இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடன் வாங்குவது குறித்த வேத விளக்கம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கடன் வாங்குவது குறித்த வேத விளக்கம்!
Permalink  
 


இன்றைய நவீன உலகத்தில் கண்டதற்கும்  கடன் வாங்கவது என்பது எங்கும்  சகஜமாகிவிட்டது. வீட்டு கடன்/ நகை கடன்/ தனிநபர் கடன்/ கிரிடிட்  கார்டுகள்  போன்றவைகள் எல்லோராலும் எவ்விடங்களிலும்   சுலபமாக  அங்கீகரிக்கப்பட்டடு, கடனற்றவரை காண்பதரிது என்ற ஒரு நிலை இன்று உருவாகியுள்ளது.
 
உலக நிலைகளில் மட்டுமல்ல, தேவனின் விருப்பம் என்னவென்பதை அறியாமல் ஆவிக்குரிய அனேக விசுவாசிகள் மற்றும் பாஸ்டர்கள் தேவன் ஊழியர்கள் கூட கடன் வாங்கி கட்டிடம் கட்டவும்  கார் வாங்கவும் தயங்குவதில்லை.      
  
கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் நினைத்தவுடன் கையில் பணம் தங்க வீடு போன்ற பல்வேறு உலக இன்பங்களை கண்முன் காட்டி கடன் வழங்கப்படுவதால்  இந்த கடன்பற்றிய அடிப்படை உண்மை அறியாமல் அநேகர் அதனுள் விழுந்து பின்னவர் எவ்வளவோ முயன்றும்  தங்கள் ஆயுள் நாட்களில் வெளியே வரவே முடியாமல் தவிக்கும்  நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
 
அவசர தேவைக்கு கடன் வாங்குவது எல்லோரின் பார்வைக்கும் சரியாக தெரிந்தாலும், வேதாகமம் கடன் வாங்குவது பற்றி என்ன கூறுகிறது? எனதை சற்று ஆழமாக ஆராய்தல் அநேகருக்கு அது பயனுள்ளதாக அமையும் என்றே நான் கருதுகிறேன்.
 
ஒரு விசுவாசி  கடன் வாங்கலாமா? 
 
என்ற கேள்வியை எழுப்பினால். கடன் வாங்குவது தவறு என்றே வேதாகமம் நமக்கு போதிக்கிறது
 
ரோமர் 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்;
 
அன்பு கூறுகிற கடனேயல்லாமல் "மற்றொன்றிலும்" என்ற வார்த்தை "பணம் நகை பொருள்"  என்று வேறு எந்த ஒன்றிலும் கடன்பட கூடாது என்ற நிலையை  உணர்த்துகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக சொன்னால் விருந்துகளுக்கு  செய்யப்படும்  மொய் பணத்தில் கூட பிறருக்கு கடன் என்றொரு நிலையில் நாம் இருக்க கூடாது.   
 
கடன் வாங்குதல் என்பது ஒரு சாபம்!
 
கடன் வாங்குதல் அல்லது கடனில் நிலைத்திருத்தல் என்பது ஒரு சாபமான காரியம் ஆகும். தேவனின் வார்த்தைகளை மீறுவதால் வரும் சாபங்கலான ஈளை காய்ச்சல் போன்ற தீமைகளில்  ஒன்றுதான் பிறரிடம்  கடன்படுதலும்.   
 
உபாகமம் 28:44 அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.

தேவன் சாபமாக சொல்லும் வார்த்தை நிச்சயமாக தேவன் விரும்பும் ஒரு வார்த்தையாக இருக்கவே முடியாது. எனவே கடன் வாங்குகிறவர்கள் தேவனின்  மனவிருப்பத்துக்கு எதிராகவே செயல்படுகின்றனர் என்றே நான் கருதுகிறேன்.  
 
கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவைன் அடிமை!
 
நாம் எல்லோருமே தேவனின் பிள்ளைகளாக அழைக்கப்பட்டவர்கள்  என்று வசனம் சொல்கிறது. இந்நிலையில் நாம் பிறரிடம் கடன்படும்போது நாம் கடன்கொடுத்தவரின் அடிமையாக  இருக்கிறோம்  என்று வேதம் சொல்கிறது.   
  
நீதிமொழிகள் 22:7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

தேவனின் பிள்ளயாகின நாம் உலக மனிதன் ஒருவனிடம் கடன்பட்டு அடிமையாவதை தேவன் ஒருபோதும் விரும்பவேமாட்டார். 
 
உலக மனிதன் என்பவன் எனது பார்வைபடி ஒரு சாத்தானின் கையாள்  போன்றவன். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து அனைத்து   மனிதர்களையும் கடன் என்னும் கண்ணியின் மூலம்  கட்டிபோட்டு தனக்கு அடிமையாக்கிபோடும் அருமையான திட்டத்துடன் இன்று அனேக நவீன  யுக்திகளும் விரைந்து  செயல்படுகிறான். இவ்வாறு உலக மக்களிடம் கடன் வாங்கி ஒருவர்  சாத்தானுக்கு அடிமையாக இருக்கும்போது எப்படி முழுமையாக தேவனின் பிள்ளையாக இருக்க முடியும்?
 
சற்று சிந்தியுங்கள். கடன் வாங்குவதை முற்றிலும் தவிருங்கள்!    
 
கடன் கொடுப்பது தவறான காரியமா?
 
கடன் வாங்குவதுதான் தவறேயன்றி, இரங்கி  கேட்பவருக்கு கடன்  கொடுப்பதும் அதற்க்கு வட்டி வாங்காதிருப்பதும்   அதை திரும்ப எதிர்பார்க்காதிருப்பதும்  மிகுந்த ஆசீர்வாதம் என்றே வேதம் சொல்கிறது. 
 
உபாகமம் 15:8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

லூக்கா 6:34
திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? லூக்கா 6:35  கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்

நெகேமியா 5:10
நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.

கடன் வாங்குவது தவறு என்று இருக்கும்போது பிறருக்கு கடன் கொடுத்து அவரை கடனாளியாக்குவது ஒரு தவறான காரியம் அல்லவா என்று தோன்றலாம்.
 
இங்கு நாம் நம்மை   தேவனின் பிள்ளைகள் என்ற உயர்ந்த  ஸ்தானத்தில் இருந்து இந்த கடன் கொடுத்தலை நோக்கவேண்டும்.
 
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அநேகருக்கு கடன் கொடுக்கும்போது கடன் வாங்குபவன் எவனும்  தேவனுக்கே அடிமையாக தீர்க்கப்படுவானேயன்றி, சாத்தனுக்கு அடிமையாக தீர்க்கப்பட மாட்டான். எனவே அனேக பிள்ளைகள் கடனின் மூலம் சாத்தனுக்கு அடிமையாவதை தடுக்கும் ஒரு நன்மையான செயலே பிறருக்கு தேவபிள்ளைகள்  கடன்கொடுத்தல் என்பது. எனவேதான் ஆண்டவராகிய  இயேசு  கடன் கொடுப்பதை கீழ்க்கண்ட  வார்த்தைகள் மூலம்  ஊக்குவிக்கிறார்
 
மத்தேயு 5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

அன்பு சகோதரர்களே! கடனை ஒழிப்பது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. ஆகினும் ஆண்டவருடைய வார்த்தைகள்படி அவருக்கு பிரியமான பிள்ளைகளாக வாழவிரும்பும் நாம் சற்று சிரத்தை எடுத்து, எவ்விதத்திலும் ஒரு சிறு பணத்தைக்கூட பிறரிடம் கடனாக பெறுவதை தவிர்க்க முயலவேண்டும். 
 
"வீட்டுகடன்" போன்ற ஆயுள் சிறையினுள் புதியதாக நுழைவதை விட்டுவிடுவது  நல்லது  மற்றும் கடன் அட்டைகள் (கிரிடிட்கார்ட்) எனப்படும்கவிழ்த்துவிடும் 
அட்டையிலிருந்து தப்பித்து கொள்வதுதான் தகுந்தது,  அதுபோல்  தவணை முறை கொ(ல்)ள்முதல் போன்ற தவறான்  கொள்முதல்களை தவிர்ப்பது    தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு  நல்லது. 
 
நன்றி
சுந்தர்
 
பின் குறிப்பு: கடன் வாங்குவது தவறு என்பதற்காக ஒரு அத்யாவசிய  தேவை ஆஸ்பத்திரி செலவு  போன்றவற்றிக்கு கடன் வாங்காமல் கஷ்டப்படவேண்டாம். கடன் வாங்கும் நிலை வந்துவிட்டால் அது ஏதோ ஒரு மீறுதலினால் வந்த சாபம்
என்றெண்ணி வாங்கிய கடனை விரைவில் அடையுங்கள் விடுதலை பெறுங்கள்.
அத்யாவசியமற்ற காரியங்களுக்கு கடன் வாங்குவதை முற்றிலும் விட்டுவிடுங்கள்.





__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மேலே எழுதப்பட்ட கட்டுரை  "கடன் வாங்குவது தவறல்ல இதில் என்ன 
தீமை வந்து விடபோகிறது"  என்று அலட்சியம் பண்ணுபவர்களுக்கு  தேவையற்றதாக தோன்றலாம்.  அனேக கிறிஸ்த்தவர்கள் அலட்சியபோக்கில் வாழ்வதை அறிய முடிகிறது.
 
ஆனால்
 
சங்கீதம் 119:6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

என்று துணிந்து அறிக்கையிடும் சங்கீதக்காரனின் நிலையை நாம் ஒவ்வொருவரும் அடையவேண்டும். என்னிடத்தில்  பாவம் உண்டு என்று  வேத வசனத்தின் அடிப்படையில் உங்களில் யார் என்னை குற்றப்படுத்த முடியும் என்று ஒருவரிடம் துணித்து கேட்கும் பக்குவ நிலைக்குள் நாம் கடந்து  வரவேண்டும்.
 
நமக்கு அறிவுறுத்தப்பட்ட சிறு சிறு கற்பனைகளை நாம் அலட்சியம் செய்தால்
ஆண்டவர் அதற்குமேல் எதையும் புதிதாக தெரியப்படுத்தமாட்டார். நாம் இன்னும்  பரிசுத்தம் அடையவேண்டிய ஆயிரம் சிறிய பெரிய காரிங்கள்  இருக்கின்றன.   அனுதினம் நம்மை நாமே  வேதவசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து  நிதானித்து எங்கு தவறுகிறோம் என்பதை அறிந்து திருத்திக்
கொள்ள முயலவேண்டும்.   
 
எரேமியா 15:16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது 
 
என்று தீர்க்கன் எரேமியா சொல்வதுபோல் ஆண்டவரின் வார்த்தைகள் கிடைத்ததுடன் அதை உட்கொண்டு நம்முள் அது ஜீரணிக்கப்பட்டு நமது
இருதய நிலைகளை தங்கிவிட வேண்டும். அடுத்தமுறை அதேபோல ஒரு
தவறு நம்மில் நடக்காதபடி நம்மை சீர் செய்யவேண்டும்.
 
தெரிவிக்கப்பட்டவைகளுக்கு உடனே கீழ்படியுங்கள், தெரியாத புதுபுது காரியங்களை  தேவன் உங்களுக்கு தெரிவிப்பார்.
  
 


-- Edited by SUNDAR on Thursday 8th of April 2010 11:55:13 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//தெரிவிக்கப்பட்டவைகளுக்கு உடனே கீழ்படியுங்கள், தெரியாத புதுபுது காரியங்களை  தேவன் உங்களுக்கு தெரிவிப்பார்.//

ஆமென்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard