இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சவுல் - தாவீது - சாலமோன்


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
சவுல் - தாவீது - சாலமோன்
Permalink  
 


சவுல் - தாவீது - சாலமோன் :

இஸ்ரவேலின் மேல் ராஜாக்களான இந்த முதல் மூன்று ராஜாக்களும் தேவனின் படைப்பின் ஆதி காலத்திலிருந்து உண்டான மூன்று கால கட்டங்களை குறிப்பவர்களாக உள்ளனர்.

1. சவுல் - கர்த்தரால் வெற்றி பெற்று தனக்கென்று ஜெய ஸ்தம்பம் நாட்டிய சவுல் சாத்தானுக்கும் அவன் விழுகையின் காலத்துக்கும் (ஏசா 14.13)

2. தாவீது - தாங்கள் தேவ குமாரர் என்ற ஆதி மேன்மையை காத்து கொள்ளாமல், மனு குல பெண்களோடு கூடி அவர்களுக்கு சந்ததியை உண்டாக்கிய தேவ குமாரர்களுக்கும் (ஆதி 6.2)

3. சாலமோன் - தன் அழகினாலும், ஞானத்தினாலும், வியாபாரத்தினாலும் மேட்டிமை அடைந்து தேவனின் கோபத்திற்க்கு காரணமான தீருவின் ராஜாவுக்கும் அடையாளமாக உள்ளனர். (எசேக்கியேல் 28-12)

சங்கீத புத்தகங்களும், நீதிமொழிகளும் எழுதியதனாலோ என்னமோ, தாவீதின் பாவம் பற்றியும் சாலமோனின் பாவம் பற்றியும் யாரும் பெரிதாக பிரசங்கம் செய்வதில்லை. மேலும் தாவீதும் சாலமோனும் இயேசுவிற்க்கு அடையாளங்களாக சொல்லப்படுகின்றனர். ஒரு பக்கத்தில் அவை சரியாக இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அவர்கள் மேற்கண்ட கால கட்டத்திற்க்கும் அப்போது இருந்தவர்களுக்கும் அடையாளமாக உள்ளனர்.

(தொடரும்)



-- Edited by SANDOSH on Sunday 18th of April 2010 10:15:20 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//3. சாலமோன் - தன் அழகினாலும், ஞானத்தினாலும், வியாபாரத்தினாலும் மேட்டிமை அடைந்து தேவனின் கோபத்திற்க்கு காரணமான தீருவின் ராஜாவுக்கும் அடையாளமாக உள்ளனர். (எசேக்கியேல் 28-12)//

எசேக்கியேல் 28-12ஐ வாசிக்கையில் தீரு ராஜா லூசிபருக்கு அடையாளமாக சொல்லப்பட்டது போல் உள்ளது.

இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.

ஒரு சில காரியங்கள் சாலமோனுக்குப் பொருந்தினாலும், மொத்த Context-ஐ பார்க்கையில் லூசிபரே அடையாளப்படுத்தப் படுவது தெரிகிறது.

மேலும்,
II நாளாகமம் 2:3 தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.

I இராஜாக்கள் 5:1
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.

I இராஜாக்கள் 9:11 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

தீருவின் ராஜா ஈராம் தாவீது, சாலமோன் காலத்திலிருந்தவன்.
சமகாலத்து நபருக்கு சாலமோன் அடையாளமா???

எனவே, 3rd Point-ஐ (தீருவின் ராஜா) கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்....



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard