இன்றைய கிறிஸ்த்தவ உலகில் ஒருவரால் எது சரியான உபதேசம் எது கள்ள உபதேசம் என்பதை பகுத்தறிவது மிகவும் சிரமமான காரியம். ஒவ்வொரு சபையும் தங்களுக்கென்று ஒருசில வசனங்களை வசனங்களை பிடித்துகொண்டு தாங்கள்தான் சரியான வழியில் போவதாகவும் மற்றவர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற கருத்தில் போதிக்கும் நிலையில் இருப்பதை பார்க்கமுடிகிறது
வேறுபட்ட உபதேசங்களின் பட்டியல்:
இயேசுதான் ஒரே தேவன், பிதா குமாரன் பரிசுத்த ஆவி எல்லாமே அவர்தான் என்று போதிக்கும் சபைகள்
பிதாவாகிய தேவன் வேறு குமாரனாகிய இயேசு வேறு என்று போதிக்கும் சபைகள்.
திரித்துவத்தை நம்பாத ஆவியானவரை அறியாத அனேக சபைகள்
சனிகிழமைதான் ஓய்வுநாள் அதை ஆசாரிக்காதவர்கள் எல்லோரும் தவறுகின்றனர் என்று சொல்லும் சபைகள.
யகோவா தேவனை மட்டும் ஆராதிக்கும் யகோவா சாட்சிகள்
எல்லோருக்கும் மீட்பு நரகம் இல்லை என்று போதிக்கும் வேதமாணவர்கள் என்ற கூட்டம்.
ஆண்டவரின் கட்டளையை கட்டாயம் கைக்கொள்ளவேண்டும் என்று போதிக்கும் அரிதான சபைகள்
இயேசு பாவத்துக்கு மரித்துவிட்டார் எனவே எக்கட்டளைகளை கைகொள்ள வேண்டிய தேவையில்லை என்று போதிக்கும் சபைகள்
வெள்ளை உடை மட்டுமே மற்றும் நகை அணியக்கூடாது என்ற போதனை உள்ள CPMசபைகள்
மாதாவை தெய்வமாக்கிய தூதர்களுக்கும் சிலையுண்டாக்கி வழிபடும் கத்தோலிக்க சபைகள்
ஆவியும் அனலுமற்ற அனேக பிரிவுகளுடன் இருக்கும் பாரம்பரிய சபைகள்
"கிறிஸ்த்துவின் சபை" என்றுதான் பெயர் வைக்கவேண்டும் அப்படி பெயர் வைக்காத சபைகள் எல்லோரும் தவறான சபைகள் என்று போதிக்கும் சபைகள் .
ஆராதனை வேளைகளில் வாத்திய கருவிகளை பயன்படுத்த கூடாது என்று போதிக்கும் சபைகள்
இன்னும் எத்தனையோ!
இப்படி பிரிந்திருக்கும் ஒவ்வொரு சபையினரும் தாங்கள் செய்வதை நியாயபடுத்த எதாவது வசன ஆதாரத்தை நிச்சயம் வைத்திருக்கின்றனர். வேத வசனம்தான் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிற்றே! யார் எந்த கருத்துடன் வசனம் தேடினாலும் நிச்சயம் அதற்க்கு ஏற்றாற்போல் ஒரு வசனம் வேதத்தில் இருக்கும்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பிகொடு என்று போதித்த அதே இயேசு வஸ்த்திரத்தை விற்று பட்டயம் வாங்கு என்றும் போதித்திருக்கிறாரே!
லூக்கா 22:36 ; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
நியைபிரமாணம் கைகொள்ள தேவையில்ல ஏற்று போதித்த பவுலே விபச்சாரகாரன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டான் என்றும் கூறியிருக்கிறார். அதைதான் "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக" என்று நியாயபிரமாணம் போதிக்கிறது என்பது பவுலுக்கு தெரியாதா என்ன?
இவ்வாறு அனேக பிரிவாக பிரிந்திருக்கும் சபைகள் ஒருவரை ஒருவர் பார்த்து தாங்கள்தான் சரியான பாதயில் போவதாகவும் மற்றவர்கள் எல்லோரும் தவறான கள்ள உபதேத்தில் இருப்பதாகவும் கருதிகொண்டு கட்டுரைகள் எழுதவது சகஜமாகிவிட்டது.
அப்போஸ்தலர்கள் வாழ்ந்த ஆரம்ப காலத்திலேயே கள்ள உபதேசங்களும் ஆரம்பித்துவிட்டதால் இன்றைய நிலையில் எது உண்மை உபதேசம் எது கள்ள உபதேசம் என்பது யாருக்குமே தெரியாது. அவரவர் திருப்திக்கு வேண்டுமானால் அடுத்தவரை தாக்கி கட்டுரைகள் எழுதிக்கொள்ளலாம். அதிக கூட்டத்தோடு சேர்ந்து இருப்பதால், தாங்கள் சரியான உபதேசத்தில் இருக்கிறோம் என்று கருதுவது தவறான நிலையே அன்றி வேறல்ல.
"இதோ எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டேன் இனி புதிதாக் நான் எதையுமே செய்யமாட்டேன்" என்று தேவன் எங்கும் சொல்லவில்லை மாறாக "இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்" என்றே சொல்லியிருக்கிறார்.
வசனத்தின்படிதான் பேசுவோம் வசனத்தின் அடிப்படையில்தான் எல்லாவற்றயும் ஆராய்வோம் என்று அடிக்கொருதரம் சொல்லும் வேதவிசுவாச கூட்டத்தினர், "மனிதன் மரணமில்லாமல் வாழ" வேதாகமம் வழி சொல்கிறது என்பதை எட்டு வசன ஆதாரத்துடன் சொன்னபோது "காதில் பூ சுற்றுகிறான்" "இது கள்ள உபதேசம்" என்று நற்சாட்சி கொடுத்தனர். பிறகு எந்த வசனத்தின் அடிப்படையில்
இவர்கள் வாழ்கிறார்கள் பேசுகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. (இதே கருத்தை தோமா எழுதிய சுவிசேஷமும் கூறுகிறதாம். அதனால்தானோ என்னவோ பைபிளைவிட்டே அதை தூக்கிவிட்டார்கள்)
எனவே அன்பானவர்களே வேதவசனங்கள் என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிவிக்கப்பட்ட உண்மை! சாதாரண நிலையில் ஒருவித பொருள்தரும் வேதாகமம் முற்றிலும் ஆவியில் நிறைத்த நிலையில் அறிதர்க்கரிய பொருளை தருகிறது. அதை நான் அனுபவத்தில் உணர்ந்தவன்.
ஆவிக்குரிய நிலையில் இருக்கும் வேதவசனங்களின் உண்மை பொருள் என்ன?
மொத்த வேதாகமத்தின் சாரம்தான் என்ன?
தேவன் இவ்வுலகில் இன்னும் என்ன எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்?
முடிவு எப்படி? எப்பொழுது? எவ்வாறு?
நியாயதீர்ப்பு என்பது எதன் அடிப்படையில்?
போன்ற அனைத்து கேள்விகளுக்கும் முடிவானபதில் தேவனின் திருகரத்திலேயே இருக்கிறது. அதை யாரும் அவ்வளவு சீக்கிரம் அறியமுடியாது என்றே நான் கருதுகிறேன்.
இந்நிலையில் நான்தான் பெரியவன் நாங்கள் போகும் வழிதான் சரியானது என்று மேன்மைபாராட்டி பிறரை கள்ள உபதேசம் என்று தீர்ப்பது ஒரு சரியான நிலை அல்ல என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Tuesday 20th of April 2010 07:50:37 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னை ஆண்டவர் சுமார் ஆறு நாட்கள் அபிஷேகித்து நடத்தியபோது, உலகில்உள்ள எல்லா மனிதர்களும் எனக்கு பேய்கள்போல தெரிந்தார்கள், ஆனால், உலக நடத்தைகளை விட வேறுபாடான எனது நடத்தைகளை பார்த்த இந்து கோஷ்டிகள் எனக்கு பேய் பிடித்து விட்டது என்று கருதி, சங்கிலி போட்டு காலை கட்டிவைத்து விட்டார்கள்.
அதுபோல்
அநேகர் சேர்ந்து (சுமார் 90௦% கிறிஸ்த்தவர்கள்) ஒரு கூட்டத்தை கள்ள உபதேசம் என்று சொல்ல, அவர்களோ நாங்கள்தான் சரியான வழியில் இருக்கிறோம் மற்ற எல்லோருமே கள்ள உபதேசம் என்று சொல்லிக்கொண்டு எல்லா ஊழியர்களையும் தவறாக விமர்சித்து வருவது ஆச்சர்யமே! .
உண்மையை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவரும் யானையின் ஒரு பக்கத்தை கண்டு கொண்டார்கள். இப்பொழுது விடாபிடியாக அதுதான் யானை என்று சொல்லி சாதிக்கிறார்கள் என்பதுபோல் எனக்கு தெரிகிறது. அனேக பிரிவினர் சொல்வதில் தவறில்லைதான் ஆனால் "அந்த ஒரு பக்கம் மட்டும் யானை அல்ல, இன்னும் அது பெரிதாக இருக்கும்" என்று சொன்னால் அதை நம்பும் அளவிற்கு அவர்களுக்கு மனபக்குவம் இல்லை.
இன்று பல்வேறு கிறிஸ்த்தவ பிரிவுகள் உள்ளன ஒருவரை ஒருவர் கள்ள உபதேசம் என்று ஒதுக்குகின்றனர். எனக்கு எல்லோர் சொல்வதிலும் சில உண்மைகள் இருப்பது தெரிவதால் நான் யாரையும் கள்ள உபதேசம் என்று தீர்க்க விரும்பவில்லை.
எது கள்ள உபதேசம் எது நல்லஉபதேசம் என்று ஆண்டவர் ஒருவரே அறிவார்!
I கொரிந்தியர் 4:5ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்கு முன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்
தேவனின் மகத்துவங்கள் மகாபெரியது! ஒருவரும் அவரை முழுமையாக அறியவும் முடியாது அறியவும் கூடாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனின் மகத்துவங்கள் மகாபெரியது! ஒருவரும் அவரை முழுமையாக அறியவும் முடியாது அறியவும் கூடாது! (What I read here is the voice of Satan as it happened in case of Apostle Peter, Matt 16. Any man can know God to the extent He has revealed Himself in His Word (Bible is the only Word of God)).
ஒருவரும் தேவனை ஒருபோதும் கண்டதில்லைதான். ஆனால் இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட போது என்னைக் கண்டவன் பிதாவைக் (தேவனை) கண்டான், என்னை அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும் கூறப் பட்டிருக்கிறதே. வேதம் தேவத்துவத்தை வெளிப்படுத்திய அளவுக்கு நாம் அவரை அறிந்து கொள்ள பிரயாசப் பட வேண்டும். அதை செய்யும் உண்மை ஆத்துமாக்கள் சிலவே. அவர்கள் தவறை தவறென்றும்; உண்மையை உண்மையென்றும்; சத்தியத்தை சத்தியம் என்றும்; சத்தியம் அல்லாதவற்றை மற்ற மக்களுக்கு எடுத்துரைத்து - செல்லும் வழி தவறென்றும் சொல்ல வேண்டும். அதுவே சரி என்று எனக்கு தோன்றுகிறது.
ஏனென்றால், மனுக்குல போது சத்துரு "சாத்தான்" இந்நாட்க்களில் உண்மை ஊழியர்களை வெகுவாக தாக்குகிறான். சத்துரு கொஞ்ச காலம் மாத்திரமே உண்டென்று அறிந்து. உண்மை விசுவாசிகளையும் ஊழியர்களையும் எல்லா வகையிலும் அடக்கவும், தாக்கவும் முற்பட்டிருக்கிறான்.
Wish you well. God bless you all. There are lot of extra-Biblical churches that are preaching or insisting on unnecessary things which can not SAVE the SOULS. But they are giving false assurance to the simple souls. If we wait until Christ Jesus come, then it shall be too late. It is always better to express boldly "What is RIGHT at The RIGHT TIME and the TRUTH MUST BE APPROPRIATED ALWAYS WITHOUT ANY DELAY". Now (TODAY) is the TIME OF SALVATION. Not tomorrow. God bless you.
-- Edited by arulmraj on Tuesday 24th of August 2010 06:17:58 PM
தேவனின் மகத்துவங்கள் மகாபெரியது ஒருவரும் அவரை முழுமையாக அறியவும் முடியாது அறியவும் கூடாது!
arulmraj wrote: (What I read here is the voice of Satan as it happened in case of Apostle Peter, Matt 16. Any man can know God to the extent He has revealed Himself in His Word (Bible is the only Word of God)).
ஒருவரும் தேவனை ஒருபோதும் கண்டதில்லைதான். ஆனால் இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட போது என்னைக் கண்டவன் பிதாவைக் (தேவனை) கண்டான், என்னை அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும் கூறப் பட்டிருக்கிறதே.
சகோதரர் அருள் அவர்களே உங்கள் பதிவுகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நான் சுயமாக மேற்கண்ட வார்த்தைகளை எழுதவில்லை சகோதரரே கீழ்க்கண்ட வேதவார்த்தைகளை சற்று ஆராய்ந்து பாருங்கள்:
யோபு 36:26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்,நாம் அவரை அறிய முடியாது;
சங்கீதம் 145:3கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது
மேலே சொல்லப்பட்டுள்ள வேத வசனங்களின் அடிப்படையிலேயே தேவனின் மகத்துவத்தை யாரும் முழுமையாக அறியமுடியாது என்று எழுதினேன்.
அவ்வாறிருக்கையில் இவ்வரிகள் சாத்தானின் வார்த்தைகள் என்றும் பேதுருவின் வார்த்தைகளுக்கு ஒப்பிட்டு எப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஒருவேளை அது பழைய ஏற்பாட்டு வசனம் என்று தாங்கள் கருதினாலும்
புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசு மாமிசத்தில் வெளிப்பட்டதால் எல்லோரும் தேவனை முழுமையாக அறிந்து பார்த்துவிட்டதாக வேதம் கூறுகிறதா?
"இயேசு தேவனை வெளிப்படுத்தினார்" என்றுதான் வேதம் கூறுகிறது இதற்க்கு பொருள் என்ன? "தேவன் யார், எப்படிப்பட்டவர் என்ற உண்மையை இயேசுவே வெளிப்படுத்தினார்" என்றுதான் எடுக்க முடியும் ஏனெனில் இதைஎழுதிய யோவான் மீண்டும் தனது நிருபத்தில்
I யோவான் 4:12தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை
என்று எழுதுகிறார்.
யோவான் இயேசுவோடு இருந்தவர். இயேசுவின் மார்பின் சாய்ந்து அனுபவித்தவர் அவரே மீண்டும் தேவனை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை என்று எழுதுவதால் இயேசுவை கண்டுவிட்ட அவர் தேவனை முழுமயாக கண்டுவிட்டதாக எழுதவில்லை எனவே நான் எழுதிய வார்த்தையில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
இதுவும் இயேசுவின் தரிசந்ததை கண்ட பவுலே "தேவன் மனுஷன் ஒருவரும் காணக்கூடாதவராக இருக்கிறார்" என்று திட்டவட்டமாக கூறுகிறார். "காணக்கூடாதவர்" இதன் பொருள் தேவனை காணும் அளவுக்கு மனித கண்களுக்கு சக்தியில்லை என்பதுதான்.
எனவே தேவனை யாரும் முழுமையாக அறிய முடியாது!
"தேவனை நான் முழுமையாக அறிந்துவிட்டேன்" என்று சொல்வதோ அல்லது "நான்தான் கடவுள்" என்று சொல்வதோதான் சாத்தானின் வார்த்தைகள் என்று எடுக்கமுடியும்.
மற்றபடி தங்களின் எழுத்துக்களில் சத்தியத்தின் மேலுள்ள வாஞ்சையும் சத்தியத்தை சத்தியம் என்று துணித்து சொல்ல தூண்டும் நல்ல கருத்துக்களையும் அறிய முடிகிறது!
தொடர்ந்து பதிவுகளை தாருங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)