"தீயகுணங்களை களைந்தால் மனதில் இறைவனை காணலாம்" என்பது பொதுவாக இந்து சகோதரர்கள் சாதரணமாக சொல்லும் கருத்தாக உள்ளது. இப்படி பொதுவான கருத்தை சொல்லிவிட்டு அதை களைவதற்கு எந்த முயற்ச்சியும் எடுக்காமல் சமயத்துக்கு ஏற்றாற்போல் சாய்ந்து கொண்டு வாழ்வது என்பது பலருக்கு கைவந்த கலையாக உள்ளது.
"அன்பே பெரிது" என்று அடிக்கடி சொல்லி, அன்பை பற்றி மட்டும் பேசுங்கள், அதைவிட பெரியது எதுவும் இல்லை என்பார்கள். ஆனால் சற்று ஏமாந்தால் காலின் கீழ்போட்டு மிதிக்ககூட தயங்க மாட்டார்கள்! உண்மை அன்பு என்பது எப்படிபட்டது என்பதை அறிவதக்கு சற்றும் அவர்களுக்கு ஆசை இல்லை.
யோவான் 15:13ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
என்று ஆண்டவராகிய இயேசு சொல்வதே உண்மை அன்பின் உயர்ந்த நிலை. அப்படி ஒரு அன்பை எங்காவது பார்க்க முடியுமா?
தீய எண்ணங்களை களைதல் என்பது சொல்வதற்கு ரொம்ப சுலபம் ஆனால் ஒவ்வொன்றாக களைந்து பார்த்தால்தான் தெரியும் அதன் விஸ்வரூபம் எப்படி பட்டது என்பது. அனேக தீய எண்ணங்கள நமது அனுமதியில்லாமலேயே நம்முள் தானாக வருகின்றன வருகின்றன உதாரணமாக பொறாமை, இச்சை,கர்வம், ஆணவம் அகங்காரம், பேராசை, எரிச்சல் போன்ற குணங்கள் தானாக நம்முள் வருவதை அறியமுடியும் அவை ஒவ்வொன்றையும் களைவது என்பது சுலபமான காரியம் அல்ல. சரி அப்படியே கஷ்டப்பட்டு களைந்தாலும் எவ்வளவு நேரம் அந்த நிலையில் நம்மால் நிலைக்க முடியும் இறைவன் துணை இன்றி நம் முயற்சியால் தீய எண்ணங்களை ஒருநாளும் களையவே முடியாது. வீட்டை சுத்தமாக துடைத்து வைத்தாலும் ஒரேநாளில் தூசி படிந்துவிடுவதுபோல இறைவன் இல்லா உள்ளமும் அடிக்கடி அசுத்த எண்ணங்களால் நிறைந்து விடுகிறது
ஒரு வயது குழந்தை மண்ணை அள்ளி சாப்பிடும் போது கையில் ஒரு அறை போடுங்கள் அப்பொழுது உடனே நிறுத்திவிடும். அனால் மறுநாள் அது அங்கும் இங்கும் கள்ளத்தனமாக பார்த்து ஆளில்லை என்பது தெரிந்தபின் திருட்டுத்தனமாக யாரும் இல்லாத நேரத்தில் மண்ணை அள்ளி சாப்பிடும்" அந்த திருட்டு குணம் யார் சொல்லி வந்தது. மனிதன் பிறக்கும் போதே தீய குணமும் அவனோடு சேர்ந்து பிறக்கிறது வயது ஏற ஏற அது வளர்கிறது. அது நமது உடம்பிலேயே குடிகொண்டிருப்பதால் அதை களைவது அவ்வளவு சுலபமல்ல. வேண்டுமென்றால் நான் களைந்துவிட்டேன் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிகொள்ளலாம். அவ்வளவுதான். நமக்கு 10-12 வயது வரை பணம் சேர்க்கும் ஆசை கிடையாது, கண்ட பெண்கள் மீது ஆசை கிடையாது, நம் குடும்பத்தை பற்றிய எதிர்காலத்தை பற்றிய கவலை ஏதும் கிடையாது, நமது எல்லா தேவைகளுக்க்ம் நம் பெற்றோர்ரையே எதிர்பார்த்து இருந்தோம். மனிதன் வாலிபவயதை அடையும் வரை அனேக கெட்ட செயல்கள் நம்மிடம் இல்லை
ஆனால் வயது ஏறியபின் எத்தனை மாற்றங்கள்!
தன்பிள்ளை, தன் குடும்பம், சுய கவ்ரவம், தனது வாழ்க்கை, வஞ்சம், பொறாமை, எதிர்கால ஆசை, மனஇச்சைகள் என்று ஒன்று ஒன்றாக கூடிக்கொண்டே அல்லவா போகிறது. அன்று அம்மா சொன்ன பொய் கதையை அப்படியே நம்பினோம். ஆனால் இன்று? கடவுளே வந்து சொன்னாலும் அது நம்மக்கு சாதகமாக இல்லை என்றால் நம்பமாட்டோம் அவ்வளவு முன்னேறி விட்டோம் அல்லவா?
இதெல்லாம் நம்மை கேட்டா நடந்தது? அது தானாக நம்மை தொற்றிக் கொண்டது என்றே சொல்லலாம். எனவே தீயவைகள் என்பது நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நமது வாழ்நாள் முழுவதும் நம்மை தொடர்ந்து துரத்துகிறது. அதை இறைவனின் துணையுடன் அவருடைய பெலத்தில் சிரத்தை எடுத்துதான் தடுக்க முடியுமேயன்றி நாமாக மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி விட்டு மனதில் இறைவனை காண்பது என்பது நடக்கிற காரியம் அல்ல!
எனவே முதலில்
யோவான் 8:46என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?
என்று சவால் விட்டு கேட்ட பரிசுத்தராகிய இயேசுவின் கரத்துக்குள் வாருங்கள் அவர் உங்களுக்கு தீயவைகளை ஜெயிக்க தேவையான பெலனை தருவார். சுய பெலத்தில் முயன்றால் நிச்சயம் தோற்றுபோவது உறுதி!
-- Edited by இறைநேசன் on Thursday 29th of April 2010 09:18:22 PM
தீய குணாதிசயங்களை களைவது சாத்தியமன்று - மறுபடியும் பிறக்காத பட்சத்தில். பரிசுத்த ஆவியினாலும் தேவ திரு வசனத்தாலும் மெய்யாகவே மறுபடியும் பிறந்த ஒருவனால் மாத்திரமே அது சாத்தியம். ஏனென்றால், மெய்யாய் மறுபடியும் பிறந்த ஒருவனுடைய "மனதும், மனசாட்சியுமே" மீட்ப்பை எய்தி இருக்கிறது. அப்படிபட்டவன் தனது பழைய மனிதனை "மெய்யாகவே இயேசு கிறிஸ்துவோடு அடையாளப்படுத்தி - அதை அவரோடு சிலுவையில், தனது புதுப்பிக்கப்பட்ட சிந்தை, செயல், திட்டத்தின் படி அறைந்து விட்டான்". அது மாத்திரமல்ல, தொடர்ந்து அந்த புது சிந்தை உடையவனாகவே ஜீவிக்கிறான், தன்னை பாவமான, மற்றும் தீய வழிகளில் எல்லாம் இருந்து தன்னை காக்க முற்படுகிறான். இயேசு கிறிஸ்துவை சார்ந்துகொண்ட தனது வாழ்க்கையை பரிசுத்த ஆவியினாலும், அனுதின வேத தியானத்தினாலும், ஜெபத்தினாலும் காக்கிறான். இப்படிப்பட்டவனே ஜெயம்கொண்ட கிறிஸ்த்தவன்............