இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகம்-மாம்சம்-பிசாசு


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
உலகம்-மாம்சம்-பிசாசு
Permalink  
 


உலகம்-மாம்சம்-பிசாசு

 

இந்த மூன்றும் மனிதனை பாதித்து துன்பத்துக்குள்ளாக்குவதாய் இருக்கிறது. முதலில் உலகம் என்பதை பற்றி பார்ப்போம்.

உலகம் -

மனிதனின் பகுதிகளான ஆவி, ஆத்துமா, மாமிச சரீரம் மற்றும் நாம் காணும் சரீரம் ஆகியவற்றில் ஆத்துமாவின் வழியாக செயல்படுவது இந்த உலகம் இது மூன்று விதங்களில் மனிதனை பாதிக்கிறது அவையாவன :

1. மாமிசத்தின் இச்சை 2. கண்களின் இச்சை 3. ஜீவனத்தின் பெருமை

 

இதை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு சகோதரி பிரிட்ஜ் வாங்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்


1. கடுமையான கோடையில் குடிக்க குளிர்ந்த பானம் வேண்டும் அலலது உணவு பொருட்கள் செய்த ஐந்து நாட்களுக்கு பிறகு கூட கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

இது மாமிசத்தின் இச்சை - சில சமயம் இவை அத்தியாவசியமானதாக கூட இருக்கலாம்.


2. எல்லோர் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்கிறது. நம் வீட்டுக்கும் வேண்டும் அது இல்லாமல் இருந்தால் வீடு அழகாய் இருக்காது என்பதற்க்காக இருக்கலாம். - இது கண்களின் இச்சை


3. பிரிட்ஜ் வாங்கினால் பிற மனிதர்கள் மத்தியில் நம் மதிப்பு உயரும் பிரிட்ஜ் இல்லாத நம் சொந்தகாரர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் என் வீட்டில் பிரிட்ஜ் இருக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் என்பதற்க்காக இருக்கலாம் - இது ஜீவனத்தின் பெருமை.

 
சில சமயம் மூன்றும் சேர்ந்ததாக கூட இருக்கும். இந்த மூன்றில் முதலில் சொல்லப்பட்டது

(மாமிசத்தின் இச்சை) ஓரளவு நியாயமானது. இரண்டாவது (கண்களின் இச்சை) ஓரளவு பரவாயில்லை. மூன்றாவது காரணம் (ஜீவனத்தின் பெருமை) அனியாயமானது என்று சொல்ல முடியா விட்டாலும் நியாயமானது, முக்கியமானது அல்ல.

 

ஆனால் மனித மனம் தனக்கு முக்கியத்துவம் இல்லாத இந்த ஜீவனத்தின் பெருமையை (status in society) பற்றியே சிந்தித்துக் கொண்டும், அதை அடைவதற்க்கு வேண்டிய செயல்களை செய்து கொண்டும் எப்போதும் ஒரு அமைதி இல்லாத இறுக்கம் நிறைந்த (tension) வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை அடைய பணம் முக்கியமானது ஆதலால் அனேக மக்கள் பணப் பிரியர்களாக அதற்க்கு பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையை போக்கி மனதிற்க்கு அமைதி தர வேண்டிய ஆன்மிகம் மக்களின் இந்த கருத்துக்கு ஒத்து ஊதும் நிலை மிகவும் பரிதாபகரமானது. (இது பணக்காரர்கள் அதிகம் உள்ள இடத்தின் ஆன்மிகம்). இன்னொரு பக்கத்தில் அதிக பணம் சம்பாதிப்பது சாபம் எனவும் குறைவான நிலையில் இருப்பதே நலம் என்றும் ஏழைகள் அதிகமாக உள்ள இடத்தின் ஆன்மிகம் சொல்லுகிறது. இது இந்த கட்டுரைக்கு தேவையில்லாத விஷயம். ஆகவே மறுபடி கட்டுரை. தொடர்கிறது.


ஆதி மனிதர்களான ஆதாம் ஏவாளின் மீறுதலை பற்றி பார்ப்போம்.  ஆதியாகமம்-3

4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

ஏவாள் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ண மூன்று காரணங்கள் :

1. புசிப்புக்கு நல்லதும் - மாமிசத்தின் இச்சை - உடலுக்கு அத்தியாவசியமானது

2. பார்வைக்கு இன்பமும் - கண்களின் இச்சை

3. புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கது அதாவது நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருக்க - மனிதன் என்னும் நிலை மாறி தேவன் என்னும் உயர்ந்த நிலையை அடைய (improvement in status) - ஜீவனத்தின் பெருமை

அப்படியானால் மற்ற மரங்களின் கனிகள்? ஆதியாகம் 2.9

 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.

மற்ற மரங்களின் கனிகளும் மனிதனின் முதல் இரண்டு  தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையே. ஆனால் ஜீவனத்தின் பெருமையை வேண்டி மனிதன் அந்த கனியை உண்டு தன் நிலையிலிருந்து விழுந்து போனான்.

(தொடரும்)



-- Edited by SANDOSH on Monday 12th of April 2010 09:26:54 PM

-- Edited by SANDOSH on Monday 12th of April 2010 09:27:59 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சிறு சிறு விளக்க உதாரணங்கள் மூலம் இக்கட்டுரை புரியும்படி அருமையாக இருக்கிறது.  தேவன் உங்களுக்கு தானியேலை போல  கருகலான பல காரியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்

உலக மனிதர்களை கவிழ்த்துபோடும் முக்கிய  காரணிகளான 

 மாமிசத்தின் இச்சை
 கண்களின் இச்சை
 ஜீவனத்தின் பெருமை

இவற்றைப்பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லதும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

அக்கினியால் அழிக்கப்பட்ட சோதாம் :

ஆபிரகாமின் காலத்தில் சோதாம் என்னும் தேசம் மிகவும் தன்னிறைவு அடைந்ததாக, செல்வ வளம் நிறைந்ததாக இருந்தது. (ஆதி 13.10-13, 14.21) அந்த நாட்டின் ராஜா எவ்வளவு வேண்டுமானாலும் விலை கொடுத்து ஆபிரகாமிடம் இருந்த வீரர்களை வாங்க முயன்றான். ஒரு நாடு தன்னிறைவு அடைந்தால் (தேவைகள் இல்லாத போது) ஒன்று ஆன்மீக வழியில் முன்னேற வேண்டும் அல்லது துணிகரமான பாவங்களில் முன்னேற வேண்டும். அந்த நாடு இரண்டாவதை தெரிந்து கொண்டு முன்னேறியது. (எல்லா வளங்களூம் பெற்ற இந்தியா, தன்னுடைய பல செழிப்பான கால கட்டங்களில் பாவத்திற்க்கு இடம் கொடாமல் ஆன்மிகத்தில் முன்னேறிய நாடாக இருந்தது) அந்த நாட்டின் எல்லையில் வாழ்ந்து வந்த லோத்து நீதிமான் என்று சொல்லப்பட்டுள்ளான். 2 பேதுரு 2

7. அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;
8. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

ஆனால் ஆண் புணர்ச்சியையும் (காம விகாரம்), விருந்தினரை துயரப்படுவதையும் தாங்க முடியாத லோத்து ஆண் புணர்ச்சிகாரர்களிடமிருந்து தன் விருந்தினரை காப்பாற்ற தன் பெண்களையும் அவர்களுக்கு தருவதாக சொல்லுகிறான்.

பாவம் நிறைந்த ஒரு நகரத்தில் வாசம் செய்யப் போய், அவர்களின் பாவத்தை எப்போதும் பார்க்கவும், கேட்கவும் வேண்டியதாயிருந்தது. மேலும் அந்த நாட்டில் பாவம் செய்பவர்கள் அதிகமாக போன காரணத்தால் பாவம் நல்ல செய்கை என்று அங்கீகாரம் அடைந்திருந்தது. இதனால் லோத்தின் மனசாட்சி மழுங்கி போயிருந்தது. தன் பெண்களை மற்றவர்களுடன் அனுப்புவது அவனுக்கு தவறான காரியமாக தெரியவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே தேவன் லோத்துவையும் சேர்த்து தண்டித்திருக்க முடியும். ஆனால் ஆபிரகாமின் வேண்டுதல் காரணமாக லோத்துவையும் அவன் குடும்பத்தையும் தேவன் தப்ப வைக்கிறார். தேவ தூதர்கள் அவனை விரைவாக தப்பி ஓடும்படி சொல்ல அவனோ தாமதிக்கிறான்.  பொருளாசையுள்ள அவன் குடும்பம் முழுவதும் தனக்கு வேண்டிய பொன், பொருட்கள் முதலியவற்றை அவசர அவசரமாக எடுத்து வைத்துக் கொள்ளுகின்றனர். அவன் பெண்கள் இருவரும் மிகவும் கவனமாக மது பாட்டில்களை எடுத்து வைத்துக் கொள்ளுகின்றனர் ஆதி 19.32. மது குடிப்பது அந்த நாட்டில் மிகவும் சகஜமான விஷயமாக தெரிகிறது. நேரம் ஆகவே தேவ தூதர்கள் அவர்களின் கையை பிடித்து ஊருக்கு வெளியே கொண்டு போய் விடுகின்றனர். பிறகு தேவன் சோதோமை நெருப்பினால் அழிக்கிறார்.

இந்த நகர மக்கள் தங்கள் செல்வ செழிப்பினால் கர்வமடைந்து (ஜீவனத்தின் பெருமை)கடவுளை நோக்காமல், தங்கள் நாட்டிலுள்ள எளியவர்களை பற்றி சிந்திக்காமல், தங்கள் ஆத்துமா முழுவதும் உலகத்தால் நிரம்பியிருக்க, கொழுத்து போய், துணிகரமாக பாவம் செய்து கடவுளின் தண்டனைக்கு ஆளாகின்றனர்.

 (நான் சிறு வயதில் படித்த, கற்பின் பெருமை பற்றி பக்கம் பக்கமாக எழுதின மாதர் பத்திரிக்கைகள் இப்போது திருமணத்துக்கு முன் தான் அறியாமல்?! செய்த தவறை வரப் போகும் கணவனிடம் எப்படி மறைப்பது என்று ஆலோசனை தருகின்றன, தவறு வெளிப்படாமல் பாவம் செய்வதற்க்கு பல மருத்துவ முறைகள் சொல்லி தருகின்றன. வருங்கால சந்ததியினர் பலர் முற்காலத்தினர் பாவம் என்று சொன்ன பல செயல்களை கிண்டலாக கருத கூடும். ஒரு சில மதங்கள், மதப் பிரிவுகள் மற்றும் சில குடும்பங்களே இன்றளவும் தங்கள் பரம்பரையின் புனிதத்தை காத்து வருகின்றனர். இவர்கள் மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என கட்டாயபடுத்துவதால் இவர்கள் பெண்களை, மனிதர்களை அடிமைபடுத்துபவர்க்ளாக சித்தரிக்கப்படுகின்றனர் (உண்மையில் இந்த கருத்தை சொல்ல வேண்டியவர்கள் அவர்களை சார்ந்த பெண்கள் மற்றும் மனிதர்களே)

க்டவுளே மனிதனுக்கு சுதந்திரமாக செயல்களை செய்ய அனுமதி கொடுத்துள்ள போது மனிதர்கள் ஏன் மனிதர்களுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று சிலர் சொல்கின்றனர். கடவுள் இன்று சுதந்திரம் தந்து விட்டு. நாளைக்கே நீ பாவம் செய்தாய் என தண்டனை தருவார். ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த பந்தங்களை அதே போல் துன்பப்படுவதற்க்கு விட்டுக் கொடுக்க முடியுமா? ஆகவே மனிதர்களை மனிதர்கள் கட்டுப்படுத்தி பாவத்தை விட்டு விலகும்படி செய்ய வேண்டும்.)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard