இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஞானம் எனக்கு இல்லை..!


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
ஞானம் எனக்கு இல்லை..!
Permalink Closed


இன்றைக்கு சத்துரு இளம் குருத்துக்களை போதையிலும் கண்ணின் காட்சிகளிலும் வாலிப இச்சையிலும் மயக்கி வைத்திருக்கிறான்;
எல்லோரும் இதில் விழுந்துவிடவில்லை;ஆனால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர்;சிலர் விழுந்து பலர் விலக எண்ணினாலும் சிலருடைய மூர்க்கத்தனத்தினால் அநேகர் பாதிப்படைகின்றனர்;

உதாரணமாக ஒரு வகுப்பில் நல்ல மனநிலையுடன் பாடம் நடத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் நுழையும் ஆசிரியரின் முயற்சியினை ஒரு துஷ்ட மாணவனின் கோபப்படுத்தும் செயல் கெடுத்துப்போடுகிறது;இதுபோலவே சமுதாயம் முழுவதும் மாசுபட்டிருக்கிறது;

பரலோகம் இங்கில்லாவிட்டாலும் இங்கிருப்பவர்களே பரலோகம் போக முயற்சிசெய்துக் கொண்டிருக்கிறோம்;அப்படியானால் அவர்கள் விடுதலைக்காக உபவாசித்து ஜெபிக்காமல் எப்படி விடுதலை செய்யமுடியும்;ஆண்டவரே கொடுத்த கட்டளைதான் இது;

பிசாசின் இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிறவர்களை விடுதலை செய்யும் முன்பு பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சமுதாயத்தைச் சுற்றியுள்ள அந்தகாரசக்திகளைக் கட்டி ஜெபிக்கவேண்டும்;அதற்கு சுயம் என்பதின் முதல் காரணியான பசி,தாகம் அற்றுப்போகவேண்டும்;

இதன் மேன்மை உணராதவர்களுடன் இதைக் குறித்து விளக்கும் ஞானம் எனக்கு இல்லை;

// பிலிப்பியர் 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். //

இதுபோன்ற தவறான வசன பிரயோகத்தையும் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன்;நாம் விவாதிக்கும் பொருள் சம்பந்தமான வசனம் இதுவல்ல;உபவாசம் என்பது மாம்சத்தில் மாம்சத்தை மேற்கொள்ள கடைபிடிக்கப்படுவதாகும்;வேதத்திலும் அது இம்மைக்குரிய காரியங்களுக்காகவே கடைபிடிக்கப்பட்டது;

"தானியேல் உபவாசித்தான்" என்ற நேரடியான வார்த்தை ‌ இல்லை; ஆனால் எஸ்தர் உபவாசித்தது பரலோகம் செல்லவா? பரலோகம் செல்லும் தேவதிட்டத்தில் இருப்போரைக் காப்பாற்றவா?

யோசியுங்கள்..!


__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink Closed

சில்சாம்  அவர்களே
 
நான் உபவாசத்தை பற்றி ஒன்றுமே சொல்ல வில்லை  ஜெபம் செய்வதை பற்றிதான்
சொன்னேன் உபவாசம் நல்லது தான் அதற்கும்
சில வழிமுறைகள் இருக்கின்றது ஆனாலும்  
நீங்கள் சொல்கின்ற படி உபவாசத்தை குறித்து பாப்போம்
தேவன் எந்த உபவாசத்தை விரும்புகிறார்  என்று
 
ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம் பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.


மேலே குறிப்பிட்டு உள்ள வசனத்தின் படி உணவுக்காக உடைக்காக படிப்பிற்காக நாம் உபவாசம் இருந்தால்
அது நம்முடைய விருப்பமும் (இச்சை) நம்முடைய வேலைகளுக்காக தானே செய்கின்றோம் இப்படி பட்ட உபவாசத்தை தேவன் விரும்புவதில்லை  இதைதான் நானும் சகோதரர் சுந்தர் அவர்களும் கூறினும்  
 
/////பரீட்சை எழுதும்  அநேகரின்   முக்கிய நோக்கம்  எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்வை   அமைத்துகொள்ளதானேயன்றி ஆண்டவருக்காக  பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல.
   
என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்//////
 

தேவன் எதிர்ர்பார்க்கும் உபவாசம்
 
ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்
 
// பிலிப்பியர் 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். //

உபவாசத்திற்கும்  இந்த வசனம் சரியானதாய் இருக்கின்றது என்பது என் கருத்து.....................
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

CHILLSAM wrote:
////பரலோகம் இங்கில்லாவிட்டாலும் இங்கிருப்பவர்களே பரலோகம் போக முயற்சிசெய்துக் கொண்டிருக்கிறோம்;அப்படியானால் அவர்கள் விடுதலைக்காக உபவாசித்து ஜெபிக்காமல் எப்படி விடுதலை செய்யமுடியும்;ஆண்டவரே கொடுத்த கட்டளைதான் இது;////

சகோதரர்  சில்சாம்  அவர்களே!
 
தாங்களின் ஆத்தும அதாய கரிசனை என்னை மிகவும் கவர்ந்ததாலேயே "பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு உபவாசித்து ஜெபிபது சரியா?"என்ற கேள்வியுடன் கூடிய  எனது பதிவை நீக்கினேன்.  
 
ஒரு  ஆத்துமாவை எவ்விதத்திலாவது   தேவனின்  கரத்துக்குள் கொண்டு சேர்ப்பதுதான் ஒரு  தேவ பிள்ளையின் தலையாய பணி  என்று நான் கருதுகிறேன். அடுத்து போதித்து,  பெற்ற இரட்சிப்பில் நிலைநிற்க செய்தல் இரண்டாவது பணி.
இதுவே  தங்களின் பணியாக இருக்கும் பட்சத்தில் அது எவ்வித ஜெபமானாலும்  நிச்சயம் வரவேற்கதக்க ஒன்றே.     
 
 CHILLSAM wrote:
////பிசாசின் இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிறவர்களை விடுதலை செய்யும் முன்பு பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சமுதாயத்தைச் சுற்றியுள்ள அந்தகாரசக்திகளைக் கட்டி ஜெபிக்கவேண்டும்;அதற்கு சுயம் என்பதின் முதல் காரணியான பசி,தாகம் அற்றுப்போகவேண்டும்;////

தாங்கள் குறிப்பிடும் பசி/தாகம் அற்றுப்போக ஜெபிபது என்பது வேறு, பரீட்சையில் பாஸ் பண்ண ஜெபிபது என்பது வேறு.  பரீட்சையில் பாஸாகாதவன் எல்லோரும் பசியால்  தவித்துவிட  போவது இல்லை. நாங்கள் நான்கு சகோதரர்கள் இதில் எனது கடைசி தம்பி ஒருவன், அவனுக்கு படிப்பே ஏறாது!  ஆனால்  அவன்தான் இன்று  உலகபிரகாரமாக மிய உயர்ந்த நிலையில் இருக்கிறான் ஆனால் ஆவிக்குரிய நிலையிலோ மிகவும்  பின்தங்கி இருக்கிறான். 
 
மத்தேயு 5:4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

மற்றபடி நல்ல சாப்பாடும் கைநிறைய சம்பளமும் வந்துவிட்டால் கடவுளை தேடுவது கஷ்டமாக மாறிவிடும்.  
  
நீங்கள் எந்த மனநிலையின் அடிப்படையில் இப்படி ஒரு ஜெபத்தை ஏறெடுத்தீர்கள்  எனபது ஆவியானவருக்கே தெரியும் எனவே  தங்கள் நோக்கத்தில் தவறில்லாத பட்சத்தில்  யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.  


-- Edited by SUNDAR on Friday 26th of March 2010 10:48:49 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink Closed

// என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக,  உலக காரியங்களுக்காக  உபவாசித்து அதற்காக  ஜெபிப்பது  என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்..............  //

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=34845035


// நான் உபவாசத்தை பற்றி ஒன்றுமே சொல்ல வில்லை  ஜெபம் செய்வதை பற்றி தான் சொன்னேன் //

ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைக்கும் எட்வின் அவர்களுக்கு என்ன விளக்கம் கொடுப்பது என்றே புரியவில்லை;

நான் இன்னும் ஆண்டவரின் அன்பை ருசித்தறியாத மாணவர்களின் இக்கட்டான நிலையில் (உபவாசித்து...) ஜெபித்து அதன்மூலம அவர்களை ஆதாயப்படுத்த முயற்சிப்பது வேதத்துக்கு விரோதமானதாகவும் உங்கள் பார்வையில் கேலியாகவும் இருக்குமானால் நான் அதற்கு எதுவும் செய்யமுடியாது;

மேலும் நினைக்கிறேன்;கருதுகிறேன்;எனது கருத்து போன்றவையெல்லாம் வெறும் சத்தில்லாத வார்த்தைகள்;வேதம் குறிப்பிட்டதொரு காரியத்தில் என்ன சொல்கிறது என்பதே இறுதியானது;

உலகக் காரியங்களுக்காக உபவாசித்து ஜெபிக்கவேண்டிய அவசியமில்லை என்று கருதும் எட்வின் வேறு என்னென்ன காரியங்களுக்காக உபவாசித்து ஜெபிக்கலாமென்றும் கூறிவிட்டால் உதவியாக இருக்கும்;

ஜெபம் மற்றும் உபவாசத்துடன் கூடிய ஜெபத்தைக் குறித்து ஒன்றுமறியாத மாணவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்துவதுடன் இதன் மூலம் பெறும் வெற்றிக்கும் இறைவனையும் நம்முடைய ஜெப முறையையும் பங்காளியாக்குகிறோம்;

பெரும்பாலும் பரீட்சை நேரத்தில் மாணவர்கள்- குறிப்பாக மாணவியர் சரியாக சாப்பிடுவதில்லை;ஆனால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாக பட்டினியாக அல்ல,உபவாசித்து ஜெபிப்பது ஒரு சிறந்த முறையாகும்;

இப்படி கடன்பிரச்சினைகளுக்கும் குடும்பப் பிரச்சினைகளுக்கும் அனைத்து பொதுவான பிரச்சினைகளுக்கும் உபவாசித்து ஜெபிப்பது நாம் மேற்கொள்ளும் காரியத்தினை ஒரு யுத்தம் போல முன்னெடுத்துச் செல்லும்;

ஆண்டவர் நமக்காக செயலாற்ற நாம் ஆண்டவருடன் ஜெப மலையில் காத்திருக்கிறோம்;அந்த நேரத்தில் நமது புலன்களைச் சுத்தம் செய்யும் வண்ணமாக உபவாசத்திலிருப்பது ஒரு சிறந்த முறையாகும்; உபவாசிக்காமல் ஜெபிப்பதைவிட உபவாசித்து ஜெபிப்பது புலனடக்கத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்;

மேலும் நாம் ஜெபிக்கும்போது நமக்கு மேலான மூன்று மண்டலங்களுடன் சம்பந்தப்படுகிறோம்;அந்த மண்டலங்களுக்குள் நுழைந்து வர வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு ஜெலுசில் போட்டுக்கொண்டு ஏப்பம் விட்டுக் கொண்டே சென்று வரமுடியாது;

CHILLSAM wrote:
////உன் வெற்றிக்காக நான் இங்கே கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்; உனது தேர்வுகள் அனைத்தும் முடியும்வரை நான் சகஜமான‌ உணவுப் பழக்கத்துக்குத் திரும்பமாட்டேன்;///

சுந்தர்:
இது ஆத்துமா ஆதாய கரிசனையின் அடிப்படையில் எழுதப்பட்ட வார்த்தைகள் போல் எனக்கு தெரியவில்லை. ஏதோ நீங்கள் சகஜமான உணவு பழக்கத்துக்கு திரும்பாமல் ஜெபிபதால் அவர்கள் பாஸ் பண்ணிவிட முடியும் என்ற ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்துவதாகவே இப்பதிவு உள்ளது.

இறைவன்,விரதம் போன்ற வார்த்தைகளே உங்களுக்கு அது ஒரு பொதுவான தளத்திலிருந்து செய்யப்படும் ஜெப முயற்சி என்பதை உங்களுக்கு விளக்கவில்லையா?

கிறித்தவ விசுவாசத்துக்கு முரணான எத்தனையோ சர்ச்சைக்குரிய காரியங்களை இங்கே தெளித்திருக்கும் தங்களை நான் ஒருபோதும் கேள்வி கேட்டதில்லை;

ஆனால் பரியாசம் கொப்பளிக்க நீங்கள் அள்ளித் தெளித்துள்ள காரியங்களுக்கு என்னிடம் பதிலில்லை;

நான் எனது மாணவ நண்பனுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாகவே எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்;

இது அவன் வெற்றியில் நான் கொண்டுள்ள ஈடுபாட்டையும் அக்கறையையும் காட்டும் வண்ணமாக சொன்னதுடன் இதனை மற்றவரும் செய்ய நான் கட்டாயப்படுத்தவில்லை;

ஒரு காரியத்தில் நல்ல முடிவு ஏற்படும் வரையிலும் அவரவர்க்கு தோன்றும் பொருத்தனைகளை ஏறெடுப்பதும் நிறைவேற்றுவதும் வேதத்திலும் சமூகத்திலும் வழக்கமான ஒன்றுதானே?

நான் செய்யும் விரத‌ ஜெபத்தினால் மட்டுமே அவன் வெற்றிபெறமுடியும் என்று சொன்னேனா? அப்படியானால் எதற்காகவுமே ஜெபிக்கவேண்டிய அவசியமில்லையே..!

எட்வின் குறிப்பிடும் ஏசாயா.58- க்கூட படிக்காமலா ஊழியம் செய்கிறோம்;

// பிலிப்பியர் 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். //

//உபவாசத்திற்கும்  இந்த வசனம் சரியானதாய் இருக்கின்றது என்பது என் கருத்து.....................//

அது உங்கள் கருத்து மட்டுமல்ல,வரட்டு பிடிவாதம்...எதற்கும் எழுதிய பவுலையும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாமா..?




__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

CHILLSAM WROTE:
/////கிறித்தவ விசுவாசத்துக்கு முரணான எத்தனையோ சர்ச்சைக்குரிய காரியங்களை இங்கே தெளித்திருக்கும் தங்களை நான் ஒருபோதும் கேள்வி கேட்டதில்லை;/////

தேவனின் திட்டம் என்னவென்று அறிந்து செயல்படுவதை விட்டுவிட்டு, கிறிஸ்த்தவ விசுவாசம் என்றொரு தனிப்பட்ட விசுவாசத்தை அநேகர் சேர்ந்து ஏற்ப்படுத்தி கொண்டால், அது தேவனின் தீர்ப்பாகிவிடாது சகோதரர் அவர்களே. தேவன் எதையும் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்ற வல்லவர்.  எனது இந்த கருத்துக்கு ஆதாரமாக  நான் வேதத்திலிருந்து பலமுறை உதாரணத்துடன் விளக்கம் கொடுத்துவிட்டேன்.   மனிதர்களே  ஒரு வேதபாட திட்டத்தை உருவாக்கி அதை  வேதாகம கல்லூரியில்  சென்று பயின்று முடித்துவிட்டால், அதுதான் முடிவு   அதை தேவன் பின் பற்றவேண்டும் என்று பலர் எண்ணுவதை என்னால் அறிய முடிகிறது.
 
நான் முறைப்படி வேதாகமத்தை பயின்றவன் அல்ல. அது ஒருவருக்கு நிச்சயம் தேவை என்றும் நான் எண்ணவில்லை. தேவனை அறியும் விதமாக அறிந்து அனைத்தையும் போதித்து  நடத்தவல்ல ஆவியானவரை பெற்றுகொண்ட்டலே  போதும் என்றே நான் கருதுகிறேன். ஆசானே நமக்குள் வந்தபிறகு  அடுத்தவர் சொல்லிகொண்டுக்கும் பாடம் எதற்கு?
   
 யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

பொறுத்திருந்து பாருங்கள் நான் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை  அறிந்துகொள்வீர்கள்.      

CHILLSAM WROTE:////ஆனால் பரியாசம் கொப்பளிக்க நீங்கள் அள்ளித் தெளித்துள்ள காரியங்களுக்கு என்னிடம் பதிலில்லை;////

சகோதரரே!  நான் உங்கள் ஒருவரைத்தான் அபிஷேகம் பெற்றவர் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன். அனால் நீங்கள் எழுதும் வார்த்தைகள் அநேகமுறை என்னை மாறுபாடாக சிந்திக்க வைக்கிறது. என்னை பற்றி சரியாக அறியாமல் ஏதேதோ எழுதுகிறீர்கள். என்னுள் இருக்கும் ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால் நிச்சயம் எனது  நிலையை தங்களுக்கு புரியவைப்பார்.   
 
யாரையும் எந்த நிலையிலும்  பரியாசம் பண்ணுபவன் நானல்ல.  என்  மனதில் எழுந்த  ஏற்கெனவே உங்கள் தளத்தில் கேட்டு பின் நீக்கப்பட்ட கேள்வியைதான்   இங்கு முன் வைத்தேன். உங்களின் இந்த கருத்துக்கு ஆதரவாக நான் வேறொரு தளத்தில் வாதிட்டதுகூட உண்டு  ஆகினும்  அது தங்களுக்கு பரியாசமாக தெரியும் பட்சத்தில் என்னை மன்னித்துவிடுங்கள்.  
 
அதே நேரத்தில் நான் தொடர்ந்து எழுதிய  
 
தங்கள் நோக்கத்தில் தவறில்லாத பட்சத்தில்  யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய  அவசியமில்லை.  

என்ற வரிகளையும் கருத்தில் கொள்க.
 
நாம் உண்மையில் சரியான நோக்கத்தோடு ஒரு காரியத்தை செய்தால் யார் நம்மை  குற்றப்படுத்தினாலும் அது நமது மனதை பாதிக்காது என்னை பற்றி  என்  தேவனுக்கு தெரியும்  என்று அது சத்தமிடாமல் இருக்கும்.     
 
இங்கு யாரையும் குற்றப்படுத்துவது அல்லது பரியாசம் செய்வது நமது நோக்கமல்ல. தவறுகளை நிச்சயம் சுட்டி காட்டலாம், கேள்விகள் கேட்கலாம். விளக்கம் பெறலாம். யாருடைய அறிவுரையையும் நான் அசட்டை பண்ணுவதில்லை.  தங்களில் எழுத்துக்கள் பற்றி கேள்விகள் கேட்க எங்களுக்கு தகுதியில்லை என்று கருதினால்  விட்டுவிடுகிறோம்.       

 


-- Edited by SUNDAR on Thursday 25th of March 2010 05:45:00 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink Closed

//நான் இன்னும் ஆண்டவரின் அன்பை ருசித்தறியாத மாணவர்களின் இக்கட்டான நிலையில் (உபவாசித்து...) ஜெபித்து அதன்மூலம அவர்களை ஆதாயப்படுத்த முயற்சிப்பது//

தவறில்லை.

//
உன் வெற்றிக்காக நான் இங்கே கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்; உனது தேர்வுகள் அனைத்தும் முடியும்வரை நான் சகஜமான‌ உணவுப் பழக்கத்துக்குத் திரும்பமாட்டேன்//

எனக்காக இந்த அண்ணன் எப்போதும் ஜெபிப்பார்; நான் இறைவனை அதிகமாக தேடவேண்டியதில்லை எனும் எண்ணம் அவர்களுக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மற்ற என் கருத்துகளுக்கு:

http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=34845035



__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink Closed

"முன் ஏர் போவது போலவே பின் ஏரும் போகும்" என்பது முதுமொழி; பிரார்த்தனை என்பது வளையம் போன்றது;அல்லது சங்கிலி போன்றது;

நிச்சயமாகவே ஒன்றுடன் ஒன்று ...
http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34879300




-- Edited by chillsam on Friday 26th of March 2010 10:48:31 AM

__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

எந்த சகோதரர்களையும் குற்றப்படுத்துவதோ அல்லது பரியாசம் பண்ணுவதோ நமது  நோக்கமல்ல என்ற காரணத்தாலும், யாரையும் துளியளவு புண்படுத்தும் வார்த்தைகளை பதிவிட வேண்டாம் என்று ஆண்டவர் கடிந்துகொண்ட  காரணத்தாலும் எனது  பதிவில் சில திருத்தங்களை செய்துள்ளேன்.
 
மேலும் ஒரே தலைப்பில் இரண்டு விவாதங்கள் நடைபெறுவதால் இத்திரியை மூடி விடவும் வாஞ்சிக்கிறேன்.
 
தொடர்ந்து "பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஜெபித்தல்" பற்றி கருத்து பதிவிட விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட திரியை சொடுக்கவும்.


http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=34845035


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink Closed

// ஆகினும்  அது தங்களுக்கு பரியாசமாக தெரியும் பட்சத்தில் என்னை மன்னித்துவிடுங்கள்.  //

அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;
இங்கு அதிகரித்துவரும் வெப்பத்தையும் சற்று கவனத்தில் கொள்ளவும்;மற்றபடி எப்போதும் தங்கள் அன்புக்கு பாத்திரமாக நடந்துக்கொள்ள முயற்சிப்பேன்..!


__________________

"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard