சாத்தான் மிகவும் தந்திரக்காரன் என்பது நாம் அறிந்ததே. அனேக நேரங்களில் தேவன் பேசுவது போலவே அவனும் சில காரியங்களை நம்மிடம் பேசி நம்மை வழிதவற வைத்துவிடுகிறான். எனவே தேவனின் வார்த்தைகள் எது சாத்தானின் வார்த்தைகள் எது என்பதை நாம் பகுத்தறிவது மிக மிக அவசியமாகிறது.
ஒரு நடுத்தர குடும்பத்து சகோதரி அன்று வீட்டில் புதியதாக ஒரு பிரிட்ஜ் வாங்கி வைத்திருந்தார்கள். அவர்களிடம் நான் என்ன திடு திப்பென்று ஒரு புதிய பிரிட்ஜ் வாங்கி வைத்துவிட்டீர்கள்? பணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று விசாரித்த போது, ஆண்டவர் இன்று என்னிடம் "இன்று புதன் கிழமை நல்லநாள் நீ உடனே கடைக்கு சென்று ஒரு பிரிட்ஜ் வாங்கி வா" என்று சொன்னார். என்னிடம் உடனடியாக பணம் இல்லாத காரணத்தால் எனது தாலி செயினை அடகு வைத்து இந்த பிரிட்ஜை வாங்கி வந்தேன் என்று பெருமிதத்தோடு சொன்னார்கள்.
நான் "ஆண்டவர் நிச்சயம் தாலியை அடகு வைத்து பிர்ட்ஜெல்லாம் வாங்கும்படி சொல்லியிருக்க மாட்டார்" என்று எடுத்து சொல்லியும் அவர்கள் நம்ப தயாராக இல்லை, அது உண்மையில் ஆண்டவரின் வார்த்தைகள்தான் என்று திட்டவட்டமாக கூறினார்கள்.
மத்தேயு 6:24; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
என்றும்
I யோவான் 2:15உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்
என்றும் வேத வசனம் சொல்லியிருக்கும் பட்சத்தில் மிக மிக அத்தியாவசிய தேவையான சில பொருட்களை வாங்க ஒருவேளை தேவன் கட்டளையிடலாம் ஆனால்
இது போல் பிரிட்ஜ் வாங்க ஆண்டவர் சொல்லியிருக்க் வாய்பிருக்கிறதா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆதிமுதற்கொண்டு அநேகருடைய பெலவீனங்களை அவன் அறிந்து இருக்கிறபடியால் அவர்களுடைய பெலவீனமான காரியங்களையே அவனுடைய திட்டத்திற்கு அவன் பயன்படுத்தி கொள்கிறான்.
யோவான் 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன்பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
தேவனுக்கு பிரியமாய் நடந்து கொண்டு இருப்பவர்கள் மட்டும் தான் இதை அறிய
முடியும் அனுபவித்திருக்க முடியும்
(1 ) வேலை ஸ்தலத்தில் முதலாளி மூலம் மற்றும் அங்கு உள்ளவர்கள் மூலம்
(2 ) நம் நண்பர்கள் மூலம்
(3 ) நம் குடும்பத்தின் மூலம்
இவர்கள் மூலம் தேவ பக்தன் அனேக சாத்தானுடைய வார்த்தையை பகுத்தரியலாம்
சாத்தானுடைய வேலையே தேவனுக்கு பரிசுத்தமாய் நடப்பவனை விழ செய்வது தான்
//இன்று புதன் கிழமை நல்லநாள்// இது கண்டிப்பாக சாத்தானின் வார்த்தையே.
முடிவு சீக்கிரமாய் எடுக்க கூடாது திமோத்தி
இந்த வார்த்தை சாத்தானுடைய வார்த்தை அல்ல
இருதயத்தின் நினைவீனால் அதாவது தங்களுடைய ஆவினால் ஏவப்பட்டு சொன்னது
பிரிட்ஜ் கூட ஆசிர்வாதம் தானே ஏனென்றால் எல்லா நன்மையையும் பிதாவினிடத்தில் இருந்து வருகின்றது
என்று வேதம் சொல்கின்றது பிரிட்ஜ் வாங்கு என்று பிசாசு சொல்லி இருக்க வாய்ப்பில்லை,
பிசாசு எப்படி சொல்வான் என்றால் நீ கடன் வாங்கி பிரிட்ஜ் வாங்கு என்று தான் கூறி இருக்கும் தன தாலியை வைத்து பிரிட்ஜ் வாங்குவது தவறு இல்லை தேவன் தாலியை வைத்து வாங்க சொன்னார் என்பது தான் சந்தேகத்து குரிய காரியமாய் இருக்கிறது ஆனால் நாம் உடனே அது பிசாசின் வார்த்தை
என்று தீர்மானித்து விட கூடாதது என்பது என் கருத்து தேவனுடைய எண்ணங்களும் அவர் திட்டமும் நமக்கு புரியாது அது ஆச்சரியமானது
ஒன்று அந்த சகோதரியின் பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்ற ஆசையின் மூலம்
இதயத்தை அமைதியா வைத்து இருக்கும் போது அவர்களே ஒரு சிந்தையை ஏற்படுத்தி இருக்காலாம்
மற்றும் பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு அதிகமாய் இருந்து இருக்கலாம்
ஏனென்றால் நானும் ஆரம்பத்தில் ஜெபம் செய்யும் போது வேதம் வாசிக்கும் போது ஒரு நல்ல வசனம் வந்தாலோ அல்லது ஜெபம் செய்யும் போது நல்ல அருமையான எண்ணங்கள் தோன்றினாலோ என் நண்பர்களிடம் ஆண்டவர் எனக்கு வேதத்தில் இதை செய்ய சொன்னார் ஜெபம் பண்ணும் போது இந்த வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவர் தந்தார் என்று கூறியுள்ளேன் அன்பு அதிகமாய் இருந்ததினால்
மேலே உள்ள கருத்து படி அந்த சகோதரியின் எண்ணங்களின் மூலம் இருக்கலாம் அல்லது தேவன் அந்த சகோதரியிடம் சொல்லியும் இருக்கலாம் என்பது என் கருத்து
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஏற்கெனவே அந்த சகோதரி உலக பொருகள் மீது கொஞ்சம் அதிகமான பற்று கொண்டவர்கள். சகோதரர் ஸ்டீபன் சொல்வதுபோல் ஒரு மனிதனின் பெலவீனம் எதுவென்று சரியாக அறிந்து அவர்கள் ஆவியுடன் சேர்ந்து அவ்வழியிலேயே தேவனின் வார்த்தைகளை மீறவைப்பதுதான் சாத்தானின் பிரதானவேலையாகும்.
அவ்வழியிலேயே உரியாவின் மனைவி மூலம் தாவீதை மிக சுலபமாக வீழ்த்தினான்
அதேபோல் உலகபொருட்களின் மீது கொஞ்சம் அதிகபற்றுள்ள இச்சகோதரியின் பலவீனத்தை அறிந்த சாத்தான், சகோதரர் தீமொத்தி சொல்வதுபோல் "கடன்படாதிருங்கள்" என்ற தேவனின் வார்த்தயை மீற வைப்பதற்காக, இவ்வாறு ஒரு அட்வைஸ் செய்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
தாலியை அடகு வைத்தாலும் எதை அடகுவைத்து கடன் வாங்கினாலும் ஒருவன் கடன்காரன் தானே .
பால் தினகரன் வங்கியில் கடன்வாங்கிதான் சபையை கட்டினார் என்று அனேக கூட்டத்தில் கூறியுள்ளார்
தேவனுடைய வார்த்தையை அவர் கட்டளையை மீறி இந்த சபையை பால் தினகரன் மற்றும் dgs தினகரன்
கட்டி உள்ளனர் பெரிய ஊழியர்கள் இப்படி செய்யலாமா இதற்க்கு பதில் சொல்லவும்
ஒரு குழந்தைக்கு திடிரென்னு அடிபட்டு விட்டது கையில் பணம் இல்லை போட்டு கொண்டு இருந்த நகையை
வைத்து பணத்தேவைகளை சரி செய்தார்கள் இது தவறா பதில் சொல்லுங்கள்
தேவனாகிய கர்த்தர் அனேக இடங்களில் கடன் கொடுங்கள் என்று கூறியுள்ளார் ஆனால் கடன் வாங்குவது தவறு என்று இருக்கும் போது தேவன் ஏன் கடன் கொடுங்கள் என்று கூறியுள்ளார் கடன் வாங்குவது தான் தவர் அல்லவா ஏன் தேவன் அப்படி கூறினார்
கிறிஸ்தவன் ஒருவன் இன்னெரு கிறிஸ்தவனுக்கு கடன் கொடுக்கும் போது கடன் கொடுத்தவன் பலனை அடைகின்றான் ஆனால் கடன் வாங்கியவன் தேவனின் கட்டளையை மீறி விடுகின்றான் அல்லவா
சகோதர்களே எனக்கு ஒன்றும் புரியவில்லை தல நண்பர்கள் தெளிவாய் பதில் சொல்லும்மாறு கேட்டு கொள்கின்றேன்..................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோதரர் எட்வின் அவர்கள் பால் தினகரனோ அல்லது பரலோகத்திலிருந்து வந்த தூதனோ சொன்னால் கூட தேவனின் வார்த்தைகள் என்ன கூறுகிறது என்பதை அராய்ந்து அதன்படி செய்வதுதானே மேலானது?
கடன் வாங்குவது தவறா என்பது பற்றிய விளக்கம் அறிய இங்கே சொடுக்கவும்.
பெரும்பாலும் மக்கள் இப்படி பிரபலமான ஊழியர்கள் என்ன செய்கின்றார்களோ அதையே தானும் செய்கின்றார்கள்
உதாரணமாக
என் அக்கா அவர்கள் நானும் கழுத்தில் சிலுவை மாட்டி கொள்ள போகின்றேன் என்று கூறினார்கள்
நான் அது தவறு என்று கூறினேன் அதற்கு என் அக்கா அவர்கள்
பால் தினகரன் அவர்கள் மனைவி சிலுவையை கழுத்தில் மாட்டிகொண்டு இருக்கின்றார்கள்
அவர்களுக்கு தெரியாதது உனக்கு தெரியுமா என்று என்னிடம் கூறினார்கள்
ஏன் நான் கூட கடனை பற்றி பேசும் பொழுது கூட பால் தினகரன் வங்கியில் கடன் வாங்கினாரே என்று தான் கூறினேன்..................
வாசகர்களுக்கு
சுந்தர் அவரகள் கூறியது போல
கடன் ஆனாலும் சரி படம் மற்றும் சொருபம் ஆனாலும் சரி
/////// சகோதரர் எட்வின் அவர்கள் பால் தினகரனோ அல்லது பரலோகத்திலிருந்து வந்த தூதனோ சொன்னால் கூட தேவனின் வார்த்தைகள் என்ன கூறுகிறது என்பதை அராய்ந்து அதன்படி செய்வதுதானே மேலானது?/////////////
உண்மையாகவே அருமையான கருத்து........................வேதவசனம் சொல்கின்ற படி நடப்பதே மேன்மையானது அதுவே சத்தியமானது
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
உலக மக்கள் மத்தியில் சாத்தான் செயல்படும் நோக்கத்துக்கும் ஒரு தேவே பிள்ளையின் வாழ்வில் சாத்தான் செயல்படும் விதத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
ஒரு ஆத்துமா உண்மை இறைவனை அறிந்து இயேசுவை ஏற்று தேவனின் பிள்ளை என்ற அந்தஸ்த்துக்கு வந்துவிட கூடாது என்ற முழு நோக்கத்தியே உலக மக்களிடம் சாத்தான் போராடுகிறான்.
ஆனால் தேவ பிள்ளைகளிடமோ
அவர்கள் எவ்விதத்திலாவது ஜீவனுக்கு போகும் குறுகிய வழியை அறிந்து விடாமல் தடுக்கவும், அவர்கள் தேவனின் வார்த்தைகளை கொண்டு நடந்து விடாமல் தேவனின் வார்த்தைகளை எவ்விதத்திலாவது மீறவைக்கவுமே போராடுகிறான்.
ஆதாம் ஏவாளில் இருந்து அன்னிய சபீறாள்வரை அவனுடைய வேலை எல்லாம் ஆண்டவரின் கட்டளைககளின் மேல் எதாவது ஒரு விதத்தில் சந்தேகத்தை ஏற்ப்படுத்தி, அதற்க்கு கீழ்படியாமல் மனிதனை திசைதிருப்புதாகவே இருந்துள்ளது.
ஒரு தேவபிள்ளை சாத்தானின் தந்திரங்களை அறிந்து செயல்படாதிருந்தால் அறியாமலேயே அவனது கண்ணியில் விழுவது நிச்சயம். இன்று அநேகர் அவ்வாறு அவனது கண்ணியில் விழுந்து கிடப்பதையும் அறியமுடியும்.
-- Edited by SUNDAR on Friday 9th of April 2010 10:41:41 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவன் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்தாலே அவருடைய வார்த்தைகள் எப்படிப்பட்டது என்பது தெரிந்துவிடும்.
நமது தேவையான(needful) பதில்கள் எல்லாமே வேதத்தில் உண்டு.
2. நம்முள்ளிருக்கும் பரிசுத்த ஆவியானவர் மூலம்:
யோவான் 16 13.சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
(கவனிக்க: பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையிலிருந்தே (வேதத்திலிருந்தே) எடுத்து பேசுகிறார்.)
1 யோவா 2-27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. யாக் 4-5 நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? சங் 143-10 உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
கவனிக்க 1 தெச 5-19 to 22
3. மேய்ப்பர்கள், பரிசுத்தவான்களின் உதவியில்:
எபேசி 4 11.மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், 12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், 13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
எச்சரிக்கை: இவர்களில் கள்ள ஊழியர்களும் இருப்பர். 2 கொரி 11 13. அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
4. தேவன் நமக்குத் தந்திருக்கும் பொது அறிவின் மூலம்:
///அற்ப காரியங்களைக் குறித்தும் தேவனே சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமான செயல்.///
நமக்கு அற்பமாக தெரிவது தேவனுக்கு பெரிய காரியமாக தெரிய வாய்ப்பு இருக்கிறது சகோதரரே. சிறிய சிறிய தவறுகளை செய்து பெரிய தண்டனைகளை வாங்கி கட்டிக்கொண்ட பலரின் வரலாறும் வேதத்தில் உண்டு. எனினும் தாங்கள் கூறுவதுபோல் ஒரு செயலுக்கு சரியான வசனஆதாரம் இல்லாத பட்சத்தில் நமது பகுத்தறிவை பயன்படுத்தி சில செயல்களை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவே ஒரு மனிதர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் வசன ஆதாரம் என்பது சாத்தியமான காரியம் இல்லை. அவ்வாறு பகுத்தறிவை பயன்படுத்தி செயல்பட்டாலும் அதில் தவறிருக்கும் பட்சத்தில் ஆவியானவர் சுட்டிக்காட்டுவார் என்ற அடிப்படையிலேயே நாம் செயல்படுகிறோம் ஏனெனில் அவர் பாவங்களை குறித்து கண்டித்து உணர்த்துபவர் அல்லவா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)