இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி..


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி..
Permalink  
 


ஜெபம் என்பது மனிதனுக்கு சுவாசம் போன்றது. ஏதாவது  ஒரு விதத்தில் ஆண்டவருடன் பேசிக்கொண்டு இருப்பது,  ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிப்பது, ஆண்டவரின் அருமை பெருமைகளை பேசுவது போன்ற  எல்லாமே ஜெபத்துக்குள்தான் அடங்கும் என்றே நான் கருதுகிறேன்.  
 
நமது வாழ்வில் நடைபெறும் சிறிய மற்றும் பெரிய எல்லா காரியங்களுக்காகவும் ஆண்டவரிடம் ஜெபிப்பது அவசியமே! .
 
பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் 
 
இவ்விதத்தில் பார்த்தால் பரீட்சை என்பது ஒருவர்  வாழ்வில் நடைபெறும் முக்கியமான செயலாக இருப்பதால் அதற்காக ஜெபிபதில் தவறேதும் இல்லை.  ஆகினும் ஒருவர் பரீட்சை எழுதுவதற்கு இன்னொருவர் உபவாசத்துடன் கூடிய ஜெபம் செய்வது என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.   
 
இதன் அடிப்படையில்    சகோதரர் சில்சாம்  அவர்களின் தளத்தில் "பரீட்சை  எழுதுபவர்களுக்காக உபவாச ஜெபம் அவசியமா?" என்ற கேள்வியை  எழுப்பி  பிறகு அதை நீக்கிவிட்டேன்.
 
அதற்க்கு காரணம் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு ஜெபிப்பது அவசியம் என்பதை அறிந்து அல்ல, "மாணவ பருவத்திலேயே ஒரு ஆத்துமாவை 
கர்த்தருக்கு நடத்துவது சிறந்தது" என்று  குறிப்பிட்டிருந்த  அவரின் பதிலின் மூலம் ஆண்டவர் உணர்த்திய ஆத்துமா ஆதாய கரிசனையின் முக்கியத்துவத்தை அறிந்துதான் அப்பதிவை நீக்கினேன்.  
 
பரீட்சை எழுதும்  அநேகரின்   முக்கிய நோக்கம்  எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்வை   அமைத்துகொள்ளதானேயன்றி ஆண்டவருக்காக  பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல.
   
என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்.     
 
31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். 32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்;
 
இவற்றை தேடி அலைபவர்கள் எல்லோரும் அஞ்ஞானிகள் என்றே நான் கருதுகிறேன்.
 
"இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்"
 
உண்ண /உடுக்க/இருக்க தேவையானவைகளை தேவையான நேரத்தில் தருவதற்கு 
நாம் வேண்டிகோள்ளும் முன்னே பிதா அறிந்திருக்கிறார். எனவே     
 
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்
 
என்ற வார்த்தைகள்படி தேவனுடைய ராஜ்யத்துக்கு நாம் என்ன செய்யவேண்டும்  வருடைய நீதியில் நடக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதே நமக்கு பிரதான ஜெபமாகவும்  இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். 
 
இவ்விஷயத்தில் தள சகோதரர்கள் கருத்தை அறிய ஆவல்!   


-- Edited by SUNDAR on Wednesday 24th of March 2010 05:42:21 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 


சுந்தர் எழுதியது

///பரீட்சை எழுதும்  அநேகரின்   முக்கிய நோக்கம்  எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்வை   அமைத்துகொள்ளதானேயன்றி ஆண்டவருக்காக  பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல.
என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்.     ////

 மிக பெரிய ஊழியர்களும் அதைதான் செய்கின்றனர் அதில் ஒரு தவறும் இல்லை ஆனால் இயேசு

 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள் என்று கூறுகிறார்

 ஊழியர்களை குற்றபடுத்தவில்லை பவுல் சொன்னதைத்தான் சொல்கின்றேன்

 பிலிப்பியர் 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
 
சுந்தர் அவர்களுடைய கருத்தை போல என் கருத்தும் அதுவே  தான்

 என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்..............  


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 24th of March 2010 05:56:05 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

இந்த விஷயத்தைப் பற்றிய எனது கருத்து:

நான் இன்றைக்கு வரையிலும் மாணவன்தான் (MCA). அதே நேரம் எனது Sunday Class பிள்ளைகளுக்காக வாலிப குழுவிலுள்ள மற்ற வாலிபர்களின் பரீட்சைகளுக்காக ஜெபிப்பவன். ஆயினும் ஒரு மாணவனாக என் கருத்தை இங்கு பதிக்கிறேன்.

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதி 21-31.

என் தேர்வுக்காக மற்றவர்களை ஜெபிக்க சொல்லும் முன் நான் எனக்கு கொடுக்கப்பட்ட  நாட்களைப் பயன்படுத்தி முதலில் நன்கு திட்டமிட்டு படித்திருக்க வேண்டும்.
இன்று அனேகர் படிக்காமலே தேவனுடைய ஆசிர்வாதத்தைப் பெற்று விடலாம் என கனவு காண்கின்றனர். சோம்பேறிகளைக் கர்த்தர் ஆசிர்வதிப்பதில்லை. யுத்த பயிற்சி இல்லாத குதிரைக்கு ஜெபம் செய்தால் தேவன் ஜெயம் தரமாட்டார்.
கடினமாக படிக்கும் தேவனை அறியாத பையனை விட அவ்வப்போது படிக்கும் என்னை தேவன் அதிகமாக ஆசிர்வதிக்க வேண்டும் என நினைப்பது தவறு.தேவன் நீதிபரர்.

மற்றபடி, (விசுவாசத்தில் இன்னும் பலப்படாதவர்களுக்கு) அவர்கள் ஆரோக்கியத்திற்காக, சூல்நிலை தடைகள் ஏற்படாவண்ணமும் ஜெபிப்பதில் தவறில்லை.
ஆயினும், நாம் ஜெபிப்பதை விட அவர்களாக ஜெபிக்கவே உற்சாகப் படுத்த வேண்டும். மத் 6-33 ஐ நினைவு படுத்தவும் தவறக் கூடாது.



//பரீட்சை எழுதும்  அநேகரின்   முக்கிய நோக்கம்  எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்வை   அமைத்துகொள்ளதானேயன்றி ஆண்டவருக்காக  பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல.//

1.குழந்தைகள் எனில்: 

உலக வாழ்வின் அநித்தியத்தையும் பரலோக வாழ்வின் மகிமையையும் உணர்த்தாது விட்டது முதலாவது கிறிஸ்தவ பெற்றோர்களின் தவறு.

சிறுவயதில் இயேசுவை(லூக்கா 2-52) அவர்களுக்கு ரோல் மாடலாக காண்பிப்பதை விட்டு விட்டு அவனைப் பார், இவனைப்பார் என பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு சில பெற்றோர்களைத் தான் சொன்னேன்.

கிறிஸ்தவ பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் அவன் போகும் சபை இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.


2. பெரியவர்கள் எனில்:

தேவனுடைய சித்தத்தின் மகத்துவம் உணராததே இதற்கு காரணம்.
இதைப் பற்றி ஒரு தனி பதிவு எழுத விரும்புகிறேன்.





//என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்.//

ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய எதிர்காலத்திற்காக (அவர்களே) ஜெபிக்கலாம்.
முதலாவது, தன்னைக் குறித்த தேவனுடைய சித்தத்தைக் குறித்து அறியவும், அவருடைய வழி நடத்துதலுக்காகவும், அதற்கு தான் கீழ்படிந்து வாழும்படியாகவும் ஜெபிக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக ஜெபித்தல் என்பதைப் பற்றி சுந்தர் (நான் நினைத்த வண்ணம்) சரியான ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

//ஒரு  ஆத்துமாவை எவ்விதத்திலாவது   தேவனின்  கரத்துக்குள் கொண்டு சேர்ப்பதுதான் ஒரு  தேவ பிள்ளையின் தலையாய பணி  என்று நான் கருதுகிறேன். அடுத்து போதித்து,  பெற்ற இரட்சிப்பில் நிலைநிற்க செய்தல் இரண்டாவது பணி. //

தேவனை அறியாத, அல்லது அறியும் ஆரம்ப நிலையிலுள்ள ஒருவருக்காக நாம் பரீட்சைக்காகவோ அல்லது மற்ற காரியங்களுக்காகவோ (அவர்கள் விசுவாசம் பலப்படும்படி) ஜெபிக்கலாம். அதன்பின்பு, ஜெபிப்பது, ஆண்டவருடனான உறவில் வளர்வது பற்றியும் அவர்களுக்கு போதித்து அவர்கள் ஜெபிப்பதற்கே நாம் உற்சாகப் படுத்த வேண்டும்.

1.Pray for them to know God more
2.Teach them & encourage to grow.

தேவனுடைய காரியங்களுக்காக நாம் பிரயாசப்பட்டால், நமக்கு (இவ்வுலக வாழ்வுக்கு) வேண்டிய சகலவற்றையும் அவர் கேட்காமலே தருவார்.
கேட்டாலும் தவறில்லை அதில் தேவனுடைய சித்தம் முதலாவதாக இருக்கட்டும்.

அதாவது, ஒரு காரியத்திற்காக ஜெபிக்கும் முன் " தேவனே இதில் என்னுடைய விருப்பம் அல்ல நீர் விரும்புகிறதை செய்ய்யும்" என வேண்டுவதே சாலச் சிறந்தது.


-- Edited by timothy_tni on Thursday 25th of March 2010 04:53:37 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

"குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." (நீதி 21-31)

குதிரை என்பது...


தொடர்ந்து...
http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34881855


__________________

"Praying for your Success"


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

போதகரே என்னைத் தயவு செய்து தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம்.

'ஒரு மாணவனாக என் கருத்தை இங்கு பதிக்கிறேன்' என்று சொல்லி என்னைப் போன்றவர்க்ளைக் குறித்து சொன்ன காரியத்தை உங்கள் மாணவ நண்பர்களுடன் ஒப்பிட வேண்டாம்.

ஆண்டவரைக் குறித்து அறிந்து சபைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் தன்னுடைய வெற்றிக்குத் தேவனையே முழுமையாக நம்புவதோடு தாங்களும் தங்கள் கடமையான படிப்பதில் சரியாக இருக்க வேண்டுமென்பதற்காகவே நான் அந்த கருத்துக்களைக் கூறியிருந்தேன்.

//"குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." (நீதி 21-31)//

இது பொதுவாக பரீட்சைக்கு செல்பவர்களுக்கான ஜெபத்தில் இடம்பெறும் வசனம்.

These Means are to be used, but, after all, our safety and salvation are only of the Lord. In our spiritual warfare we must arm ourselves with the whole armour of God; but our strength must be in the Lord, and in the power of his might.

//குதிரை என்பது... மாம்சத்தைச் சார்ந்துக் கொண்டோரின் நிலைமையையும்//

குதிரை-யின் ஞான அர்த்தமெல்லாம் எனக்கு தெரியாது.
இந்த வசனத்தைப் பொறுத்தவரை," நீங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்திருந்தாலும் ஜெயத்தைத் தருகிறவர் தேவனே" எனும் பொருளில்தான் நான் எடுத்துக் கொண்டேன்.

ஒருவேளை நீங்கள் இந்த வசனத்தைக் கூறுகிறீர்களா என எனக்குத் தெரியவில்லை. (சங்கீ 20-7)

//கழுதையின் தாடையெலும்,கூழாங்கல்லும்,மண்பானையும் உங்கட்கெல்லாம் வெற்றியின் சூத்திரத்தைக் கற்றுத் தரட்டும்..!//

தேவனிடமும், தேவமனிதர்களிடமுமிருந்து கற்றுக் கொள்ளத்தான் இருக்கிறேன்.

1 கொரி 5
57.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58.ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

ஜெயங்கொடுப்பவர் தேவன் மாத்திரமே. நூற்றுக்கு நூறு உண்மை.
எனவே நாம் பிரயாசப் படத் தேவையில்லை என வேதம் போதிக்கிறதா?
கடைசி வரை தாவீது கூழாங்கல்லை மட்டுமே பயன்படுத்தினாரா?
......
......

//நான் கோழைகளையும் பேழைக்குள்ளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்;
'என் போதனையைக் கேட்டிருந்தால் நீ குழியில் விழுந்திருக்கமாட்டாய்' என்று கடந்துபோகும் தத்துவ ஞானியாக அல்லாமல் குழியில் இறங்கி தோளின் மீது சுமந்து வரும் சமாரியனாக செயல்பட விரும்புகிறேன்..!
//

போதகரே, தங்கள் காரியத்தைப் பற்றி 'தவறில்லை' என்று குறிப்பிட்டு விட்டு மற்றக் கருத்துக்களுக்குத்தான் நீங்கள் பதிலளித்த லிங்கை இணைத்திருந்தேன்.

குழியிலுள்ளவர்களைப் பார்த்து நான் அவற்றைக் கூறவில்லை; நடக்க பெலன் இருந்தும் நல்ல பாதை இருந்தும் சோம்பேறித்தனத்தால் என்னைத் தூக்கிக் கொண்டுசெல்லுங்கள் என்பவர்களைப் பற்றிய கருத்துக்கள் அவை.




-- Edited by timothy_tni on Friday 26th of March 2010 04:00:13 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

நான் சாதாரண வழிப்போக்கன்; கூலிக்காரன்; அஞ்சற்காரன்;எனக்கென்று வீடுமில்லை;நாடுமில்லை;சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை;

எனவே என்னை "போதகன்" என்றோ "நல்ல போதகன்" என்றோ நான் கூறிக் கொள்வதில்லை;அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு பிறகு சிரமப்படவேண்டாம்,அன்பரே..!

திரும்ப வருவேன்.............!

-- Edited by chillsam on Friday 26th of March 2010 07:20:21 PM

__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

//// எனவே என்னை "போதகன்" என்றோ "நல்ல போதகன்" என்றோ நான் கூறிக் கொள்வதில்லை;அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு பிறகு சிரமப்படவேண்டாம்,அன்பரே..!/////

சில்சாம் நீங்கள்  என்ன எழுதிரிங்க என்ன சொல்லவரிங்க ஒன்றுமே  புரியவில்லை ஒன்றை உங்களுக்கு சொல்கின்றேன்

  I கொரிந்தியர் 15:33 மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்

 எபேசியர் 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்

 
மேலே வசனம் கூறுகின்றது போல இந்த தளத்தில் நாம் எழுதும் எல்லா வார்த்தைகளையும் மற்றவர்கள்  பக்திவிருத்திக்கு  பிரயோஜனமுண்டாகும்படி நாம் எழுதவேண்டும் சொல்ல வேண்டும் 

 //என்னை ஏற்றி விட்டு  பிறகு சிரம படவேண்டாம்//

 
இப்படி பட்ட வார்த்தைகளை தவிர்க்கவும் என்று உங்களை கேட்டு கொள்கின்றேன்..................


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

நல்லவர் எட்வின் அவர்களே உங்கள் புத்திமதிக்கு நன்றி;
நான் பக்திவிருத்திக்கு- அதாவது மற்றவர்
பக்திவிருத்திக்கு உதவாத எந்த காரியத்திலும் ஈடுபடுகிறதில்லை;ஆனால் நீங்கள் ஒரு குழு அமைத்து எனது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளவும்;

முதலில் உங்களிடம் கேட்காத காரியத்துக்கு
நீங்களாக முன்வந்து சொன்ன அறிவுரை அடிப்படையற்றதும் பக்திவிருத்திக்குப்  பயனற்றதுமானது என்பதைப் புரிந்துக்கொண்டால் நலம்;

// என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்..............  //

நான் உபவாசித்து ஜெபித்தால் உங்களுக்கு என்ன வந்தது?
அதனால் சிலர் பக்திவிருத்தி அடையக்கூடுமே;உங்கள் வார்த்தையும் முரண்பாடான கருத்துக்களுமே இடறலாக இருக்கும்;

'நான் ஜெபிக்கிறேன்' என்றால் ஏதோ நல்லது நடந்தால் சரி என்று கடந்துப்போகாமல் யார்யாருக்கெல்லாம் ஜெபிக்கலாம்,யார்யாருக்கெல்லாம் ஜெபிக்கக்கூடாது என்று தனி ரூட் போட்டு போதிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது;

எல்லாம் போக என்னையும் போதகரே என்று கிண்டலடித்துவிட்டு எனது கருத்துக்கு எதிராக இன்னொரு விளக்கம் கொடுப்பதா?

நண்பரே,சகோதரரே என்றுதான் உங்களையெல்லாம்
நான் அழைத்து வருகிறேன்;உங்கள் வயதின்படி உங்களை நான் தம்பி என்றும் அழைக்கமுடியும்;

நான் போதகருக்குரிய இலட்சணத்துடன் எதையாவது சொல்லியிருந்தால் மறுபேச்சு பேச வேண்டியிருக்காது;நட்பு ரீதியில் எனில் தொடர்ந்து பேசலாம் என்பதே எனது கருத்து;


//என்னை ஏற்றி விட்டு  பிறகு சிரம படவேண்டாம்//

// இப்படி பட்ட வார்த்தைகளை தவிர்க்கவும் என்று உங்களை கேட்டு கொள்கின்றேன்..................//

நான் என்ன ஆபாச வார்த்தையா கூறிவிட்டேன்?
"போதகர்" என்ற பட்டத்தை மறுத்து தன்னடக்கத்துடன் என்னைத் தாழ்த்தி கூறியவை உங்கள் பக்திவிருத்தியைத் தடுத்துவிட்டதா?

யோசிக்கிறேன்...தீவிரமாக...!


-- Edited by chillsam on Saturday 27th of March 2010 01:25:40 AM

__________________

"Praying for your Success"


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

ஐயோ.. இங்கே என்ன நடக்குதுன்னே புரியல...

//நான் சாதாரண வழிப்போக்கன்; கூலிக்காரன்; அஞ்சற்காரன்;எனக்கென்று வீடுமில்லை;நாடுமில்லை;சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை;

எனவே என்னை "போதகன்" என்றோ "நல்ல போதகன்" என்றோ நான் கூறிக் கொள்வதில்லை;அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு பிறகு சிரமப்படவேண்டாம்,அன்பரே..!
//

தாங்கள் ஒரு சபைப் போதகர் என்பதை பழைய பதிவுகளிலிருந்து அறிந்திருக்கிறேன்.

தங்களை சகோதரர் என்றே அழைக்கலாம் என்றாலும், தங்கள் வார்த்தைகள் நீங்கள் ஒரு போதகர் என்பதை ஞாபகப்படுத்துகிறது. நான் உங்களைப் பற்றியோ, ஊழியத்தைப் பற்றியோ குறைகூறவில்லை என்று கூறினாலும் நீங்கள் உங்களைப் பற்றியும் ஊழியத்தைப் பற்றியும் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

//அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு //
தங்களை உயர்த்திப் பேசவோ (அல்லது உங்கள் மொழி நடையில் ஏற்றிவிடவோ) அப்படி குறிப்பிடவில்லை. தங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்கையில் எனக்கு ஒரு எச்சரிக்கைத் தேவை என்பதற்காகவே அப்படி குறிப்பிட்டேன்.

என்னைப் பொறுத்தவரை தேவ ஊழியர்களை விமர்சிப்பது என்னைப் போன்றவர்களுக்கு தகுதியில்லை என்றுதான் கூறுவேன். ஏனெனில் உங்கள் எஜமானன் மனிதன் அல்ல எங்களைப் படைத்த இறைவன்.

//எல்லாம் போக என்னையும் போதகரே என்று கிண்டலடித்துவிட்டு எனது கருத்துக்கு எதிராக இன்னொரு விளக்கம் கொடுப்பதா? //
<<போதகரே, தங்கள் காரியத்தைப் பற்றி 'தவறில்லை' என்று குறிப்பிட்டு விட்டு மற்றக் கருத்துக்களுக்குத்தான் நீங்கள் பதிலளித்த லிங்கை இணைத்திருந்தேன்.>>

<<

தங்கள் நோக்கத்தில் தவறில்லாத பட்சத்தில்  யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய  அவசியமில்லை.

என்ற வரிகளையும் கருத்தில் கொள்க.
நாம் உண்மையில் சரியான நோக்கத்தோடு ஒரு காரியத்தை செய்தால் யார் நம்மை  குற்றப்படுத்தினாலும் அது நமது மனதை பாதிக்காது என்னை பற்றி  என்  தேவனுக்கு தெரியும்  என்று அது சத்தமிடாமல் இருக்கும்.
இங்கு யாரையும் குற்றப்படுத்துவது அல்லது பரியாசம் செய்வது நமது நோக்கமல்ல. தவறுகளை நிச்சயம் சுட்டி காட்டலாம், கேள்விகள் கேட்கலாம். விளக்கம் பெறலாம். யாருடைய அறிவுரையையும் நான் அசட்டை பண்ணுவதில்லை.  தங்களில் எழுத்துக்கள் பற்றி கேள்விகள் கேட்க எங்களுக்கு தகுதியில்லை என்று கருதினால்  விட்டுவிடுகிறோம்.       >>

இப்போது தங்களை போதகர் என்று அழைத்தது குற்றமா இல்லை தங்கள் கருத்துக்கு பதில் கருத்து (எதிராக இன்னொரு விளக்கம்!!!) அளித்தது குற்றமா எனத் தெரியவில்லை.

கருத்துக் (விவாத) களம் என்பதலாயே <<தவறில்லை>> என கூறியிருந்தேன்; இல்லையென்றால் உங்கள் ஊழியத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க நான் யார்?

இந்த பக்கத்தில் கூட 'பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி..' என்ற பொதுவான கருத்துக்களைத்தான் பரிமாறுகிறோம் என்று நம்பிதான் பதிலிட்டேன்.

உங்கள் விஷயத்தை ஒரு உதாரணமாகத் தான் சகோ. சுந்தர் அவர்கள் குறிப்பிட்டதாக எண்ணுகிறேன்.

//நான் போதகருக்குரிய இலட்சணத்துடன் எதையாவது சொல்லியிருந்தால் மறுபேச்சு பேச வேண்டியிருக்காது;//
1.
<<
எல்லாம் போக என்னையும் போதகரே என்று கிண்டலடித்துவிட்டு எனது கருத்துக்கு எதிராக இன்னொரு விளக்கம் கொடுப்பதா?>>

//நட்பு ரீதியில் எனில் தொடர்ந்து பேசலாம் என்பதே எனது கருத்து;//

தங்கள் விருப்பம் எங்கள் பாக்கியம்.

நான் உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். உங்களைக் கிண்டலடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தங்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னைத் தயவாய் மன்னியுங்கள்...

//யோசிக்கிறேன்...தீவிரமாக...!//
பொறுமையாகவே யோசியுங்கள்...

-- Edited by timothy_tni on Saturday 27th of March 2010 12:37:14 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

தன் திறமையையும் உழைப்பையும் நம்பி செயல்படும் ஒருவனை தேவனுக்கு மகிமை செலுத்தத் தூண்டுவதைவிட...........

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34881855



__________________

"Praying for your Success"


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//பரீட்சை எழுதும்  அநேகரின்   முக்கிய நோக்கம்  எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்வை   அமைத்துகொள்ளதானேயன்றி ஆண்டவருக்காக  பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல.//


கல்வியின் பயன் மெய்ப்பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால், இந்தக்காலத்தில் படிக்கிறவர்கள் பலபேருக்குத் தெய்வ பக்தியே இல்லை. அதுதான் அடிப்படையான குறை.
-காஞ்சி பெரியவர்


(இதற்கு பைபிளிலேயே அனேக பதில்கள் இருக்கிறது, இவன் ஏன் இவரது கருத்துக்களை எல்லாம் மேற்கோள் இடுகிறான் என (வி)வாத்திற்கு வந்து விடாதீர்கள்)


-- Edited by timothy_tni on Tuesday 30th of March 2010 01:17:23 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard