இயேசு என்பவர் கிறிஸ்து வாகும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கும் எவனும் தேவனால் பிறந்தவன் என்று வேதத்தில் 1யோவான் 5:1இல் கூறப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து தேவன், அவர் தேவ மனிதர், மனிதத்துவமும் - தேவத்துவமும் இணைந்தவர். ஒன்றர கலந்தவர் அன்று. இயேசு கிறிஸ்துவை சரி வர அறியாதபடி, விளங்கிக்கொல்லாதபடி அவரை போதிக்கிறவர்களும், அவருடைய நாமத்தை வியாபார பொருள் ஆக்குகிறவர்களும் (எல்லாருமல்ல) அநேகர். இப்படிப்பட்டவர்கள் உண்மை ஊழியர்களை அதிகம் விரும்புவதில்லை. கிறிஸ்துவை அதிகமாக மகிமை படுத்துவதில்லை. தங்களின் சுய மரியாதையையும், மதிப்பையும், மகிமையையுமே நாடி ஊழியம் செய்வார்கள். இயேசு கிறிஸ்து தேவ குமாரன், உலக இரட்சகர் அவராலன்றி வானத்திலும், பூமியிலும், எங்கும் இரட்சிப்பு இல்லை. அவர், என்னைக் கண்டவன் பிதாவை கண்டான் என்று கூறினார்.