புதிய ஏற்பாட்டு காலத்தில் "தசமபாகம்" கொடுப்பது பற்றி அப்போஸ்தலர்கள் கட்டளை எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரிசேயர்களிடம் பேசும்போது:
லூக்கா 11:42பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.
என்று குறிப்பிட்டிருப்பதால், நியாயம் மற்றும் தேவ அன்போடு கூட தசமபாகம் கொடுப்பதையும் விடாதிருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
மேலும் பழய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தருடைய ஆலயத்தில் ஊழியம் செய்த லேவியர்க்கு தசமபாகம் செலுத்தப்பட்டு அவர்களின் பிழைப்பு நடந்ததுபோல், புதிய ஏற்பாட்டு காலத்திலும் ஊழியம் செய்பவர்களுக்கு உழியத்தலேயே பிழைப்பு உண்டாகும்படி கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்
I கொரிந்தியர் 9:14அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளை யிட்டிருக்கிறார்
எனவே புதிய ஏற்பாட்டு காலத்தில் ஊழியங்களை தங்குவதும் ஊழியர்கள் பிழைப்புக்கு வழி செய்வது விசுவாசிகளின் கடமையாக இருக்கிறது. ஏனெனில் கொடுப்பவனை தேவன் ஆசீர்வதிக்கிறார்
மத்தேயு 10:42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மேலும் புதிய ஏற்பாட்டு கால கொடுத்தல் பற்றி பவுல் கீழ்க்கண்ட வார்த்தைகளை கூறுகிறார்!
II கொரிந்தியர் 9:7அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
கட்டாயமாக அல்ல, விசனமாயும் அல்ல நம் மனதில் நியமித்தபடி உற்சாகமாக கொடுக்கலாம் என்பதே அவரது கட்டளையாகஇருக்கிறது. இந்நிலையில் கட்டாயம் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்கவில்லை என்றால் சாபம்/ தேவகோபம் வரும் என்று பல சபைகள் போதித்து வருகின்றன. இக்கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை?
விசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் "தசமபாகம்" கொடுப்பது பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவிடும்படி வேண்டுகிறேன்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"தசமபாகம்" கொடுப்பது பற்றிய எனது நிலைபாட்டை இங்கு நான் தெரிவித்து விடுகிறேன்.
பழைய ஏற்பாடு என்பது மாமிசத்துக்குரிய கட்டளைகளை சொல்வதாகவும் புதிய ஏற்ப்பாடு என்பது மிக உயர்ந்த ஆவிக்குரிய பரிசுத்த நிலைக்குள் மனிதனை வழி நடத்துவதாகவும் இருக்கிறது.
ஆண்டவராகிய இயேசுவை பொறுத்தவரை "அவைகளையும் செய்ய வேண்டும் இவைகளையும் விடாதிருக்கவேண்டும்" என்று சொல்லி, தசமபாகம் கொடுப்பதை வலியுறுத்துகிறார்.
ஆனால் அப்போஸ்த்தலர்களோ "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்" என்று போதிக்கின்றனர்.
எனது கருத்தும் நான் கைகொள்ளும் முறையும்:
புதிய ஏற்பாடு காலத்தை பொறுத்தவரை "தசமபாகம்" என்று 10௦% மட்டுமல்ல அதற்க்கு மேலும் எவ்வித கணக்கும்இன்றி எவ்வளவு அதிகமாகவும் ஆண்டவரின் ஊளியத்துக்கென்று காணிக்கையை கொடுக்கலாம் "உற்சாகமாய்க் கொடுக்கிற வனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்"
ஆனால், கொடுப்பதற்குதான் எந்த வரைமுறையும் இல்லையே அதனால் ஒரு ரூபாய் மட்டும் மனபூர்வமாக போட்டால் போதும், என்று எண்ணுபவர்களுக்கு குறைந்த பட்ச நிர்ணயமாக பழைய ஏற்ப்பாடு சொல்லும் கீழ்க்கண்ட கர்த்தரின் கட்டளையாவது கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
உபாகமம் 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
லேவியராகமம் 27:30தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது(இந்த தசமபாகம் கர்த்தருடய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி ஆலயத்துக்கு கொண்டுபோக படவேண்டும்)
வயற்காடு மற்றும் விளைநிலங்கள், கனிதரும் விருட்சங்கள் இருக்குமாயின் ஒவ்வொரு வருஷமும் அதிலிருந்து வரும் எல்லா பலனில் தசமபாகம் ஆலயத்துக்கு கட்டாயம் கொண்டு போகப்படவேண்டும். வயற்காடு எதுவும் இல்லை என்றால், மூன்று வருடத்துக்கு ஒருமுறை அந்த வருடத்தில் எல்லா வரவிலும் (அது எந்த வரவானாலும் சரி) தசமபாகத்தை கர்த்தர் பட்டியலிட்டுள்ள லேவியன் (ஊழியன்) பரதேசிகள், திக்கற்ற அனாதை பிள்ளைகள், விதவைகள்
போன்ற யாருக்காதுகொடுக்கப்பட வேண்டும்.
ஆகினும் ஒவ்வொரு மாதமும் வரும் வரவில் தசமபாகம் கொடுப்பது ஆசீர்வாதமானது.
லூக்கா 6:38கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்
என்ற வார்த்தைகள்படி ஆண்டவரது ஊளியத்துகென்று கொடுக்கும் பணம் பூலோக வங்கியில் அல்ல, பரலோகத்தில் நமது கணக்கில் நிச்சயம் வரவு வைக்கப்படும் என்றே நான் கருதுகிறேன்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அதாவது "வேதவாக்கியங்கள் எல்லாமே இஸ்ரவேலரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று வேதம் சொல்கிறது. இந்நிலையில் இயேசுவோ அல்லது தேவனாகியகர்த்தரோ சொல்லியிருக்கும் அனேக வார்த்தைகள் அவர்களிடம் அவர்களை நோக்கி சொன்னதாகத்தான் இருக்கும். அதை இவருக்கு சொன்னது அவருக்கு சொன்னது என்று பிரித்தால் நமக்கசொன்னது எது என்பது என்பதை அறிவது முடியாத ஒன்றே. அவரவர் தங்கள் இஸ்டத்துக்கு "இது எனக்கு இல்லை" என்று வசனங்களை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது
பவுல் எழுதியது அந்த குறிப்பிட்ட சபைகளுக்கு மட்டுமே என்றும், வெளிப்படுத்தின விசேஷம்மும் குறிப்பிட்ட அந்த சபைகளுக்கே என்ற நிலை வரலாம்.
என்னை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை தெரிந்தெடுத்து அதன் வழியாக உலகத்துக்கு செய்தி சொல்லி உலகை மீட்பதே தேவனின் நோக்க்மேயற்றி எந்த ஒரு கோத்திரத்தையும் தனியே தெரிந்துகொண்டு அவர்களுக்கு மட்டும் சில கட்டளைகளை மற்றவருக்கு சில கட்டளைகள் கொடுத்து பட்சபாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர் தேவனல்ல. அவர் எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் உலகத்தில் உள்ள மொத்த மக்களின் நலனும் நிச்சயம் அடங்கியிருக்கும்! அவர் எங்கு ஒரு வார்த்தை சொன்னாலும் அது எல்லோர் மேலும் பலிக்கும் வல்லமை நிறைந்ததாகவே இருக்கும் என்றே கருதுகிறேன்.
உலகில் உள்ள எவர் விசுவாசித்தாலும் அவருக்கு இரட்சிப்பு பலிப்பது போல, உலகில் உள்ள எவர் தேவனின் கற்பனைகளின் படி நடந்தாலும் அவர் சொன்ன ஆசீர்வாதங்களும் பலிக்கும் என்றே நான் கருதுகிறேன். இவ்விஷயத்தில் தேவனின் வார்த்தைகளின் வல்லமையை இவருக்கு மட்டும்தான் என்று மட்டுபடுத்த நான் விரும்ப வில்லை.
இரண்டாவது தேவன் சொல்லிய வார்த்தைகளை மாற்ற தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று நம்புபவன் நான். அவ்விதத்தில் இயேசுவும் தேவனின் ஒருபகுதி என்று நம்புவதால் அவருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. மற்றபடி அவர்களைதவிர யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பது எனது முடிவான கருத்து.
இந்நிலையில் நியாயபிரமாணம் கொடுக்கப்படும் முன்னேயே அவரது சிநேகிதனான ஆபிரகாமல் கொடுக்கப்பட்டு பின்னர் தேவனால் நியாயபிரமாணத்தில் சேர்க்கப்பட்டு, இயேசுவால் "இதையும் விடாமல் இருக்க வேண்டும்" என்று உறுதிபடுத்தப்பட்டு வேறு எந்த இடத்திலும் "தசமபாகம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை" என்று தீர்மானமாக சொல்லப்படாத ஒரு காரியத்தை அது முடிந்துவிட்டது என்று என்னால் ஏற்க்க முடியாது!
இஸ்ரவேல் என்ற கோத்திரம் உருவாகும் முன்னமே ஆபிரஹாம் மேல்கிசெதேக்குக்கு கொடுத்ததசமபாகத்தை என்ன பண்ணினார் என்பதற்கோ அல்லது யாருக்கு அதை பங்கிட்டு கொடுத்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை
ஆதியாகமம் 14:20உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
தசமபாக கட்டளை பிறக்கும்முன்னமே யாக்கோபு தேவனிடம் தசமபாகம் குறித்து பொருத்தனை பண்ணியிருக்கிறான். அப்பொழுது லேவி கோத்திரத்தார் என்று யாரும் கிடையாது. அதன் அடிப்படையில் பார்த்தால் அது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரித்தானது என்று எவ்வாறு ஏற்க்க முடியும்.
மெல்கிசெதேக் தேவனுடய ஆசாரியர்கள் என்று கூறப்படுகிறது அவன் ஆப்ரஹாமை ஆசீர்வதித்தான் எனவே ஆரஹாம் அவனுக்கு தசமபாகம் கொடுத்தான். அவ்வளவுதான். கர்த்தரின் நாமத்தில் ஒரு ஊழியர் நம்மை ஆசீர்வதித்தால் அவருக்கு தசமபாகம் கொட்ப்பதில் தவறில்லை என்றே வேதம் போதிக்கிறது. அவர் கள்ளனா நல்லவனா என்ற ஆராய்ச்சி அதற்க்கு அப்பாற்ப்பட்டது.
அதுபோல் அன்றைய தேவனுடய ஆசாரியர்கள் அதாவது தேவனுக்கு பணிவிடை செய்பவர்கள் இன்றைய தேவனுடய ஊழியர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் நமக்காக ஜெபிக்கும்போதோ அல்லது நம்மை ஆசீர்வதிக்கும்போதோ அவர்களுக்கு தசமபாகம் கொடுப்பதில் தவறில்லை!
-- Edited by SUNDAR on Friday 15th of October 2010 01:10:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//........விசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் "தசமபாகம்" கொடுப்பது பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவிடும்படி வேண்டுகிறேன்.....//
தசமபாகம் கொடுப்பது பற்றி நம்மிலே அனேக கருது வேறுபாடுகள் காணபடுகின்றன இருந்தாலும் என்னுடைய மனதில் இருக்கிறதையும் நான் செய்கிறதையும் இங்கு குறிபிடுகிறேன்.
ஐஸ்வரியத்தை சம்பாதிக்க பெலன் கொடுகிறவர் கர்த்தர் என்று வேதம் சொல்லுகிறபடியால் எனக்கு கிடைக்கும் எல்ல பணத்திற்கும் அவரே காரணராய் இருக்கிறபடியால் அவர் எனக்கு கொடுத்த பணத்தில் கொஞ்ச பணத்தை நான் அவருக்கு கொடுப்பதில் நான் என்ன குறைந்து விட போகிறேன். அவர் எனக்கு கொடுக்காமல் எதையும் என்னிடத்தில் எதிர் பார்க்கிறவர் அல்ல..!
நான் எபோதும் கர்த்தருக்கும் கொடுக்கும் போது சொல்லகூடிய வார்த்தை இதோ.....
ஆண்டவரே நானாக எதையும் உமக்கு கொடுக்கவில்லை நீர் எனக்கு கொடுத்தவைகளில் நான் கொஞ்சம் உமக்கு கொடுக்கிறேன் அவ்வளவுதான் மற்றபடி ஒன்றும் இல்லை ஆண்டவரே....!
உமக்கு கொடுக்கும் படி நீர் எனக்கு கொடுத்திரே உமக்கு நன்றி என்று எப்போதும் சொல்கிறேன். நான் சொல்லும் போதே எனக்கு என்னை அறியாமலே எனக்கு சந்தோசமும் மகிழ்சியும் உண்டாகும் இதை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்லுகிற உணர்வு புரியும்.
நான் அதை கட்டாயத்தினால் அல்ல மிகவும் சந்தோசமாக செய்கிறேன். கொடுத்து அனுபவித்து பாருங்கள் நான் சொல்லுகிற சந்தோஷம் புரியும் .
அநேகர் என்ன நினைகிறார்கள் என்றால் நாம் ஊழியகாரருக்கு கொடுக்கிறோம் அல்லது சபைக்கு கொடுக்கிறோம் என்று தவறாக எண்ணுகிறார்கள் அந்த நினைப்பில் கொடுகிரவர்களுக்கு சலிப்புதான் உண்டாகும்
நம்முடைய இருதயங்களில் உள்ள நினைவுகளை கர்த்தர் அறிகிறவர் நாம் எந்த நினைவோடு இதை கொடுக்கிறோம் என்பதையும் கர்த்தர் அறிவார் ..
நாம் கொடுக்கும் போது திரும்ப கர்த்தர் கொடுப்பார் என்ற நினைவுகளோடு அல்ல கர்த்தர் முதலில் கொடுத்ததில் தான் அவருக்கு நாம் கொடுக்கிறோம்.
வாங்குவதை காட்டிலும் கொடுபதே அதிக மகழ்ச்சி.
என்னுடைய சொந்த கற்பனை :
ஒருவர் வாங்கும் போது அவருடைய உள்ளங்கை கீழிருந்து மேல் நோக்கி இருகுமபோலவும் ......
ஒருவர் கொடுக்கும் போது அவருடைய உள்ளங்கை மேலிருந்து கீழ் நோக்கி இருக்குமா போலவும் தோன்றுகிறது.
கொடுக்கிறவர்கள் எப்போதும் மேன்மையாகவும் உயர்வாகவும் கர்த்தர் வைத்திருப்பார்....
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
anbu57 wrote:ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததை முன்னுதாரணமாக்கி தற்போதய ஊழியர்களுக்குத் தசமபாகம் கொடுக்கவேண்டும் எனக் கூறுகிற நீங்கள்,ஆதித் திருசபையார் தங்கள் உடைமைகள் முழுவதையும் அப்போஸ்தலர் பாதபடியில் வைத்ததையும் அவற்றை அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்டதையும் முன்னுதாராணமாகக் கொள்ள மறுப்பது ஏனோ? இதற்கான பதிலை நீங்கள் கண்டிப்பாகத் தரவேண்டும்.
சகோதரரே ஆபிரகாம் கொடுத்தான்என்பதற்காக தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பது எனது கருத்தல்ல. தேவனின் இருதயத்தில் "தேவ ஊழியர்களுக்கு தசமபாகம் கொடுக்கபட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை அறிந்த ஆபிரஹாம் அங்கு தானாக முன்வந்து தசமபாகம் கொடுத்தான். அதன் பின்னர் கர்த்தரால் அது நியாயபிரமாண கட்டளையாக கொடுக்கப்பட்டது. பின்னர் அது ஆண்டவராகிய இயேசுவால் "இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டு விடாதிருக்கவேண்டுமே" என்று உறுதி செய்யபட்டிருக்கிறது.
நீங்கள் தசமபாகத்தை தவிர்ப்பதற்கு வேவ்வேறு காரணங்களை சொன்னாலும். என்னை பொறுத்தவரை கர்த்தர் இட்ட தனது கட்டளையை மாற்றி இயேசுவோ அல்லது அப்போஸ்தலரோ கூட "தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று எங்கும் நேரடியாக சொல்ல வில்லை எனவே நாமாக ஒரு முடிவுக்கு வந்து அதை மாற்றகூடாது என்று கருதி நான் கட்டளைப்படி கொடுக்க விரும்புகிறேன். மற்றவர்கள் எதன் அடிப்படையில் கொடுக்கிறார்களோ வாங்குகிறார்களோ எனக்கு தெரியாது!
ஆதி திருச்சபையார் உடமைகளை எல்லாம் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தது உண்மை ஆனால் அந்த செயல் பின்னால் எங்கும் அப்போஸ்த்தலர்களால் கட்டளை ஆக்கப்படவில்லை அவரவர் விருப்பத்தின் பெயரிலேயே அது செய்யப்பட்டது அங்கு எந்த கட்டாயமும் இல்லை. மேலும் ஆதி அப்போஸ்தலர்கள் அல்லது அவர்களுக்கு சிறிதேனும் ஒப்பானவர்கள் கூட இப்பொழுது கிடையாது! எனவே இப்பொழுது ஆதி சபையில் நடந்ததுபோல் எல்லாவற்றையும் விற்று கொண்டு ஒரு பெரிய ஊழியரின் பாதத்தில் வைத்தால் அவர் அதை தனது பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டாக பங்கு போட்டு கொடுத்துவிடுவார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தசமபாகக் கட்டளையை வேதாகமம் நேரடியாக மாற்றவில்லை எனக் கூறுகிற நீங்கள், அக்கட்டளை சம்பந்தமான மேற்கூறிய 5 விதிகளை சற்றும் மாற்றமால், அவற்றின்படிதான் தசமபாகம் கொடுக்கிறீர்களா என்பதை எனக்குத் தெரிவிக்கவும். அதைத் தெரிவிக்கையில், பின்வரும் வசனத்தையும் கவனத்தில் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன். உபாகமம் 12:32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
கவனம்: லேவியருக்கும், திக்கற்றவருக்கும், பரதேசிக்கும், விதவைக்கும்தான் தசமபாகம் என வேதாகமம் கூறுவதைக் குறைக்கவும் வேண்டாம்; தேவனுடைய ஊழியர்களுக்குத்தான் தசமபாகம் என வேதாகமம் சொல்லாததைக் கூட்டவும் வேண்டாம்.
எருசலேம் தேவாலயத்தில்தான் தசமபாகம் கொடுக்கவேண்டும் என வேதாகமம் கூறுவதைக் குறைக்கவும் வேண்டாம்; கண்ட கண்ட ஆலயத்திலும் தசமபாகம் கொடுக்கலாம் என வேதாகமம் சொல்லாததைக் கூட்டவும் வேண்டாம்.////
சகோதரர் அவர்களே மிக தெளிவாகவும் விளக்கமாகவும் தசமபாகம் பற்றிய கர்த்தரின் கட்டளைகளை ஆராய்ந்து எழுதியமைக்கு மிக்க நன்றி!
இங்கு மற்றவர்கள் எந்த வசனத்தின் அடிப்படையில் மாத மாதம் தசமபாகம் வாங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியாது நான் எந்த வசனத்தின் அடிப்படையில் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் இங்கு எழுதுகிறேன். நான் செய்வது சரியா என்பதை சோதித்தறிந்து திருத்திக்கொள்ள இந்த விவாதத்தை ஒரு நல்ல
சந்தர்ப்பமாகவே கருதுகிறேன்
தசமபாகம் இரண்டு வகைப்படும் என்பது தங்களுக்கு தெரியும்
1. வருடா வருடம் கொடுக்கும் தாசமபாகம்
லேவியராகமம் 27:30தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. லேவியராகமம் 27:32கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
இந்தவகை தசமபாகத்தை பொறுத்தவரை தாங்கள் குறிப்பிடுவதுபோல் கர்த்தரின் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் கட்டளை. ஆனால் நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று போதிப்பவர்கள் எதன் அடிப்படையில் சம்பளத்தில் தசம பாகம் கொடுக்க வேண்டும் என்றும் அதை சபைக்கு கொடுக்க வேண்டும் என்றும் போதிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.
சபை தேவைகளுக்காக ஊழியர்களுக்காக தசம பாகம் வாங்குவதில் தவறில்லை அனால் அது கட்டாயம்என்றோ அதை கொடுக்காவிடில் சாபம் என்றோ போதிப்பது புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் சரியான கருத்து அல்ல என்றே நான் கருதுகிறேன்.
என்னை பொறுத்தவரை இவ்வித வருமானம் எதுவும் இல்லை எனவே இந்த கட்டளையில் இருந்து நான் விடுபடுகிறேன்.
2. மூன்று வருடத்துக்கு ஒருமுறை கொடுக்கும் தசமபாகம்!
உபாகமம் 26:12தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
26:12 When you finish tithing all17 your income in the third year (the year of tithing), you must give it to the Levites, the resident foreigners, the orphans, and the widows18 so that they may eat to their satisfaction in your villages.
இங்கு மூன்றாம் வருஷம் என்பது தசமபாகம் செலுத்தும் வருஷமாக தேவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு வசனத்தின் அடிப்படையில் கவனிக்க வேண்டிய முக்கிய காரியங்கள்
1. மூன்றாம் வருடம் (PERIODICITY)
இந்த மூன்றாம் வருடம் என்பது நாம் தேவனின் உடன்படிக்கையின் கீழ் வந்ததில் இருந்து மூன்றாவது வருடமாகவோ அல்லது நாம் நிர்ணயித்த வருடம் அதை தொடர்ந்து வரும் மூன்றம் வருடமாகவோ இருக்கலாம். (மூன்று வருடத்துக்கு ஒருமுறை என்பது எனது கருத்து)
2. உன் வரத்திலெல்லாம் (COVERAGE OF INCOME)
இந்த "வரத்தில் எல்லாம்" என்பதில் சம்பளம் மற்றும் எவ்வித வருமானமாகிலும் அதனுள் அடங்கிவிடுகிறது.
3. உன் வாசல்களில்: (எங்கு கொடுக்க வேண்டும்)
இங்கு "VILLAGES" என்ற வார்த்தை வாசல்களில் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அதை ஒரு PRESCRIBED ஏரியாவாக எடுத்து கொள்ளலாம். அதாவது (அதாவது "உன் வாசல்களில் உன்னை முற்றிக்கைப்போட்டு" என்று வசனம் குறிப்பிடுவதால் நமது வீட்டு வாசல் என்பது அருத்தமல்ல ஒரு குறிப்பிட்ட பகுதி ஊர் அல்லது வரையறுக்கப்பட்ட இடம் என்று எடுத்து கொள்ளலாம்.)
இவ்வுலகத்தை பொறுத்தவரை தேவனுடைய பிள்ளைகள் எல்லோருமே பரதேசிகளே. எனவே பரதேசியாக வாழும் இவ்வுலகில் நிறைவு உள்ளவர்கள் குறைவு உள்ளவர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ தசம பாகத்தில் பங்கு கொடுப்பதில் தவறில்லை என்பது எனது கருத்து.
திக்கற்ற பிள்ளைகள் : தகப்பனையும் தாயையும் இழந்த அநாதை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்
விதவைகள் : கணவனை இழந்த கைம்பெண்களுக்கு கொடுக்கலாம்
அதாவது கர்த்தர் குறிப்பிடும் அந்த மூன்றாம் வருடம் சரியாக கணக்கு பார்த்து தசமபாகத்தை செலுத்துகிறேன். மற்ற வருடங்களில் எந்த கணக்கும் இன்றி இஸ்டம்போல் செய்கிறேன்!
இதில் தவறு எதுவும் இருந்தால் சுட்டி காட்டவும்! திருத்தி கொள்கிறேன்.
குறிப்பு:
("அனைத்து கட்டளைகளுக்கும் என்னால் இயன்ற அளவு அளவு கீழ்படிவேன்" என்ற நிபந்தனையின் அடிப்படையில் தேவன் எனக்கு பல உண்மைகளை தெரிவித்ததால் அவரது கற்பனைகள் அனைத்தையும் கைகொள்வது என்மேல் விழுந்த கடமையாக கருதி, இவ்விதம் ஆராய்துபார்த்து அவரது கட்டளைகளை கைகொள்கிறேன். மற்றவர்களின் நிலைபற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// அதாவது கர்த்தர் குறிப்பிடும் அந்த மூன்றாம் வருடம் சரியாக கணக்கு பார்த்து தசமபாகத்தை செலுத்துகிறேன். மற்ற வருடங்களில் எந்த கணக்கும் இன்றி இஸ்டம்போல் செய்கிறேன்...இதில் தவறு எதுவும் இருந்தால் சுட்டி காட்டவும்! திருத்தி கொள்கிறேன். //
Act 15:1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள்.
Act 15:2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
Act 15:3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
Act 15:4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
Act 15:5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
Act 15:6 அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
Act 15:7 மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
Act 15:11 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
Act 15:12 அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.
Act 15:13 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
Act 15:14 தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
Act 15:16 எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
Act 15:17 நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
Act 15:19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,
Act 15:20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
Act 15:21 மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
Act 15:22 அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
Act 15:23 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
Act 15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
Act 15:25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
Act 15:26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.
Act 15:29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
மேற்காணும் வேதப்பகுதியின் அடிப்படையிலேயே கட்டளைகளும் கற்பனைகளும் பிரமாணங்களும் சடங்காச்சாரங்களும் ஒழிக்கப்பட்டது; அதன் ஒருபகுதியே தசமபாகக் கட்டளை;கிறித்துவின் மரணத்துக்குப் பிறகு பயம் என்பதே இல்லை;(1.யோவான்.4:18) அப்படியானால் தசமபாகம் என்பது இல்லையா? ஆம்,அது கட்டளையாக இல்லை;அன்பினால் நிறைவேற்றவேண்டும்;
தசமபாகம் எனும் சொல்லின் பொருளை நூறில் பத்து அல்லது பத்தில் ஒன்று என்று பொருளாகும்;அதன்படி நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இறைப்பணிக்காகத் தருவதும் ஏழை எளிய மக்களின் குறைவில் உதவி செய்வதும் நம்மை மென்மையானவர்களாகவும் இறைவனுக்கு அருகிலும் வைத்துக்கொள்ள உதவும்;ஆவியில் கடினப்பட்டோர் யாருக்கும் எதுவும் செய்யமாட்டார்கள்;அரசாங்கத்தையும் வரி ஏய்ப்பு செய்வார்கள்.
சகோதரர் சில்சாம் அவர்களே ஒரு வேதவசனம் சம்பந்தப்பட்ட முடிவுக்கு வரும்முன் அவ்வசனம் சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் அலசி ஆராய்ந்து பின்னர் முடிவெடுப்பதுதான் சரியான முடிவாக அமையும்.
உபாகமம் 7:11ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.
என்று ஆரம்பித்து
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
என்பது வரையில் நூற்றுக்கதிகமான வசனங்களில் கற்பனையை கட்டளையை கைக்கொள்ளவேண்டும் என்று வேதம் போதிக்கும் பட்சத்தில் ஒருசில இடங்களில் நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று எழுதப்பட்டு இருக்கிறது என்றால் அது எதை குறிக்கிறது அதன் உண்மை பொருள் என்னவென்பதை ஆராயாமல் நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
தாங்கள் குறிப்பிட்ட சம்பவமும் உரையாடல்களும் முதலில் விருத்தசேதனத்தில் ஆரம்பித்து பின்னர் மோசேயின் நியாயபிரமாணம் கைகொள்ளுவது பற்றிய சம்பாஷனை வருகிறது.
11. நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. 14நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.
என்றும் கூறியிருக்கிறார்! எனவே அவர்கள் பாரமாய் இருக்கும் நுகம் என்று குறிப்பிட்டது நிச்சயம் கட்டளை கற்பனைகளை அல்ல என்பதை அவதானித்து அறியவேண்டும்.
விருத்தசேதனம் மற்றும் பலியிடுதல் போன்ற சடங்காச்சார செயல்களே மிகுந்த பாரம் உள்ளதாகவும், செய்வதற்கு பண செலவு மற்றும் கடினமான காரியமாகவும் இருந்தது அதையே அவர்கள் நிராகரித்தனர். இவைகள் கர்த்தரே ஏற்கெனவே சில வசனங்களில் நிராகரித்து விட்டிருக்கிறார்.
சரி தாங்கள் சொல்வதுபோல் மொத்த நியாய பிரமாணமும் முடிந்துவிட்டது என்று எடுத்துகொண்டால், கீழ்கண்ட காரியங்கள் தவறு என்பதையும் நியாயபிரமானம்தானே சொல்கிறது?
இந்த வசனம் குறிப்பிட்டுள்ள காரியத்துக்கு மட்டும் விலகியிருந்துவிட்டு நியாயபிரமாணம் சொல்லும் பிற கற்ப்பனைகளாகிய கொலை செய்வதோ அல்லது திருடுவதோ அல்லது ஆண் புணர்ச்சியில் ஈடுபடுவதோ தேவன் பார்வையில் பாவமில்லை என்று கருதுகிறீர்களா?
நிச்சயம் முடியாது! காரணம் வேறொரு வசனம் இவ்வாறு சொல்கிறது
இந்த பாவங்கள் எல்லாமே நியாயபிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளே. நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று சொல்பவர்கள் மீண்டும் ஏன் இதுபோன்று அதில் உள்ள கற்பனைகளை எடுத்து போதிக்கவேண்டும்? இவைகளை எல்லாம் நாம் ஆராயும்போது நிச்சயம் நியாயப்பிரமாணம் என்பது நான்கு பகுதிகளை உள்ளடக்கியது என்பதை அறிய முடியும்:
1. ஆசாரிப்பு கூடாரத்துக்கடுத்த கற்பனைகள்
2. பலியிடுதல் மற்றும் இரத்தம் சிந்துதல் சம்பந்தமான கற்பனைகள்
3. தேவனுடய கட்டளைகள்
4. தேவனுடய நீதி நியாயங்கள்
இதில் முதல் முதல் பகுதி இயேசு மரித்தபோது முடிவுற்று தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கான திரை கிழிந்து தேவனை எங்கும் தொழுதுகொள்ளும் நிலை ஏற்ப்பட்டது இரண்டாம் பகுதியாகிய பலிசெலுத்துதல் இயேசுவின் பலி மற்றும் இரத்தத்தால் முடிவுக்கு வந்தது. ஆனால் மற்ற இரண்டு பகுதியாகிய கட்டளை மற்றும் நீதி நியாயங்கள் ஒருநாளும் முடியவும் செய்யாது! அதை முடிக்கவும் முடியாது!
சங்கீதம் 119:160உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்
இவ்வாறு நித்தியமான நீதியும் நியாயமும் எப்படி முடிவுக்கு வரும்? வானமும் பூமியும் உள்ளவரை அதின் எந்த உறுப்பும் ஒளிந்துபோகாது என்பதையே இயேசுவும் உறுதிபடுத்தியுள்ளார் அதை தொடர்ந்து பவுலும் அவரின் கற்பனை நீதி நியாயங்களில் அனேக காரியங்களை குறித்து போதித்திருக்கிறார் மற்ற அப்போஸ்த்தலர்களும் கற்பனையை கைகொள்வது பற்றி போதித்திருக்கின்ற்றனர்
(இவ்வாறு தெளிவாக சொல்லியிருக்கும் பவுல், நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று சொல்லியிருப்பதால், அவர் "நியாயபிரமாணம்" என்று குறிப்பிடுவது பலி மற்றும் சடங்காச்சாரங்களை பற்றியே சொன்னார் என்பதை சுலபமாக அறிய முடியும்)
I யோவான் 5:2நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
சகோதரர்களே நியாயபிரமாணம் சொல்லும் பொய் சொல்லாமல் இருப்பது திருடாமல்/ கொலை செய்யாமல் விபச்சாரம் /அக்கிரமம்/ ஆண்புனர்ச்சி வஞ்சம்/ வன்கண்/ பொறாமை/ வேசித்தனம்/ விக்கிரக ஆராதனை /தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவது போன்ற அனைத்து காரியங்களும் புதிய ஏற்பாட்டில் ஆங்காங்கே இயேசு மூலமோ அல்லது பவுல் மூலமோ தடை செய்யபட்டுள்ள பாவம் என்பது அனைவரும் அறிந்த ஓன்று! இவைஎல்லாம் எல்லோருக்கும் பயனுள்ள பொதுவான நல்ல காரியங்களே அதுபோல் தசமபாகம் எனபதுகூட தேவனின் ஊழியர்கள் மற்றும் விதவைகள் அனாதைகள் போன்றவர்கள் வாழ்வதற்கு ஆதாரமாகவே கொடுக்கபட்டுள்ளது.
எனவே இங்கு எனது நிலை என்னவென்றால், இவைகளை எல்லாம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகுந்த பாரமானது என்று ஒருவர் கருதினால் அவர் நிச்சயம் தேவனுடய ஆவியில் நடத்தப்பட மாட்டார் என்றே நான் கருதுகிறேன்! ஏனெனில் அவரவர் கனியினால்தான் அவரவரை அறிய முடியும். மற்றும் நீதி நியாயமும் நேர்மையான நிலையும் உத்தமமும் போயயனாகிய பிசாசுக்குத்தான் மிகவும் கசப்பாக இருக்கும்!
முடிவாக:
எது கைகொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என்று தேவன் கருதினாரோ அதையெல்லாம் அவரே முடித்து இதற்க்கு பதில் இப்படி செய்யுங்கள் என்று மாற்றி கொடுத்துவிட்டார்.
உதாரணமாக பலியிடுங்கள் என்று சொன்னவர் "பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்றும். நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணு என்று சொன்னவர் மாமிசத்தன் நுனித்தோல் அல்ல இருதயத்தின் நுனித்தோல் என்றும் இந்த ஆலயத்தில்தான் தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னவர் வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி எங்கும் பிதாவை தொழும் காலம் வந்திருக்கிறது என்றும் மாற்றியிருக்கிறார்.
அவரால் மாற்றப்படாத கற்பனைகள் நீதிநியாயங்கள் எல்லாமே நிச்சயம் கைகொள்ளப்பட வேண்டும்! அவைகளை நிர்விசாரமாக ஒதுக்கி பட்சபாதம் பண்ணி எஸ்கேப்ஆக நினைப்பவர்களுக்கு தேவனின் எச்சரிப்பு இதோ:
1. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். 2. நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள்தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. என்பதே
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் புதுப்புது கிறிஸ்துவ சபைகள் தோன்றி, வளர்ந்து, தரம் உயரும் சபைகள் இன்றைய நாட்களில் ஏராளம். ஐந்தாறு பேர்களுடன் கீற்றுக்கொட்டைகையில் ஆரம்பமாகும் சபைக்கூடங்கள் குறுகிய காலத்திலேயே ஆற்று வெள்ளம்போல் பெருகி காங்கிரிட் ஜெபக்கூடங்களாகவும், ஏன் ஜெப கோபுரங்களாகவும் மாறும் நிலமைகளைக் காண்கிறோம். சைக்கிள், பைக்குகளில் ஊழியம் செய்த பைப்போதகர்கள் கொஞ்ச காலத்திலே சொகுசு கார்களுக்கு சொந்தக்காரர்களாகும் நிலையையும் பார்க்கிறோம். தேவன் இவர்களை அபரிமிதமாக ஆசீர்வதித்ததாகவும் இடங்கொள்ளாமல் போகுமளவுக்கு கொட்டிக்கொடுத்ததாகவும் சொல்லி வாக்குத்தத்த வசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கும், ஊழியக்காரர்களின் அந்தஸ்து உயர்வுக்கும் காரணம் என்ன? சபைகளை ஆரம்பிக்கும் ஊழியக்காரர்களும் போதகர்களும் தங்களை நம்பிவரும் விசுவாசிகளை அவர்களின் வருமானத்தில் பத்தில் ஒருபங்கான “தசமபாகம்” (TITHE) கொடுக்க வேண்டும் என வற்புறுத்திக் காணிக்கையை கட்டாயப்படுத்துவதே. வேதவசனங்கள் அடிப்படையில் தசமபாகக் காணிக்கையைப்பற்றி பைபிள் கூறும் கருத்துக்களை சிந்திக்க விசுவாசிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆபிரகாம் கொடுத்த தசம பாகம்
தசமபாகம் குறித்து ஆதியாகமத்தில் இரண்டு இடங்களில் பார்க்கிறோம். கெதர்லா கோமேரையும் அவனோடிருந்த இராஜாக்களையும் முறியடித்து திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமுக்கு, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். அவருக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். (ஆதி 14:18-20) இந்த நிகழ்வை எபிரேய நிருப ஆசிரியரும் எடுத்துக் கூறியுள்ளார். (எபி 7:4)
யாக்கோப்பின் பொருத்தனை
யாக்கோபு, பெத்தேல் என்ற இடத்தில் தேவனோடு செய்து கொண்ட பொருத்தனையில், தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொன்னான் (ஆதி 28:22)
மோசேயின் நியாயப் பிரமாணத்தில் தசமபாகக் கட்டளை:
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினபடியே யாக்கோப்பின் குமாரர்களான இஸ்ரயேல் கோத்திரங்களை கானான் தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணி, அவர்களுக்கு அந்த தேசத்தை சுதந்திரமாகக் கொடுத்தார். லேவி யாக்கோப்பின் குமாரனாயிருந்தும் லேவி கோத்திரத்தாருக்கோ தேசத்தில் பங்கும் சுதந்திரமும் கொடுக்கவில்லை. யாக்கோப்பின் மற்ற குமாரர்களான பனிரெண்டு கோத்திரங்களுக்கு தேசம் காணியாட்சியாக யோசுவாவினால் பங்கிடப்பட்டது. ஆனால் மோசே சொன்னபடி லேவியின் புத்திரர்களுக்கு குடியிருக்கும் பட்டணங்களும் அவர்கள் ஆடுமாடுகள் மேய்வதற்கு அதை சுற்றிலுமுள்ள வெளிநலங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. (யோசு 14:1-5) தேவன் லேவி கோத்திரத்ததை தனக்காக பிரித்தெடுத்துக்கொண்டார். (எண் 3:12) ஆசரிப்புக்கூடார பணிவிடைக்காகவும் ஆசாரிய ஊழியத்துக்கென்றும் பிரித்தெடுத்துக்கொண்டதினாலே தேசத்தில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் தேவனே அவர்கள் சுதந்திரமாக இருந்தார். (உபா10:9;18:1,2) லேவி கோத்திரத்தார் ஆசரிப்புக் கூடார பணிவிடைகளை மட்டுமே செய்தார்கள். லேவியர் தங்கள் பிழைப்புக்காக வேறெந்த தொழிலையும் செய்யாதிருந்தார்கள் ஆகவே லேவியர் போஜிக்கப்படும்படிக்கு லேவியின் மற்ற சகோதரர்கள் தங்கள் காணியாட்சியில் விளைந்த தானியங்களிலும் தங்கள் மந்தைகளிலும் மற்றும் தங்களுக்குண்டான எல்லாவற்றிலும் தசமபாகம் (TITHE-பத்தில் ஒரு பாகம்) தேவனுடைய காணிக்கையாக கொடுக்க வேண்டும். இஸ்ரயேலர்கள் தேவனுக்கு கொடுக்கும் தசமபாகம் லேவியரின் சுதந்திரமாயிற்று. (எண் 18:20-24) இஸ்ரயேலர் கையிலிருந்து லேவியர் வாங்கின தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கை ஆசாரியருக்கு கொடுத்தார்கள் (எண் 18:26-28)
இஸ்ரயேலர் தங்கள் காணியாட்சியில் விளைந்த நிலத்தின் தானியத்திலும் விருட்சத்தின் கனிகளிலும் தங்கள் மந்தையிலுள்ள ஆடுமாடுகளிலும் பத்தில் ஒருபங்கு கொடுக்கும் தசமபாகம் தேவனுக்குரிய காணிக்கையாகும். (லேவி 27:30) லேவியர் தேவனின் ஊழியக்காரர்களாக ஆசரிப்புக்கூடாரத்துக்கடுத்த பணிவிடைகளை செய்வதால் தேவனுக்குரிய தசமபாக காணிக்கை லேவியர்களின் சுதந்திரமாயிற்று. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இந்த தசமபாக காணிக்கை கட்டாயமாக வலியுறுத்தப்பட்டது. ஏனெனில் லேவியரும் ஆசாரியரும் போஜிக்கப்பட இஸ்ரயேல் ஜனங்கள் தசமபாகம் கொடுப்பது அவசியமாய் இருந்தது. தசமபாக பிரமாணத்தை உண்மையாய் நிறைவேற்றுவது இஸ்ரயேலருக்கு ஆசீர்வாதமாகும். தசமபாகத்தில் உண்மையில்லாது அதை வஞ்சிப்பது அவர்களுக்கு சாபமாகவும் இருக்கும். (மல் 3:8-10) ஆகவே தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரயேலர் தசமபாகத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாய் இருந்தது. இவ்விதமாக லேவியர் தங்கள் சகோதரர்களான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குவதற்குக் கட்டளை பெற்றார்கள். (எபி 7:5)
நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்தது
நிழலான பலிகளையும் காணிக்கைகளையும் குறித்த நியாயப்பிரமாணம் முழுவதையும் இயேசுகிறிஸ்து நிறைவேற்றி நியாயப்பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். (ரோமர் 10:4). இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருப்பதால் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளான புதிய சிருஷ்டிக்கு நியாயப்பிரமாண கட்டளைகளை கைக்கொள்வது அவசியமல்ல. அது சபையின் ஆரம்ப காலத்திலேயே விலக்கி வைக்கப்பட்டது. நியாயப்பிரமாணம் நம்மாலும் நம்முடைய பிதாக்களாலும் சுமக்கக் கூடாதிருந்த நுகத்தடி இதை புறஜாதியாரிலிருந்து வந்த சீஷர்கள் கழுத்தில் சுமத்தக்கூடாது என எருசலேமில் கூடிய சபையாராலும் அப்போஸ்தலர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (அப் 15:10) எங்களால் கட்டளை பெறாத சிலர் விருத்தசேதனத்தை அடையவும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் வேண்டும் என்று சொல்லி இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி உங்கள் ஆத்துமாக்களை புரட்டுகிறார்கள் என்றும் நியாயப்பிரமாண கட்டளைகளை அனுசரிக்க தேவையில்லையெனவும் புறஜாதி விசுவாசிகளுக்கு அப்போஸ்தலர்கள் எழுதி அனுப்பினார்கள். (அப் 15:24-29) கிறிஸ்துவ விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தை அனுசரிக்க தேவையில்லை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்து கூறுகிறார். இயேசு கிறிஸ்து நம்முடைய சமாதான காரணராகி இருதிறத்தாரையும் (இஸ்ரயேலர்,புறஜாதியார்) ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்ட திட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை தம்முடைய மாமிசத்திலே ஒழித்து இருதிறத்தாரையும் (இஸ்ரயேலர், புறஜாதியார்) தமக்குள்ளே ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, இப்படிச்சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். (எபே 2:14-16) நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் (நியாயப் பிரமாண சட்டங்களை) குலைத்து அதை நடுவிலிராதபடி எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து (சிலுவையில் ஆணியடிக்கப்பட்டவன் மரிப்பது போல் நியாயப்பிரமாணத்தை செத்ததாக்கி, செயலற்றதாக்கி) வெற்றி சிறந்தார். ஆகவே இப்படிப்பட்ட காரியங்களால் ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வரும் காரியங்களுக்கு நிழல் என தனது நிருபங்களில் எழுதினார். (கொலோ.2:14-17) நியாயப்பிரமாணம் ஒருவனையும் பூரணப்படுத்துவதில்லை. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை. (கலா 3:11) நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினிடத்தில் நம்மை வழிநடத்துகிற உபாத்தியாய் இருக்கிறது. விசுவாசம் கிறிஸ்துவின் மூலமாய் வந்த பின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்கள் அல்ல, நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். (கலா 3:24-26, எபி 10:1, ரோம 7:4-6) ஒரு யூதனே இந்தப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனல்ல என்னும்போது புறஜாதியாரான நாம் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகளான பின்பு நியாயப்பிரமாண சட்டத்திற்கு உட்பட்டவர்களல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது நியாயப்பிரமாணம் சொல்கிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்கிறது என்று எழுதினார். (கலா 2:16-21, ரோம 3:19)
தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதும், வாங்க வேண்டும் என்பதும் மாமிச இஸ்ரயேலருக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணக் கட்டளையேயாகும். இஸ்ரயேலர் தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியத்தை குறித்து முன்பே விளக்கிக்கூறியுள்ளோம். அது ஆவியின் இஸ்ரயேலராகிய கிறிஸ்துவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையல்ல. நாமோ மாமிசத்தின்படி யாக்கோப்பின் பிள்ளைகளுமல்ல, இஸ்ரயேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமும் அல்ல, தேசத்திலே காணியாட்சியைப் பெற்றவர்களாகவும் இல்லை. காணியாட்சியைப் பெறாத லேவி கோத்திரத்தாரும் நம்மிடத்தில் இல்லை. புறஜாதி விசுவாசிகளான நாமோ இஸ்ரயேலரின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள் என்று வேதம் சொல்கிறது. (எபே 2:11,12)
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரிய ஊழியம்
உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் (ஆதி 14:20) இதன்படி ஆபிரகாமின் வழித்தோன்றலாகிய லேவியரும் ஆசாரியரும் ஆபிரகாம் மூலமாக மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தார்கள் என்று சொல்லலாம். ஆரோன் முறைமையின்படி தசமபாகம் வாங்க கட்டளைபெற்ற இவர்களே மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தார்கள் என்றால் மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரிய ஊழியம் எவ்வளவு விஷேசித்தது? மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தேவனால் நாமம் தரிக்கப்பட்டார். “ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்” என்று யேகோவா ஆணையிட்டார். (எபி 7:9-20, 5:10) ஆரோன் முறைமையின்படியான ஆசாரிய ஊழியம் மாற்றப்பட்டு, நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டது. இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக்கின் முறைமையின் படியான பிரதான ஆசாரியராக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவோடுகூட அவரது சரீரமான சபையாரும் ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தும் ஆசாரியர்களாக இருக்கிறார்கள். (1 பேது 2:4,5,9) மெல்கிசேதேக்கு எவ்விதம் ராஜாவும் ஆசாரியருமாய் இருந்தாரோ அவ்விதமாக இயேசு கிறிஸ்துவும் ராஜாவும் ஆசாரியருமாய் இருக்கிறார். அவருக்குள்ளாக நாமும் ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருக்க தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்குள் இராஜாக்களும் நாமே ஆசாரியர்களும் நாமே என்றிருப்பதால் யார் யாருக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும்? சிந்திப்பீர்! நியாயப் பிரமாண பலிகளும் தசமபாக காணிக்கையும் ஒழிக்கப்பட்டு போயிற்று என்பதே உண்மை.
கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருப்பதினாலே அவர்களுக்குள் யூதனென்றுமில்லை, கிரேக்கனென்றுமில்லை, கிறிஸ்துவுக்குள் வந்தவர்களில் லேவியனுமில்லை, ஆரோன் முறைமையின் படியான ஆசாரியனுமில்லை. எல்லாரும் தலையான கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாய் இருக்கிறார்கள். கிறிஸ்துவ விசுவாசிகள் அனைவரும் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளும் இயேசுகிறிஸ்துவுக்கு சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். உங்களுக்குள் ரபீ (போதகர்) என்றும், பிதா என்றும், குருக்கள் என்றும் அழைக்க வேண்டாம். நீங்கள் எல்லாரும் சகோதரர்களாயிருக்கிறீர்கள் என்று இயேசு கூறினார். (மத் 23:8-10) தசமபாக காணிக்கைகளைக் கொண்டுவந்து ஆலயத்திலுள்ள பண்டசாலையை நிரப்ப ஆலயமுமில்லை. பண்டசாலையுமில்லை. நீங்களே அந்த ஆலயம் என்றபடி விசுவாசிகளே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறார்கள். (1கொரி. 3:16,17) தசமபாகம் வாங்கிக்கொள்ள கிறிஸ்துவுக்குள் எந்த விசுவாசிக்கும் உரிமையில்லை. கொடுக்க கட்டளையும் இல்லை.
எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சீஷத்துவம்
முழுஇருதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆத்துமாவோடும் தன்னை முழுதும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கும் சீஷத்துவப்பண்பு ஒரு கிறிஸ்துவனுக்கு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் இழக்கவும், கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் தன்னை முழுதும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கக்கடனாளிகளாயிருக்கிறோம். (ரோம 12:1) காணிக்கைப்பெட்டியில் இரண்டு காசு போட்ட விதவை எல்லாரிலும் அதிகமாய் போட்டாள் என்று இயேசு கூறினார். எப்படியெனில் அவர்கள் எல்லாரும் தங்கள் நிறைவிலிருந்து போட்டார்கள். இவளோ, தன் ஜீவனுக்குண்டான எல்லாவற்றையும் போட்டாள் என்றார். (மாற் 12:41-44) பத்தில் ஒரு பங்கல்ல தனக்குண்டான எல்லாவற்றையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவும் இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். தேவ ஊழியத்திற்கு கொடுக்கப் பிரியப்படுகிறவன் தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். கட்டாயமாயுமல்ல, விசனமாயுமல்ல என்று பவுல் கூறுகிறார். (2கொரி. 9:7) நன்மை செய்யவும் தான தர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் . இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார் என்று எபிரெயர் நிருபத்தில் வாசிக்கிறோம். (எபி 13:16) ஒரு விசுவாசி தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. தசமபாகம் கொடுக்காதது பாவமும் அல்ல. தசமபாகம் வாங்கவோ, கொடுக்கவோ உண்மை கிறிஸ்துவ ஜீவியத்தில் கட்டளை இல்லை என்பதை அறிவோமாக. தசமபாகத்தை சொல்லி பயமுறுத்தி விசுவாசிகளை வஞ்சிக்கிற போதகர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் தேவனுக்கல்ல தங்களுக்கே தசம பாகம் வாங்குகிறார்கள். அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர். 12:1)
////////////ஒரு விசுவாசி தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. தசமபாகம் கொடுக்காதது பாவமும் அல்ல. தசமபாகம் வாங்கவோ, கொடுக்கவோ உண்மை கிறிஸ்துவ ஜீவியத்தில் கட்டளை இல்லை என்பதை அறிவோமாக. தசமபாகத்தை சொல்லி பயமுறுத்தி விசுவாசிகளை வஞ்சிக்கிற போதகர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் தேவனுக்கல்ல தங்களுக்கே தசம பாகம் வாங்குகிறார்கள். அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர். 12:1)////////////
Bible says
மனுஷனே நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்.நியாயம் செய்து இரக்கதை சினேகித்து உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் உன்னிடத்தில் எதிர்பர்கிறார் மீகா 6;8
(தசம பாகத்தை அல்ல )
which is the right????????
கொடுக்கறதுன்னு முடிவு பண்ணா ஏன் தசம பாகம் கொடுக்கணும் !!!!!!!
உனக்குள்ளது எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே !!!!
இப்ப மேட்டர் என்ன நா
யாருக்கு இந்த பங்கு போய்சேரவேண்டும் அது தான் பிரச்சனை
அவிர் பாகம் கொடுத்த நாம் இப்போது தசமபாகம் கொடுக்க வேண்டுமோ ???
-- Edited by Kanna on Saturday 26th of March 2011 08:13:10 PM
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
புதிய ஏற்பாட்டு பிரமாணத்தை பொறுத்தவரை ஆண்டவருக்காக கொடுக்கும விஷயத்தில் எந்தஒரு வரைமுறையும் இல்லை என்றே நான்கருதுகிறேன்.
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்"
"தனக்கு உண்டானவை எல்லாம் கர்த்தருக்கு" என்று வாய் சவடால் அடித்துக்கொண்டு இறைவனின் ஊழியங்கள் என்று எதுவும் கொடுக்க விரும்பாமல் எஸ்கேப் ஆக நினைப்பவர்கள் அட்லீஸ்ட் குறைந்த பட்சமாக பத்தில் ஒரு பங்கை ஆண்டவரின் காரியங்கள் நடக்க கொடுப்பதுதான் சிறந்தது அதாவது குறைந்த பட்சம் 1/10 அதிக பட்சம் நம் ஆஸ்த்தி முழுவதையும் கொடுக்க எந்த தடையும் இல்லை என்பது எனது கருத்து.
தேவனுக்கென்று கொடுப்பவைகளை யாரிடத்தில் கொடுக்கவேண்டும் என்பது ஒரு பெரிய சர்ச்சையான காரியமாக இருக்கிறது. ஏனெனில் இறை ஊழியத்துக்கு வரும் பணத்தில் அநேக பாஸ்டர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதால் பலருக்கு இது குறித்து இடறல் உண்டாகிறது
"தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டான்" என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தேவனுக்கென்று ஊழியம் செய்பவர்கள் அவருடைய ஊளியத்துக்கென்று வரும் காணிக்கையில் தங்களில் வாழ்வுக்கு தேவையானவற்றை எடுத்து கொள்வது தவறுபோல் எனக்கு தெரியவில்லை. ஆகினும் கார் / பங்களா/AC போன்ற ஆடம்பரத்தை தவிர்த்து அவசிய தேவைகளை மட்டும் அவர்கள் நிறைவேற்றுவது சிறந்தது. மற்றபடி, அவர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு பணத்துக்கும் அவர்கள் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருப்பதால் நியாயமான முறையில் இறை
காரியத்துக்கான பணத்தை செலவழிக்க வேண்டியது அவர்களின் மேல் விழுந்த கடமை.
நாம் கொடுக்கவேண்டியதை விசனமின்றி மனப்பூர்வமாக தேவனுக்கென்று கொடுப்போம். அது நமது கடமை! அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியது அந்த காணிக்கையை பெற்றவர்களின் கடமை .
பொதுவாக உழைத்து சம்பாதிக்கும் ஒரு மனுஷனுக்கு தனது பணத்தை தான் நினைத்தபடி செலவு செய்ய அதிகாரம் இருக்கிறது ஆனால் இறை ஊழியர்கள் ஆண்டவரின் ஊழியங்களுக்கு வரும் காணிக்கையில் வாழ்வதால் தாங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் சரியான கணக்கு ஒப்புவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இல்லையேல் இறைவனிடமிருந்து தண்டனை அடைய நேரிடலாம்.
நமது பார்வைக்கு நலமாக தெரியும் ஆலோசனை மட்டுமே இங்கு சொல்லப்படும். மற்றபடி கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களுடன் இங்கு போராட்டம் இல்லை.
///////தனக்கு உண்டானவை எல்லாம் கர்த்தருக்கு" என்று வாய் சவடால் அடித்துக்கொண்டு இறைவனின் ஊழியங்கள் என்று எதுவும் கொடுக்க விரும்பாமல் எஸ்கேப் ஆக நினைப்பவர்கள் அட்லீஸ்ட் குறைந்த பட்சமாக பத்தில் ஒரு பங்கை ஆண்டவரின் காரியங்கள் நடக்க கொடுப்பதுதான் சிறந்தது//////
But i will ready to give my all proprety but where is the riht place ?
who is the right person ? can u tell me the truth!!!!!!!!!!!
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
மத்தேயு 13:44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
மத்தேயு 13:46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
பிலிப்பியர் 3:8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
SUNDAR WROTE ///////தனக்கு உண்டானவை எல்லாம் கர்த்தருக்கு" என்று வாய் சவடால் அடித்துக்கொண்டு இறைவனின் ஊழியங்கள் என்று எதுவும் கொடுக்க விரும்பாமல் எஸ்கேப் ஆக நினைப்பவர்கள் அட்லீஸ்ட் குறைந்த பட்சமாக பத்தில் ஒரு பங்கை ஆண்டவரின் காரியங்கள் நடக்க கொடுப்பதுதான் சிறந்தது//////
But i will ready to give my all proprety but where is the riht place ?
who is the right person ? can u tell me the truth!!!!!!!!!!!
சகோதர் kanna அவர்களே தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய இந்த வார்த்தைகளால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். ஆண்டவர் தாமே உங்களை நித்தியத்துகுரிய ஆசீர்வாதத்தால் அதிகமதிகமாக ஆசீர்வதிக்க வாழ்த்துகிறேன். எல்லாவற்றையும் கொடுக்க முன்வருவது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல! உங்களின் இந்த தீர்மானத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.
எனது கருத்து என்னவெனில் கிறிஸ்த்தவம் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருமே நாளை இருப்போம் என்ற நம்பிக்கையில் அல்லது விசுவாசத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எனவே நாம் எந்த விசுவாசத்தின் அடிபடையில் ஒரு காரியத்தை செய்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே நமக்கு அதற்க்கான பலன் உண்டாகும். எனவே தேவனிடம் ஜெபித்து விட்டு விசுவாசத்தோடு நமக்கு தெரிந்த ஊழியங்களுக்கு கொடுக்கலாம்.
மற்றபடி
வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது என்று சொன்ன கர்த்தர் நாம் யாரிடமும் வந்து நேரடியாக பணம் வாங்குவது இல்லை. எனவே அவரிடம் நாம் நமது காணிக்கையை கொடுக்கவும் முடியாது.
ஆகினும் USD ஐ INR ஆக மாற்றுவதுபோல் பூமிக்குரிய பொக்கிஷங்களை பரலோக பொக்கிஷமாக மாற்ற ஆண்டவராகிய இயேசு ஒரு அருமையான வழியை சொல்லி சென்றிருக்கிறார். அதை தாங்கள் பயன்படுத்தலாமே!
மத்தேயு 19:21அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
இவ்வாறு தரித்திரருக்கும்ஏழைக்கும் இரங்கி உதவி செய்வது தேவனுக்கு பிரியமான பலி என்றும் வேதம் நமக்கு போதிக்கிறதே
....................\\ ஆகினும் USD ஐ INR ஆக மாற்றுவதுபோல் பூமிக்குரிய பொக்கிஷங்களை பரலோக பொக்கிஷமாக மாற்ற ஆண்டவராகிய இயேசு ஒரு அருமையான வழியை சொல்லி சென்றிருக்கிறார். அதை தாங்கள் பயன்படுத்தலாமே!
மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
இவ்வாறு தரித்திரருக்கும் ஏழைக்கும் இரங்கி உதவி செய்வது தேவனுக்கு பிரியமான பலி என்றும் வேதம் நமக்கு போதிக்கிறதே