//............ எங்களுடைய திருச்சபையில் (தேனி மாவட்டம், தேவாரத்தில்) இரட்சிக்கப்பட்ட/படாத வாலிப சகோதர சகோதரிகளுக்கென "வாலிபர் பெருவிழா" ஒன்றை ஏப்ரல் 28ல் நடத்தக் கர்த்தருக்குள் தீர்மானித்து தயாராகி வருகிறோம். கருப்பொருள் "நற்கிரியை செய்" எபே 2-10 தள சகோதரர்கள் தங்களது மேலான ஆலோசனைகளை வழங்க வேண்டுகிறேன். /...............................
சகோதரரே எந்த ஒரு மனுசனுக்கும் தன்னை பற்றின காரியங்களில் ஈடுபடுவதுதான் இயல்பு.
ஆனால் இந்த வசனத்தின்படி தேவன் உங்களுக்கு கொடுத்த தாகத்துக்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
தள சகோதரர்கள் தங்களது மேலான ஆலோசனைகளை வழங்க வேண்டுகிறேன். ( நீதிமொழி 11-14, 15-22, 20-18, 24-6)
I தெச 5:25 சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
ஒரு மனிதனின் நற்கிரியைகள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை இயேசு தனது மலைபிரசங்க வாக்கியங்களில் மிக தெளிவாக எடுத்துரைத்து:
மத்தேயு 5:16 மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
என்றும் கூறியுள்ளார்.
அவ்வாறு இயேசு போதித்த நற்க்கிரியைகளில் சில:
1. ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருத்தல் (தாழ்மை) எல்லோரையும்விட நான் எவ்விதத்திலும் உயர்ந்தவன் அல்லன் என்ற எளிமையான எண்ணம் மனதில் உடையவர்களாக இருத்தல் .
2. துயரப்படுகிறவர்களாக இருத்தல் (உலக சந்தோசங்களில் மிதக்காமல் பிறருக்காக துயரப்படுகிறவர்கலாக இருத்தல்) உலகில் நடக்கும் வேதனை துன்பங்கள் கொடூரத்திநிமித்தம் பிறருக்காக பெருமூச்சுவிட்டு அழுது அதினிமித்தம் துயரப்பட்டு எலலோருக்கும் ஒரு நல்ல காலம் வருவதற்காக ஏங்குபவராக இருத்தல்.
3. சாந்தகுணமுள்ளவர்களாக இருத்தல் (பொறுமை சாந்தம் அன்பு)
எல்லோரிடமும் சாந்த குணத்துடன் பழகுதல், அன்பான வார்த்தைகளை பேசுதல் பிறரை மனதளவில் பாதிக்கும் வார்த்தைகளை கூட பயன்படுத்தாதிருத்தல்.
4. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாக இருத்தல் .(உத்தமம்)
நீதி நேர்மை இவ்விரண்டையும் எந்நாளும் விட்டுவிடாமல் எல்லா இடங்களிலும் நீதியாக நடந்துகொள்ள வாஞ்சையாக இருத்தல்
5. இரக்கமுடையவர்களாக இருத்தல் (இரங்கி உதவிசெய்தல்)
உலகில் உள்ள எல்லோர் மேலும் இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவர்களாக பிறரின் துன்பத்தை தன் துன்பம்போல பாவித்து உதவி செய்பவர்களாக இருத்தல்
பொறாமை/ வஞ்சம்/ஏமாற்றுதல் போன்ற கெட்ட குணங்களை அறவே ஒழித்து இருதயத்தை சுத்தமாக பாதுகாத்தல்.
7. சமாதானம் பண்ணுகிறவர்களாக இருத்தல் - (எல்லோருடனும்
சமாதானத்துடன் இருத்தல்)
பிறரின் மேலுள்ள கசப்புகளை அகற்றி எல்லோருக்கும் நன்மை உண்டாக்கும் எண்ணத்துடன் வாழுதல்
8. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களாக இருத்தல் (நீதிக்காக துன்பத்தை சகித்தல்) நீதியை கைகொண்டு நடப்பதால் வரும் துன்பங்களை கண்டு துவளாமல் சோர்ந்து போகாமல் நன்மை செய்து துன்பங்களை தாங்கும் மனப்பக்குவத்துடன் வாழுதல்.
எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் மேற்கண்ட நற்குணங்கள் மூலம் நாம் மனிதர்களுக்கு முன்னால் பிரகாசித்து தேவனின் நாமத்தை மகிமைபடுத்தும்படி நடத்தல் வேண்டும் என்று இயேசு போதித்திருக்கிறார்.
மேலும் ஆவியானவரை சார்ந்துகொண்டு அவர் உங்களோடு இருந்து தெரியபடுத்தும் வார்த்தைகளையே பிரசங்கிக்க நாடுகள்
நற்க்கிரியைகளை செய்வதால் பலநேரங்களில் பல துன்பங்கள் ஏற்ப்படலாம் ஆகினும் அவற்றால் ஒருபோதும் மனமுடைந்து போககூடாது.
III யோவான் 1:11 , நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்;
என்று வசனம் சொல்கிறபடியால், நாம்செய்யும் நற்க்கிரியைகள்தான் நாம் தேவனின் பிள்ளையா அல்லது சாத்தானின் பிள்ளையா என்பதை தீர்மானிக்கும் என்பதையும் விளக்குதல் நலம்.
உங்கள் ஊழியங்கள் மூலம் அனேக ஆத்துமாக்கள் பயன்பெற்று ஆண்டவரண்டையில் நடத்தப்பட வாழ்த்துக்கள்!
-- Edited by SUNDAR on Friday 16th of April 2010 10:40:46 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//நீங்கள் தைரியமாக இறங்கி செயல்படுங்கள் கர்த்தர் உங்களோடு கூட இருப்பார் நானும் உங்களுக்காகவும் இந்த எழுப்பதளுக்காகவும் ஜெபிக்கிறேன். //
மிக்க நன்றி ஸ்டீபன் அண்ணா, தங்கள் ஜெபம் எங்களுக்குத் தேவை...
மத்தேயு 5ம் அதிகாரத்திலிருந்து அழகான ஆக்கத்தை ஆலோசனையாக கொடுத்த சகோ. சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல...
//......பிரசங்கிக்க நாடுகள்//
டேவிட் ரமேஷ் எனும் ஊழியக்காரரே கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்கிறார். நாங்கள் இதர நிகழ்வுகளை (குழு ஆலோசனை, சிறப்பு நிகழ்ச்சிகள், .... ) நடத்துகிறோம்.
தங்கள் ஆலோசனைகளுக்கும் வாழ்த்துதல்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே...
கருப்பொருளை இங்கு நான் கூற காரணம், கருப்பொருள் சார்ந்து சில நிகழ்ச்சிகள் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக,
1. பட்டி மன்றம் (அ) விவாதம்: (ஒரு நல்ல தலைப்பு சொல்லுங்களேன்..) 2. குறு நாடகம் 3. Choreography 4. கருத்து சார்ந்த விளையாட்டுக்கள்
இவை தவிர வாலிபர் கூட்டங்களில் (குறிப்பாக இரட்சிக்கப்படாத வாலிபர்களும் பங்குபெறும்) செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் கூற வேண்டுகிறேன்...
நன்றி...
-- Edited by timothy_tni on Friday 16th of April 2010 01:08:15 PM
தேவ கிருபையால் வாலிபர் கூட்டம் தேவ நாமத்திற்கு மகிமை சேர்க்கும் வண்ணம் சிறப்பாக நடைபெற்றது...
Some Highlights:
அபிஷேகம் நிறைந்த பிரசங்கத்தில் அனைவரும் பயன் பெற்றது, புதிய வாலிபர்கள் வந்திருந்தது, ஒரு சிலர் சரீரத்தில் அற்புதங்களையும் பெற்றுக் கொண்டது, கூட்டத்தின் பிற்பகுதியில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் வாலிபர்கள் ஆக்கப்பூர்வமான கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுக் கொண்டது, சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்த நடன- நாடக நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது, .....
தேவனுடைய நாமத்தை ஒவ்வொரு நாளும் மகிமை படுத்துவதுதான் நம் வேலை; உலக மயக்கங்களால் பலரும் இதில் விலகியுள்ளனர்.
மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.