மத்தேயு 7:6; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
ஆண்டவராகிய இய்சுவின் வாயில் இருந்து புறப்பட்ட வசனம் இது.
இங்கே யாரை "பன்றிகள்"என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார் "முத்துக்கள்" என்பவை எவை என்பதையும் நாம் சற்று விரிவாக ஆராய்வது நலம் என்று கருதுகிறேன். அவ்வாறு ஆராய பன்றிகளின் பண்புகள் எவைஎவை என்பதை சற்று பார்ப்போம்:
1. சேற்றில் புரளுவது:
பன்றிகளின் பண்புகளில் மிக மோசமானது அடிக்கடி துர்நாற்றம் வீசும் சேற்றில் கிடந்தது சந்தோஷமாக புரளுவது ஆகும்.
II பேதுரு 2:22 , கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது
ஒரு பன்றியை பிடித்து எவ்வளவுதான் கழுவி சுத்தப்படுத்தினாலும் அது சேற்றை பார்ததுவி ட்டால் மீண்டும் சேற்றில் புரளுவதர்க்கே ஆசைகொண்டு அதை நோக்கி ஓடும். அதுபோல் பாவம் என்னும் ஊளையான சேற்றில் புரண்டுகொண்டு கிடக்கும் மனிதர்களில் சிலரை மீட்டு வெளியே கொண்டுவந்து என்னதான் சுத்தம் செய்து ஆண்டவரின் அன்பை போதித்தாலும், அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த பாவ சேற்றையே நோக்கி ஓடுவர் இவர்களே பன்றிக்கு சமமானவர்கள் என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார்.
2. பூமியைநோக்கியபடியே அலைவது
இரண்டாவதாக பன்றியில் முக்கிய குணம் கீழ்நோக்கி தரையை பார்த்தபடியே அலைவது. அது தன் தலையை தூக்கி வானத்தை ஒருநாளும் பார்க்கவே செய்யாது. அதற்க்கு வானம் என்று ஓன்று இருப்பது தெரியுமோ என்னவோ! அனால் ஒருநாள் அதை கொல்வதற்காக பிடித்து கயிறுகளால் கட்டி கீழே போட்டிருக்கும்போது, அதன் ஒருபுற கண் வழியாக வானம் இருப்பது தெரியுமாம். அப்பொழுது ஆஹா எவ்வளவு அழகான வானம் இருந்திருக்கிறது நாம் இவ்வளவு நாள் இதை கவனிக்கவே இல்லையே! என்று வருந்துமாம். அனால் தொடர்ந்து வானத்தைபார்க்க அதற்க்கு சந்தர்ப்பம் இன்றி கொல்லப்படும்
அதுபோல் சில மனிதர்கள் இந்த அற்ப உலக வாழ்க்கை, அதில் எவ்வாறு அதிக பணம் சம்பாதித்து பெரியமனிதன் ஆவது கவ்ரவமாய் வாழ்வது மற்றும் தனது குடும்பம் , சுயலாபம் போன்ற இம்மைக்குரிய காரியங்களை மட்டுமே எப்பொழுதும் நோக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு மறுமைவாழ்வு நித்யம் போன்ற எதைபற்றியும் தெரியாது அதைப்பற்றி அறிந்துகொள்ளவும் அவர்களுக்கு விருப்பம் இருக்காது. இயேசுவை ஏற்றுகொண்டலும் அதனால் இந்த உலகில் தனக்கு என்ன ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதிலேயே நோக்கமாயிருப்பார்கள்.
ஆனால் வசனம் சொல்கிறது
I கொரிந்தியர் 15:19இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை யுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
இப்படிப்பட்டவர்கள் மரணம் என்ற ஒன்றை சந்திக்கும்போது "நித்யராஜ்ஜியம் என்று ஓன்று இருந்திருக்கிறதே! இதை இவ்வளவு நாள் அறியாமல் இருந்துவிட்டோமே" என்று வருந்துவார்கள், ஆனால் அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை.
இவ்வாறு பன்றிகள் போல திரும்ப திரும்ப பாவசேற்றில் புரள விரும்புகிறவர்- களிடத்திலும் கீழ்நோக்கி பூமிக்குரியவைகளை மட்டுமே நோக்கிக்கொண்டு அலைபவர்கள் முன்னேயும் முத்துக்களை போடவேண்டாம் என்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்
முத்துக்கள் என்றால் என்ன?
இங்கு முத்துக்கள் என்றால் என்ன என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். சிலர் "முத்துக்களை போடாதீர்கள்" என்றால் ஆண்டவரை பற்றியே இவர்களிடம் சொல்ல கூடாது என்று கருதுகின்றனர் ஆனால் அது தவறு
மாற்கு 16:15பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
இங்கு ஆண்டவர் சுவிசேஷம் என்பது "சகல சிருஷ்டிக்கும்" பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று சொல்லும்போது பன்றிகள் நாய்கள் போன்ற எல்லோருமே இதனுள் அடங்கிவிடுவார்கள். எனவே சுவிசேஷம் என்பது எல்லோருக்கும் சொல்லப்பட வேண்டிய ஓன்று அதில் பாகுபாடு இல்லை.
ஆனால் முத்துக்கள் என்பது விலையேறப்பெற்ற ஓன்று! அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இங்கு முத்துக்கள் என்று ஆண்டவர் குறிப்பிடுவது ஆண்டவரால் விசேஷமாக அருளப்பட்ட ஞானமான காரியங்கள். அதாவது வேதத்தின் மூலம் நமக்கு போதிக்கப்பட்டிருக்கும் சில அபூர்வமான வெளிப்பாடுகள் மற்றும் ஆவியானவர் நமக்கு போதித்திருக்கும் சில தனிப்பட்ட தரிசனங்கள் போன்றவற்றையே! இப்படிப்பட்ட முத்து போன்ற ஞானமான காரியங்களி பன்றி போன்றவர்களிடம் சொல்லகூடாது என்பதையே இந்த வசனம் வலியுறுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Friday 30th of April 2010 02:44:17 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)