பிணியாளிகளை தேடித்தான் அவர் வந்தார். நீதி மான்களையல்ல. பிணியாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை என்று நன்கு அழுத்தமாக மதத் தலைவர்களிடம் கூறினார். இரட்சிக்கப் பட வேண்டுமானால், முதல் தகுதியே அவன் பாவியாக இருப்பதுதான். ஒருவன் தான் பாவி என்று உணர்ந்த பின்னரே பரிகாரியைத் தேடுகிறான். இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான பரிகாரி. கர்த்தர் உங்களோடு கூட இருந்து சரியாக உங்களை வழி நடத்துவாராக.