இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எது அல்ல .... எது?


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
எது அல்ல .... எது?
Permalink  
 


எது அல்ல .... எது?

நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதல்ல,
நாம் எதை ஜீரணிக்கிறோம் என்பதுதான்
நம்மை பெலமுள்ளவர்களாக்குகிறது!

நாம் எதை சம்பாதிக்கிறோம் என்பதல்ல,
நாம் எதை சேமிக்கிறோம் என்பதுதான்
நம்மை ஐசுவரியவானாக்குகிறது!

நாம் எதை படிக்கிறோம் என்பதல்ல,
நாம் எதை ஞாபகத்தில் வைக்கிறோம் என்பதுதான்
நம்மை கற்றறிந்தவர்களாக்குகிறது!

நாம் எதை ஆலோசனையாக கொடுக்கிறோம் என்பதல்ல,
நாம் எதை கடைபிடிக்கிறோம் என்பதே
நம்மை கிறிஸ்தவர்களாக்குகிறது!

வசனத்தை அறிந்திருந்தும், கேட்டும் அதின்படி நடக்காதோர், தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொள்கிற பரிதாபமானோர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாமும் அப்படிப்பட்டோராய் இராமல், வசனங்களை வாழ்வாக்குவோம்!

யாக் 1-22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.


(துதிமலர் பத்திரிக்கை துணுக்கு....)





__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard