ஆண்டவராகியே இயேசுவின் வருகை மிக சமீபமாக உள்ளது. ஆகினும் அநேக ஜனங்கள் இரட்சிப்பை பற்றியோ நியாயதீர்ப்பு பற்றியோ சிறிதும் பயமின்றி நிர்விசாரமாக வாழ்வது மனதுக்கு மிகவும் வேதனையை தருகிறது.
இறுதி நிமிடங்களில் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள்கூட இரட்சிப்பை அடைந்துவிடமுடியும் என்பதை வேதம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
யோவேல் 2 :31. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 32. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்;
ஆண்டவராகிய இயேசுவின் வருகை சில நாழிகைக்கு முன்கூட்டியே எல்லோருக்கும் தெரிவிக்கப்படும்
மத்தேயு 24:31வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
ஆண்டவராகிய இயேசு வருகைக்கு முன்னர் வலுவான எக்காள சத்தம் உண்டாகும்! அது உலகில் எல்லா இடங்களில் உள்ளவர்கள் காதுகளிலும் கேட்கும்படி இருக்கும். அந்த எக்காள தோனியின் ஓசையை வைத்து, அது ஆண்டவராகிய இயேசுவின் வருகைக்கான எக்காளம் என்பதை எல்லோராலும் புரியமுடியும் அல்லது புரிய முடியாதவர்களுக்குகூட புரிய வைக்கப்படும்.
அந்த கடைசி நேரத்தில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் கூட இரட்சிப்பை அடைய முடியும்! எனவே அன்பானவர்களே எனது வேண்டுகோள் என்னவெனில்,
தங்களுக்கு தெரிந்த, பலமுறை ஆண்டவரை பற்றி சொல்லியும் இரட்சிக்கப்படாத சகோதர சகோதரிகளிடம் இந்த கடைசி நிமிட இரட்சிப்பை பற்றிய ஒரு எச்சரிக்கை செய்தியை சொல்லி வைக்கும்படி வேண்டுகிறேன்.
அந்த கடைசி வாய்ப்பையாவது தவறவிடாமல் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பை பெறும்படி ஒருவளை அவர்களுக்கு பிரயோஜனப்படலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தாங்கள் சொல்லும் உவமைக்கும் எனது பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
மத்தேயு 25
6. நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
வேதம் சொல்லும் எக்காள சத்தத்தயே இது குறிக்கிறது "ஆண்டவராகிய இயேசு வருகிறார்" என்ற சத்தம் எல்லோருக்கும் கேட்கும்படி உண்டாகும்
7. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
"விழித்திருங்கள்" என்று ஆண்டவர் எச்சரித்தாலும் இங்கு எல்லோருமே தூக்கத்தில்தான் இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது, எல்லோருமே எழுந்து தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
புத்தியுள்ளவர்கள் விசுவாசிகள். அவர்கள் ஏற்கெனவே இரட்சிப்பை பெற்று விட்டதால் உடனடியாக ஆயத்தமாக முடிந்தது, புத்தியில்லாதவர்கள் இயேசுவை விசுவாசிக்காதவர்கள் அந்த கடைசிநேரத்தில் வந்து ஆண்டவரைப்பற்றி விசுவாசிகளிடம் ஆர்வமாக விசாரிப்பார்கள்
விசுவாசிகள் உங்களுக்கு நாங்கள் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடித்து நாங்களும் தாமதித்துவிடாதிருக்க நீங்கள் ஏதாவது தேவ ஊழியர்களிடம் போய் கேடடு தெரிந்து கொள்ளுங்கள் என்பார்கள்.
10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
அப்படியே அவர்கள் கேட்கபோகும்போது, இயேசு வந்துவிடுவார் விசுவாசிகள் ஆண்டவரோடு கொண்டு செல்லப்படுவார்கள்.
அதன்பிறகு மற்ற ஜனங்கள் வந்து இப்பொழுது நாங்களும் உம்மை நம்புகிறோம் எங்களையும் எடுத்துகொள்ளும் என்பார்கள்
12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அப்பொழுது ஆண்டவர் உங்களை அறியேன் என்று சொல்லிவிடுவார்.
13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
ஆம்! மனுஷ குமாரன் வரும் நாளும் நாழிகையும் இன்று வரை யாருக்குமே தெரியாது ஆனால் அவர் வரும்போது வேதம் சொல்வதுபோல் எக்காள சத்தமும், "மணவாளன் வருகிறார்" என்ற சத்தமும் நிச்சயம் கேட்கும். அந்நேரத்தில் ஆண்டவரை பற்றி அடுத்தவரிடம் விசாரித்துக்கொண்டு இருக்காமல் உடனடியாக அவரை ஏற்று விசுவாசித்து அவரோடு செல்வதர்க்குதான் இந்த எச்சரிப்பு செய்தி. அவ்வாறு சென்றுவிட்டால் நிச்சயம் இரட்சிப்பு உண்டு!
அனால் தாங்கள் சொல்வதுபோல் இந்த செய்தியை கேடடு கடைசி நிமிடத்தில் இரட்சிப்பை அடைந்துவிடலாம் என்றுஎண்ணி, இன்று கொடுக்கப்பட்ட காலத்தை அசட்டை செய்பவர்கள் நிச்சயம் இருக்கலாம். அதே நேரத்தில் எத்தனையோ நாள் சொல்லியும் இரட்சிப்பை அடைய விரும்பாதவர்கள் நண்பர்கள் சொந்த பந்தங்கள் அந்த கடைசி நிமிடத்திலாவது நாம் இரட்சிப்பைபெற முயலவேண்டும் என்று எண்ணி செயல்படுவதர்க்காகவாவது இந்த எச்சரிப்பு நிச்சயம் பயன்படும். இன்று இச்செய்தியை கேடடு அவர்கள் மனதில் அவ்வாறு நினைத்துகொண்டால் கூட, அந்த இரட்சிப்பின் மேலுள்ள எதிர்ப்பார்ப்பு யாராவது ஒருவர் மூலம் ஆண்டவர் கிரியை செய்து உடனடியாக அவர்களை மனம்திரும்ப செய்வதற்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
அத்தோடு இந்த எச்சரிப்பை ஆண்டவர் பற்றி சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி, செய்தியோடு சேர்ந்து "மனிதனின் மரண நாள் எப்பொழுது என்று தெரியாத காரணத்தால் இன்றே அவரை விசுவாசிப்பதுதான் நல்லது" என்ற செய்தியையும் நாம் சேர்த்து சொல்லலாம்.
-- Edited by SUNDAR on Wednesday 5th of May 2010 10:28:44 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கடைசிநேர இரட்சிப்புக்கு சாத்தியங்கள் இருந்தாலும் அது எல்லோருக்கும் கிடைக்குமாஎன்பது கேள்விக்குறியே!?
ஏனெனில்
லூக்கா 19:42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்
என்று சொன்ன ஆண்டவர் தொடர்ந்து
இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. என்றும் சொல்லியிருக்கிறார்.
எனவே அந்நேரங்களில் பலரது கண்களுக்கு இரட்சிப்பு என்பது மறைவாய் இருக்கும் என்பதையும் அறியமுடிகிறது
மேலும் கடைசி நேரத்தில் ஆண்டவர் வரும்போது நாம் இரட்சிப்பை பெற்றுவிடலாம் என்று பலர் நம்பிக்கையோடு இருக்கும்போது, அந்த நம்பிக்கையை பாழ்படுத்துவதற்கு என்னென்ன காரியங்களை செய்யமுடியுமோ அதெல்லாம் சாத்தான் ஏற்கெனவே செய்து வைத்திருப்பான் என்பதையும் நாம் சற்று கருத்தில் கொள்ள\வேண்டும்.
ஒரு சிறு உதாரணம்.
பூமியில் வாழ்ந்த நாளெல்லாம் பல்வேறு சினிமா பாடல்களில் லயித்து கிடந்த ஒருவர் சாகும் தருவாயை அடைந்தார். அந்நேரத்தில் ஒரு பாஸ்டர் வந்து அவரது மீட்புக்காகவும் அவரது பாவங்கள் மன்னிக்கப் ப்டுவதர்க்க்காகவும் கண்ணீரோடு ஆண்டவரிடம் மன்றாடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த சாத்தான் அவரை எப்படியும் விட்டுவிடாமலிருக்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான். மரிக்கப்போகிரவரின் மனம் மாற்றமடைத்து ஆண்டவருடன் ஒப்புரவாகும் சமயத்தில் பக்கத்து வீட்டுகாரர்களை சாத்தான் ஏவி, "மாம்பழம்மா மாம்பழம் மல்கோவா மாம்பழம்" என்ற அவருக்கு மிகவும் பிடித்த பாடலை போட வைத்தான், பாடலை கேட்ட அவர் எல்லாவறையும் மறந்து அதை ரசிக்க ஆரம்பிக்க அந்நேரம் அவர் ஆவி பிரிந்தது.
அந்தோ பரிதாபம்! அற்ப சுகத்தில் லயித்து நித்யவேதனையான இடம் போய்சேர்ந்தார்!
பூமியில் வாழும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை விட்டுவிட்டு கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுபவர்களின் முடிவு இதுதான்
மேலும் ஆண்டவர் எப்படி வரப்போகிறார் என்பதை அறிந்துள்ள சாத்தான், அந்நேரத்தில் என்ன சொன்னால் மக்கள் மனதை திசைதிருப்பலாம் என்று யோசித்து, நிச்சயம் ஒரு திட்டம் தயார்செய்து வைத்திருப்பான் என்றே நான் கருதுகிறேன்.
உதாரணமாக: "அமெரிக்காவிலிருந்து பறக்கும் தட்டில் சிலர் வந்து ஆண்டவர் வருகிறார் என்றொரு செய்தியை பரப்புவார்கள் யாரும் நம்பி ஏமாறவேண்டாம்" என்றுகூட தொலைகாட்சி செய்தியில் சொல்லி திசை திருப்ப வாய்ப்பிருக்கிறது.
எனவே கடைசி நேர இரட்சிப்பு என்பது சுலபமானது அல்ல!
ஆகினும் பலமுறை ஆண்டவரைப்பற்றி சொல்லியும் அசையாத ஆத்துமாக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆண்டவரைப்ற்றி சொல்ல இச்செய்தியைபயன்படுத்தலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)