மனிதனின் பகுதிகளை வேதம் மூன்றாக சொல்லுகிறது. ஒவ்வொரு மத பிரிவும் தனக்கு வேண்டியபடி பல பகுதிகளாக பிரித்துக் கொள்கிறது. சில ஏழு, சில எட்டு, சில ஐந்து இப்படி பல. இங்கே வேதத்தின்படியே மூன்று முக்கிய பிரிவுகளாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
சரீரம், ஆத்துமா, ஆவி இவை வெங்காய சருகு போல் ஒன்றன் உள் ஒன்றாக இருக்கின்றன. (இந்துக்களின் ஆத்மா என்பதும் கிருத்துவர்களின் ஆத்துமா என்பதும் வேறுவேறு)
சரீரம் -:
இதை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்
1. நாம் காணும் சரீரம் 2. பிராண சரீரம் 3. ஒளி சரீரம்
1. நாம் காணும் சரீரம் :
விளக்கம் தேவையில்லை
2. பிராண சரீரம் :
மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலும் கூட வரும் சுவாசம், மனிதனுடைய செயல்கள், எண்ணங்கள், உணர்வுகள் முதலியவைகளுக்கு ஏற்றாற் போல் மாறுகிறது. இந்த பிராணன் எப்படி வேலை செய்கிறது, எத்தனை வகையாக பிரிந்து செயல்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்தவர்கள் இந்த பிராணனை முறையாக கட்டுபடுத்துவதன் மூலம் மனிதனின் செயல்கள் மற்றும் உள் பகுதிகளான எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள் முதலியவற்றை மாற்றி மனிதர்கள் நன்மை பெற முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் அதுவே பிரணாயமம் என்னும் பயிற்ச்சியாகும். இதை சரியான பயிற்ச்சி இல்லாமல் செய்தால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற பயிற்ச்சிகள் இம்மையில் மட்டுமே நன்மை தரக்கூடியது ஆகவே இவைகளை அற்ப பிரயோசனமுள்ளது என பவுல் 1தீமோ.4.8 ல் சொல்கிறார்.
3. ஒளி சரீரம் :
மனிதனின் உள்ளே அந்த மனிதனைப் போலவே உள்ள ஒளியாலான சரீரம் உள்ளது. முதலில் ஒளி சரீரமே உருவாகிறது இது பார்டர் (frame) போல செயல்படுகிறது. இந்த எல்லைக்குள்ளே உடலின் செல்கள் தோன்றுகின்றன மற்றும் மறைகின்றன. மனிதனின் பழைய செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மனிதனின் உருவம் மட்டும் மாறவில்லை. இது இந்த ஒளி உடலினாலேயே என்று சொல்லப்படுகிறது.
ஒரு குற்ப்பிட்ட வயது வரை இந்த ஒளி சரீரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. (தோராயமாக 25 வயது வரை அதாவது உடல் அதிக பட்சம் வளரும் வரை)
மனிதனின் உடலானது இந்த ஒளி சரீரத்துடன் (ஒளி உடலின் உள்ளே மற்ற உடல்கள் உள்ளன) ஒரு வெள்ளிக் கயிற்றால் (ஒளிக் கயிறு) இணைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளிக் கயிறு அறுந்து போவதே மரணம் ஆகும். வயதாவதினால் இந்த கயிறு கட்டு விடும். ."வெள்ளிக் க்யிறு கட்டு விட்டு" என்ற சாலோமோனின் வார்த்தைகள் இதையே குறிக்கின்றது. பிறப்பதற்க்கு ஒரு கயிறு அறுக்கப்படுவது போலவே இறப்பதற்க்கும் ஒரு கயிறு அறுக்கப்பட வேண்டும்.
இந்த வெள்ளிக் கயிறு எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நீளக் கூடியது. இதன் மூலம் ஒருவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் உடலுக்கு வெளியே சென்று சுற்று பார்த்து விட்டு வர முடியும் (Astral travel). இதற்கு அதை செய்வது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். வேதத்தில் இந்த முறை தெரிந்தவர் எலிசா. கேயாசி பொய் சொல்லி வெகுமதிகளை பெற்றுக் கொள்ளும் போது எலியா ஒளி சரீரமாக அவனோடு கூட சென்றிருந்தார். பிள்ளையை உயிர் பிழைக்க வைக்கவும் இதே முறையை பயன்படுத்த நினைத்த போது அந்த பிள்ளையின் தாயால் கேட்டுக் கொள்ளப்பட்டு அதை பயன்படுத்தாமல் விட்டார். எலிசா எப்படி இந்த அறிவை பெற்றார் மனிதர்களிடமிருந்தா அல்லது கர்த்தரிடமிருந்தா என்று சொல்லப்படவில்லை. ஆனால் நான் மனிதர்களிடமிருந்தே இதை கற்றதாக நினைக்கிறேன்.
சில சமயம் சில மனிதர்கள் கனவு காணும் போது இந்த சரீரம் உடலை விட்டு வெளியே வந்து அனேக இடங்களுக்கு சென்று வரும். தீய ஆவிகள் இந்த சரீரத்தை தங்கள் இடங்களுக்கு அழைத்து செல்வதுண்டு. அதே போலவே தேவ மனிதர்களையும் தேவ தரிசனங்களை காணும்படி தேவ தூதர்கள் அழைத்து செல்வதுண்டு. தூங்குகிற மனிதர்களை அவசரமாக எழுப்பக் கூடாது என்று இதனாலேயே சொல்கிறார்கள். (வெளியில் சென்ற உடல் திரும்ப சேர சிறிது அவகாசம் தேவைப்படும். அவசரமாக எழுப்பும் போது இந்த கயிறு அறுந்து விடும் அபாயம் இருப்பதால்) இந்த சரீரம் அப்படியே சென்று ஒரு உயிரற்ற உடம்பில் புகுந்தால் அதுதான் கூடு விட்டு கூடு பாய்கிற விஷயம். அது எப்படி என்று ஆதி சங்கரரைத்தான் கேட்க வேண்டும்.
மனிதன் இறந்த உடன் இந்த உடல் மனித சரீரத்துக்கு அருகிலேயே அதை சுற்றியே இருக்கிறது, இதுவே இறந்தவரின் ஆவியாக அதை பார்க்கும் அமைப்பு உள்ளவர்களுக்கு தெரிகிறது. சில நாட்களுக்கு பிறகு இது கரைய ஆரம்பிக்கிறது. மற்ற உள்ளான சரீரங்கள் இதிலிருந்து பிரிந்து தங்கள் வினையை அனுபவிக்க பாதாளத்திற்க்கு செல்கின்றன. இந்த ஒளி சரீரம் இறந்தவரின் கடைசி எண்ணங்களோடு சுற்றிக் கொண்டிருக்கிறது (ரோபாட்டை போல்) இது கூடு (shell) எனப்படுகிறது. இறந்தவரின் ஆவி பேசுவது என்பது இந்த கூட்டுடன் தொடர்பு கொள்வதே. இறந்தவரின் மற்ற சரீரங்கள் வேறு உலகத்திற்க்கு சென்று விட இந்த கூட்டுடன் பேசுவது என்பது அவரோடு தொடர்பு கொள்வது ஆகாது. பெரும்பாலும் தன் கடைசி நேர ஆசைகளையே, மற்றும் எப்படி இறந்தேன் என்பதையே இந்த கூடுகள் சொல்லும் (அதற்கான அமைப்பு உள்ளவர்கள் மற்றும் குறி சொல்பவர்கள் மூலமாக)
சந்தோஷ் நீங்கள் எழுதும் காரியங்கள் அருமையாய் இருக்கின்றன பல சந்தேகங்கள் உங்கள் வார்த்தையின் மூலம் எனக்கு தெளிவாகின்றது தொடர்ந்து எழுதுங்கள் படிக்க ஆவலுடன் இருக்கின்றேன்........
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஒவ்வொரு மனிதனும் சிந்தனைகள், ஆசைகள், உணர்வுகள் இவைகளால் ஆக்கப்பட்டுள்ளான். இவைகளின் கூட்டுத் தொகுப்பே அகங்காரம் அல்லது ஆத்துமா எனப்படும்.ஆகவே ஆத்துமாவில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை சிந்தனை சரீரம், ஆசை சரீரம், உணர்வு சரீரம் ஆகியவையே. மனிதன் வளரும் போது இவை மூன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. இவை பற்றி பின்னர் பார்ப்போம்.
சரீரம் தொடர்கிறது :
ஒளி சரீரம் : 2.கொரி 12 1-4 (பரதீசிற்க்கு போன பவுல்)
2. கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். 4. அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
சரீரத்திலிருந்தேனா அல்லது அதற்க்கு வெளியே இருந்தேனா என்று சொல்ல முடியவில்லை என்று பவுல் சொல்லுவது இந்த ஒளி சரீரத்துடன் (முன்னர் கூறியது போல) சுற்றி பார்த்த அனுபவத்தையே.
4. துர்குண சரீரம் :
இது வேதத்தில் மாமிசம் என்னும் பெயரால் பல இடங்களில் குறிப்பிடபடுகிறது.
இவைகளை புரிந்து கொள்வதற்காக இரண்டாக பிரிக்கலாம். வீட்டு தோட்டத்தில் நாம் வளர்க்கும் செடிகளும் உண்டு. தானாகவே முளைக்கும் செடிகளும் உண்டு. அதுபோலவே பிறப்பிலிருந்து வளரும் துர்குண சரீரமும் உண்டு. தன் வாழ்னாளில் மனிதன் வளர்க்கும்
துர்குண சரீரமும் உண்டு. இவை இரண்டும் சேர்ந்ததுதான் துர்குண சரீரம். முதலில் பிறப்பிலிருந்து வரும் சரீரத்தை பார்ப்போம். பிறப்பிலிருந்து வருவது இரத்த சம்பந்தமுடையது ஆகையால் இதை மேற்கொள்ள மனிதனால் முடியாது. பிறக்கும் போது விதையாக இருக்கும் இது மனிதன் வளர வளர பெரிதாகி ஆத்துமாவை பாதிக்கத் தொடங்கும். இது காந்தம் போல மனிதனை இழுக்கும். இந்த சரீரம் இல்லாமல் பிறந்த அல்லது பலமற்றதாக இருக்க பிறந்த மனிதர்கள் பாக்கியவான்கள். இதை தேவ விதி என்று கூட சொல்லலாம். அனேக மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது இந்த சரீரத்தின் விளைவுதான். மிகவும் இலேசான ஆத்துமாவை பூமியை நோக்கி இழுத்து பிறக்க வைப்பதும் இந்த விதையே. மனிதன் இந்த விதியோடு மோதி வெல்லவோ அல்லது அதன் துன்பங்களை அனுபவிக்கவுமே பிறந்திருக்கிறான். இதை புரிந்து கொள்ள தாவீதின் வாழ்க்கையில் நடந்ததை பார்ப்போம்.
தாவீதின் பாவம் : (2 சாமுவேல் 11,12 )
தாவீது பத்சேபாள் விஷயத்தில் பாவம் செய்து கர்த்தரிடத்தில் தண்டனை பெற்ற பின்பு, தன் பாவத்திற்க்கு என்ன காரணம் என யோசித்த போது கண்டுபிடித்தது என்னவென்றால்,
சங்கீதம் 51
4. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5. இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
இங்கே தாவீது தன் பாவத்திற்க்கு காரணம் சாத்தான் என்று சொல்லாமல் தன் பிறப்பே என்று சொல்லுவதை கவனிக்க வேண்டும். இதிலிருந்து மாமிசம் என்பது வேறு, சாத்தான் என்பது வேறு என்று தெரிய வரும். இப்போது உள்ளவர்கள் பாவம் செய்து விட்டு தாங்கள் பச்சை குழந்தைகள் எனவும் எல்லாவற்றிற்க்கும் காரணம் சாத்தானே என்று சொல்லுகிறார்கள். இதுவே யாக்கோபு 1. 14 வசனத்தின் விளக்கம்
14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
ஒவ்வொரு மனிதனும் தன் தன் சுய இச்சையால் இழுக்கப்படுகிறான். இதை எப்படி
அறியலாம் என்றால் ஒரு மனிதன் பெண்ணாசைக்கு அடிமையாக இருக்கிறான். ஒருவன் மதுவுக்கு, ஒருவன் பண ஆசைக்கு, ஒருவன் புகழுக்கு, ஒருசிலர் எல்லாவற்றிற்க்கும் அரை குறையாக அடிமையாய் இருக்கின்றனர். ஒருவரை பாதிக்கும் காரணம் இன்னொருவரை பாதிப்பது இல்லை. அவரவர்கள் தங்கள் இரத்த சம்பந்தமான விதி எதுவோ அதற்கே அடிமையாக இருக்கின்றனர்.
உண்மையில் இந்த விதியை மீறி துன்பபடுத்த, சோதனை செய்ய சாத்தானால் முடியாது. இதையே பிதாவின் சித்தம் என இயேசு குறிப்பிடுகிறார். இந்த பிதாவின் சித்தத்தை மீறி
சாத்தானோ, மனிதர்களோ "மயிரை கூட புடுங்க முடியாது" என்பதையே மிகவும் அழகாக இயேசு மத் 10 இல் சொல்லுகிறார். (ஆனால் அந்த விதி என்ன என்பது நமக்கு தெரியாது என்பது வேறு விஷயம்)
28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். 29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. 30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. 31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
இந்த தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகையால் இதை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டியது அவசியமாகிறது.
இந்த இச்சை என்பது ஒரு வலிமை வாய்ந்த ஒரு உணர்வாகும் (impulse) ஆனால் இது மிக குறைந்த நேரமே நீடிக்கும். அதாவது நம் உடலில் ஊறல் ஏறபடுவதை போல. கொஞ்ச நேரம் பொறுத்துக் கொண்டால் இதை வெல்லலாம் ஆனால் இதன் வலிமையை தாங்க மாட்டாமல் மனிதர்கள் அனேக நேரங்களில் பாவத்தில் விழுந்து விடுகின்றனர். இதை வழிப்போக்கன் என்று தேவன் சொல்லுகிறார். தெருவில் வழிப்போக்கன் வருவது அனேக நேரங்களில் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த வழிப்போக்கனுக்கு சாப்பாடு போடாமல் இருக்கலாம்.
2.சாமுவேல் 12.4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான்.
இப்போது தாவீதைப் பற்றி பார்ப்போம்.
தாவீது முதலில் செய்த தவறு
1. ராஜாக்கள் போருக்கு போகும் காலம் வந்த போது போகாமல் இருந்தது
2. போரில் என்ன நடந்திருக்கும் என்று மனக்குழப்பம், கலக்கம், தோல்வியை பற்றி பயம், முடிவெடுக்க முடியாத நிலை இவைகளோடு இருந்தது (இது வேதத்தில் சொல்லப்படவில்லை)
தாவீதின் ஆத்துமா ஒரு ஒடுக்கப்பட்ட நிலையை அடைந்ததால், அதிலிருந்து தப்பிக்க வேண்டியது அந்த ஆத்துமாவிற்க்கு அவசியமாகிறது.
இந்த வேளையிலே அவன் ஒரு அழகான பெண்ணை பார்த்தான் என்று உள்ளது ஆனால் அந்த பெண் அந்த அளவு அழகானவளாக இருந்திருப்பாள் என்பது சந்தேகமே. மேலும் நாட்டிலேயே அழகான பெண்களையெல்லாம் அரண்மனையில் வைத்துக் கொண்டிருக்க இந்த பெண் தாவீதைப் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் குழப்பம் அவன் கண்ணை மறைத்தது.
இங்கே இச்சையானது கர்ப்பம் தரித்து கர்ப்பத்தையே பிறப்பித்தது. அதை தொடர்ந்து ஒரு கொலையும் செய்யப்படுகிறது. அதை தான் நேரடியாக செய்யாததால் குற்ற உணர்வும் இன்றி இருக்கும் போது தேவனால் உணர்த்தப்பட்டு தண்டனை அடைகிறான்.
பிறகு தன்னுடைய பிரச்சனைக்கு காரணம் என்ன என யோசித்த போது அவன் கண்டு கொண்டது சங்கீதம் 19 12-13
12. தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். 13. துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.
என இங்கே தாவீதால் பாவத்தின் ஆரம்ப நிலை முதல் கடைசி நிலை வரை சொல்லப்படுகிறது. பல பெரும் பாவங்களுக்கு முதல் ஆரம்பம் மிகவும் அற்பமான காரியங்களே. போருக்கு போகாதது மற்றும் குழப்ப மன நிலையில் இருந்தது போன்றவை மனிதனைப் பொருத்த அளவில் தவறான விஷயம் அல்ல. ஆனால் இந்த சிறு சிறு பிழைகளே பெரும் பாவத்துக்கு தாவீதை இட்டு செல்கின்றன. கடவுள் அவராகவே வந்து பிழைகளை உணர்த்த மாட்டார். ஏனெனில் அது மனிதனின் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயமாகும். இதனால்தான் மனிதன் எப்போது தேவ ஆவியில் நிரம்பியிருந்து தேவன் சொல்கிறபடி வாழவது அவசியமாகிறது. தன் குழப்பமான மனனிலையில் தாவீது தேவ ஆவியில் நிரம்பியிருந்தால் இவைகள் தவறு என உணர்த்தப்பட்டிருக்க கூடும்.
அப்படியானால் தேவ ஆவியால் வழினடத்தப்படும் அளவுக்கு முன்னேறியிராத மனிதர்கள் தங்கள் பிழைகளை எப்படி அறிவது?
இது மிகவும் நல்ல கேள்வி. இந்த பிழைகள் முதலில் கீழகண்ட ஏதேனும் ஒரு காரியத்துக்கு
நம்மை கொண்டு செல்லும். அவையாவன நீதிமொழிகள் 6.16
16. ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை. 18. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், 19. அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
இன்னொருவனுக்கு சொந்தமான ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள படுக்கையறைக்கு கால்கள் விரையும் போது (தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்) இந்த காரியம் உணர்த்தப்பட்டிருந்தால் ஒருவேளை பெரும் பாவம் தவிர்க்கப்பட்டிருக்க கூடும்.
இன்று மக்கள் ஏதாவது பாவம் செய்து விட்டு சாத்தான் தங்களுக்கு வலை விரித்ததாகவும், தாங்கள் அதில் மாட்டிக் கொண்டதாகவும் சொல்லுகின்றனர். ஆனால் இந்த பூமியில் மனிதனை பாவம் செய்ய வைக்க வலை விரிக்கபடாத இடமோ, நேரமோ இல்லை. பூமி முழுவதும் வலை விரிக்கபட்ட இடமே. உண்மையில் மிக பெரும் பாவத்துக்கு காரணமான சிறு செயல்கள், இச்சை, உணர்வுகள் முதலானவை முதலில் மனிதனிலிருந்தே வருகின்றன. பிறகே அதை சாத்தான் உபயோகபடுத்திக் கொள்ளுகிறான். இப்போது காயீனை பற்றி பார்ப்போம்.
காயீன் ஆபேலின் மீது பொறாமை கொண்டான். அது மட்டுமே அவன் செய்த பிழை. கொலையை சாத்தான் அவனுக்குள் புகுந்து செய்து முடித்தான். மரணம் பற்றிய அறிவில்லாத அந்த நேரத்தில் காயினுக்கு கொலை செய்வதைப் பற்றியும் தெரிந்திருக்காது. மேலும் தன்னை கொலை செய்ய வைத்த சக்தியால் தானும் கொல்லப்படுவோம் என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. அதனாலேயே கர்த்தர் அவனுக்கு அவன் கேட்ட வரத்தை கொடுத்தார்.
இப்போதும் பல கொலைகாரர்கள் கோபம் கொண்டது மட்டுமே உணர்ந்தும் அதன் பிறகு அது எப்படி கொலையில் முடிந்தது என ஆச்சரியம் உள்ளவர்களாய் உள்ளனர். இயேசு சாத்தானை பற்றி சொன்னது.
யோவான் 8.44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்;
இந்த மாமிச சரீரம் எந்த எந்த துர்குணங்களை கொண்டு வரும் என்றால். கலாத்தியர்-5
மனிதன் ஒரு குறிப்பிட்ட மனனிலையில் இருக்கும் போது, வெளி சூழ்னிலைகளினால் பாதிக்கப்படும் போது அவனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்பட ஆரம்பிக்கும். அவனுக்குள் மிருகம் (துர்குண சரீரம்) இல்லாதிருந்தால் பிரச்சனை இல்லை. (ஆனால் இந்த சரீரம் எவ்வாறு இருக்கிறது என்பது நமக்கு தெரியாது என்பது வேறு விஷயம்) இதற்கு முன்பாக மனிதன் பலனில்லாதவன். ஆகவேதான் பாவம் செய்த மனிதனின் குற்ற உணர்வினை தேவன் தன்னை ஏற்றுக் கொள்ளுவதின் மூலம் நீக்குகிறார். ஆனால் இரட்சிக்கபட்டதினாலேயே ஒரு மனிதன் பாவம் செய்ய மாட்டான் என்று சொல்ல முடியாது.
இந்த மாமிச சரீரத்தின் மேல் ஜெயம் கொள்ள மனிதன் செய்ய வேண்டியது தனி பதிவில்.
மேலும் தாவீதின் பாவத்திற்க்கு இன்னொரு காரணமும் உள்ளது (மூன்று காலங்கள் என்னும் பதிவில்)
(தொடரும்)
-- Edited by SANDOSH on Saturday 10th of April 2010 05:58:35 PM
இந்த துர்குண சரீரத்திற்க்கு ஆதி காரணம் சாத்தானே. ஆன்மீக வழியில் உண்மையாக நடக்க முயல்பவர்கள் வழுக்கி விழ காரணமாய் இருப்பது இந்த சரீரமே.
இந்த சரீரம் பலமற்றதாக இருக்கும் சில மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் துன்பம் ஏதும் இல்லாததால் கொழுத்துப் போய் பாவம் செய்வது உண்டு. இவர்கள் துர்குண சரீரத்தை வளர்க்கிறார்கள். பல (கள்ள) ஆன்மிகவாதிகள் இந்த பகுதியிலேயே வருகின்றனர்.
நற்குண சரீரம் :
எல்லா மதங்களிலும், அனேக கெட்டவர்கள் மத்தியிலும், அனேக சூழ்னிலைகளீன் மத்தியிலும் சில மனிதர்கள் நல்லவர்களாக, நன்மை செய்பவர்களாக, பாவத்திற்க்கு விலகினவர்களாக இருக்கின்றனர். சங்கு சுட்டாலும் வெண்மை தரும், சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்ற பழமொழிகளுக்கு உதாரணமாக இருப்பவர்கள்.
இதற்கு காரணம் அவர்கள் இரத்தத்தில் உள்ள நல்ல குணமே. இந்த சரீரம் பலமற்றதாக இருக்கிறவர்கள் இதை வளர்க்க பிரயாசப்பட வேண்டும். இந்த சரீரத்திற்க்கு ஆதி காரணம் தேவனே
யாக்கோபு 1.17. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
லூக்கா 6.45. நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
லூக்கா 12.34. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்
இந்த இரு சரீரத்தின் (துர்குண மற்றும் நற்குண) இருப்பிடம் இருதயம் என்று வேதத்தில் சொல்லப்படுகிறது.
ஆத்துமா:
1) வேதத்தில் ஒரு மனிதனின் முழுமையை (சிந்தனை, ஆசை, உணர்வு) குறிக்க ஆத்துமா என்னும் வார்த்தை பயன்படுகிறது.
சங்கீ 42.1. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 2. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்
லோத்தின் மனைவி ஓடிப் போகும் போது, சரீர பிரகாரம் மட்டுமே ஓடினாள். அவள் ஆத்துமா (சிந்தனை, ஆசை, உணர்வு)அழிந்து கொண்டிருக்கும் பட்டணத்தின் மேலேயே இருந்ததால் திரும்பி பார்த்து உப்புத் தூண் ஆனாள்.
மாற்கு 12.33 ன் விளக்கம் :
33. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
இதையொத்த வசனங்கள் சிறிது சிறிது மாறி மத், லூக்கா, மாற்கு அதிகாரங்களில் வருகிறது. இது சரியாக இருப்பதாக பட்டதால் இந்த வசனத்தை எடுத்துக் கொண்டேன். (சிறிது மாற்றி)
1. முழு இருதயத்தோடும் (ஆசையோடும்) - கர்த்தரை தொழுது கொள்ள ஒரு உள்ளார்ந்த ஆசை எப்போதும் மனிதனிடம் இருக்க வேண்டும். எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனாக அவன் இருக்க வேண்டும்.
2. முழு அன்போடும் - அடுத்ததாக தன் துக்கங்கள், வேதனைகள் போன்ற உணர்வுகளை விட்டு தேவனிடம் முழுவதுமாக தேவனுக்காக மட்டுமே அன்பு கூர வேண்டும்.
3.. முழு மனதோடும் - பிறகு அலை பாயும் சிந்தனைகளை தேவனை நோக்கின விருப்பமாக மாற்ற வேண்டும்
4. முழு ஆத்துமாவோடும் - மேற்கண்ட மூன்றோடும் (ஒரே நேரத்தில்) கர்த்தரை ஆராதனை செய்ய வேண்டும்
5. முழுப் பலத்தோடும் - பிறகு சரீர பலத்தோடும் ஆராதனை செய்ய வேண்டும் (மொத்தம் நான்கு)
6. முழு மனதோடும் - மேற்கண்ட நான்கோடும் கர்த்தரை தொழும் போது சில சமயம் சிந்தனை மாறி விடும் அப்போது மறுபடியும் ஸ்டெப் மூன்றை பின்பற்ற வேண்டும்
2) ஒரு மனிதன் தனக்குதானே பேசிக் கொள்வது தன் ஆத்துமாவுடன் (சிந்தனையுடன்) பேசிக் கொள்வது எனப்படும்.
லூக்கா 12.19. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
சங்கீ.42.11. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
3) மனிதனின் உடலில்லாத உள் பகுதி ஆத்துமா எனப்படுகிறது.
லூக்கா 12.20. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
சங்கீ. 15. ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)
இந்த ஆத்துமாவை பாதிக்கும், பாவத்தில் விழ வைக்கும் காரணங்கள் உலகம் என்ற பெயரால் குறிப்பிடபடுகிறது. 1.யோவான் 2
15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
16. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1.மாம்சத்தின் இச்சை (துர்குண சரீரத்தில் சொல்லப்பட்ட மாமிசம் வேறு. இந்த மாமிச இச்சை வேறு. இது சரீரத்துக்கு தேவையான பொருட்கள் மேல் உள்ள இச்சை என்ற பொருளில் வரும்)
2. கண்களின் இச்சையும் 3. ஜீவனத்தின் பெருமை
ஆத்துமாவின் பாவம் என்பது துர்குண சரீரத்தின் பாவத்தைப் போல மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்ல. இது சிந்தனையின் வழியாக கொஞ்ச கொஞ்சமாக பெருகி பாவத்துக்கு இட்டு செல்லும். தாவீது பெண்ணிடம் உறவு கொண்டது துர்குண சரீரத்தின் பாவம் ஆனால் அவள் கணவனை கொலை செய்தது ஆத்துமாவினால் செய்த பாவமாகும் (Planned Murder) காயீன் செய்த கொலை துர்குண சரீரத்தின் பாவம்.
பெரும்பாலான மக்களில் துர்குண சரீரம் பலமற்றதாக உள்ளது. ஆனால் அவர்கள் ஆத்துமாவின் மூலமாக பாவம் செய்து துர்குண சரீரத்தை வளர்க்கிறார்கள்.
இங்கே சோதாம் என்னும் பட்டணத்தை தேவன் அழிக்க காரணங்கள். இவர்கள் கொழுத்துப் போய், ஜீவனத்தின் பெருமையினால் (கர்வம்) பாவம் செய்தனர். மேலும் பாவத்தை மறைந்து, மறைந்து செய்யாமல் வெளிப்படையாக செய்யும் அளவுக்கு மனசாட்சி கெட்டிருந்தது. பாவம் செய்வது நாகரீகமும் (fashion) , சுதந்தரமும், நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருந்தது.
எசேக்கியேல் 16.49. இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. 50. அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன். ஏசாயா 3.9. அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். எரே 23.14. எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.
உலகத்தின் இச்சையை வெல்வது எப்படி?
இது பற்றி தனி கட்டுரை ஒன்று வெளிவரும். ஆனால் கீழ்கண்ட வசனம் ஒரு வழியை சொல்கிறது அது
அந்நியர்களும் பரதேசிகளும் என்றெண்ணி நமக்கு சொந்தமில்லாத இந்த உலகத்தில் வாழ்வதுதான். (இது ஏறக்குறைய பகவத் கீதை சொல்லும் வழியைப் போன்றது)
11. பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
III) ஆவி :
பொதுவாக உலகத்தில் உள்ள மதங்களை மூன்றாக பிரிக்கலாம். ஆவி நடுனிலையான மதங்கள் 2. ஆத்மா (இந்து ஆத்மா) நடுனிலையான மதங்கள் 3. மனம் நடுனிலையான மதங்கள்
ஆவி என்ற பகுதி கிருத்துவர்களுக்கும், ஒயிட் மாஜிக், பிளாக் மாஜிக் செய்பவர்களுக்கும், சிறு தேவதை வழிபடுபவர்களுக்கும் மட்டுமே முக்கியமானது.
இந்து, புத்த மற்றும் ஜைன மதங்களின் வழியாக ஆன்ம முன்னேற்றம் அடைய விரும்புவோர் இந்த ஆவி என்னும் பகுதிக்கு கவனம் கொடுகாமல் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.(ஆத்மாவை நோக்கி)
இஸ்லாமிய மதம் மனம், செயல் முதலியவை அடிப்படையாக கொண்ட மதம்
ஆவியின் நான்கு பகுதிகள் 1. மனசாட்சி அல்லது புத்தி 2. அதீத சக்தியை உள்வாங்கும் திறன்
3.அதீத சக்தியை வெளிப்படுத்தும் திறன் 4. ஐக்கியம்
ஆவி என்னும் பகுதியில் (உள்ளுணர்வு (2 & 3) மற்றும் ஐக்கியம்) மனிதனின் பேராற்றல் அடங்கியுள்ளது.
இந்த பகுதியின் நிலைமையை பொறுத்து அதை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. பாஸிட்டிவ் 2. பூச்சியம் 3. நெகட்டிவ்
(இந்த கட்டுரையை வேகமாக முடிக்கும் பொருட்டு அனேக பகுதிகள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. முடித்த பிறகு கர்த்தருக்கு சித்தமானால் அவை பின்னர் சேர்க்கப்படும்)