இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசிகளின் மூன்று முக்கிய கடமைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
விசுவாசிகளின் மூன்று முக்கிய கடமைகள்!
Permalink  
 


1. முதல் முக்கிய கடமை  சுவிசேஷம் சொல்லுதல்.
 
இயேசுவை அறியாதவர்களுக்கும் அறிந்து ஏற்றுக்கொள்ளாத்வர்களுக்க்ம் மீண்டும் மீண்டும் இயேசுவைப்பற்றிய சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு விசுவாசிமேல் விழுந்த முதல் முக்கிய கடமையாக இருக்கிறது. 
 
மாற்கு 16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
ஆண்டவரின்  அன்பை உண்மையாக ருசித்தவர்கள் யாருமே  இயேசுவைப்பற்றி பிறருக்கு சொல்லாமல் இருக்கமுடியாது.  ஒரு இந்துவோ அல்லது ஒரு இஸ்லாமியரோ ஏன் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரோ கூட ஆண்டவரின் அன்பைப்பற்றி அடுத்தவருக்கு சொல்ல முன்வருவதில்லை. ஏனெனில் அவர்கள் இறைவனின் அன்பை அறியவேண்டிய விதத்தில் அறியவில்லை அவர் ஆண்டவரின் அன்பை முழுமையாக  ருசிக்கவில்லை.  ஆண்டவரின் அன்பின் அகல நீல ஆழத்தை அறிந்தவரால் நிச்சயம் அவரைப்பற்றி பிறருக்கு  சொல்லாமல் இருக்கவே முடியாது.  நம்மால்   அப்படி சொல்ல முடியவில்லை என்ற ஒரு நிலை இருக்குமாயின் நமது மனம்திரும்புதலை மற்றும் விசுவாசத்தை சற்று திரும்பி பார்ப்பது நல்லது.   
 
சுவிசேஷத்தின் பயன்கள்:
 
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

என்று இயேசுவும்
 
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.
 
என்று அப்போஸ்தலர்களும் உரைப்பதால். இயேசுவேயன்றி ஒருவருக்கும் இரட்சிப்பு என்பது முடியாத காரியம். இயேசுவை எற்று இரட்சிக்கபடாத்வனின் முடிவு ஆக்கினை தீர்ப்பு என்று வேதம் சொல்வதால்.
 
மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்

யோவான் 3:18
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று
 
ஒவ்வொரு மனிதனையும்  ஆக்கினை தீர்ப்பிலிருந்து தப்புவித்து  நித்யஜீவனுக்கு தகுதிபடுத்த சுவிசேஷம் பிரசங்கித்தல் மிகமிக அவசியமாகிறது. இயேசுவை அறியாத ஜனங்களின் இரசிப்புக்காக ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்தலும்  இதில் அடங்குகிறது.  
 
அடுத்ததாக பரமதகப்பனை விட்டு பிரிந்து பாவபட்ட ஜென்மமாக வழிதப்பி வாழும் ஒருவரை 
 
மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

என்று கூவி அழைக்கும் ஆண்டவரின் காரத்துக்குள் கொண்டுவந்து விட்டுவிட்டால் மறுமை வாழ்வில் மட்டுமல்ல  இவ்வுலக வாழ்விலும் அவனுடைய அனைத்து காரியங்களையும் ஆண்டவரே போருப்பெற்றுகொள்வார்.
 
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

என்ற வார்த்தைகளின்படி, தேவனை தேடி அவருடைய கரத்துக்குள் வந்துவிட்டால் இந்த உலகில் நாம் வாழ்வதர்க்கு தேவையான அனைத்துமே கூட நமக்கு நிச்சயம் கொடுக்கப்படும். எனவே ஒரு மனிதனை ஆண்டவரின் கரத்துக்குள் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு விசுவாசியின் முதல் முக்கிய கடமையாக உள்ளது
 
இதையே பவுல்

I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது

என்று கூறியிருக்கிறார்.     



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இரண்டாவது இடைபட்ட  கடமை - ஒருவருக்கொருவர்  புத்திசொலலுதல்:
 
ஆண்டவரால் மீட்கபட்ட ஒவ்வொருவரும் தொடர்ந்து  இப்பாவ உலகில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அத்தோடு நாம் அனேக  உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜய்த்தில் பிரவேசிக்கவேண்டிய நிலையில் இருப்பதால் ஒருவருக்கொருவர் புத்திசொல்லி திடப்படுத்தி தேவனின் வார்த்தைகளில் நிலைநிர்ப்பது மிக அவசியமாகிறது.  
 
அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்
 
இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாகிய  ஒவ்வொருவரையும்  பின் தொடர்ந்து, சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவனை கவிழ்த்து போட  சிங்கம்போல திறந்தவாயோடு எவனை விழுங்கலாம் என்று சத்துரு திக்கெட்டும் அலைவதால், அடுத்தவர்களுக்கு புத்திசொல்வதில் மட்டும் குறியாக இருக்காமல்
சகசகோதரர்கள் சொல்லும் வார்த்தையையும் ஆண்டவரின் துணையுடன் அலசி   ஆராய்து ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சோதித்தறிவது அவசியம்.
 
எபேசியர் 5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு, 

எபிரெயர் 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

என்ற வார்த்தைகளின்படி ஒருவருக்கொருவர் புத்திசொல்லும் காரியத்தைத்தான் நாம் இந்த தளத்தின் மூலம் செய்துவருகிறோம். இதன்மூலம் அநேகர் பயன்பெற
இதற்காக ஜெபித்துகொள்ளுங்கள்.  
 
வனாந்திரத்தில் ஆடுகள் கூட்டமாக போகும்போது சிறிது தூரம் தள்ளி ஓநாயும் அதன் பின்னேயே கால்கடுக்க  போய்கொண்டே இருக்கும். எங்காவது வழிதப்பி மேய்ப்பனின் கையை விட்டு ஒரு ஆடு வருமாகின், அதை பிடிப்பதற்காகவே  அது காத்திருக்கும். அதுபோல், ஒவ்வொரு தேவ பிள்ளைகளைகளுக்கும் இரண்டுதேவதூதர்கள் தொடர்ந்து பாதுகாவலாக வந்தாலும், அவர்களுக்கு
சற்றுபின்னால் சாத்தானும் தனது தூதர்களை அனுப்பி அவர்களை கண்காணிக்க தவறுவதில்லை ஆண்டவரின் கரத்துக்குள் வந்த ஒருவரை சாத்தானால் அவ்வளவு சீக்கிரம் பிடுங்கமுடியாது  
 
யோவான் 10:28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வது மில்லை.

என்றாலும், அவர்களுக்கு முன்   இடரலை வைத்து  தண்டனையை பெற்றுதந்து சோர்வை ஏற்ப்படுத்துவதில் அவனுக்கு ஒரு அலாதி பிரியம். எனவே நாம் ஒருவருக்கொருவர் புத்திசொல்லி விழித்திருப்பது மிக மிக அவசியமாகிறது. 
 
ஒருவருக்கொருவர் விரோதமாக பேசாமல் ஒருவருக்கொருவர் ஊக்கமாக ஜெபம்பண்ணவேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. எனவே நமக்கு எவரவர் மேல் விரோதம் கோபம் வருகிறதோ அவரவருக்கேல்லாம் இரண்டு வார்த்தையாவது ஜெபம்செய்ய பழகவேண்டும்.  
 
நமது முகத்தில் உள்ள கரியை அடுத்தவரின் உதவியோ அல்லது ஒரு கண்ணாடியின் உதவியோ இல்லாமல் நம்மால்  பார்க்க முடியாது. அதுபோல் நமது பிழைகளை நம்மால் சீக்கிரம் உணர முடியாது. இந்நிலையில் "உன் முகத்தில் கரி இருக்கிறது" என்று ஒருவர் சொல்வாராகில் அவர்மேல் கோபபட்டு அதை அசட்டை  செய்யாமல் உண்மையில் அப்படி நமது முகத்தில் கரி இருக்கிறதா என்பதை  ஆராய்து அதை அகற்றுவதே  சிறந்தது.   
 
எனவே அன்பானவர்களே ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி தேற்றுங்கள்: 
 
 ஏசாயா 35:3 தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்
 
இந்த தேற்றுதல் என்பது எலியாவைபோல  மிகப்பெரிய பரிசுத்தவான்களுக்குகூட ஒருசில வேளைகளில் அவசியமாகிறது!
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மூன்றாவது  மிக முக்கிய  கடமை -தேவனின் வார்த்தைகளை கைகொள்ளுதல்
 
தேவனுடைய வார்த்தைகளை கைகொள்ளுதல் என்பது விசுவாசிகளுக்கு மட்டுமல்ல எல்லோர் மேலும் விழுந்த கடமை என்று வேதம் போதிக்கிறது.
 
பிரசங்கி 12:13 , தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே
 
 லூக்கா 17:10 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்
 
மனுக்குலத்தின் ஆதி தகப்பனாகிய  ஆதாம்/ஏவாளுக்கு  கொடுக்கப்பட்ட கட்டளையில் ஆரம்பித்து வேதத்தின் கடைசி புத்தகமாகிய  வெளிப்படுத்தின விசேஷம்வரை தேவன் திரும்ப திரும்ப சொல்வது எனது வார்த்தைகளை கொள்ளுங்கள் என்பதுதான்  
 
லேவியராகமம் 20:8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
I கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்
 
இதுபோல் இன்னும் எத்தனையோ வசனங்களை இதற்க்கு ஆதாரமாக கூறலாம். னால் இன்று அநேகர் தேவனின் கற்பனைகளை கைகொள்வதை ஒரு கடமையாக எண்ணாமல் அவைகளை அதிகமாக அசட்டை பண்ணுவதை எங்கும்  காணமுடிகிறது. சிலர் கற்பனையை கைகொள்ள தேவையே இல்லை என்றும் போதித்து வருகின்றனர்.  
 
நாம்  நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால்,  நம்மை எந்த பாவமும்  மேற்கொள்ள மாட்டாது என்பது உண்மை. ஏனெனில் இயேசுவின் இரத்தத்துக்கு மேலான பாவம் என்று ஒன்றும் இல்லை. ஆகினும் தேவனின் கற்பனையை கைகொள்வதில் ஏதோ ஒரு மிகுந்த மேன்மையான காரியம் இருப்பதால்தான் ஆண்டவர் திரும்ப திரும்ப கற்பனைகளை கைகொள்ள சொல்லி நம்மை வலியுறுத்துகிறார். 
அந்த மேன்மையான காரியம் என்ன? 
 
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் 
 
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரம்பெற்று ஜெயம்கொள்வதே அந்த மேன்மையான காரியம் .  அதுவே எல்லாவற்றிலும் மேன்மையான ஒரு நிலை. அதை அடைவதற்கு அவருடைய கற்பனைகளை நிச்சயம் கைகொள்ள வேண்டும். அவரது கற்பனையை கைகொள்ளாமல் ஜீவ விருட்ச்சத்தின்மேல் அதிகாரம் பெறுவது இயலாது.   
 
தேவனின் கற்பனைகளை  மீறி நடந்து அதன்படி போதித்தவர்களும் பரலோக ராஜ்யத்தில்  இருக்கத்தான் செய்வார்கள் என்று வேதம் சொல்கிறது. ஆனால் அவர்களுக்கு எந்த மேன்மையும் இல்லை அவர்கள்  எல்லோரிலும்  சிறியவர்கள் எனப்படுவார்கள்   
 
மத்தேயு 5:19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
 
எனவே அன்பானவர்களே எப்பொழுதும் மேன்மயானதையே நாடுவோம்.  
 
வெளி 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
 
என்ற ஆண்டவரின் வார்த்தை சொல்வதுபோல்,  நாம் போகும் இடமெல்லாம் நம்முன் ஒருவரும் பூட்டமுடியாத  திறந்த வாசல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள்  ஆண்டவரின் வசனங்களை கைகொள்வதை கடமையாக நினைத்து செயல்படுவது அவசியம் .
 
பின்குறிப்பு:

ஜெபிப்பதும்  வேதம் வாசித்து தியானம் செய்வதும் ஒரு விசுவாசிக்கு மூச்சு  காற்று போன்றது. சுவாசம் என்பது  எப்படி நம்மை கேளாமலேயே  எப்பொழுதும் தானாகவே  செயல்படுகிறதோ அதுபோல் ஜெபமாகிய ஆண்டவரிடம் தொடர்பும் வேதம் வாசித்து தியானிப்பதும் நம்மிடம் இயல்பாக இருக்கவேண்டிய விஷயங்கள் எனவே இச்செயல்கள் கடமையில் அடங்காது.
   


-- Edited by SUNDAR on Wednesday 21st of April 2010 10:45:49 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

கிறிஸ்த்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் சோர்ந்து போகாமல் ஆவியானவரின் வழி நடத்துதலின்படிமேலேயுள்ள மூன்று கடமைகளை செய்வதற்கு வாஞ்சையுடன் இருப்பது அவசியம். 
 
திரியின் முக்கியத்துவம் கருதி மீண்டும் பார்வைக்கு வைக்கபடுகிறது! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard