இந்த உலகம் 2000மாவது வருடத்தையும் கடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. மனிதர்கள் படைகப்பட்டுகொண்டே இருக்கிறார்கள். பிறக்கிறார்கள் பிள்ளைகளை பெறுகிறார்கள் வளர்க்கிறார்கள் பின்னர் மரிக்கிறார்கள் அவர்கள் பிள்ளைகளும் அதையே செய்கின்றன.
I யோவான் 2:18பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்I
சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னமே கடைசி காலம் என்று வேத புத்தகம் சொல்வதை இன்று இரண்டாயிரம் வருடம் கழித்தபிறகும் சொல்லி வருகிறோம்.
இந்த கடைசி காலத்தின் முடிவுதான் எப்பொழுது? ஆண்டவரின் வருகைதான் எப்பொழுது?
II பேதுரு 3:4அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்
என்று வசனத்துக்கு ஏற்ப, இன்று அநேகர் ஆண்டவர் வருவார் என்ற நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். உலக மக்களோ ஓரிரு இடத்தில் சிறு சிறு அழிவு வரலாம் ஆனால் இந்த உலகத்துக்கு முடிவு என்று எதுவும் இல்லை என்றெண்ணி மிகவும் நிர்விசரமாக வாழ்கின்றனர்
இந்நிலையில் ஆண்டவர் ஏன் தாமதிக்கிறார் என்ற கேள்விக்கு கீழ்க்கண்ட வசனம் பதளிலளிக்கிறது
II பேதுரு 3:9தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
தேவனின் பொறுமைக்கு பதிலைளிக்கும் ஒரு அருமையான வசனம்தான்
ஆகினும் ஒரே ஒரு மனிதனை இரட்சிப்புக்குள் வழி நடத்துவது என்பது மிக கடினமான காரியமாக இருக்கும்போது அந்நேரத்துக்குள் இயேசுவை அறியாத புறஜாதி குழந்தைகள் எத்தனையோ இந்த உலகில் பிறந்திருப்பார்கள். கடந்த பல ஆண்டுகளாக சுவிசேஷம் சொல்லப்படும் இந்தியாவில் ஐந்து சதவிகிதம்கூட கிறிஸ்த்தவர்கள் இல்லை.
இந்நிலையில் எல்லோரும் மனம்திரும்புவதேன்பது இவ்வுலகில் சாத்தியமா? ஆண்டவரின் வருகைதான் எப்போது?
அறிந்தவர்கள் சற்று விளக்கவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இந்நிலையில் எல்லோரும் மனம்திரும்புவதேன்பது இவ்வுலகில் சாத்தியமா?// மத் 7-14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
என வசனம் சொல்கிறது. எனவே பூமியிலுள்ள எல்லோரும் மனந்திரும்ப வாய்ப்பில்லை. ஆயினும் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்டு விடுவார்கள்.
மத் 24-14
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
இன்று இந்தியாவிலும், உலகமெங்கிலும் சுவிசேஷமும் எச்சரிப்பின் பிரசங்கங்களும் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகமாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எண்ணிக்கையும் தவறான உபதேசங்களும் பெருகிவருகிறது. எனவேதான், வஞ்சிக்கிறவர்களும் அனேகர்; வஞ்சிக்கப்படுபவர்களும் அனேகர். என வசனம் கூறுகிறது.
மத் 24-11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத் 20-16 அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
//ஆண்டவரின் வருகைதான் எப்போது?//
வெளி 6 10. அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். 11. அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
2 பேதுரு 3-9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
இந்த வசனத்திலுள்ள 'எல்லோரும்' எனும் வார்த்தை பூமியிலுள்ள எல்லா மனுஷரையும் குறிக்காமல் இரட்சிப்புக்கு என நியமிக்கப் பட்டவர்களையே குறிக்கிறது. அவர் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார் என குறிப்பிடப்படுவதைக் கவனிக்க.
மேலும் இரத்தசாட்சிகளின் தொகை என குறிப்பிடப்பட்டிருப்பதால் கொலைசெய்யப்படப்போகிறவர்கள் என சில(அ) பலரை ஆண்டவர் நம்மில் குறித்திருப்பதை அறியலாம். ருசிக்க மத் 10-29,30
//கடந்த பல ஆண்டுகளாக சுவிசேஷம் சொல்லப்படும் இந்தியாவில் ஐந்து சதவிகிதம்கூட கிறிஸ்த்தவர்கள் இல்லை. //
நமக்குப் பின் அனேக நூற்றண்டுகள் கழித்து சுவிசேஷம் அறிவிக்கப் பட்ட அனேக நாடுகள்(இங்கிலாந்து, தென்கொரியா, ...) சந்திக்கப் பட்டிருக்க இந்தியா மட்டும் 5 சதவீதம். அதிலும் சரியான (உபதேசத்தில்) இருப்பவர்கள் மிக குறைவு. இந்த நிலைக்கு அனேக காரணங்கள் உண்டு. தேவனுக்குச் சித்தமானால் இன்னொரு திரியில் விவாதிக்கலாம்.
///மத் 24-14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
இன்று இந்தியாவிலும், உலகமெங்கிலும் சுவிசேஷமும் எச்சரிப்பின் பிரசங்கங்களும் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகமாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எண்ணிக்கையும் தவறான உபதேசங்களும் பெருகிவருகிறது.எனவேதான், வஞ்சிக்கிறவர்களும் அனேகர் வஞ்சிக்கப்படுபவர்களும் அனேகர்.என வசனம் கூறுகிறது///
இவ்வாத்தைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் நிச்சயம் சுவிசேஷம் முதலில் பிரசங்கிக்கப்பட வேண்டும் பின்னர்தான் முடிவு வரும் என்று இயேசு தெளிவாக கூறியிருக்கிறார்.
ஆனால் தங்களின் கீழ்க்கண்ட வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை!
//பேதுரு 3-௯ தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். இந்த வசனத்திலுள்ள 'எல்லோரும்' எனும் வார்த்தை பூமியிலுள்ள எல்லா மனுஷரையும் குறிக்காமல் இரட்சிப்புக்கு என நியமிக்கப் பட்டவர்களையே குறிக்கிறது.////
இதை உறுதியாக சொல்லமுடியாது சகோதரர் அவர்களே. ஒரு வசனம் தெளிவாக கருத்து சொல்லாத பட்சத்தில் அதை இதற்குதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று முடிவாக தீர்ப்பது சரியான நிலை அல்ல என்றே நான் கருதுகிறேன். இதில் "ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரும்" என்ற வார்த்தை எல்லா மனிதர்களையுமே குறிக்கிறது என்றே நான் கருதுகிறேன் ஏனெனில் அதற்க்கு இணையாக கீழ்க்கண்ட வசனங்கள் இருக்கின்றனர்.
I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
தேவனுடைய எதிர்ப்பார்ப்பு ஒரு ஆத்துமாகூட கெட்டுபோக கூடாது என்பதுதான். அதற்காகவே அவர் நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார் என்று அவ்வசனம் சொல்கிறது என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மன்னிக்கவும். // "ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரும்" என்ற வார்த்தை எல்லா மனிதர்களையுமே குறிக்கிறது என்றே நான் கருதுகிறேன்//
நானும் அதே கருத்துடன் தான் வந்தேன். தங்கள் கேள்வியைப் பார்த்ததும் வேறுகோணத்திற்கு சென்று விட்டேன். இதற்கு நானே பொறுப்பு என்றாலும் காரணமாயிருந்த சில ஒத்தவாக்கிய பைபிள் வசனங்கள்:
*Geneva Study Bible:
A reason why the last day does not come too soon, because God patiently waits until all the elect are brought to repentance, that none of them may perish.
*Jamieson-Fausset-Brown Bible Commentary:
long-suffering-waiting until the full number of those appointed to "salvation" (2Pe 3:15) shall be completed.
எல்லோரும் மனந்திரும்புவார்களா? எனும் தங்கள் கேள்விக்கு விடையளிக்க எண்ணி தெளிவில்லாமல் குறிப்பிட்டுவிட்டேன்.
என்னுடைய தவறுதல்:
"எல்லோரும்" ===> இரட்சிப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறவர்கள் இரட்சிப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறவர்கள் ===> எல்லோரும் ???
சரியான புரிந்துகொள்தல்:
தேவன் நீடிய பொறுமையாய் இருப்பது ===> எல்லோர் மேலும். இரட்சிக்கப்படுவது ===> சிலர்
இந்த வசனத்தை மேலும் ஆராய்கையில் காணும் சில காரியங்கள்:
எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்ற சித்தம்: மத் 18-14 ; 1 தீமாத் 2-4