என்னுடைய அக்கா அவர்களின் திருமண காரியத்திற்காகக் ஒலிபெருக்கியை போடவேண்டும் என்று
ஒலிபெருக்கி கடையில் திருமண காரியத்திற்காகக் ஒலிபெருக்கியை போடவேண்டும் என்று கூறினேன்
அவர்கள் சரி போடுகின்றோம் என்று கூறி ஒரு விண்ணப்பத்தை என்னுடைய கரத்தில் கொடுத்து போலீஸ் ஸ்டேசனில் அனுமதி வாங்கும் மாறு கூறினார் நானும் என் நண்பரும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியதை செய்து போலீஸ் ஸ்டேசனில் எடுத்து சென்றும் அந்த அதிகாரி விண்ணப்பத்தை வாங்கி படித்து விட்டு பில் (bill ) வேண்டும் என்று கூறினார் அதற்கு நான் பில் ஏதும் இல்லை என்று கூறினேன் அப்பொழுது அவர் திரும்பவும் பில் வேண்டும் என்று கூறினார் எனக்கு அப்பொழுது தான் புரிந்தது பில் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்து இருந்தாலும் நான் பில் எதுவும் இல்லை என்று கூறி கொண்டு இருந்தேன் அப்பொழுது ஒரு அதிகாரி தம்பி ஒரு நூருபாய் குடுப்பா என்று கூறினார் என்ன செய்வது என்று தெரியாமல் நான் ஐம்பது ரூபாய் கொடுத்தேன் அந்த அதிகாரி அந்த பணத்தை வாங்காமல் நுருருபாய் வேண்டும் என்று கூறினார் கடைசியில் அவர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன்
இப்படி கொடுப்பது சரியா இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்வது அவர்களிடம் நாம் வாக்குவாதம் பண்ண முடியுமா
தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதிக்கவும்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
அவ்வாறு தேவன் விரும்பாத செயலை நாம் செய்யாதிருந்தால் மட்டும்போதாது அடுத்தவருக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் தேவனின் வார்த்தைகளை மீறி செயல்பட நாம் ஒரு கருவியாக இருக்ககூடாது என்பதால்தான்.
ஆனால் எங்கும் லஞ்சமும் ஊழலும் மலிந்து கிடக்கும் இந்த காலத்தில் இது சாத்தியமா?
மிகவும் கடினமான ஓன்று!
எனவே இதுபோன்ற காரியங்களை எவ்வாறு மேற்கொள்ள என்று தொடர்ந்து கருத்துக்களை பரிமாறலாம்.
-- Edited by SUNDAR on Thursday 22nd of April 2010 09:00:44 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எசேக்கியேல் 22:12 இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 13. இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன். 14. நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
எதற்காக பரிதானம்?
நீதிமொழிகள் 17:23 துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான். ஆமோஸ் 5:12 உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள். ஏசாயா 1:23 உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
பரிதானம் வாங்கியவர்கள்? உதாரணம்:யோவேல், அபியா I சாமுவேல் 8:3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
பரிதானம் வாங்காதவர்கள்? உதாரணம்: சாமுவேல் I சாமுவேல் 12:3 இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 4. அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். 5. அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார், அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சி தான் என்றார்கள்.
தேவனிடத்தில் பரிதானம்??? II நாளாகமம் 19:7 ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.
உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
நீதிமொழிகள் 20:34 ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். 35. அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
தேவனுடைய பிள்ளை:
சங்கீதம் 15:5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
ஏசாயா 45:13 நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
வேதாகம காலங்களிலும் பழைய காலத்திலும் (செய்த தவறுக்கு தண்டனை கிடைக்க விடாமல் தடுக்க, அல்லது குற்றம் செய்யாதவனுக்கு தண்டனை கொடுக்கவும்) நியாயத்தை புறட்ட லஞ்சம் கொடுக்கப் பட்டது.
சுருக்கமாக, ஒழுங்குக்குப் புறம்பானதை செய்யவும், செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமலிருக்கவும் லஞ்சம் கொடுக்கப் பட்டது. (செய்யக் கூடாததை செய்யவும், செய்ய வேண்டியதை செய்யாமலிருக்கவும்)
புதிய ஏற்பாட்டில்:
1. யூதாஸுக்கு (லூக்கா 22:3-6)
மத்தேயு 26:15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பதுவெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
2.கல்லறையை காத்த காவல் சேவகருக்கு:
மத்தேயு 26:12 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: 13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். 14 இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். 15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
இப்போதோ ஒருவர் செய்ய வேண்டிய கடமையை அவர் செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது.. (செய்ய வேண்டியதை செய்வதற்கே....)
ஆயினும் இதே சூழ்நிலை பவுலுக்கும் ஏற்பட்டது... அப்போஸ்தலர் 24:26 மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
பவுல் மேல் குற்றமில்லையெனினும் யூதர்களை எதிர்த்து இவன் ஒருவனுக்கு நன்மை செய்ய வேண்டுமா என யோசித்து அதற்கு ஏதேனும் சன்மானம் கிடைக்குமா என எதிர்பார்த்தான் பேலிக்ஸ்...
லஞ்சம் வாங்குவது தவறு என்பது பற்றியும் லஞ்சம் எக்காரியங்களுக்காக எல்லாம் வாங்கப்படுகின்றன என்பது பற்றியும் லஞ்சம் வாங்குவதால் வரும் விளைவுகள் மற்றும் அதற்க்கான தண்டனைகள் பற்றியும் வேத வசன ஆதாரத்துடன் சகோதரர் தீமொத்தி தெளிவான பதிவை தந்துள்ளார்.
எவ்விதத்திலும் லஞ்சம் வாங்குவது நிச்சயம் பாவமே. அனால் லஞ்சம் கொடுப்பது என்பது நமது விருப்பபடி நடைபெறும் செயல்அல்ல. சில முக்கியமான காரியங்கள்நிறைவேற்ற சிலருக்கு லஞ்சம் கொடுக்க கூடிய கட்டாய நிலைக்குள் தள்ளப்படுகிறோம். மேலும் லஞ்சம் கொடுக்ககூடாது என்று வேதத்தில் எங்கும் வசனம் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
எனவே நமது காரியங்களில் அவசியம் அவசரம் இவற்றை பொருத்தும், நாம் எந்த காரியத்துக்காக லஞ்சம் கொடுக்கிறோம் என்பதன் அடிப்படையிலும் லஞ்சம் கொடுத்தல் சில இடங்களில் தவறாகவும் சில இடங்களில் தவரற்றதாகவும் கருதப்படலாம.
சட்டத்துக்கு எவ்விதத்திலும் புறம்பாயிராமல் சட்டத்துக்குபட்டு செய்யப்படும் ஒரு காரியத்தை அனுமதிக்க, அந்த கடமையை செய்யும் அதிகாரி தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கும்போது அதை கொடுத்து அக்காரியத்தை செய்வதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன் ஏனெனில் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்று இயேசு போதித்திருக்கிறார்.
மற்றபடி சட்டத்தின் ஏதாவது ஒரு வரைவுக்கு புறம்பாகவோ அல்லது பொதுவாக அக்கரியத்துக்கான அனுமதி கிடைப்பதற்கு முன்கூட்டி அனுமதி பெறவோ அல்லது வேறு எந்த காரியத்துக்காகவும் லஞ்சம் கொடுப்பது தவறான ஒன்றுதான்.
ஒருமுறை நான் வேலைபார்த்த கம்பனியின் விற்பனை வரி அதிகாரி தீபாவளிக்கு பட்டாசு வாங்கி தருபடி கேட்டார். அனால் எங்கள் முதலாளியோ நான் ஏன் அவனுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க வேண்டும்? எனது கணக்கு மிக நேர்மையான ஓன்று, நான் எதுவும் கொடுக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அதனால் கோபமடைந்த அந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றலாகி போகும் சில நாட்களுக்கு முன். சுமார் 5 வருடங்களுக்கு முன்னுள்ள ஒரு வருட கணக்கை எடுத்து அவ்வருடத்தில் நாங்கள் ஒரு பெரிய தொகை விற்பனை வரி கட்டவேண்டிய பாக்கி உள்ளது என்பது போல் ஒரு நோட்டிஸ் அனுப்பிவிட்டு போய்விட்டார்.
அதன்பின் நாங்கள் சுமார் இரண்டு வருடம் போராடி அப்பியல் செய்து அதுபோல் எதுவும் பாக்கி இல்லை என்பதை நிரூபித்தோம். அதானால் ஏகப்பட்ட கஷ்டம் மற்றும் பணசெலவு எங்களுக்குத்தான் வந்ததே தவிர அவர் எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விட்டார்.
இப்படிபட்டவர்கள் உலகில் இருக்கும் போது சில நேர்மையான காரியங்களை நிறைவேற்ற லஞ்சம் கட்டாயப்படுத்தபடுபோது அவரோடு எதிர்த்து நிற்காமல் அதை கொடுப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன் ஆகினும் அப்படிபட்ட காரியங்களை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.
சகோதரர்கள் தங்கள் அனுபவத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட காரியங்கள் இருந்தால் பதிவிடவும்.
-- Edited by இறைநேசன் on Saturday 24th of April 2010 01:39:13 PM
லஞ்சம் கொடுப்பது பற்றி என்னுடைய கருத்து என்னவெனில்
ஒரு அதிகாரியிடமும் அல்லது ஏதாவது ஒரு காரியம் நடக்க வேண்டும்
என்பதற்கு நாமே முற்பட்டு நான் உங்களுக்கு இவ்வளவு பணம் தருகின்றேன்
எனக்கு இந்த வேலையை செய்து கொடுக்க வேண்டும் எனக்கு இந்த வேலையை வாங்கி
தர வேண்டும் என்று நாம் கொடுக்கும் இந்த லஞ்சம் நிச்சயம்பாவமாகும்
என்னுடைய நண்பன் அவர்களின் தாயார் மருத்துவமனையில் இறந்து போய்விட்டனர்
அவர்கள் துணியை மாற்ற ஒரு நூறு ருபாய் அவர்கள் சரிரத்தை கிலே எடுத்து கொண்டு வர அவருக்கு ஒரு நூறு ருபாய் மற்றும் என் அக்காவுக்கு குழந்தை பிறந்த போது பார்க்க மருத்துவ மனைக்கு சென்றேன் குழந்தையை பார்க்க விடவில்லை அதன் பின் என் தாயார் அவர்களுக்கு பணம் கொடுத்த உடன் என்னை உள்ளே அனுமதித்தனர் இப்படி எல்லா காரியத்திலும் பணம் பணம் என்று இருக்கும் போது நம்மால் என்ன செய்ய முடியும்
.................... நாம் விருப்ப பட்டு ஒரு காரியத்திர்காகவோ எந்த ஒரு வேலைக்காகவோ லஞ்சம் கொடுப்பது தான் பாவமாகும் என்பது என்னுடைய கருத்து .......................................
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 27th of April 2010 03:12:24 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
விற்பனை வரி அலுவலகம், வருமானவரி அலுவலகம், சேவை வரி அலுவலகம், காவல் துறை போன்ற அரசு துறை அலுவலகம் எதிலும் கையூட்டு இல்லாமல் ஒரு கோப்புகூட நகர்வது இல்லை. இது இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஒரு பெண்ணே துணிந்து இவ்வளவு கொடு என்று கொஞ்சமும் தயங்காமல் கேட்கிறார். எவ்வளவு நியாயமான கோரிக்கை என்றாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட். இதில் நான் பட்ட அனுபவங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல
ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எழுதுகிறேன்.
ஒருமுறை ஒரு சான்றிதள் வாங்க அரசு அலுவலகம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது எல்லாம் மிக சரியாக இருந்தும் அந்த அதிகாரி அது வேண்டும் இது வேண்டும் என்றது சொல்லி அலைத்துகொண்டே இருந்தார். ஒருநாள் நான் "சார் "போனவருடம் எனது உதவியாளர் ரூபாய் 3000/- கொடுத்து இந்த வேலையே உடனே முடித்து விட்டார்" என்று சொன்னேன். உடனே அவர் பயங்கரமாக கத்த ஆரம்பித்து விட்டார் "இந்த மாதிரி பேச்சு எல்லாம் என்னிடம் இருக்ககூடாது" என்னை என்ன நினைத்தாய்? இந்த பேச்சை மட்டும் என்னிடம் எடுக்காதே என்னைப்பற்றி உனக்கு சரியாக தெரியாது நான் யார் தெரியுமா? என்றெல்லாம் பேசிவிடார்
நானும் மிகவும் பயந்து, நேர்மையான அதிகாரிபோலும் நாம்தான் தவறாக சொல்லி விட்டோம் என்று நினைத்து அமர்ந்திருந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து "போன வருடம் எவ்வளவு கொடுத்தீர்கள்" என்று கேட்டார் நான் 3000என்று சொன்னேன். உடனே அவர் 6000/- கொடுத்தால் உடனே சான்றிதல் கொடுத்து விடுவேன் என்றார் பார்க்கலாம்
"பரிசுத்தர் என்றால் இவரல்லவா பரிசுத்தர் என்று அப்படியே அசந்துவிட்டேன்"
அங்கிருந்து என முதலாளியிடம் போனில் சொன்ன போது அவர் "எனக்கு அந்த அமைச்சரை தெரியும், இந்த அமைச்சரை தெரியும் நான் உடனே அவருக்கு போன் பண்ணி என்ன பண்ணுகிறேன் பார்" என்றார்.
இதை நான் அந்த அதிகாரியிடம் சொன்னபோது, அவர் கொஞ்சமும் பயப்படாமல் "யாரிடமும் போய் சொல், என்னை இதுபோல் வாங்கவைப்பதே அவர்கள் தான், ஒரு கம்பனிக்கு சான்றிதள் முடித்தால் ஒரு குறிப்பிட்ட பணம் நான் கொடுத்தாக வேண்டும் இது மேலிருந்து கீழ் வரை எல்லோரையும் சென்றடையும் என்று ரொம்ப சாதரணமாக சொல்லிவிட்ட்டர். அவனவன் அவனவன் தகுதிக்கு தகுந்தால் போல் லஞ்சம் பெறுகின்றனர். இப்படி மேலிருந்து கீழ்வரை எல்லோருமே லஞ்ச பணத்தில் மிதக்கும்போது, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு காரியத்தையும் சாதிப்பது நடக்காத காரியம்தான்.
எனவே என்ன செய்ய?
முடிந்த வரை லஞ்சம் கொடுத்து சாதிக்க நினைக்கும் காரியங்களை தவிர்ப்போம். சகோதரர் எட்வின் சொல்வதுபோல நாமாக லஞ்சம் கொடுத்து எந்த காரியத்தையும் சாதிக்க நினைக்காமல், பிறரின் நிர்பந்தத்தின் அடிப்படையில் கொடுக்க நேர்ந்தால் நிச்சயம் ஆண்டவர் அதை மன்னிப்பார் என்றே கருதுகிறேன்.
இவ்வாறு அலுவலக காரியங்களுக்காக மட்டுமே நான் ஏன் முதலாளியின் சார்பில் லஞ்சம் கொடுப்பேனேயன்றி என் சொந்த காரியங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியது நிலை வந்தால் அக்காரியத்தை செய்யாமலேயே நிறுத்திய பல அனுபவங்கள் உண்டு.
-- Edited by SUNDAR on Tuesday 27th of April 2010 07:28:21 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேத வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரிதானம் பற்றிய காரியங்களைப் பார்த்தோம்.
பரிதானம் வாங்க கூடாது என்பதை அவை அழுத்தமும் திருத்தமுமாக கூறுவதைப் பார்த்தோம்.. அதே சமயம், எங்கும் பரிதானம் கொடுக்கக் கூடாது என்றும் போடவில்லை தான். இருப்பினும், சகோ.சுந்தர் கூறியது போல ஒருவர் (பாவத்தைச்)அதைச் செய்ய நாம் உதவினால் அதுவும் தவறே... எனவே பரிதானம் அல்லது லஞ்சம் கொடுக்கவோ அல்லது வாங்குவதோ வேதத்தால் தடைசெய்யப் பட்ட ஒன்று...
ஆனால் வேதாகம காலத்திலுள்ள பரிதானம்(அ) லஞ்சத்திற்கும் இப்போது நடக்கும் காரியங்களுக்கும் வித்தியாசம் உள்ளது..
வேதத்திலுள்ள பரிதானம் என்பது:
<<செய்யக் கூடாததை செய்யவும், செய்ய வேண்டியதை செய்யாமலிருக்கவும் கொடுக்கப்பட்டது>>
லஞ்சம் - தெலுங்கு வார்த்தை, அதற்கு சரியான வரையறை தெரியாது.
ஆங்கிலத்தில் ஒரு வரையறை:
brib'-er-i (shochadh, "a gift," in a corrupt sense, "a bribe"): The Hebrew law condemns everything that would tend to impair the impartial administration of justice, particularly the giving and receiving of gifts or bribes, in order to pervert judgment (Ex 23:8). Allusions are frequent to the prevailing corruption of oriental judges and rulers. "And fire shall consume the tents of bribery" (Job 15:34; 1 Sam 8:3; Ps 26:10; Isa 1:23; 33:15; Ezek 22:12). Samuel speaks of a "ransom" in the sense of a bribe: "Of whose hand have I taken a ransom (kopher, "covering," the King James Version "bribe") to blind mine eyes therewith?" (1 Sam 12:3; Am 5:12; compare Am 2:6).
இப்போது: <<ஒருவர் செய்ய வேண்டிய கடமையை அவர் செய்வதற்கே >>
Something given or taken with an intention to influence the conduct or judgment of the personreceiving it. Unlike extortion, bribe is used specifically to obtain something to which one does not have a right.
இது வேதத்திலுள்ள லஞ்சத்தின் தன்மையிலிருந்து ஒரு படி குறைவு. இதைப் பற்றி பழைய ஏற்பாட்டில் காண இயலவில்லை. (இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.)
புதிய ஏற்பாட்டில் பவுலுக்கு நேர்ந்த சூழலில் இக்காரியம் வருகிறது. ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை. அவர் விடுதலையாக்கப் பட அனைத்து நியாயங்களும் இருந்த போதும் பணம் கொடுக்காததால் அவரை விடுதலை செய்யாமல் இரண்டு ஆண்டுகள் கழித்தும் காவலிலேயே விட்டுச் சென்றான் பெலிக்ஸ்.(அப் 24:27)
பவுல் லஞ்சம் கொடுக்க வில்லை. (பிலி 4-9). அவரைப் போல இருக்க எத்தனை பேரால் முடியும்?? பல அநீதிகளை சகிக்க வேண்டியிருக்கும்.. பல வருடமாய் காத்திருந்தாலும் சில காரியங்கள் நடக்கவே செய்யாது.. ஆயினும் தேவன் மேல் விசுவாசமாய் அவரையே நம்பியுள்ளவர்களுக்கு எல்லாம் ஆகும். (பவுல் சிறையில் அன்று தொடர்ந்திருப்பது தேவ சித்தமே என்பதையும் கவனிக்க)
லஞ்சத்தைப் பற்றி இருவரது கருத்துக்களை இங்கே பதிக்கிறேன்.
முதலாமவர்- உலகப் பிரகாரமானவர்:
லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. 'வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்' என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்... எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள்.
மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு - லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.
முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்`றாரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.
இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்`றாருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு 'ஸாஷே' அளவு பாவம்தான். ரயில்வே புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண் டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் - இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், 'நமக்கேன் வம்பு' என்று விட்டுவிடுவார்கள். Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.
இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி நகைக்கோ உதவுகிறது.
இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் - பர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.
கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் - தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ் பெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார் நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.
முதல் வகையான 'பெட்டி கரப்ஷன்' என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.
மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் - ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.
அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். 'ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன் மெண்ட்' என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. 'தெஹல்கா' போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி - ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக - 91 வயதில்!
அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.
(இது அவருடைய கருத்து மட்டுமே...)
இரண்டாம் நபர் பல சிக்கலான காரியங்களுக்கு எளிதான, தெளிவான பதில்களை கொடுத்த தேவ மனிதர்:
(இதுவே தீர்வான பதில் என கருதுகிறேன்)
Another problem that many people face in our land is that of having to give money to government officials in order to get a legitimate permit or licence or sanction etc., Many preachers are afraid to preach on this subject for fear of losing their reputation for "holiness". But there is a great need for clear teaching on this matter, for Christians are faced with this problem every day in our land. So here is some sane advice that I would like to give, that can lift an unnecessary burden of guilt from the shoulders of many believers.
There are three levels at which people can live, as we read in 1 Cor.6:12 and 10:23:
(1) Unlawful. This is where unrighteousness is practised.
(2) Lawful. This is the bare minimum level - of righteousness.
(3) Profitable. This is the highest level of faith.
We must obviously never descend to the level of doing something unlawful.
Therefore we must never give any money to anyone to get anything unrighteous done. That would be cheating the government (or the organisation), and what you give would be a bribe.
But what if some official asks you for money to give you a permit for something that is perfectly legal and you give him the money in order to avoid the hassle of going back again and again to that office? In such a case, you are not cheating anyone. You are voluntarily giving your own money. This could be compared to your giving a "tip" to a waiter in a restaurant; or perhaps more accurately, to your giving your money to a dacoit who sticks a gun at you! You would give the dacoit your money to save your life. The only difference in this case is that the official stuck an ultimatum at you and not a gun!! It was still "daylight robbery". But at least you didn’t get anything unrighteous done for your own benefit and you didn’t cheat anyone. That is the second level – the lawful level.
However, another brother, in a similar situation, may have faith to believe that the Lord will get him the sanction without his giving any money to the clerk. This is the highest level. But all may not have this level of faith. Those who have such faith can live at this level. But they should not judge others who do not have their level of faith. This is clearly taught in Romans 14.
We must recognise however that there could be occasions when we try to escape out of a difficult situation, by giving money to a corrupt official, when God may actually have wanted to do a miracle for us, if we had only trusted Him. So we must seek God in each difficult situation we face and ask for wisdom to do what pleases Him. We should press on to perfection. But we need not feel condemned if our faith does not rise to the level of another’s.
-- Edited by timothy_tni on Wednesday 5th of May 2010 07:24:59 PM