இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் வசனம் யாரை நியாயம்தீர்க்கும்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இயேசுவின் வசனம் யாரை நியாயம்தீர்க்கும்?
Permalink  
 


அன்பு சகோதரர்களே!
 
இயேசுவின் வார்த்தைகளே மனிதனை நியாயம்தீர்க்கும் என்று அறிவோம். இயேசுவே நியாயாய்திபதி  என்றும் நியாயம்தீர்க்கும் அதிகாரம் முழுவதையும்
தேவன் இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார் என்றும் வசனம் சொல்கிறது 
 
யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் கீழ்க்கண்ட இந்த வசனத்தை தியானித்தபோது  எனக்கு ஒரு சிறு சந்தேகம் எழுந்துள்ளது    
 
யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
 
இயேசுவை தள்ளி அவர் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளதவர்களை மட்டும்தான் இயேசுவின் வசனம் நியாயம்தீர்க்குமா?
 
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நியாயதீர்ப்பு இல்லையோ?
 
 மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

என்று வசனம் சொல்கிறபடியால் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அவனவன் கிரியைக்கு தக்க நியாயதீர்ப்பு இருக்கலாம் என்று கருதுகிறேன். ஏனெனில் வெள்ளாடு செம்பரியாடு என்று இரு கூட்டத்தை அவரவர் கிரியைகளின் அடிப்படையிலே தேவன் பிரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
இது சம்பந்தமான சகோதரர்கள் கருத்தை  அறிய விரும்புகிறேன்.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
Permalink  
 


இயேசுவின் வசனம் முதலாவதாக நியாயம் தீர்ப்பதற்காக கொடுக்கப்படவில்லை. நம்மை இரட்சிப்பதர்க்காகவே அது கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் பாவிகளாகவும், தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்ள முடியாதவர்களாகவும், தேவ சத்துருக்களாகவும் இருக்கிறார்கள் என்பது வேத வசனம். அது போல மனிதனாக பிறந்த யாவரும் தாங்கள் மனம் திரும்பி, பாவ உணர்வடைந்து இயேசு கிறிஸ்துவே இரட்சகர் (அவரை தவிர இந்த பார் தளத்தில் வேறு யாரும் இல்லை) என்றும்; ஆண்டவர் என்றும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இயேசு கிறிஸ்துவோடு உள்ள "விசுவாச - அன்பு" உறவு மாத்திரமே எந்த மனிதனையும் பூரணமாக மீட்க முடியும்.

இன்றைய நாட்களில் இரட்சிப்பிற்காக அதிகமான மக்கள் வேறு எதை எல்லாமோ செய்கிறார்கள், தேடுகிறார்கள், தங்களை மீட்க்கமாட்டாதவைகளை. நமக்கு "இரட்சிப்பு தேவை" என்பதை காட்டிலும் இரட்சகரே அதி முக்கியம்.  தொடரும்..............



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

arulmraj wrote:
 

இயேசுவின் வசனம் முதலாவதாக நியாயம் தீர்ப்பதற்காக கொடுக்கப்படவில்லை. நம்மை இரட்சிப்பதர்க்காகவே அது கொடுக்கப்பட்டிருக்கிறது. 
 

தங்களின் கருத்து சரியான ஒன்றுதான். இயேசுவின் வசனங்கள் அருளப்பட்டதன் முக்கிய  நோக்கம் மனிதர்களை  நியாயம் தீர்க்க அல்ல! எல்லோரும் இரட்சிப்பை அடைவதற்கே! 

ஆகினும்  அவரை விசுவாசிக்காமல்  அசட்டைபண்ணுபவர்களை நியாயம் தீர்க்க போவதும் அவரின் வார்த்தைகள்தான்  என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவாக சொல்கிறது

யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
 
ஒருபுறம் இரட்சிப்பின் வழிகாட்டியாய் இருக்கும் வசனமே இன்னொருபுறம்   இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ளதவர்களை  நியாயம்தீர்க்கும் நியாயாதிபதியாகவும் இருக்கும்.
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
Permalink  
 

Joh 3:15  that whoever believes in Him should not perish but have eternal life.
Joh 3:16  For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
Joh 3:17  For God did not send His Son into the world to condemn the world, but that the world through Him might be saved.
Joh 3:18  "He who believes in Him is not condemned; but he who does not believe is condemned already, because he has not believed in the name of the only begotten Son of God.

Joh 3:17a-  For God did not send His Son into the world to condemn the world, [condemnation OR judgment is not the main issue]
Joh 3:17b-  For God did not send His Son into the world to condemn the world, [God's main intention to SAVE the people]
Joh 3:18b- This verse clearly proves that ANYONE WHO DOES NOT BELIEVE IN JESUS CHRIST FINISHED AND IDENTIFY GENUINELY WITH HIM STAND CONDEMNED ALREADY. SINCE SUCH PEOPLE ARE ALREADY JUDGED AND CONDEMNED. WHY SHOULD WE FURTHER TELL THEM THAT IT IS GOING TO JUDGE YOU. LET THEM COME TO THE SALVATION OF JESUS CHRIST.

THANK YOU DEAR BROTHER. GOD BLESS YOU



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard