இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலி ( BURNT)

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பலி ( BURNT)
Permalink  
 
பலி என்ற வார்த்தையை கேட்டாலே பயம் வரும் அளவுக்கு ஒரு மோசமான வார்த்தைபோல தெரிகிறது. காரணம் துடிக்க துடிக்க  கோவில்களில் கிடாக்களின் தலைகள் துண்டிக்கப்படுவத்தையும், சேவல்களை கூர் குச்சியில் குத்தி கொல்லப்படுவதையும்  பார்த்து பயந்து பரிதபிபவன் நான்.
 
இந்து  இஸ்லாம்   யூதமதம்  என்று பல மதங்களில் பரவிக்கிடக்கும் "பலி" என்ற இந்த கொடூர  காரியம் ஏன் வந்தது? என்பதை  ஆராய்வது மிகுந்த அவசியம் ஆகிறது! காரணம் நம் ஆண்டவராகிய இயேசு என்ற தேவகுமாரனே நமக்காக பலியாக வேண்டிய ஒரு நிர்பந்தமான  நிலையில் மனுக்குலம் விழுந்து போனதால்தான்.
 
இந்த "பலி" என்ற ஓன்று வர காரணம் என்ன? 
 
பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன், தகன பலிகளை காட்டிலும் தேவனை அறிகிர அறிவையும் விரும்புகிறேன் (ஓசி:6) ...

என்று  அருமையாக சொல்லும் மிகுந்த இரக்கம் உள்ள  நம் அன்பு தேவன் மாட்டை  பலியிடுங்கள் ஆட்டை பலியிடுங்கள் என்று பல இடங்களில்  சொல்ல காரணம் என்ன?  

தனது குமாரனாகிய இயேசுவை துடிக்க துடிக்க சிலுவையில் சித்திரவதை செய்வதற்கு வேண்டுமென்றே அவர் ஒப்புகொடுத்தரா?  அல்லது நிர்பந்தத்தின் அடிப்படையில் அப்படி செய்தாரா?
 
"தேவனால் எல்லாம் கூடும்" என்று வசனம் சொல்லும் பட்சத்தில் தன் குமாரனை கொலைசெய்ய கொடுத்துதான் தனது அன்பை மனுக்குலத்திற்கு காட்டமுடியுமா? அவர் அன்பை காட்டுவதற்கு வேறு வழியே இல்லையா? 
 
ஏன் ஆண்டவராகிய இயேசு நமக்காக பலியானார்?  எண்ணில்லா வேதனைகளை அன்பவித்தபின்னும் குற்றுயிராக  கொடூர வேதனையோடு எதற்க்காக பல மணிநேரம் சிலுவையில் தொங்கினார்?    
 
இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியவேண்டும் என்றால் பலி எப்பொழுது முதலில் பூமிக்குள் நுழைந்தது என்றும் அதற்க்கான அடிப்படை காரணம் என்ன வென்பதையும் நாம் ஆராயவேண்டும்!
 
பலியைபற்றியும் அதற்க்கான அவசியம் பற்றியும்  விளக்கம் அறிந்த சகோதரர்கள் பதிவிடவும்!  
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
Permalink  
 
SUNDAR wrote:

இந்து, இஸ்லா,ம் யூதமதம்,  என்று பல மதங்களில் பரவிக்கிடக்கும் "பலி" என்ற இந்த கொடூர  காரியம் ஏன் வந்தது? என்பதை  ஆராய்வது மிகுந்த அவசியம் ஆகிறது! காரணம் நம் ஆண்டவராகிய இயேசு என்ற தேவகுமாரனே நமக்காக பலியாக வேண்டிய ஒரு நிர்பந்தமான  நிலையில் மனுக்குலம் விழுந்து போனதால்தான்.
மனுக்குலத்தின் வீழ்ச்சியினால் "பலி" செலுத்தல் உண்டாகவில்லை. வேதம் உறுதியாகவும் நன்றாகவும் கூறுகிறது. உலக தோற்றத்திற்கு முன்பதாகவே, அதாவது பாவம் மனுக்குலத்தில் நுழையும் முன்னரே இயேசு கிறிஸ்து நிலையான சத்தியத்தின் படியும், காரியத்தின் முடிவை ஆரம்பிக்கிறதர்க்கு முன்னரே அறிகிறவர் தேவன் என்ற உண்மையின் படியும் - நம்முடைய இரட்சிப்பானது இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய அநாதி தீர்மானத்தின் படி நமக்காக ஆயத்தமாயிருந்தது.

Rev 13:8a  All who dwell on the earth will worship him, Rev 13:8b whose names have not been written in the Book of Life Rev 13:8c of the Lamb slain from the foundation of the world. 1Pe 1:19  but with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot. 1Pe 1:20  He indeed was foreordained before the foundation of the world, but was manifest in these last times for you

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 
arulmraj wrote:

மனுக்குலத்தின் வீழ்ச்சியினால் "பலி" செலுத்தல் உண்டாகவில்லை. வேதம் உறுதியாகவும் நன்றாகவும் கூறுகிறது. உலக தோற்றத்திற்கு முன்பதாகவே, அதாவது பாவம் மனுக்குலத்தில் நுழையும் முன்னரே இயேசு கிறிஸ்து நிலையான சத்தியத்தின் படியும், காரியத்தின் முடிவை ஆரம்பிக்கிறதர்க்கு முன்னரே அறிகிறவர் தேவன் என்ற உண்மையின் படியும் - நம்முடைய இரட்சிப்பானது இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய அநாதி தீர்மானத்தின் படி நமக்காக ஆயத்தமாயிருந்தது.

சகோதரர் அவர்களே!  உலக தோற்றத்துக்கு முன்னதாகவே அவர் அடிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவர் நம்முடைய  பாவங்களுக்காகதான் பலியானார் என்று வசனம் சொல்கிறது. 
 
ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;
ரோமர் 4:25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
I கொரிந்தியர் 5:7 . ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
 
நாம் பாவம் செய்துவிடுவோம் என்று முன்னமே அறிந்து தேவன் அவரை பலியாக நிர்ணயித்திருகலாம் இங்கு அது விவாதமல்ல.
 
இயேசு  எல்லா மனிதனுக்காகவும் பலியான இறுதி பலி எனலாம், ஏனெனில் ஆடு மாடு புறா இவைகளின் இரத்தம் மனிதனை அவன் பாவங்களிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கவில்லை. எனவே சகல பாவங்களையும் கழுவி  சுத்திகரிக்க,  இயேசு நமக்காக பலியாக முன்னமே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவர் பலியாகும் முன், மனிதனின் பாவங்களை நிவர்த்தி செய்ய, எத்தனையோ ஆயிரமாயிரம் ஆடு மாடுகள் புறாக்கள் என்று பலியாக கொடுக்கப்பட்டுவிட்டன.  இந்த "உயிர் பலி" என்பது ஏன் உலகினுள் வந்தது அவ்வாறு பலியிட தேவன் கட்டளையிட காரணம் என்ன? என்பதையே இங்கு நான் ஆராய விரும்புகிறேன்.
 
அதற்க்கான காரணம் தெரிந்தால் இங்கு விளக்கவும்!
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 
பலி என்னும் வார்த்தை ஈடாக கொடுத்தல் என்ற பொருளிலேயே பலஇடங்களில் பயன்படுத்தப்படுகிறது  
 
I கொரிந்தியர் 5:7  நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே 
தீத்து 2:14 நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்
 
மேல்கண்ட வசனங்களில் இயேசு நமக்கு பதிலாக அல்லது ஈடாக தம்மை தாமே பலியாக ஒப்புகொடுத்தார் என்று விளக்குகிறது. அதாவது நியாயப்படி நாம்தான் சாக வேண்டும் அனால் நமக்கு ஈடாக இயேசு மரித்தார்.  இவ்வாறு ஒன்றுக்கு ஈடாக ஒன்றை கொடுத்தல் என்பதுதான் பலி எனப்படுகிறது.   
 
இந்த காவு கொடுத்தல் எனப்படும்   "பலி"  என்ற  காரியம் நாம்  நினைப்பதுபோல் ஒரு சாதாரண காரியம் அல்ல! உலகில்  நடக்கும் அனைத்துக்கும் அடிப்படை காரணமான  இதற்கும் "மரணம்"  எனப்படும் சாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது எப்படியெனில் பலி கொடுக்கப்படும் எல்லாமே மரணத்தை சந்திக்கும்.   
 
பலியிடுதல்  என்றசெய்தி  வேதாகமத்தில்  முதல் முதலில் கீழ்க்கண்ட வசனத்தில் வந்தாலும்
 
ஆதியாகமம் 8:20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்
 
அதற்க்குமுன்னமே பலியிட்டதர்க்கான ஆதாரங்கள் வேதாகமத்தில் இருக்கின்றன.  
  
ஆதி 4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
 
ஆபேல் காணிக்கையாக கொண்டுவந்த தலையீற்றை தேவன் அங்கீகரித்தார் என்று
வேதம் சொல்கிறது எனவே அது பலியிடப்பட்டதர்க்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது பலியிடப்பட்டதர்க்கான சாற்று எதுவும் இல்லை.
 
இதற்க்கெல்லாம் முன்னமே ஒரு தேவனாலேயே ஒரு உயிர் பலி கொடுக்கப்பட்டுள்ளது ஆம்!  
 
ஆதி 3:21. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
 
என்ற இந்த வார்த்தை தோல் உடைகளை உருவாக்க ஏதோ மிருகம் பலியிடப் பட்டதர்க்கான ஒரு அறிகுறியை தெரிவிக்கிறது. "தோல் உடைகள்" என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு உயிர் அங்கு  கொல்லப்பட்டிருக்க வேண்டும். அனால் அதுபற்றி முழு  விளக்கம் எதுவும் இல்லை. 
 
ஆதாம் பாவம் செய்ததன் விளைவாக   சொந்த  உடம்பையே வெளியில் காட்ட முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு உள்ளானான்.  அவனது பாவத்தால் உண்டான அந்த நிர்வாண  நிலையை  மூடுவதற்காக ஒரு தோல் உடை தேவைப்பட்டது, அதற்காக ஏதோ ஒரு உயிர் பலியாகும் நிலையும் அங்கு  ஏற்ப்பட்டது.    
 
நவீன காலங்களில் உயிரினங்களை கொல்லாமல் தோலை பயன்படுத்தாமல் பருத்தி கம்பளி மற்றும் நைலான் போன்ற பல்வேறு விதமான ஆடைகளை தயாரித்து வருகின்றனர் அப்படி ஒரு ஆடையை தேவனால் உண்டாக்க முடியாதா என்ன? ஆனால் அவர்  உண்டாக்கியதோ  தோல் உடை!  காரணம் அதாம் செய்த பாவம் நிவர்த்திசெய்யப்பட பாவமறியா ஒரு மிருகத்தின் பலி அங்கு தேவைபட்டது. எனவே தேவனே அதை நிறைவேற்றி அந்த மிருகத்தின் தோலால் பாவத்தின் விளைவால் வந்த நிர்வாணத்தை மூடினார்.
 
இதில் இன்னொரு காரியமும் இருக்கிறது. தேவன் ஆதாமுக்கு  சொல்லிய வார்த்தைகள்படி 
 
17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆதாம் பழத்தை புசிக்கும் நாளில்தானே அவன் செத்திருக்கவேண்டும்! ஆனால்
அவனுக்கு பதில் அதே நாளில் தோலெடுக்க தேவையான அந்த மிருகம் பலியாக கொடுக்கப்பட்டதால், அவனது ஆயுள் தற்க்காலிகமாக நீடிக்கப்பட்டது.  (தேவனுக்கு ஒரு நாள் ஆயிரம் வருடம் என்ற கணக்கிலும், ஆதாம் ஆயிரம் வருடத்துக்குள் மரித்தான் என்றும் கூறப்படுகிறது ஆகினும் தேவன் ஆதாமை பார்த்துதான் "நீ அதை புசிக்கும் நாளிலே சாவாய்" என்று சொல்கிறார். ஆதாமை பொறுத்தவரை அவனுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகத்தான் இருந்திருக்கும். எனவே அவன் அந்நாளில்தானே சாக வேண்டியவன். தேவன் அவனை அந்நாளில்தானே சாவுக்கு ஒப்பு கொடுப்பதர்க்கு பதிலாக, தன்னுடைய இன்னொரு படைப்பை அவனுக்கு  ஈடாக கொடுத்து அவனது வாழ்நாளை நீட்டித்தார் என்றே நான் கருதுகிறேன். இவாறு ஒன்றுக்கு ஈடாக இன்னொன்றை கொடுப்பது என்பது தேவனால் செய்யப்படும் ஒரு காரியமாக இருக்கிறது.  
 
ஏசாயா 43:4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.

இவ்வாறு ஆதாமின் முதல் பாவத்துக்காக ஈட்டாக ஒரு மிருகம் கொடுக்கப்பட்டது
போல மனிதர்களின் ஒவ்வொரு பாவத்துக்கும்
ஈடாக அநேகமாயிரம் பாவமறியா மிருகங்கள் உயிரினங்கள் இன்றுவரை தானாகவே  பலியாகி வருகின்றன. மனிதனின் பாவத்த்தால்தான் மிருகங்களும் அவதிப்படுகின்றனவேயன்றி     மற்றபடியல்ல.  
 
இவ்வாறு மரணத்தின் முதல் படியாக இருக்கும் இந்த "பலி" எதற்க்காக அல்லது யாருக்காக கொடுக்கபட்டது என்பதையும் நான் சற்று ஆராயவேண்டும்!
 
-- Edited by SUNDAR on Wednesday 5th of May 2010 03:57:36 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 
கிராமங்களில் ஆடு மாடுகளை அடைப்பதற்கு "பவுண்டு" என்று ஓன்று உண்டு. அதாவது காடுகளில்  மேய்வதற்காக போகும் ஆடு மாடுகள் வேலிகளை தாண்டி வயற்க்காட்டுக்குள் இறங்கிவிட்டால் அந்த ஆடு மாடுகளை பிடித்து கொண்டுவந்து அந்த பவுண்டு என்னும் அவ்விடத்தினுள் அடைத்துவிடுவார்கள் பிறகு அந்த கால்நடையின் உரிமையாளர்கள் அதற்குரிய  அபராத தொகையை கட்டிய பிறகே அந்த கால்நடைகளை மீட்க முடியும். மீட்கப்படாத கால்நடைகள் ஏலமிடப்பட்டு விடும்.
 
அதுபோல் தேவனுடைய வார்த்தைகள் மனிதன் சுகமாக வாழ்வதற்கு அனைத்து வழிமுறைகளையும் கூறுகின்றன எனினும் அவரது வாத்தை   என்னும் வேலியை தாண்டி ஒரு மனிதன் செயல்படும்போது அவர்  சாத்தானின் கரத்தால் பிடிக்கபட்டு அவனுக்கு சொந்தமானவர்  ஆகிவிடுகிறார். காணாமல் போன ஆடுகளை தேடும் நமது ஆண்டவர் அவனை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்க்கு  ஒரு கிரயம் செலுத்த வேண்டும். இங்கு சாத்தான் கேட்கும்  கிரயம் என்னவென்றால்  அந்த உயிருக்கு பதில் இன்னொரு உயிர்.  அவ்வாறு பாவம் செய்த மனிதனுக்கு பதில் இன்னொரு உயிரை வாங்கிகொண்டு பாவம் செய்த மனிதனை விடுவிக்கிறான். எவ்வாறேனும் தேவன் படைத்த பாவமறியா  உயிரினங்கள் துடிதுடிக்க சாக வேண்டும் அதை பார்க்கும் தேவன் வேதனை அடைய வேண்டும் என்பதுதான் சாத்தானின் நோக்கம்.
 
தன்னை ஆகாதவன் என்று கீழே தள்ளிய தேவனை எவ்வதத்திலாவது மனஸ்தாப பட வைத்து பழிதீர்க்க வேண்டும் என்பதே  சாத்தானின் குறிக்கோள். அதற்காக சாத்தான் கேட்டதே உயிரினங்களின் பலி என்பது.
 
ஆயிரம் ஆயிரம் உயிரினங்கள் துடி துடித்து சாகும்  பலி என்பதை தேவன் நிர்பந்தத்தின் அடிப்படையில் செய்ததால்  "நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன்" என்று அவர்  தனது இருதய  எண்ணங்களை நமக்கு எழுதி கொடுத்தார்.
 
ஓசியா 6:6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
 
மேல்கண்ட வசனங்கள் தேவன் பலியிடுவதை நிர்பந்தத்தின் அடிப்படயிலேயே  செய்ய சொன்னார் என்றும் அவர் அதை விரும்பவில்லை என்பதையும் நமக்கு உணரத்துகின்றன. 
 
ஆயிரம் ஆயிரம் ஆடு/ மாடுகளின் பலியின்  இரத்தத்தால்   நிவர்த்தி செய்யமுடியாத
பாவத்தை ஆண்டவராகிய இயேசு பலியாகி  தன் சொந்த இரத்தத்தை  செலுத்தி எல்லோருடைய பாவத்துக்கும் இறுதி கிரயம் செலுத்திவிட்டார்.  அவரது இரத்தத்துக்கு மிஞ்சிய  பாவம் என்று எதுவுமே இல்லை. 
 
அத்தோடு "பலி" என்ற செயல் முடிவுக்கு வந்தபோதிலும். ஆண்டவரின் இந்த பலியை அறிந்து ஏற்க்க விரும்பாத  புறஜாதி மக்கள் இன்னும் தேவையற்ற பலிகளை தெய்வமல்லாதவைகளுக்கு  செலுத்திவந்துகொண்டு இருக்கின்றனர்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard