இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியில் விழுதல் ??? !!!


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
ஆவியில் விழுதல் ??? !!!
Permalink  
 


ஆவியில் விழுதல் ??? !!!

இப்போதெல்லாம் ஆவியில் விழ வைக்கிற ஊழியங்கள் பெருகி விட்டன. இவர்கள் உண்மையான ஊழியர்களா? ஆவியில் விழுவது உண்மையா? அப்போது என்ன நடக்கிறது?

போன்ற கேள்விகள் அனேகர் மனதில் எழுகிறது. இந்த காரியங்களை பற்றி இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

முதலில் மனிதர்கள் விழ பல காரணங்கள் உண்டு அவைகளை பற்றி பார்ப்போம்.

1. சரீரத்தின் மின் தன்மை : (BODY ELECTRICITY)

நம்முடைய சரீரத்தை ஒரு பாட்டரிக்கு ஒப்பிடலாம். ஒவ்வொரு சரீரமும் வெகுவாக குறைந்த அளவு மின்சாரத்தை உடையானவாக இருக்கின்றன. அதாவது ஒரு வோல்ட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆனால் இந்த குறைந்த அளவு மின்சாரமும் ஒரு சில எலக்ட்ரானிக் சில்லுகளை பாழ் செய்யும் அளவுக்கு போதுமானவை. அபூர்வமாக ஒரு சிலருக்கு உடலின்

ஒழுங்கு பாதிக்கபடுவதால் இந்த மின் தன்மை அதிகமாக ஆகலாம். அப்போது அவர்கள் மற்றவர்களை தொட்டால் ஷாக் அடிக்க கூடும். இதே காரணத்துக்காக வெளினாட்டில் பல வருடங்களுக்கு முன்பு ஒருவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார்.

2. சரீரத்தின் காந்தத தன்மை : (BODY MAGNETISM)

ஒவ்வொரு சரீரத்தையும் காந்தத்திற்க்கு ஒப்பிடலாம். இந்த காந்த புலனின் அளவு சரியாக இருக்க வேண்டிய அளவில் இருந்தால் சரீரம் நன்றாக இருக்கும். மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் படுத்தால் இந்த காந்த அளவு மாறுபட்டு உடல் பாதிப்படையும் என்று முன்னோர்கள் கண்டு பிடித்துள்ளனர். எந்த திசையில் படுத்தால் என்ன பலன்கள் என்றும் சொல்லியுள்ளனர். மேலும் ஒவ்வொரு நட்சத்திரமும் காந்த தன்மை கொண்டவை. குறிப்பிட்ட நாளில் ஒரு சில நட்சத்திரத்தின் காந்த தன்மை அதிகமாய் இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், சரியான ஆசனத்தில் அமர்வதின் மூலம் இந்த காந்த தன்மையை உடலில் பெறும் முறையை இந்து யோகிகள் அறிந்திருந்தனர். மற்றவர்களை விட காந்த தன்மை அதிகமாக உள்ளவர்கள் குறைவாக உள்ளவர்களை தொட்டால் ஷாக் அடிக்க கூடும்.

3. குண்டலினி சக்தி : (SAKTIPAT)

மனிதனுக்குள் குண்டலினி என்னும் சக்தி, பந்து (சுருண்ட பாம்பு) போல செயல்படாத நிலையில் தொப்புளுக்கு மேல் உள்ளதாகவும், அது சில முறைகளின் மூலம் எழுப்பப்படும், செயல்படுத்த வைக்கப்ப்டும் (படமெடுக்கும் பாம்பு போல) போது மனிதனுக்கு நல்ல குணங்களும், பேரின்பமும் வருவதாக இந்து யோகிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பல பயிற்ச்சிகள் உள்ளன. ஆனால் இவை சரியாக செய்யப்படாவிட்டால் மனிதனுக்கு ஊறு விளைவிக்கும். இதை சுலபமாக, எந்த ஒரு பயமும் இல்லாமல் பெறவும் வழிகள் உண்டு.

அதிலொன்று இந்த ஞானம் உள்ள குருவிடம் சீடராக சேர்ந்து அவரது தொடுகை மூலம் குண்டலினி ஏற்றத்தை பெறுவது. தொடுகை மட்டும் இல்லாமல் குருவின் கண் பார்வை, அருகில் இருத்தல், குருவின் வார்த்தை முதலியவற்றின் மூலமும் பெறலாம். இதை குரு தகுதியானவர்களுக்கு தகுதியான நேரத்தில் மட்டுமே வழங்குவார். இது தீட்சை பெறுதல்

எனப்படும். இந்த குண்டலினி ஏற்றத்தின் போது சிலர் விழுவர், சிலருக்கு ஷாக் அடிக்கும், சிலர் விசித்திரமான சப்தம் கேட்பார்கள், சிலர் பேரின்பத்தை அடைவார்கள்.

4. வசியப்படுத்துதல் : (MESMERISING)

தங்கள் மனிதில் உறுதியில்லாத பேதையர்கள் சில போலி சாமியாரிடம் (ஊழியர்களிடம்) செல்லும் போது, அந்த சாமியார்கள்தங்கள் எண்ணங்களை அந்த மனிதர்களிடம் செலுத்துவதின் மூலம் தாங்கள் நினைத்ததை சாதிக்கவும், அடிமைபடுத்தவும் கூடும். ஆக்ஞா சக்கரம் எனப்படும் புருவ மத்தியில் உள்ள பகுதியின் மூலம் தங்கள் எண்ணங்களை மற்ற மனிதர்களுக்குள் செலுத்தும் வழியை இவர்கள் அறிந்தவர்கள். அதாவது அவர்கள் முன் அமரும் போது "நீ இப்போது ஒளியை உணர்க்கிறாய்" நீ இப்போது பேரின்பத்தை உணர்க்கிறாய்" "நீ மறுபடியும் இங்கே வர வேண்டும்" போன்ற எண்ணங்களை அவர்களுக்குள் செலுத்தி அவர்களை நம்ப வைப்பார்கள். அனேக பெண்கள் இந்த முறையிலேயே சாமியார்களுக்கு அடிமைகளாகி அவர்கள் இஷ்டப்படி நடக்கின்றனர். இந்த வசியத்தின் மூலமும் பிறரை விழ வைக்க முடியும்.

5. மனிதக் கவர்ச்சி :

ஒரு சில மனிதர்கள் பிற மனிதர்களை காந்தம் போல கவரும் ஆற்றல் உள்ளவர்களாக உள்ளனர். என்னவென்று சொல்ல முடியாத காரணத்தால் பிற மனிதர்கள் இந்த சக்தி உள்ள மனிதர்களால் கவர்ந்து இழுக்கப்படுகின்றனர். பத்து மாதம் சுமந்து, பாலூட்டிய தாயின் வார்த்தைகளையும், தான் உலகில் உயர பாடுபடும் தந்தையின் வார்த்தைகளையும் கேட்காத இவர்கள் தாங்கள் விரும்பும் இந்த சக்தியுள்ள மனிதர்களுக்கு அடிமையாகி அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி செய்கின்றனர். இந்த மனித கவர்ச்சி உள்ளவர்களில் பலர் அரசியல்வாதிகளாகவும், நடிகர்களாகவும், சாமியார்களாகவும், பாப் பாடல் பாடுபவர்களாகவும் உள்ளனர்.

6. பிற காரணங்கள் :

பிறரை விழ வைக்கும் கிருத்துவ கூட்டங்களில் கலந்து கொண்ட சிலர்

1. எல்லோரும் விழும் போது தாங்கள் விழாமல் இருந்தால் அவமானம் என விழுகின்றனர்.

2. தாங்கள் விழாமல் இருந்தால் போதகர் வருத்தப்படுவார் என்பதால்

3. ஒரு தடவை கைவைத்த பிறகும் விழாமல் போகவே மறுபடியும், மறுபடியும் கைவைத்த டார்ச்சர் தாங்காமல் தான் கீழே விழுந்ததாக ஒருவர் கூறுகிறார்.

7. தடைபடுத்தப்படும் சக்தி : (STOPPING BODY CURRENT)

மனிதனுக்குள்ளே சக்தி எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. ஐம்புலன்களின் செய்கையை மூளை எப்போதும் உணர்ந்து கொண்டே இருக்கிறது. நரம்புகளின் வழியாக மூளைக்கு எப்போதும் செய்தி சென்று கொண்டே இருக்கிறது. மூளை எப்போதும் மற்ற உறுப்புகளை கட்டுப்படுத்தி கொண்டே இருக்கிறது. இதை மின்சாரம் பாய்வதனால் எரியும் மின்விளக்குக்கு ஒப்பிடலாம். சில காரணங்களால் இந்த மின் சக்தி தடைபடும் போது மற்ற உறுப்புகளின் மேல் மூளை தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. ஆனால் மற்ற உறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் செய்தி தடைபடுவதில்லை. அதாவது மனிதன் தன் சுய நினைவை இழப்பதில்லை இருந்தாலும் அவனால் மற்ற உறுப்புகளை கட்டுபடுத்த முடிவதில்லை. அப்போது மனிதன் கீழே விழுந்து விடுகிறான். இவ்வாறு விழ காரணங்கள்

1. கடவுளால் 2. மனிதனால்

சில மனிதர்கள் எப்படி மனிதனின் இந்த மின் சக்தியை நிறுத்துவது என்னும் முறையை அறிந்துள்ளனர். (எனக்கு தெரியாது) இவர்களே விழ வைக்கும் ஊழியத்தை செய்கின்றனர்.

க்டவுளால் விழுபவர்கள் :

இவர்கள் ஏழாவதாக சொல்லப்பட்ட காரணத்தால் விழுபவர்கள். இவர்களை ஆவியில் விழுபவர்கள் என்று பரவலாக சொல்லுகின்றனர். இப்படி சொல்லுவதால் இன்னும் அனேக சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதாவது பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் எப்படி ஆவியில் மறுபடி விழ முடியும்? என்பது போன்று பல சந்தேகங்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த வார்த்தையே தவறு என்பதுதான். அப்படியானால் சரியான வார்த்தைதான் என்ன?

தேவ பிரசன்னத்தில் விழுதல் என்பதே.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஆவியானவர் என்பது மனிதனுக்கு உள் இருப்பவர். (மனிதன் சம்பந்தபட்டது) தேவ பிரசன்னம் என்பது அந்த குறிப்பிட்ட இடத்தில் இருப்பது. (இடம் சம்பந்தப்ட்டது)

தேவ பிரசன்னம் :

தேவ பிரசன்னம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தேவ அக்கினி (மோசே பார்த்தது)

அல்லது தேவ தூதர்கள் (தானியேல் பார்த்தது) அல்லது தேவ வஸ்திரம் (சாலோமோன் ஆலயத்தில்) அல்லது தேவ சேனைகள் (எலிசா பார்த்தது) அல்லது தேவனின் குணமாக்கும் வல்லமை (இயேசுவிடம் இருந்து புறப்பட்டது) அல்லது அந்த இடத்தில் இறங்கின ஆவியானவர் என்று பலவற்றை குறிப்பிடுவதாகும். இந்த தேவ பிரசன்னத்தாலேயே மனிதர்கள் விழுகின்றனர்.

தேவனுடைய முழு பிரசன்னத்தை தாங்கும் அளவுக்கு எந்த மனிதனும் பிறக்கவில்லை. இனி பிறக்க போவதுமில்லை. ஆகவே பரிசுத்த ஆவியை பெற்ற மனிதர்கள் கூட தேவனின் பிரசன்னம் ஓரளவுக்கு மேல் உள்ள இடங்களில் விழுந்து விடுகின்றனர்.

தேவ மனிதர்கள் பிறருக்காக ஜெபம் செய்யும் போது ஜெபம் செய்பவர் மற்றும் ஜெபிக்க வந்தவர் ஆகியோரின் தகுதியை பொறுத்து (தகுதி உள்ளவர் என்று கண்டால்) அந்த இடத்தில் பிரசன்னமாகிறார் அல்லது தேவ வல்லமை இறங்குகிறது. எந்த அளவு தேவ பிரசன்னம் இறங்கினால் ஜெபிக்க வந்தவர் பயனடைவாரோ அந்த அளவே பிரசன்னமாகிறார்.

1. ஜெபிக்க வந்தவர் இரட்சிக்கபடாத அசுத்த ஆவி பிடித்தவர் என்றால் அந்த தேவ பிரசன்னத்தின் அளவு தாங்க மாட்டாமல் அவர் கீழே விழுந்து விடுகிறார். அசுத்த ஆவி ஓடி விடுகிறது. ஆனால் ஜெபம் செய்பவர் அந்த அளவு பிரசன்னத்தை தாங்க வல்லவர் ஆதலால் அவர் விழுவதில்லை.

2. சிலர் இரட்சிக்கபட்டு பரிசுத்த ஆவியை பெற்றிருந்தாலும், ஆத்துமா மற்றும் சரீரத்தின் சில பகுதிகள் அசுத்த ஆவியின் பிடியிலிருந்து விடுபடாமல் இருக்கக் கூடும். இவர்களும் கீழே விழுவர். சில சமயம் உடலை விட்டு அசுதத ஆவி ஓடுவதை உணர்வர்.

ஜெபிப்பவர் தன்னாலேயே தேவ பிரசன்னம் இறங்கியது என பெருமை கொள்ள முடியாது. ஏனெனில் ஜெபிக்க வந்தவர் தகுதி இல்லாதவர் அல்லது அவருக்கு தேவ வேளை வரவில்லை எனில் என்னதான் ஜெபித்தாலும் தேவ பிரசன்னம் அந்த அளவுக்கு இறங்குவதில்லை.


ஜெபிக்க செல்பவர் எந்த ஊழியரிடம் சென்றாலும் கடவுள் விடுதலை தருவார் என நினைக்க முடியாது. சரியான பரிசுத்தவானிடம் செல்லும் போது மட்டுமே தேவ பிரசன்னம் இறங்கும்.

(சிலர் மற்றவர்களுக்கு ஜெபிக்கும் போது தங்களுக்குள் உள்ள ஆவியானவரிடமிருந்து ஜெபிக்க வந்தவருக்கு சக்தி பாய்வதாக நினைத்து ஜெபிக்கின்றனர். ஆனால் இது தவறு என தேவ மனிதர்கள் கூறுகின்றனர். ஆவியானவரோடு சேர்ந்து பரமண்டலத்தின் பிதாவை நோக்கி ஜெபிப்பதே சரியானது ஆனால் இந்த முறையில் ஜெபிப்பவர் தன்னை சக்தி இல்லாதவர் என உணரக் கூடும். இதுவே சரியானது என கூறுகின்றனர்.)

இவ்வாறு விழுபவர்களில் சிலரிடமிருந்து அசுத்த ஆவி ஓடுகிறது. அவர்கள் நிரந்தரமாக அந்த அசுத்த ஆவியின் பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

(சில நேரங்களில் அலைகழிக்கப்பட்டு)

சிலர் அவ்வாறு உணரா விட்டாலும் ஒரு மன நிம்மதியை, சாந்தத்தை பெறுகின்றனர்.விழுபவர்கள் அனைவரும் இந்த நிலையில் மன நிம்மதியை பெறுவதால் கொஞ்ச நேரத்துக்கு அப்படியே விழுந்த நிலையிலேயே இருக்க விரும்புகின்றனர்.

அப்படியானால் இவர்களிடம் நடப்பது என்ன?

புதிதாக இரட்சிக்கப்ட்டவர்களில் சிலர் சில சமயம் ஒரு பயத்தை, சில குறிப்பிட்ட நினைவுகளை, துன்பத்தை, மனக்குழப்பத்தை, சரீர பலகீனத்தை அசுத்த ஆவிகளின் விளைவாக பெறக் கூடும். இவர்கள் இவைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்க கூடும். இதை எதற்கு ஒப்பிடலாம் என்றால் ஹேங்க் ஆன கணிணிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு ஹேங்க் ஆகும் போது ஆல்ட்+கண்ரோல்+டெலிட் விசைகளை அழுத்துவதோ அல்லது ரீசெட் பட்டனை அழுத்துவதோ அல்லது கணிணியை நிறுத்தி விட்டு பிறகு இயக்குவதோ செய்ய வேண்டும். சிலர் தேவ பிரசன்னத்தில் விழும் போது இதுவே நடக்கிறது. அதாவது ஆத்துமா மற்றும் சரீரம் ரீசெட் ஆகிறது. அவர்கள் ஒரு அமைதியை, விடுதலையை பெறுகின்றனர். இந்த விடுதலை சில சமயம் நிரந்தரமாக இருக்கலாம் அல்லது தற்காலிகமாக இருக்கலாம் இது அதன் பிறகு அவர்கள் வாழ்வதை பொறுத்தது.

மனிதர்களால் விழுபவர்கள் :

சில மனிதர்கள் எப்படி மனிதனின் மின் சக்தியை நிறுத்துவது என்னும் முறையை அறிந்துள்ளனர். (எனக்கு தெரியாது) இவர்களே விழ வைக்கும் ஊழியத்தை செய்கின்றனர்.

இவர்கள் மனித சக்தியால் ஆத்துமாவை ரீசெட் செய்கின்றனர். இங்கும் மனிதர்கள் ஒரு அமைதியை, விடுதலையை உணர்கின்றனர். ஆனால் இது கடவுள் தந்தது அல்ல. இந்த முறையில் விழ மனிதர்கள் தங்களை விட்டு கொடுக்க வேண்டும். அதாவது என்னை எப்படி விழ வைக்க முடியும் பார்க்கலாம் என்று ஒரு மனதிண்மையுடன் போகிறவர்களை விழ வைக்க முடியாது மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொண்டு போகிறவர்களை இவர்கள் விழ வைப்பார்கள்.

அப்படியானால் உண்மையான ஊழியர்களை எப்படி இனம் காணுவது?

உண்மையான ஊழியர்களுக்கு ஜெபிக்க வருபவர் விழுவாரா அல்லது விழ மாட்டாரா என்று தெரியாது. ஏனெனில் சக்தி அவர்களிடமிருந்து வராமல் கடவுளிடமிருந்து வருவதால்

கள்ள ஊழியர்களுக்கு ஜெபிக்க வருபவர்கள் விழுவார்கள் என நிச்சயமாக தெரியும். இதை மையமாக கொண்டே இவர்கள் ஊழியம் செய்வார்கள். இவர்களுக்கு விலகி ஓடுங்கள்.

கடவுளின் ஊழியர்கள் :

கடவுளால் அழைக்கப்பட்டு ஊழியத்திற்க்கு வருபவர்கள் பெரிய கனவுகளோடு வருகிறார்கள். பால் யாங்கி சோ, தினகரன் போல பெரிய ஊழியத்தை செய்வோம் என நினைக்கிறார்கள். ஆனால் அனேகரால் அவர்களை போல் வர முடிவதில்லை. அதனால் அவர்கள் வருத்தபடுகிறார்கள் இதற்க்கு என்ன காரணம்? அவர்கள் பரிசுத்தத்தில், தேவ அன்பில் மற்றவர்களை விட உயர்ந்தவர்களா? இதைப் பற்றி பார்ப்போம்.

கடவுள் ஒரு மனிதனை ஊழியத்திற்க்கு அழைப்பார் எனில் அதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். முக்கியமான ஒரு காரணம்

அந்த ஊழியரின் சுய பிரயோஜனத்திற்க்காகவே. அதாவது தேவ ஊழியராக எப்போதும் தேவனுக்குரிய சூழ்னிலைகளில் இருப்பதால் அவர் வாழ்வில் வர இருக்கும் துன்பங்கள் தவிர்க்கப்பட கூடும். அவர் தேவனில் மிக அதிகமாக வளர உதவியாக இருக்கும். இதை உணரும் போது அந்த ஊழியர் வருந்த தேவையில்லை.

பரிசுத்தத்தில், தேவ அன்பில் சற்றும் குறையாத தேவ ஊழியர்கள் அதிகம் இருந்தாலும் தேவன், அனேக மக்களுக்கு தெய்வீக சுகம் தரும் வரத்தை ஒரு சில தேவ ஊழியர்களுக்கே கொடுக்கிறார். இதற்கான காரணம் தெரியவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவர்களின் உள்ளான சரீரம் சில குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பதால் என்று நினைக்கிறேன். அதாவது குரல் வளம் இல்லாதவர்கள் பாடல் பாடினால் நன்றாக இருக்காது.

அல்லது அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பாட வேண்டும். ஆனால் சிலர் இயல்பாக, அழகாக பாடல்கள் பாடுவார்கள். அதுபோலவே அவர்கள் ஆவியிலோ அல்லது ஆத்துமாவிலோ ஏதோ ஒரு அம்சம் அறிவியல் ரீதியாக (கடவுளுக்கு மட்டுமே தெரிந்த) தகுதியானதாக இருக்கலாம் என கருதுகிறேன். இந்த ஒரு சிலரின் மேல் பொறாமை கொள்ளும் பலர் இவர்களின் மேல் புழுதி வாரி இறைக்கின்றனர். இவர்களை போன்றவர்களை தங்கள் சபைக்கு வந்து பேச செய்வதின் மூலம் மற்றவர்கள் அனேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தலாம்.



-- Edited by SANDOSH on Sunday 2nd of May 2010 12:47:27 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

விசுவாசிகள் ஜெப வேளைகளில்  கீழே விழுவது பற்றி வெவேறு கோணத்திலிருந்து அருமையான  விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.  நன்றி!
 
நமது கிறிஸ்த்தவ கூட்டங்களில் பகிரங்கமாக நடத்துவதுபோல வேறு எந்த மதத்தினரும் இவ்வாறு விழ வைக்கும் ஊழியம் செய்வதில்லை என்று நான் கருதுகிறேன்
 
SANDOSH WROTE
////1. ஜெபிக்க வந்தவர் இரட்சிக்கபடாத அசுத்த ஆவி பிடித்தவர் என்றால் அந்த தேவ பிரசன்னத்தின் அளவு தாங்க மாட்டாமல் அவர் கீழே விழுந்து விடுகிறார். அசுத்த ஆவி ஓடி விடுகிறது. ஆனால் ஜெபம் செய்பவர் அந்த அளவு பிரசன்னத்தை தாங்க வல்லவர் ஆதலால் அவர் விழுவதில்லை. ////
 
கீழேவிழுதலுக்கு இதுதான்  முக்கியமான காரணம் என்று நான் கருதுகிறேன்.
 

SANDOSH WROTE
///2. சிலர் இரட்சிக்கபட்டு பரிசுத்த ஆவியை பெற்றிருந்தாலும், ஆத்துமா மற்றும் சரீரத்தின் சில பகுதிகள் அசுத்த ஆவியின் பிடியிலிருந்து விடுபடாமல் இருக்கக் கூடும். இவர்களும் கீழே விழுவர். சில சமயம் உடலை விட்டு அசுதத ஆவி ஓடுவதை உணர்வர்.//// 
 

இதுவும் அனுபவபூர்வமாக பலர் உணர்ந்து சொல்லும் ஒரு காரியமாக நான் கேள்விபட்டிருக்கிறேன்.

சில இடங்களில் உண்மை  தேவ பிரசன்னம் இருக்கும்,  சில இடங்களில் சில சித்து வேலைகள் இருக்கலாம்  எல்லாவற்றயும் தவறு என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல என்றே  நானும் கருதுகிறேன்.  ஆண்டவராகிய இயேசு பிசாசுகளை துரத்தும்போது பலர் கீழே விழுந்து புரண்டிருக்கின்ற்றனர். ஆனால் ஆவியில் நிறைந்தவர்கள் கீழே விழுவார்களா என்பது சற்று சந்தேகத்தை எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.

எல்லோருக்கும் எல்லா வரங்களையும் தேவன் கொடுப்பதில்லை. காரணம் வரம் பெற்றவர்களில் அநேகர் விழுந்துபோவதால்தான்.  அதனால்தான் ஆண்டவர் பிசாசுகளை துரத்தியவர்களை பார்த்து அக்கிரம செய்கை காரார்களே என்று சொல்லவேண்டிய நிலை வரும் என்று கருதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒருவர் வரத்துக்காக பல வருடங்கள் ஜெபித்தார். ஒரு நாள் ஆண்டவர் அவரிடம் " என் அன்பு பிள்ளையே  தயவு செய்து வரங்களை பெருவதருக்கு நீ முயர்ச்சிகாதே, உன்னை பற்றி எனக்கு தெரியும்  நீ நிச்சயம் விழுந்துபோவாய் எனவே அதற்காக ஜெபிபதை விட்டுவிடு" என்று நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சகோதரர் சந்தோஷ் எழுதிய கருத்துகள் ஏற்று கொள்ளத்தக்கதாக உள்ளது. ஆவியில் விழுதல் என்ற தலைப்பிலே மிக அழகாக தெளிவாக சொல்லி இருக்றிர்கள். அனேக காரியங்கள் அறிவதற்கு அரிதாக உள்ளது. தாங்கள் எழுதின ஒருசில காரியங்கள் ஆரம்பத்தில் புரிந்துகொள்வதற்கு சற்று சிரமமாக இருந்தது ஆனால் தொடர்ந்து படித்து நிதானிக்கும் போது உண்மை புரிகிறது. தங்கள் சொல்வது போல ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தேவ பிரசனத்தில் நடக்கும் ஒரு சில மாற்றங்களை நம்மால் முழுவதும் நிதானிக்க முடியாத படியால் எல்லாவற்றையும் நம்மால் சரியாக கணிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard