நேற்று ஞாயிறு அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு எனது வீட்டுக்கு ஒரு போன் வந்தது. ஒரு சகோதரி அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனது வீட்டுக்கு அழைத்து வந்தால் ஜெபிக்க முடியுமா? என்று கேட்டார்கள். நான் ஒரு பெரிய தேவமனிதன் அல்ல என்னுடைய அழைப்பு சற்று விதயாசமானது, ஆகினும் கேட்டுவிட்டார்களே என்று சரி அழைத்து வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.
சிறிது நேரத்தில் ஒரு சகோதரி இன்னொரு சகோதரியை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நானும் ஏதோ ரட்சிக்கபடாத சகோதரி என்று எண்ணிக்கொண்டு, அவர்களிடம் நீங்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்தானம் எடுத்துள்ளீர்களா என்று கேட்டேன். ஆம் என்றார்கள். பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றிருக்கீர்களா? என்று கேட்டேன். அதற்க்கு ஆம் பெற்றிருக்கிறேன் என்றார்கள். மீண்டும் சந்தேகத்துடன் அவ்வாறு திருப்பி கேட்டேன். ஆனால் உறுதியாக நான் அபிஷேகத்தை பெற்றிருக்கிறேன் என்று சொன்னார்கள். அத்தோடு அழைத்து வந்த சகோதரியும் அந்த சகோதரிபற்றி நற்சாட்சி கொடுத்தார்கள். எனக்கு ஒரேஆச்சர்யம், ஆண்டவரை அறியாதவர்களுக்கு பிரச்சனை என்றால், இயேசுவை விசுவாசியுங்கள் என்று சொல்லலாம் ஆனால் இங்கு எல்லாவற்றையும் அறிந்த பிறகு, அசுத்த ஆவியின் தொந்தரவு! இது எப்படி சாத்தியம்? ஆண்டவர் குடிகொண்டுள்ள இடத்தில் அசுத்தஆவி வருவதா? எனக்கு புரியவில்லை!
இப்ப்ழுது உங்கள் பிரச்சனை என்னவென்று கேட்டேன். சிறிதுநாளாக வயிற்றவலி அதிகமாக இருப்பதாக மட்டும் சொன்னார்கள். முழங்காலில் நிற்க செய்து ஜெபித்தபோது சிறிது நேரத்தில் செத்த ஆள்போல் கீழே விழுந்துவிட்டார்கள் பிறகு எழும்பவே இல்லை. நானும் மீண்டும் ஜெபித்து பார்த்தேன் அசைவே இல்லை. பிறகு அழைத்து வந்த சகோதரியை விட்டு அவர்களை எழும்ப வைத்தேன். எழும்பி மிகவும் அழுதுகொண்டே இருந்தார்கள். கொஞ்சம் தெளிவாக இருப்பதுபோல் தெரிந்தது. மீண்டும் நாங்கள் ஜெபித்தபோது எங்களுடன் சேர்ந்து ஜெபித்தார்கள்.
மீண்டும் அந்த அசுத்த ஆவி உள்ளே வராமலிருக்க தொடர்ந்து வேதம் வாசிக்கும்படியும் பரிசுத்தமாக வாழும்படியும் அறிவுரை சொல்லி அனுப்பினோம்.
இங்கு எனக்கு ஒரு சந்தேகம்.
ஆவியானவர நமக்குள் வந்து தங்கி நமக்குள் வாசம் செய்கிறார் என்று வசனம் சொல்கிறது
யோவான் 14:17 ; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
பரிசுத்த ஆவியை பெற்ற ஒருவனால் பாவம் செய்ய முடியுமா?
எபிரெ 6 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
முடியும்.
பாவம் form (இச்சை->பூரணம்) ஆகும் போது தேவ பிரசன்னத்திலிருந்து அபிஷேகம் பெற்ற ஒருவர் விலகி வாழ்கிறார். உடனே பரிசுத்த ஆவியானவர் அவனை முற்றிலும் விட்டு விலகி விடுவதில்லை.மாறாக கண்டித்து உணர்த்துவார்; அதற்கு கீழ்படிந்தால் படிப்படியாக வழி நடத்துவார். இல்லையெனில் பரிசுத்த ஆவியின் உணர்த்துதலின் அழுத்தம் குறைந்து கொண்டு போகும்.
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
ஆவியானவர் யாரையும் வலுக்கட்டாயப்படுத்துவதில்லை. அவர் மென்மையான புறாவாக உருவகப் படுத்தப் படுகிறார்.
I கொரிந்தியர் 6:19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
ஒரு கட்டத்தில் அவருடைய பிரசன்னம் எடுபட்டுப் போகும். பின்பு வீடு வெறுமையாகும்.
லூக்கா 11 24.அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்றுசொல்லி, 25 அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, 26 திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.
அசுத்த ஆவிகளைக் கட்ட முடியாது. அவைகள் திரும்பி வரும்,... வந்து பார்க்கும் போது பரிசுத்த ஆவி அங்கு இல்லையெனில் அவ்வளவுதான்.....
கவனிக்க: இப்போது வரங்கள் கூட வேலை செய்யும்.. ஏனெனில் தேவன் ஒருவருக்குக் கிருபையாக கொடுத்த வரங்களை(Gifts) திரும்பப் பெறுவதில்லை... உதா: லூசிபர், சாலமோன், ...
என்றோ ஒரு நாள் அபிஷேகத்தைப் பெறுவது காரியமில்லை.. அனுதினமும் தேவனுக்குள் புதுப்பிக்கப் படுதல் அவசியம்...
(தொடரும்...)
-- Edited by timothy_tni on Tuesday 20th of April 2010 01:03:00 PM
//பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றிருக்கீர்களா? என்று கேட்டேன். அதற்க்கு ஆம் பெற்றிருக்கிறேன் என்றார்கள். மீண்டும் சந்தேகத்துடன் அவ்வாறு திருப்பி கேட்டேன். ஆனால் உறுதியாக நான் அபிஷேகத்தை பெற்றிருக்கிறேன் என்று சொன்னார்கள்.//
நீங்கள் இப்படிக்கேட்டதற்கு பதிலாக,
நேற்று (அ) இன்று காலை அபிஷேகத்தில் நிறைந்து ஜெபித்தீர்களா? இன்றும் தேவனோடு ஐக்கியம் இருக்கிறதா?
என்று கேட்டிருக்கலாம். ஏனெனில், நீங்கள் கேட்ட கேள்வியை லூசிபரிடம் கேட்டாலும் அவன் ஆம் என்று தான் கூறுவான்.
ஒரு வேளை சவுலிடம் கேட்டால் ஒரு குறிப்பிட்ட தேதியைக் கூட அவரால் கூற முடியும். ஆனால், பின்னாட்களில் தேவ ஆவியானவர் அவனை விட்டு நீங்கினார். I சாமுவேல் 16:14கர்த்தருடைய ஆவி சவுலைவிட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல; புதிய ஏற்பாட்டிலும் ஏன் நாம் வாழும் இந்த நாட்களிலும் பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் இன்னும் கிருபையின் வரங்களைப் பெற்றவர்கள் கூட அசுத்த ஆவியால் தாக்கப்பட்டும் ஆட்கொள்ளப் பட்டும் இருக்கிறார்கள்.
ஒரு உதாரணம்:
<<1921-ல் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்த லட்சுமி தேயிலைத் தோட்டம் எனும் இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜையா என்பவரின் மகனாகப் பிறந்தவர் பாலாசீர் லாறி. இவர் தனது பள்ளிக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலும், கல்லூரிக் கல்வியை பாளையங்கோட்டை, சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியிலும் படித்து வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 1947-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எபநேசர் நட்சத்திரம் என்பவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட இவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்ததால் 1953-ல் தனது பணியைத் துறந்து இறைபணியாகப் பிரசங்கங்கள் செய்து வந்தார். >>
<<ஆரம்ப நாட்களில் பாலாசீர் லாறிக்கு பிரசங்கிக்க சரியாக வருவதில்லை. ஆனால் இரவு நேரத்தில் எல்லாரும் படுக்கச் சென்றால் இவர் மாத்திரம் முழஃங்கால் அடியிட்டு ஆண்டவரே கிருபை தாரும் என்று தேவனிடத்தில் மன்றாடுவார். காலையில் எல்லாரும் எழும்பும்போது பார்த்தாலும் அவர் இரவில் ஆரம்பித்த அதே ஜெப நிலையில்தான் இருப்பார். நான் கேள்விப்பட்டவரையில் இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூறுவேன். சாம்பிளுக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர். ஆனால் இவரின் முடிவு என்ன? திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும்(1989ல்) போனார். இன்றும் இவருடைய ஆசிரமம் எங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. வஞ்சிக்கப்பட்ட ஒரு கூட்டம் உலக மக்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றனர் கூழையும் கஞ்சியையும் குடித்துக் கொண்டு.>>
////பரிசுத்த ஆவியை பெற்ற ஒருவனால் பாவம் செய்ய முடியுமா? எபிரெ 6 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். முடியும்.////
சகோதரரே இந்த வசனத்தில் குறிப்பிட்டிருப்பது மறுதலித்துபோனவர்களை பற்றி மட்டும்தான் என்று நான் கருதுகிறேன். இவர்களை மீண்டும் புதுப்பிக்க முடியாது என்று வசனம் கூறுகிறது. அனால் நான் குறிப்பிட்டுள்ள சகோதரி மருதலித்து போனவர் அல்ல. கிறிஸ்த்துவுக்குள் இருக்கும்போதே அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டவர். எனவே இந்த வசனம் இங்கு பொருந்தாது என்று நான் கருதுகிறேன்.
/////எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
ஆவியானவர் யாரையும் வலுக்கட்டாயப்படுத்துவதில்லை. அவர் மென்மையான புறாவாக உருவகப் படுத்தப் படுகிறார்.////
இந்த வசனம்தான் இக்காரியத்துக்கு சரியான விளக்கமாக பொருந்தும் நிலையில் இருக்கிறது. ஆவியானவர் மிக மென்மையானவராக இருப்பதால் அவர் சொல்லுக்கு கீழ்படியாமல் அவரை துக்கப்படுதும்போது அவருடைய வல்லமை பிரசன்னம் ஒருவருக்குள் குறைய, அந்நேரம் அசுத்த ஆவிகள் புகுந்துவிடலாம், ஆனால் ஆவியானவர் இவர்களை விட்டு முற்றிலும் விலகுவது இல்லை என்று கருததோன்றுகிறது.
இப்படிபட்டவர்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டு மனம்திரும்பும்போது மீண்டும் தேவ பிரசன்னத்துக்குள் கடந்து வர முடியும் நிலை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பரிசுத்தாவியின் அபிஷேகத்தை ஒருமுறை பெற்றாலே பரலோகம் சென்றுவிடலாம் என்பது பலரது எண்ணம். அபிஷேகம் பெற்ற ஒருவர் பாவம் செய்வது மட்டுமல்ல மறுதலிக்கவும் கூடிய அபாயம் உண்டு என்பதை வேதம் சொல்வதைத் தான் அங்கு கூறியிருந்தேன்.
பரிசுத்த ஆவியை பெற்ற ஒருவனால் பாவம் செய்ய முடியுமா? எனும் கேள்வியின் பதிலாகவே அந்த வசனம் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கவனிக்கவும். எனவே அதனை நான் சூழ்நிலை சார்ந்து கூறவில்லை.
//அனால் நான் குறிப்பிட்டுள்ள சகோதரி மருதலித்து போனவர் அல்ல. கிறிஸ்த்துவுக்குள் இருக்கும்போதே அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டவர். எனவே இந்த வசனம் இங்கு பொருந்தாது என்று நான் கருதுகிறேன்.//
இங்கு அந்த சகோதரியின் நிலை குறித்து நான் எதுவும் எழுதவில்லை. உங்கள் எழுத்துக்கள் மூலமே அவரைக் குறித்து அறிகிறோம்.
அவருடைய பிரச்சனை:
1. அசுத்த ஆவியின் பாதிப்பு 2. வயிற்று வலி 3. சரிவர ஜெபிக்க இயலவில்லை.
அவருடைய நிலை:
1.கிறிஸ்துவை அறிந்தவர் 2. ஞானஸ்நானம் மற்றும் அபிஷேகம் பெற்றவர் 3. நற்சாட்சியுடையவர்
//மீண்டும் அந்த அசுத்த ஆவி உள்ளே வராமலிருக்க தொடர்ந்து வேதம் வாசிக்கும்படியும் பரிசுத்தமாக வாழும்படியும் அறிவுரை சொல்லி அனுப்பினோம்.//
நல்ல ஆலோசனையே. விடாமுயற்சியோடு ஜெபிக்கவும் உற்சாகப் படுத்தலாம்.
புலம்பல் 3 40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். 41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
சங் 139 23. தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 24. வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
//ஆண்டவர் குடிகொண்டுள்ள இடத்தில் அசுத்தஆவி வருவதா? எனக்கு புரியவில்லை!// //பரிசுத்த ஆவியை பெற்றுள்ள ஒரு மனிதனுக்குள் மீண்டும் அசுத்தஆவி வந்து தங்கி வேலைசெய்வது சாத்தியமா? //
என்னைப் பொறுத்த வரை, ஒருவர் அசுத்த ஆவியால் பாதிக்கப் பட்டிருக்கிறாரெனில் அங்கு பரிசுத்த ஆவியானவர் இல்லையெனவே நம்புகிறேன். ஏனெனில், மத்தேயு 6:24, லூக்கா 16:13. ஒரு உறையில் இரு கத்தியா???
ஒரே நேரத்தில் பரிசுத்த ஆவியும், அசுத்தாவியும் ஒரு மனிதனிடத்தில் கிரியை செய்ய இயலுமா?
கண்ணுக்குப்புலனாகாத பல விஷயங்களைப் பற்றி எழுதும் சகோ. சந்தோஷ் அவர்கள் இதில் விளக்கமளிக்கலாமே....
////பரிசுத்தாவியின் அபிஷேகத்தை ஒருமுறை பெற்றாலே பரலோகம் சென்றுவிடலாம் என்பது பலரது எண்ணம். அபிஷேகம் பெற்ற ஒருவர் பாவம் செய்வது மட்டுமல்ல மறுதலிக்கவும் கூடிய அபாயம் உண்டு என்பதை வேதம் சொல்வதைத் தான் அங்கு கூறியிருந்தேன். பரிசுத்த ஆவியை பெற்ற ஒருவனால் பாவம் செய்ய முடியுமா?///
நல்லது சகோதரரே! இதை ஒரு தனிப்பட்ட விவாத தலைப்பாககூட எடுத்து ஆராயலாம்.
பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பாவம் செய்து கிருபையில் இருந்து விழுந்துபோக முடியும் என்பதற்கு "ஜீவ புஸ்தகத்திலிருந்து பெயரை கிருக்கிபோடுவேன்" என்று ஆண்டவர் எச்சரிப்பதை வைத்தும் அறிந்துகொள்ளலாம்.
மேலும் யாரும் எந்த நிலையிலும் ஆகதவர்களாகி போக முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு பவுல் சொல்வதுபோல் கீழ்படிதல் அவசியமாகிறது
I கொரிந்தியர் 9:27மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
////என்னைப் பொறுத்த வரை, ஒருவர் அசுத்த ஆவியால் பாதிக்கப் பட்டிருக்கிறாரெனில் அங்கு பரிசுத்த ஆவியானவர் இல்லையெனவே நம்புகிறேன். ஒரு உறையில் இரு கத்தியா???
ஒரே நேரத்தில் பரிசுத்த ஆவியும், அசுத்தாவியும் ஒரு மனிதனிடத்தில் கிரியை செய்ய இயலுமா?////
இந்த கேள்விக்கு ஒருசிறு உதாரணம் மூலம் நாம் விளக்கம் அளிக்க விளைகிறேன்.
ஒரு தகப்பனார் மிகபெரிய பயில்வான் அனைத்தையும் செய்ய வல்லவர் அவரை யாரும் மேற்கொள்ள முடியாது, ஆனால் நியாயத்துக்கு கட்டுப்பட்டவர் என்று வைத்துகொள்வோம்.
ஒருநாள் அவர் வீட்டில் இருக்கும்போதே ஒரு தீயவன் வீட்டுக்குள்வந்து அவரது மகனை தண்டிக்கிறான். தகப்பனார் அவனை தடுத்து ஏனென்று கேட்கிறார். அப்பொழுது அந்த தீயவன் "உமது மகன் எனது கடையில் இந்த பொருளை திருடி வந்திருக்கிறான்" என்று சாட்சியோடு நிரூபிக்கிறான்.
இந்நிலையில் நியாயத்துக்கு கட்டுபட்ட்ட அவர் ஒன்றும் செய்வதறியாது அப்படியே அமர்ந்துவிடுகிறார். அவர் கண் முன்னாலேயே அவர் வீட்டில் இருக்கும்போதே அவரது மகன் தண்டிக்கப்படுகிறான் .
இதுதான் நமக்குள் இருக்கும் ஆவியானவரின் நிலைமை என்று நான் கருதுகிறேன்.
அவர் நமக்குள்தான் இருக்கிறார் ஆனால் நாம் அவரது சொல் கேட்காமல் துணிந்து பாவம் செய்யும்போது அசுத்த ஆவிகள் நமக்குள் வந்து கிரியை செய்ய அனுமதித்து அவர் மௌனித்துவிடுகிறார்.
இங்கு உண்மை என்னவென்றால்.
ஒருவரது மனதில் "பரிசுத்த ஆவி "அல்லது "அசுத்த ஆவி" இரண்டில் யாராவது ஒருவர்தான் நிரந்தரமாக குடியிருக்க முடியும். இன்னொருவர் வந்துவிட்டு போக முடியுமேயன்றி நிரந்தரமாக தங்கமுடியாது.
அதாவது
ஆவியானவரை பெற்ற தேவ பிள்ளைகளுடன் ஆவியானவர் எப்பொழுதும் நிரந்தரமாக தங்கியிருக்கிறார் ஆனால் அசுத்த ஆவிகளோ நாம் செய்யும் மீறுதல்களினிமித்தம் ஒரு வழி போக்கனை போல வந்துபோகின்றன. தொடர்ந்து ஒருவர் ஆவியானவரை துக்கப்படுத்தி மனபூர்வமாக பாவம் செய்வது அவரை அவித்துபோட வழிசெய்யும் அப்பொழுதுதான் அசுத்த ஆவிகள் அவனுள் மீண்டும் நிரந்தரமாக குடிவந்து விடுகின்றன பின்னர் அவர்களை இரட்சிப்பது என்பது கூடாத காரியமாகிவிடும் அதைதான் எபிரெயர் 6:4,5,6சொல்கிறது என்று நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கீழ்வரும் தெளிவான திட்டமான தேவ வாக்குகளை நோக்குங்கால், எப்படித்தான் தேவனது பிள்ளை ஒருவனுக்குப் பிசாசு பிடிக்குமோ என்று நினைத்தும் பார்க்கமுடியவில்லை.
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை (எண்.23:23).
சத்துருவின் சகல வல்லமையையும் மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது (லூக்.10:18-19)
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கின்றன.... அவைகளை எனக்குத் தந்த பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார். அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது (யோ.10:27-29).
விசுவாசியொருவன் பிசாசுகளால் வாதிக்கப்படலாம். அவனது வாழ்க்கையின் சில பகுதிகளில் பிசாசுகளால் வெகுவாய்ப் பாதிக்கவும் படலாம். ஆனால் ஒருபோதும் அவன் ஒரு அவிசுவாசியைப்போல் பிசாசினால் பிடிக்கப்படமுடியாது. நாம் பிசாசினால் வஞ்சிக்கப்படலாம். நெருக்கப்படலாம், ஆனால் பிடிக்கப்படமுடியாது (மத்.24:21, 1.பேது.5:8-9). ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றத் தவறும்போது பிசாசுகள் நமது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். ஒருமுறை பேதுரு தனது சிந்தனையில் சாத்தானால் ஆட்டிப்படைக்கப்பட்டான் (மத்.16:23). அனனியா, சப்பீராளைப் பெந்தெகொஸ்தேக்குப் பின்னுள்ள ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம் (அப்.5:3-,9). ஆனால் இவையொன்றும் பிசாசு பிடித்தலோடு சேராது.
நமது உடல் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரும் அசுத்த ஆவிகளும் சேர்ந்து குடியிருக்கமுடியாது. (2.கொரி.6:15-16). ஆவியானவரை நாம் எதிர்க்கலாம், துக்கப்படுத்தலாம், அணைக்கலாம். ஆனால் பாவம் செய்யும்போது அவர் நம்மை விட்டுப் போய்விடுவதில்லை. பழைய உடன்படிக்கையின் காலத்தில் கூட, தாவீது பாவம் செய்தபின், பரிசுத்த ஆவியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி அவன் ஜெபிக்கவில்லை. மாறாக... உமது பரிசுத்த ஆவியை என்னிலிருந்து எடுத்துக்கொள்ளாமலிரும் என்றுதான் மன்றாடினான் (சங்.51:11).
ஆலயத்தைக் குறித்து இயேசு பக்தி வைராக்கியங்கொண்டிருந்தார் (மத்.21:12-13). அப்படியே ஆவியானவரும் நமது உடல்களைக் குறித்து வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். இயேசுவின் விலைமதியா இரத்தத்தால் கிரயங்கொள்ளப்பட்ட ஓர் உடலை தேவனது பரம எதிரிக்காக ஆவியானவர் காலி செய்யமாட்டார் (1.பேது.1:18-19, எபேசி.4:30). வாடகைக்காரரைக் கிளப்புவதே இந் நாட்களில் கடினம்! ஒரு குறைந்த சக்தியானது தேவனாகிய சொந்தக்காரரைக் காலிசெய்து வெளியனுப்புவது சாத்தியந்தானோ? வெள்ளம்போல் சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் என்றிருக்கிறதே (ஏசா.59:19).
விசுவாசிகள் எப்பொழுதும் போராயுதங்களணிந்து எதிரியை முறியடிக்க விழிப்புடனிருக்கவேண்டுமென எபேசியர் 6:10-18 போன்ற பகுதிகள் வலியுறுத்துகின்றன. ஆவியானவராலும் வசனத்தாலும் நிறைந்திருப்பது பிசாசு பிடித்தலுக்கு எதிரான அயுள் காப்பாகும். விசுவாசிகள் பின்வாங்கி, மற்ற விசுவாசிகளின் ஐக்கியத்திலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு, பாவக்காரியங்கள் மந்திரக் காரியங்களில் ஈடுபட்டு, வசன எச்சரிப்புக்கும் ஆவியானவரின் சத்தத்திற்கும் நெடுகவே செவியடைக்கும்போது, அவர்கள் தாங்களாகவே ஆபத்தான எல்லைக்குள் நடைபோடுகிறார்கள்.
விசுவாசிகள் சிலருக்கு பிசாசு பிடித்திருப்பதாகச் சில தகவல்கள் அங்குமிங்கும் இந்நாட்களில் சொல்லப்படுகின்றன. பல காரியங்களை இங்கு அலசிப் பார்க்கவேண்டியதிருப்பதால் அவ்வளவு சுலபமாக இதற்கு விளக்கம் கொடுத்துவிடமுடியாது. புதிய உடன்படிக்கை அமுலானபின்னர் வேதத்தில் விசுவாசிகளுக்குப் பிசாசு பிடித்ததென்று தெளிவான எடுத்துக்காட்டு ஒன்றுகூட இல்லாதபட்டசத்தில், ஆங்காங்கே கேள்விப்படும் சம்பவங்களை வைத்துக்கொண்டு, உபதேச சத்தியமாக ஒன்றையும் நிலைநாட்டமுடியாது.
விசுவாசிகளுக்குப் பிசாசு பிடிக்குமா? பிடிக்காது. ஆனால் விழித்திருங்கள் !!!!
இத்திரியில் அசுத்த ஆவிகள் தாக்குமா என்று தான் ஆராய்கிறோம். எனினும், இக்கேள்வி சார்ந்து எழும் மற்ற சந்தேகங்களுக்கு இது ஓரளவு உதவும் என நினைக்கிறேன்....
இதற்கு பதிலை நான் முன்பே வேறு ஒரு பதிவில் கொடுத்துள்ளேன். தீய ஆவிகள் மனிதனின் வெளி பக்கத்திலிருந்து உள் பக்கத்தை பாதிக்கின்றன. அதாவது சரீரம் வழியாக உள் சென்று ஆத்துமாவை அடிமை கொள்கின்ற முயற்ச்சியில் ஈடுபடுகின்றன. தேவ ஆவியோ உள்ளிருந்து வெளி பக்கமாக கிரியை செய்கின்றார். அதாவது ஆவி, ஆத்துமா, சரீரம் இப்படி.
இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் என்னும் அக்கினியானது மனிதனுக்கு உள்ள ஆவி என்னும் பகுதியில் அருளப்படுகிறார். இந்த முத்திரையின் மூலம் அவன் மறுமையை குறிதத ஆசிர்வாதத்தை பெறுகிறான். ஆனாலும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள அவன் தன் வாழ்க்கை பயணத்தில் இந்த அக்கினி அவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதோடு மட்டும் அல்லாது வாழ்க்கை பயணத்தில் தன் ஆத்துமா, சரீரம் முதலியவற்றை ஆவியானவர் ஆளுகை செய்ய ஒப்புக் கொடுக்க வேண்டும். (அசுத்த ஆவிகளின் விஷயத்தில் நடப்பதை போன்றதே ஆனால் இங்கே அவராக எடுத்துக் கொள்ள மாட்டார். நம்முடைய விருப்பத்தை பொருத்தே அவர் கிரியை செய்வார்)
அசுத்த ஆவி பிடித்த மனிதர்களை தேவன் அனேக சமயங்களில் அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுவதற்க்கு முன்பே கூட குணமாக்குகிறார். அவர்கள் அனேக சமயங்களில் கடவுளை பற்றி சிந்திக்க முடியாமலும், நினைத்ததை செய்ய முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். (அவருடைய பிரசன்னத்தின் மூலம்)
சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவர் வரும் போது (ஆவி என்னும் பகுதியில்) ஆத்துமா மற்றும் சரீரத்தை கெடுக்கும் தீய ஆவிகள் மனிதனை விட்டு போகின்றன.
ஆவியில் பரிசுத்த ஆவியானவர் இருந்தும் ஒரு சில சமங்களில் தீய ஆவிகள் மனிதனின் ஆத்துமாவையோ அல்லது சரீரத்தையோ விட்டு உடனே விலகுவதில்லை. ஏனெனில் அவை மனிதனின் பகுதிகளில் ஒன்றோடு ஒன்றாக ஆகி விடுகின்றன. இதை புரிந்து கொள்ள அட்டை பூச்சியால் கடிபட்டவனை எடுத்து கொள்வோம். அந்த பூச்சியை பிடித்து இழுத்தால் மனிதனின் தோலும் சேர்ந்து கூடவே வரும். ஆகவே தீப்பந்தம் காட்டி சூடு தாங்காமல் அந்த பூச்சி தானாகவே மனிதனை விட்டு விலகும்படி செய்ய வேண்டும். சில சமயம் தீய ஆவிகளை உடனே மனிதனை விட்டு விலகும்படி தேவன் செய்வதில்லை (என்னதான் வேண்டினாலும்) முதலில் அந்த தீய ஆவிகள் மனிதனின் பகுதியை விட்டு விலகும்படி தேவன் செய்கிறார். பின்னரே விலகும்படி செய்கிறார். இதற்க்கு சில சமயங்களில் வருடக் கணக்கில் கூட ஆகலாம். எந்த செயலுக்கும் காலமும், தேவ சித்தமும் நேரிட வேண்டும்.
மேற்கண்ட மனிதர்களை தேவன் வெறுத்து விடவும் இல்லை. அவர்களும் அவரை வணங்காமலும் இல்லை. அவர்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறவும் எந்த தடையும் இல்லை. ஏற்ற காலத்தில் நன்மை செய்யும்படி அவர்கள் மேல் கர்த்தர் நோக்கமாயிருக்கிறார்.
(இவர்கள் அனேகமாக புதிதாக (மற்ற மதத்திலிருந்து) இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க கூடும். நீங்கள் குறிப்பிட்ட சகோதரி புதிதாக இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களா இல்லையா என்று உறுதிப்படுத்தவும்)
ஆத்துமா என்னும் பகுதி ஆவிக்கு பிறகே தேவனால் வெற்றி கொள்ளப்பட வேண்டும். ஆகவே ஒரே சமயத்தில் ஆவியில் கடவுளும், ஆத்துமாவிலோ அல்லது சரீரத்திலோ தீய ஆவிகளும் இருக்க கூடும். ஆனால் இந்த நிலை அனேக நாட்கள் நீடிக்காது.
விசுவாசிகளுக்கு புதிதாக பிசாசு பிடிக்கும் என்று தோன்றவில்லை ஆனால் அவிசுவாசியாக இருந்த போது பிடித்த பிசாசு விசுவாசியாக ஆன பிறகு, பல காலம் ஆன பிறகும் கூட போகாமல் இருக்க வாய்ப்பு உண்டு. இத்தகைய நிலைமை பொதுவாக புதிதாக இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களுக்கே இருக்கும். (நீங்கள் குறிப்பிட்ட சகோதரி புதிதாக இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களா இல்லையா என்று உறுதிப்படுத்தவும்)
-- Edited by SANDOSH on Wednesday 21st of April 2010 09:55:03 PM
SANDOSH wrote: (நீங்கள் குறிப்பிட்ட சகோதரி புதிதாக இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களா இல்லையா என்று உறுதிப்படுத்தவும்)
சகோதரரே, நீங்கள் சொல்வதுபோல் அந்த சகோதரி இந்து குடும்பத்திலிருந்து
இரட்சிக்கப்பட்டு புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள்தான். அவர்கள் வீட்டில் வேறு யாரும் இன்னும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகினும் இந்த சகோதரி மிகவும் நல்ல உற்சாக நிலையில்தான் இருந்தார்கள். சமீபத்தில் யாரோ அவர்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்கு போனதாகவும் அவர்கள் சாப்பிட லட்டு கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டு முடித்தபின் அது விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் அதன் பிறகுதான் வயிற்றுவலி மற்றும் இந்த அசுத்த ஆவி தாக்குதல் வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இது ஒரு மனபிரம்மையா அல்லது உண்மையா என்று புரியவில்லை ஆனால் ஜெபித்த உடன் அவர்கள் அழுதுகொண்டு கீழே விழுந்ததை பார்த்தால் எதோ ஒரு அசுத்த ஆவியின் தாக்குதல் இருப்பதை அறியமுடிகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒரு மெய் கிறிஸ்தவனுக்குள் அசுத்த ஆவி வாசம் பண்ண முடியாது. ஆனால் அவன் கிறிஸ்துவுக்கு மெய் ஊழியம் செய்பவனாயிருந்தால் அவனை மற்றவர்களை அந்த ஆவிகள் ஏவி விட்டு சோதனை செய்யலாம், தாக்கலாம், மனசொர்வுகளைக் கூட கொண்டு வரக் கூடும். ஏன், பொய்யான ஊழியர்களை அவனுக்கு விரோதமாக எழுப்பி விடுவான் . ஆனால் கிறிஸ்து இயேசு அவனோடு கூட இருப்பதால் வெற்றி நிச்சயம். அல்லேலுயா!!!
/// ஒரு மெய் கிறிஸ்தவனுக்குள் அசுத்த ஆவி வாசம் பண்ண முடியாது. ஆனால் அவன் கிறிஸ்துவுக்கு மெய் ஊழியம் செய்பவனாயிருந்தால் அவனை மற்றவர்களை அந்த ஆவிகள் ஏவி விட்டு சோதனை செய்யலாம், தாக்கலாம், மனசொர்வுகளைக் கூட கொண்டு வரக் கூடும். ஏன், பொய்யான ஊழியர்களை அவனுக்கு விரோதமாக எழுப்பி விடுவான் . ஆனால் கிறிஸ்து இயேசு அவனோடு கூட இருப்பதால் வெற்றி நிச்சயம். அல்லேலுயா!!!////
மிக அருமையாய் சொன்னிர்கள் அருள்ராஜ் அவர்களே
உங்கள் கருத்து சிறிய வார்த்தைகளாய் இருந்தாலும் எல்லாவற்றையும் கூறியது போல் எனக்கு
தோன்றுகின்றது உங்கள் கருத்துகளையும் உங்கள் செய்திகளையும் படிக்க ஆவல்
தொடர்ந்து எழுதுங்கள்..........
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இக்கேள்விக்கு சுருக்கமான பதில், நிச்சயம் தாக்கும்! ஆனால் ஆவியானவர் உள்ளே இருப்பதால் அவர்களை நிலையாக பிடித்து, உள்ளே தங்கமுடியாது என்பதுதான் எனது கருத்தும்.
ஏசாயா 59:19வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
என்றே வசனம் சொல்கிறது. இந்த உலகில் இருக்கும் நாள்வரைக்கும் சத்துரு நிச்சயம் வருவான். எனவேதான் பவுல் சத்துரு சிங்கம்போல எவனை விழுங்கலாம் என்று அலைகிறான் என்று எழுதுகிறார். என்னதான் சத்துரு தந்திரம் செய்தாலும் ஆவியானவர் அவனை மேற்கொள்ள நமக்கு பெலந்தருவார். ஆவியானவர் துணையோடு நாம் சத்துருவை மேற்கொள்ள வேண்டும்.
I தீமோத்தேயு 4:1ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்
பவுல் கொடுத்துள்ள எச்சரிப்புபடி, வஞ்சிக்கிற ஆவிகளுக்கு செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு சிலர் விலகிபோவார்கள் என்று ஆவியானவரே சொல்வதாக எழுதியிருக்கிறார். இப்படி விலகிபோனவர்களுள் அசுத்தஆவிகள் குடிவர முடியும் என்றே நான் கருதுகிறேன்
ஆவிக்குரியவர்களை தாக்க சத்துரு "வரவேமாட்டான்" என்றோ "மேற்கொள்ளவே முடியாது" என்றோ உறுதியாக சொல்லமுடியாது!
-- Edited by SUNDAR on Wednesday 28th of April 2010 11:49:19 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நேற்று நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி எனக்கு மிகவும் மன கஷ்டத்தை கொண்டுவந்தது.
எங்கள் ஊரில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு நல்ல விசுவாசி. இந்து மதத்தில் இருந்து இரட்சிக்கபட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. மிகவும் நேர்மையானவர் ஆண்டவரின் வார்த்தைகளை கைகொண்டு நடக்க அதிகம் பிரயாசப்படுபவர். எப்பொழுதும் வேதம் தியானம் என்று இருப்பவர் சபையினருடன் சேர்ந்து அதிகம் ஊழியங்களில் பங்கு பெறுபவர். ஆவியின் வரத்தை பெற்றவர், ஜெபிபவர் மற்றும் நல்ல மனிதர்.
திடீர் என்று மூளை குழப்பம் போல் ஏற்ப்பட்டு என்ன செய்கிறோம் என்று அறியாமல் பல காரியங்களை செய்வது, ஓடுவதும் பிதற்றுவதுமான நிலைக்கு போய்விட்டாராம். தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் அவர், சில நேரங்களில் நார்மலாகவும் சில நேரங்களில் ஒன்றுமறியாத நிலையிலும் மாறி மாறி இருக்கிறாராம்.
மிக குறைந்த வயது மனைவி மற்றும் மூன்று சிறு சிறு குழந்தைகள் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் இருக்கும் அவருக்கு அப்பாஅம்மா மரித்துவிட்டனர். மிகுந்த பிரச்சனையில் இருக்கும் அவருக்காக ஜெபித்துகொள்ளுங்கள்.
ஆண்டவரின் செட்டையின் கீழ் அடைக்கலமாக வந்தவர்களை அவர் நிச்சயம் கைவிடமாட்டார் ஆகினும் ஒரு நல்ல விசுவாசிக்கு இப்படி ஒரு நிலை ஏன் ஏற்ப்படுகிறது என்பது புரியாத ஒரு புதிராக இருக்கிறது!
-- Edited by SUNDAR on Tuesday 4th of May 2010 11:29:12 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த தலைப்பில் ஆவிக்குரியவர்களை அசுத்தஆவிகள் தாக்குமா? என்ற கேள்விக்கு என்னுடைய கருத்து என்னவெனில் தாக்குவதற்கு அனேக சாத்தியம் உண்டு என்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில் எப்படிப்பட்ட விசுவாசத்தில் நிறைந்த தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தாலும் நிச்சயம் அவர்கள் எப்போதும் தேவனுடைய பிரசனத்திலே தொடர்ந்து இருக்க முடியாது.
ஒருசில அத்தியாவசமான காரியங்களுக்கு அவர்கள் வெளியில் வரவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு தாக்குதல் இருக்கும் பவுல் கூட தன்னுடைய நிருபத்தில் அதைதான் குறிபிட்டுள்ளார்.
எபேசியர்6அதிகாரம்
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
இந்த வசனத்தின்படி சாதாரண ஒரு மனுசனைவிட ஆவிக்குரிய ஒரு மனிதனுக்கு நிச்சயம் அசுத்த ஆவியின் தாக்குதல் இருக்கும் ஆனால் அந்த ஆவி மேற்கொள்வதோ அல்லது அவன் அவைகளை மேற்கொள்வதோ அவனுடைய பரிசுத்த ஜீவியத்தை பொறுத்தே அமைகிறது என்றே நான் கருதுகிறேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )