சமீபத்தில் பேப்பரில் படித்த செய்தி : (ஆந்திராவில்)
ஒரு பள்ளியில் படிக்கும் சிறுவன் நல்ல கணித திறமை உடையவன். கணித மேதை இராமானுஜம் போல் வர வேண்டும் என இலட்சியம் கொண்டவன். கணித தேர்வில் ஒரு இரண்டு மார்க் கேள்விக்கு பதில் எழுத முடியாததால் தற்கொலை செய்து கொண்டான். இறப்புக்கு பிறகு தன் கனவு நாயகனான இராமானுஜத்தை பார்ப்பேன் என ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இப்போது கணித மேதை இராமானுஜம் பற்றி பார்ப்போம். இராமானுஜம் படிக்கும் போது படிப்பில் சுமார்தான். ஆனால் நல்ல திறமையானவர்கள் கூட சால்வ் பண்ணுவதற்க்கு பல நாட்கள் எடுத்துக் கொள்ளும் கணக்கை கூட நிமிடங்க்ளில் விடை கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவர். இவர் எந்த பெரிய கணித மேதையிடமும் மாணவனாக இருந்து படித்ததில்லை..
அவரின் கணித திறமை மனித மூளைக்கு அப்பாற்பட்டதாக விளங்கியது. பெரிய கணித மேதைகளே விடை காண சுமார் ஆறு மணி நேரம் எடுத்துகொள்ளும் கணக்குக்கு (அதுவும் விடை சரியாக இருக்கும் என்ற உத்திரவாதம் இல்லை) நிமிடங்களில் விடை கண்டு பிடித்து விடுவார், ஒரு கணிதத்துக்கு விடை கண்டு பிடிக்க முயலும் போது கண்கள் இரண்டும் புருவ மத்தியில் நிலை குத்தி நிற்க்க சிறிது நேரத்தில் விடை கண்டு பிடித்து விடிவார்.
மனித மூளையை கடந்த பகுதி ஒன்று மனிதனில் உண்டு. அது ஆவி (கிருத்துவத்தில்), அகக்கண் அல்லது நெற்றிக் கண் (இந்து மதத்தில்) எனப்படும். இந்த பகுதி புருவ மத்தியில் இருப்பதாக இந்து யோகிகள் சொல்கின்றனர். அறிவியலின்படி இது வலது மூளையின் பணியாகும். இந்த வலது மூளை மிக அதிகமான மனிதர்களில் செயல்படாமல் இருக்கிறது.
மனிதர்கள் போற்றும் பல கலைகளை செய்தவர்களில் பலர் (ஓவியர்கள், பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், கதை எழுதுவோர், ஆன்மிக நூல்களை எழுதியோர்) தாங்கள் ஒரு குறிப்பிட்ட மனனிலையில் இருக்கும் போது இந்த பகுதியோடு தொடர்பு ஏற்படுவதால் தங்கள் படைப்புகள் உண்டானதாக சொல்லுகின்றனர். அடிக்கடி ஏற்படும் இந்த தொடர்பு அறுந்து விடும் போது அவர்கள் படைப்புகள் நின்று போவதும, முன்பிருந்த அழகு இல்லாமல் போவதும் உண்டு. அனேகருக்கு இவை இயற்கையாக அமைந்து இருக்கும். இரவிந்திரனாத் தாகூர், வான் கோ, பாலகுமாரன் போன்றோர் இவர்களை போன்றவர்கள். இன்னும் அனேகர் உண்டு . இந்த ஆற்றலை இரண்டு வகையாக பெறுவதாக சொல்லுகின்றனர்.
1. தாங்கள் படைக்கும் கலையை இயற்க்கையிலிருந்து பெற்றுக் கொள்ளும்படி அகக்கண் டியூன் செய்யப்பட்டுள்ளது
2. ஆவி உலகத்தில் உள்ள பிற ஆவிகளிடம் தொடர்பு ஏற்படுவதன் மூலமாக படைப்பதாக சொல்லுகின்றனர். அனேக ஆன்மீக நூல்கள் இவ்வாறு இயற்றப்பட்டவையே.இதை சானலிங் என்று சொல்வர்.
இந்த காரியங்கள் நடைபெறும் போது சிலர் சுய நினைவோடும் சிலர் சுய நினைவற்ற நிலையிலும் இருநதுள்ளனர்.
இந்த சானலிங் மூலமாக எழுதப்பட்ட ஆன்மிக புத்தகத்தில் குறிப்பிடத்தக்கது திருக்குரான்
சில யோக முறைகள் மூலமாக இந்த நெற்றிக் கண்ணை திறக்க வைத்து டெலிபதி, குறி சொல்லுதல், வசியபடுத்துதல், உடலை விட்டு வெளியேறுதல் முதலியவற்றை செய்யும் முறையை அறிந்திருந்தனர். இந்த பகுதி இயங்குவதை வைத்து நான்காக பிரிக்க முடியும்.
1. இயற்கையாக (பிறப்பிலேயே) 2. பயிறச்சிகளின் மூலம் 3. பிற ஆவிகள் தாங்களாகவே தொடர்பு கொள்வதன் மூலம் 4. பிற ஆவிகளுடன் தொடர்பு கொள்ளதின் மூலம்
இவர்கள் எதை எதை பெறுகிறார்கள் என்றால்
1. கலைகளை படைக்கும் ஆற்றல் 2. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் 3. ஆன்மீக அனுபவங்கள் 4. தங்களூக்கு வேண்டியவற்றை கேட்டு பெற்றுக் கொள்ளூதல்
நாம் முதலில் கண்ட சிறுவனைப் போல இத்தகைய அமைப்பு இல்லாதவர்கள் இந்த அமைப்பு இருந்து தங்கள் துறையில் வெற்றி கண்டவர்களை போல் வர வேண்டும் என நினைப்பது, முயலவது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகும்.
இந்த கட்டுரை தனியாக வந்தாலும் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் கட்டுரையில் ஆவி என்னும் தலைப்பின் கீழ் வர போகும் கட்டுரையாகும்.
அகக்கண் என்பது உள்ளான மனிதனின் இருதயத்தை குறிக்கும். உள்ளான இருதயமாவது - ஆவியில் காணப்படும் "மனசாட்சியும் ஆத்துமாவில் காணப்படும் ஒரு பகுதியாகிய மனதுமே" ஆகும். ......... இதை குறித்து அதிகமாக சிந்திக்க காலம் செல்லாது............