இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளம் செயல்படுவதன் நோக்கம்!!!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தளம் செயல்படுவதன் நோக்கம்!!!
Permalink  
 


நாம் என்ன தொழில் செய்தாலும்  அல்லது  சொந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் நமக்கு FREE நேரம்  கிடைக்க நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அந்த நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளில் மற்றும் செயல்களில்  ஈடுபடுவதைவிட (இத்தளம் ஆரம்பிக்கும் முன்பெல்லாம் நான் செஸ் விளையாடுவேன்) தேவனுடைய வார்த்தைகளை  பற்றிய தியானங்களில் ஈடுபடுவதன் மூலம், வேதவசனங்கள் பற்றிய ஆழமான சத்தியங்களை அறிய இறைவன் கிருபைசெய்கிறார். எனவே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து பயன்பெறுங்கள்!

தமிழில் எழுத தெரியாதவர்களுக்கு சுலபமாக தமிழ் எழுதும் வழி தெரிவிக்கப்படும்  
  
வேத புத்தகம்  என்பது நமக்கு தேவனால் அருளப்பட்ட
ஒரு பொக்கிஷம் போன்றது. அதில் இரவும் பகலும்
தியானமாய் இருக்கும் மனிதன் பாக்கியவான் என்றும் வேதம் சொல்கிறது.
 
சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

அவ்வாறு வசனங்களில்மேல் தியானமாய் இருக்கவே இத்தளம் நடத்தப்படுகிறது !

என்னை பொறுத்தவரை இறைவனின் வார்த்தைகளை அறிவதில் ஒரு குழந்தைபோல திறந்த மனதோடு இருக்கிறேன். யார் எக்கருத்தை சொன்னாலும் அதில் உள்ள  உண்மை என்னவென்பதயே ஆராய்கிறேன்  

எனவே அன்பானவர்களே இங்கு விடாபிடி விவாதத்துக்கோ அல்லது தேவையற்ற சர்ச்சைகளுக்கோ அல்ல, இறைவனின் மேன்மைபற்றிய வ்வித கருத்துக்களும் இங்கு அனுமதிக்கப்படும்!

பயன்படுத்தி பயன்பெறுங்கள் !!!


 


-- Edited by இறைநேசன் on Friday 23rd of April 2010 05:10:40 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//நாம் என்ன தொழில் செய்தாலும்  அல்லது  சொந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் நமக்கு FREE நேரம்  கிடைக்க நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அந்த நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளில் மற்றும் செயல்களில்  ஈடுபடுவதைவிட//

உண்மை...
என்னுடைய வேலையில் சில நேரம் வேலைப் பளு கூடும் சில நேரம் வேலையே இருக்காது.
அப்போது சோம்பலாகவோ சும்மாவோ (இந்த இரண்டுமே ஆபத்தானவைகள் - சோம்பேறியின் மனது பிசாசின் தொழிற்கூடம்) இருப்பதை விட அலுவலகத்திலும் தேவ வார்த்தையை தியானிப்பது சாலச் சிறந்தது...



-- Edited by timothy_tni on Wednesday 5th of May 2010 08:29:25 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard