இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாலியல் இச்சையை பகுத்து ஆராயலாமா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பாலியல் இச்சையை பகுத்து ஆராயலாமா?
Permalink  
 


பணம்  என்னும் பயங்கர ஆயுதத்திற்கு  அடுத்தால் போல் அனேக மக்களை அடிபணிய வைப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் "பாலியல் இச்சை" என்றால் மிகையாகாது. எனவே  எதிர் பாலினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற தெளிவை பெறுவது இங்கு மிகுந்த அவசியமாகிறது.
 
ஆதியிலே சர்ப்பமானது  ஏவாளை பயன்படுத்திதான் ஆதாமை  கவிழ்த்தது. அதே டெக்னிக்கில் இன்றும்
ஆண்களை கவிழ்ப்பதற்கு சாத்தான் அதிகமாக பயன் படுத்துவது  "பெண்கள்" தான்.  இவ்விஷயம் பற்றி
விவாதிப்பதற்கு அநேகர் தயங்குவதால்  இக் காரியத்தின் விபரீதம் பலருக்கு புரியாமல்  பாவத்தில் விழும் சூழ்நிலை ஏற்ப்படுகிறது.
 
வீடு விசிட்டுக்களுக்கு போகும் பாஸ்டர்கள் பலர்  விழுந்துதே போய்விடுகின்றனர், தனியாக ஜெபிக்க போகிறோம் என்று போய் தாங்களே  மாட்டி கொள்ளுகின்றனர், கூடி ஜெபிக்கபோகிறோம் என்று சொல்லி குப்புற விழுந்துவிடுகின்றனர். 
 
எதிர் பாலினர் மேலுள்ள இச்சை என்பது மனிதனுக்கு இயல்பாகவே வரக்கூடியது. இவ்விஷயத்தில் பாவத்தில் விழாதபடி பார்த்து நடக்க  வேத வசனங்களின் அடிப்படையில்  தகுந்த யோசனைகளை தள நண்பர்கள் தந்தால் பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

"லஞ்ச" விவகாரத்தை வேரிலிருந்து ஆராய்ந்து பதில் தந்த சகோதரர்  தீமோத்தே அவர்களின் விளக்கத்தையும் அறிய ஆவல்!  
 

 


-- Edited by இறைநேசன் on Thursday 6th of May 2010 08:55:06 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

ஆம் இது நிச்சயம் அவசியமான தேவையே...

ஏனெனில், மற்ற எல்லா பாவங்களுக்கும் எதிர்த்து நிற்க சொல்லும் வேதம் பாலியல் இச்சைக்கு விலகி ஓடச் சொல்கிறது...
இன்றைக்கு உலக பொருளைக் (பணம்,..) கூட ஜெயித்த வாலிபர்கள் மீள முடியாமல் தவிக்கும் பகுதி இதுதான்.

எனவே, சகோதரர்கள் எல்லோரும் இதில் தங்கள் கருத்துக்களைக் கூற பட்சமாய் கேட்டுக் கொள்கிறேன்..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

timothy_tni wrote:

ஆம் இது நிச்சயம் அவசியமான தேவையே...

ஏனெனில், மற்ற எல்லா பாவங்களுக்கும் எதிர்த்து நிற்க சொல்லும் வேதம் பாலியல் இச்சைக்கு விலகி ஓடச் சொல்கிறது...
இன்றைக்கு உலக பொருளைக் (பணம்,..) கூட ஜெயித்த வாலிபர்கள் மீள முடியாமல் தவிக்கும் பகுதி இதுதான்.

 


சகோதரர்  சொல்வதுபோல் பணம் என்பது, நாம் விருபத்தொடும் ஆசையோடும் வாங்கினால்தான் நம்மை பாதிக்கும், அது ஒரு ஜடப்பொருள்.   
 
ஆனால் பாலியல் இச்சை என்பது எதிர்பாலினர்  பக்கத்தில் வந்தாலே தானாக பற்றிகொள்ளும் எனவேதான் பவுல் அதை விட்டு விலகி ஓடுங்கள் என்று எச்சரிக்கிறார் போலும்.
 
நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
 
 என்ற  வார்த்தைகளுக்கு  ஏற்ப  பாலியல் இச்சையில் மாட்டிகொண்டு தவித்தவர்களில் முக்கியமானவன் தாவீது. தேவனை நான்கு அறிந்த தேவனால்
"என் இருதயத்துக்கு ஏற்றவன்"  என்று சொல்லப்பட்ட  அவனே பத்செபாளிடம் பாவத்தில் விழுந்து படாதபாடு பட்டான்.
 
II சாமுவேல் 12:10 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்
 
அடுத்து 
 
நீதிமொழிகள் 6:26  விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்
 
என்ற வார்த்தைக்கு ஏற்ப  தேவனால்  அபூர்வமான நசரேய அபிஷேகத்தை பெற்ற அடுத்த  நபரான சிம்சோன்  பாலியல் பாவத்தில் சிக்கி வேசியின் மடியில் விழுந்து கண்கள்  பிடுங்கப்பட்டு கடைசியில் மாண்டான்  
 
நியாயாதிபதிகள் 16:21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
 
இன்னும் தன் தங்கையாகிய தாமாரை  கற்பழித்து அழிந்துபோன அம்னோன், மீதியானிய ஸ்திரியாகிய கஸ்பியோடு  சயனித்து பினெகாசின் கையால் குத்துண்டு செத்த சிம்ரி, சவுலின் மறுமனை யாட்டியை தனதாக்கிகொண்ட அப்னேர், தாவீதின் மருமனயாடிகளோடு சயனித்து மாண்டுபோன அப்சலோம்,  தன் சகோதரனின் மனைவியை தான் வைத்துகொண்டிருந்து   யோவானால் கடிந்து கோள்ளப்பட்ட ஏரோது  என்று இவ்வரிசை நீண்டுகொண்டே போகிறது.

இவ்வாறு பலரது உயிரை காவுகொண்டுள்ள இந்த பாலியல் இச்சையை மேற்கொள்ளுவது எப்படி?

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பாலியல் இச்சை என்னும் பாவத்திலிருந்து ஒருவர் விடுபட முதலில் வேத வசனங்கள் பாலியல் சம்பந்தப்பட்ட  எவ்விதமான காரியங்களை பாவம் என்று தீர்க்கிறது  என்பதை என்பதை பற்றிய ஒரு தெளிவு நிலைக்கு வரவேண்டியது அவசியம். ஒரேயடியாக பெரிய  பரிசுத்தவானாக இருக்கபோகிறேன் என்று எண்ணிக்கொண்டு  பாழாய் போய்விடுவதைவிட, தேவன் நியமித்த வட்டத்துக்குள்  நம்மை கட்டுப்படுத்தி வாழ்வதே சிறந்தது.    
 
பாலியல் சம்பந்தப்பட்ட காரியங்களில் எல்லா  மனிதர்களின் உடல் நிலைகளும் ஒரே நிலையில்  இருப்பதில்லை. அது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடுகிறது.  ஒரு சிலருக்கு மிகுந்த தேவைபோல இருப்பது ஒரு சிலருக்கு அற்ப தேவையாக இருக்க வாய்ப்புள்ளது.   
 
நமது தேவன் நமது  பெலகீனங்களையும் நமது நிர்பாக்கிய நிலையையும் அறிந்த தேவன். எனவே அவர் பாலியல் சம்பந்தமான எல்லா காரியங்களும் பாவம் என்று விலக்கவில்லை. ஆனால் இவ்விஷயத்தில் ஒரு எல்கை கோட்டை நியமித்து அதை மீறி செயல்படுவதையே பாவம் என்று  தீர்க்கிறார்.
 
இவ்வாறு இந்த பாலியல் சம்பந்தமான பரிசுத்த நிலைகளில் மூன்று நிலைகளை நாம் வேத வசனத்துடன் ஆராயலாம்.
 

1. ஸ்திரியை தொடாமல் இருப்பது  
 
பாலியல் சம்பந்தப்பட்ட நிலைகளில் மிக உயர்ந்த நிலை இதுவென்று பவுல் குறிப்பிடுகிறார்
 
மத்தேயு 19:10   மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.

I கொரிந்தியர் 7:1
   ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
 
காரணம் விவாகம் பண்ணினால் மனிதனின் சிந்தனைகள் உலகபக்கம் திசை திருப்பட்டுகின்றன
 
I கொரிந்தியர் 7:33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.

அதை மேற்கொள்ள, பவுல் அவ்வாறு போதித்ததோடு
 
தான் போதித்ததுபோல்  தன் வாழ்நாளில் வாழ்ந்தும்  காட்டி சென்றுள்ளார். அவரது வாழ்க்கை நிலையை ஆராய்ந்தால் அது மிகவும் பரிசுத்தமானது. மனைவி/பிள்ளை  என்ற கடமைகள் அவருக்கு இல்லாத காரணத்தால் தனது முழு ஜீவியத்தையும் ஆண்டவருக்காக செலவிட்டு நல்ல ஓட்டத்தை ஓடி முடித்தேன் என்று சொல்கிறார். 
  • அவர் ஒரு சொந்த வீடு வைத்து நிலையாக வாழவில்லைவில்லை
    அவர் எதையும் தனக்காக சேர்த்து வைக்கவில்லை
    அவர் இயேசுவுக்காக ஜீவனைகொடுக்க தயாராக இருந்தார்
    அவர் உலக இன்பம் எல்லாவற்றயும் குப்பையாக நினைத்து ஒதுக்கினார் 
    அவர் இயேசுவின் சுவிசேஷம் ஒன்றே தன் உயிர் மூச்சாக நினைததார்
    அவர் எல்லோரும் கழித்து போடும் அழுக்கை போல வாழ்ந்தார்
    அவர் அடிபட்டு, வையப்பட்டு, நிர்வாணப்பட்டு சுவிசேஷம் சொன்னார்.
    அவர் தனது உயிருக்காக ஒருபோதும் பயந்தது இல்லை.

ஆனால் இது எல்லோரார்லும் சாத்தியமா?  வரம் பெற்றவைகள் மட்டுமே இதுபோல் ஒரு நிலையில் நீடிக்கமுடியும். ஆகினும் இப்படி ஒருவர வாழ முடிந்தால் இந்த நிலையை முதலாம் பரிசுத்தநிலையாக எடுத்துகொள்ளலாம்

ஆகினும் ஊருக்காக  திருமணம் செய்யாமல் இருந்துகொண்டு மனதில் முழுவதும் இச்சைகளை சுமதுகொண்டு மாய்மாலம் பண்ணி  அனேக பாலியல் புகார்களில் மாட்டி கொண்டு தவிக்கும் பாதர்கள் போல் இருந்தால் அதிக ஆக்கினையே கிடைக்கும். எனவே எந்த நிர்பந்தமும் இல்லாமல் என்னால் இவ்வாறு ஸ்திரியின் மேல் இச்சை இல்லாமல் ஆண்டவருக்காக அதிகம் பிரயாசப்ட்டு  வாழமுடியும்  என்று கருதுபவர்கள் இந்நிலையை தேர்ந்தெடுக்கலாம்.
 
2. விவாகம் பண்ணி மனைவியுடன் வாழ்வது!
 
முதல் பரிசுத்த நிலையை எட்ட முடியாதவர்கள்  இந்த இரண்டாம் நிலையை தேர்ந்தெடுக்கலாம்.
 
I கொரிந்தியர் 7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.
 
இவ்வசனத்தில் "முதல் பரிசுத்தநிலையை தேர்ந்த்டுத்து தவறுபவர்கள் வேகவேண்டிய நிலைவரும்" என்பதும்  சுட்டிகாட்டப்படுகிறது. எனவே விவாகம் பண்ணி மனைவியோடு வாழுதல் எவ்விதத்திலும் தவறு அல்ல.   
  
எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;
 
ஆதியிலே மனிதனை படைத்த தேவன் மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல அவனுக்கு ஏற்ற துணையை ஏற்ப்படுத்துவேன் என்று ஆதாமுக்கு துணையாக ஏவாளை ஏற்ப்படுத்தியதொடு இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்றும் கூரியிருக்கிரபடியால் விவாகம் செய்வதில் எந்த தவறும் இல்லை.
 
பழைய ஏற்பாட்டுகால பரிசுத்தவான்கள் அநேகர் விவாகம் செய்து தங்கள் மனைவி பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ்ந்தவர்களே, எலியாவை போல ஒரு சிலரை தவிர (எலியா விவாகம் செய்ததற்கான சான்று வேதத்தில் இல்லை) தேவனோடு சஞ்சரித்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கு கூட திருமணம் செய்தவர் தான்.
 
இக்கருத்தின் அடிப்படையில் திருமணம் செய்து மனைவியோடு வாழ்வதற்கு தேவன் என்றும் தடை செய்யவில்லை. இவ்வாறு திருமணம் செய்து ஒரே மனைவியோடு வாழ்வது இரண்டாம் நிலை பரிசுத்தம் என்று எடுத்துகொள்ளலாம்.

(மூன்றாம் நிலை ஓன்று உண்டு.  இந்நிலை பலருக்கு தவறுபோல தெரியலாம் ஆனால் அதில்சில உண்மைகள் இருக்கிறது அதைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம்)  

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

நீதிமொழிகள் 18:22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
 
நீதிமொழிகள் 5:18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
 
என்று நீதிமொழிகள் சொல்வதால் விவாகம் செய்து மனைவியுடன் வாழ்வது எவ் விதத்திலும் தவறானது அல்ல!அதுவே  கர்த்தருக்கு விருப்பமானதும் கூட என்று நான் கருதுகிறேன்.  
 
இப்பொழுது மூன்றாவதான ஒரு நிலையை பற்றி பார்க்கலாம். இந்நிலை ஒரு உயர்ந்த  பரிசுத்த நிலை இல்லை என்றாலும்  தேவனின் பார்வைக்கு அல்லது வசனத்தின் அடிப்படையில் குற்றமற்றவர்களாக இருக்கும் ஒரு நிலை. 
 
உலகில் எல்லோருக்கும் எல்லாமே நல்லதாகவே நடப்பது இல்லை சோதனைகளும் துன்பங்களும் உலகில் வருவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரூ  நிலையிலும்  சில விதி விலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்யம். அப்படிப் பட்டவர்களுக்கு ஆலோசனையாக  இதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
 
1. மனைவியை இழந்தவர்கள்     
2. தீராத நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை உடையவர்கள் 
3. திருமணமாகாதவர்கள்       
4 .விவாகரத்து செய்துகொண்டவர்கள்    
5. தனது உடம்பை தன்னால் கண்ட்ரோல் பண்ண முடியாதவர்கள்  
6. மனைவியை பிரிந்து வேறு இடத்தில் வாழ்பவர்கள்  
 
இவர்கள் போன்ற விதி விலக்கானவர்களுக்கே  இந்த ஆலோசனை: இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எந்த இடத்தில் அதிகம் தவறுதல் அல்லது மீறுதலை சந்திக்க நேரிடுகிறது  என்பதை அறிந்து அந்த காரியத்திலிருந்து விடுபட தொடர்ந்து ஜெபிப்பது அவசியம்.  மேலும் இப்படிப்பட்டவர்கள்:
 
1. எந்நிலையிலும் பிறன் மனைவியை இச்சிக்கவோ தொடவோ செய்யாதீர்கள். பிறன் மனைவியை இச்சிப்பதையும் அவரோடு உறவுகொள்வத்தையும் தேவன் கடுமையாக வெறுக்கிறார். அவ்வாறு செய்பவன் எவனும் ஆக்கினைக்கு தப்பமுடியாது   
 
உபாகமம் 5:21 பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக;  

லேவியராகமம் 18:20
பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்

லேவியராகமம் 20:10
ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

நீதிமொழிகள் 6:29
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

2. எக்காரணத்தை  விபச்சாரியிடத்தில் போகாதீர்கள் வேசி கள்ளனாக இருக்காதீர்கள் தேவன் விபச்சாரத்தையும்  வேசித்தனத்தையும்  வெறுக்கிறார் .
 
யாத்திராகமம் 20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.

நீதிமொழிகள் 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

வெளி 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், பொய்யர்  ............ அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
 
3. ஆணும்ஆணும் சேர்வது பாவம்  இப்படிப்பட்டவர்களை தேவன் அவருவருக்கிறார்.
 
உபாகமம் 23:17  ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக் கூடாது

லேவியராகமம் 18:22
பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.

I தீமோத்தேயு 1:10
வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சி க்காரருக்கும், ..........11. நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின் படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது
 
4. விவாகரத்து செய்த சகோதரியை அவள்  கணவன் உயிரோடு இருக்கையில் எக்காரணத்தைகொண்டும்  விவாகம்பண்ணுவது இச்சிப்பது தேவனுக்கு ஏற்றதல்ல.  
 
மத்தேயு 5:32 தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் 
 
5. சுய இன்ப பழக்கம் உடையவர்கள் தேவனுடயராஜ்யத்தை  சுதந்தரிக்க முடியாது என்று வசனம் சொல்கிறது  
 
கொரிந்தியர் 6:9  வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்.......  தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
 
6. வேறொருவனுக்கு நியமிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் அதன்பின் அந்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யகூடாது  அவளும் பிறன் மனைவி என்ற கோட்டுக்குள் வந்துவிடுகிறாள்.
 
லேவியராகமம் 19:20 ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து,....... , அவளோடேஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல்

உபாகமம் 22:25
ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
 
7. மனைவியை  வேசித்தன காரணமன்றி வேறு  எக்காரணத்தை கொண்டும் தள்ளிவிட (விவாகரத்துக்கு) வேண்டாம்.  
 
மத்தேயு 5:32  வேசித்தன முகாந்தரத்தினா லொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்
 
8. அவ்வாறு மனைவியை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால் அவன் விபச்சாரம் செய்த பாவத்துக்குள்ளாவான்  
 
லூக்கா 16:18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான்,
 
9. முடிந்த  அளவு மனைவியை பிரிந்து வேரிடத்தில்  போய் தங்கி  சம்பாதிக்க விரும்பாதீர்கள். இது கட்டளையல்ல என்றாலும் ஒருவர் விழுவதற்கு வழி ஏற்ப்படுத்தியதுபோலாகும்.   
 
I கொரிந்தியர் 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
 
பல்வேறு காரியங்களினிமித்தம் ஒரு முடிவான நிலைக்கும் வர முடியாதவர்கள் அல்லது பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவிப்பவர்கள்  மேலே சொல்லப்பட்டுள்ள காரியங்களை மீறிவாழ்ந்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதைவிட இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழலாம்  அதில் எந்த தவறுமே இல்லை என்றே நான் கருதுகிறேன்.  அனால் இப்படிபட்டவர்கள் போதகராவோ அல்லது எதாவது ஆலோசனை சங்கதலைவர், கண்காணி பதவியிலோ  இருக்ககூடாது  
 
I தீமோத்தேயு 3:2 கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

நான் சொல்லியிருப்பதில் அனேக பழைய ஏற்பாட்டு கட்டளைகள் கலந்திருப்பதை அறியமுடியும். அதெல்லாம் தேவையில்லை என்று நீங்கள் கருதினால் கீழ்க்கண்ட ஒரே கட்டளை உங்களுக்கு போதும்  
 
மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

எந்த ஸ்திரியையும் இச்சையோடு பார்க்காதீர்கள். இவ்வாறு உங்களால் இருக்க முடிந்தது என்றால் மேலே சொல்லப்பட்ட எதுவும்மே தேவயில்லை. ஆனால்  புதிய ஏற்பாட்டு காலத்திலேயே இருக்கிறேன் அது கூடுதல் பரிசுத்த நிலையை போதிக்கிறது அதைமட்டும் நான் கைகொள்வேன் என்று சொல்லிக்கொண்டு எதையுமே செய்யாமல் விழுந்து போகவேண்டாம்.
 
சாத்தானின் முக்கிய நோக்கம் மனிதனை  தேவனின் வார்த்தைகளை ஏதாவது ஒரு வழியில் மீறவைப்பதுதான். மற்றபடி, தேவனின் வார்த்தைகளுக்கு உட்பட்டு  செய்யும் எதையும் அவன் கண்டுகொள்ளவே மாட்டான். அதில் பாவமும் இல்லை!



-- Edited by SUNDAR on Thursday 13th of May 2010 09:04:15 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஆண்டவரை அறிந்துகொண்டபின் என்  வாழ்வில் நான் சந்தித்த பாலியல் இச்சை சம்பந்தமான  மிகப்பெரிய சோதனை ஒன்றை எழுதுவது, இதுபோல்  பலருக்கு வரும் சோதனையை ஜெயிக்க பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
 
எனக்கு திருமணமாக சுமார் 33 வயது இருக்கும்போது எனது மனைவிக்கு சில மாதங்கள்  பயங்கர வாயிற்று வலி வந்துவிட்டது. அனேக நேரங்களில் எழும்பி வேலை கூட செய்யமுடியாமல் படுத்தேதான் கிடப்பாள். (பிறகும் ஸ்கேன் செய்து பார்த்ததில் அது ஒரு கட்டி என்று அறிந்ததும் அது தானாக குணமானதும் வேறுவிஷயம்)  
 
இவ்வாறு அவள் வயிற்று வலியில் எழும்ப முடியாமல் அவதிப்பட்ட சமயத்தில். நாங்கள் குடியிருந்த விட்டுக்கு பக்கத்தில் இன்னொரு குடும்பம் வாடகைக்கு இருந்தது. அந்த சகோதரி மிகவும் அழகானவர் என்று சொல்வதை விட கவர்ச்சியானவர். ஆனால் அவரது கணவனுக்கு இரண்டு மனைவிகள் ஓன்று ஊரில் இன்னொன்று இவர்கள். அவர் வாரத்தில் ஒரேஒருமுறைதான் இங்கு வருவார்  மற்ற எல்லா நாட்களும் ஊரில் தங்கிவிடுவார். அதானால் இச்சையின் ஆவியால் அதிகம் பாதிக்கப்பட்டு அந்த சகோதரி பார்ப்பது பேசுவது எல்லாமே பிறரை கவரும் விதமாக இருக்கும்.
 
எங்கள் வீட்டுவாசல் மிக அருகிலேயே அவர்கள் வீட்டு வாசல் இருக்கும். இரவெல்லாம் அந்த சகோதரி வீட்டை திறந்து வைத்து விட்டு வாசலில் தலையை வைத்து படுத்துக்கொண்டு கொலுசையும் வளையலையும் அடிக்கடி குலுக்கிக் கொண்டு என்னை கவிழ்த்து  போடுவதற்கு  எவ்வளவோ முயற்ச்சிகள் மேற்கொண்டது.  
 
என் மனைவியோ ஒரு இன்னொசென்ட்!  இந்த பெண்ணை நான் வேறுஒரு வீட்டில் இருக்கும்போதே எனக்கு தெரியும் அது பேச்சு, நடத்தை எதுவும் சரியில்லாத காரணத்தால் நான் கொஞ்சம் விலகியே இருப்பேன். அனால் இவர்கள் வீட்டின் பக்கத்து வீடு காலியானவுடன் என் மனைவியிடம் சொல்லி, எங்களை அங்கு குடித்தனம் வரும்படி அழைத்தது. என் மனைவியும் நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அந்த பெண்ணின் உண்மை ரூபம் தெரியாமல் அவ் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு போனதோடு இப்பொழுது என்ன நடக்கிறது என்று  எதையும் கவனிக்கவும் இல்லை.
 
ஆம் நாம் நினைக்கிறோம் இந்த ஊரில் இவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் யாராது பார்த்துவிடுவார்கள் நம்மால் தவறுகளை செய்யமுடியாது யாராவது பிடித்து விடுவார்கள் என்று! ஆனால் அது கொஞ்சமும் உண்மை அல்ல. உங்கள் உள்ளத்தில் மனதார தவறு செய்யும் எண்ணம் வந்துவிடாலே அதற்க்கான சூழ்நிலையும் சந்தர்ப்பங்களையும் சாத்தான் சுலபமாக ஏற்ப்படுத்திகொடுத்து உங்களை தவறு செய்யவைத்துவிடுவான். ஆனால் அதை நீண்டநாள் செய்து ஆனந்தமாக இருப்பதற்கும்  அவன் அனுமதிப்பது இல்லை. சிலநாட்களிலேயே மிகப்பெரிய பிரச்சனையை கொண்டுவந்து அனுபவித்த அத்தனைக்கும் வட்டியும் முதலுமாக சேர்த்து வாங்கிவிடுவதொடு,  ஆண்டவரிடமும் அவப்பெயரையும்
ஏற்ப்படுத்திவிடுவான்.         
 
இச்சோதனை நேரத்தில் நான் மிகுந்த போராடத்தில் தப்பித்தேன். நான் உறுதியாக இருந்ததால் சில மாதங்களில் அந்த சோதனை என்னைவிட்டு கடந்துபோனது நாங்களும் அந்த வீட்டைவிட்டு காலி செய்துவிட்டோம்.  இந்நேரங்களில் என்னை பாதுகாத்தது யார் என்று கேட்டால் ஒரே வார்த்தை அது தேவனின் கீழ்க்கண்ட வசனம்தான்   
 
நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

இவ்வசனத்தை நான் அடிக்கடி ஞாபகபடுத்திகொள்வேன் அதுதான் என்னை பாதுகாத்தது.  


-- Edited by SUNDAR on Thursday 27th of May 2010 11:18:13 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// நாம் நினைக்கிறோம்,'இந்த ஊரில் இவ்வளவு மக்கள் இருக்கிறார்கள்,யாராது பார்த்துவிடுவார்கள்,நம்மால் தவறுகளை செய்யமுடியாது யாராவது பிடித்து விடுவார்கள்' என்று!

ஆனால் அது கொஞ்சமும் உண்மை அல்ல;உங்கள் உள்ளத்தில் மனதார தவறு செய்யும் எண்ணம் வந்துவிடாலே அதற்க்கான சூழ்நிலையும் சந்தர்ப்பங்களையும் சாத்தான் சுலபமாக ஏற்படுத்திகொடுத்து உங்களை தவறு செய்யவைத்துவிடுவான்;

ஆனால் அதை நீண்டநாள் செய்து ஆனந்தமாக இருப்பதற்கும் அவன் அனுமதிப்பது இல்லை,சிலநாட்களிலேயே மிகப்பெரிய பிரச்சனையை கொண்டுவந்து அனுபவித்த அத்தனைக்கும் வட்டியும் முதலுமாக சேர்த்து வாங்கிவிடுவதோடு ஆண்டவரிடமும் அவப்பெயரையும்
ஏற்படுத்திவிடுவான்
//



இந்த வரிகளை நீங்கள் எழுதவில்லை,ஆவியானவரே எழுத வைத்திருக்கிறார்;ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் மனதில் இருத்தவும் நிறுத்தவும் வேண்டிய பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய அற்புதமான எழுத்துக்கள்..!

இன்று முழுவதும் இந்த கருத்து என்னோடு பேசிக்கொண்டே இருந்தது;இது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமானதல்ல,ஒவ்வொரு பாவசோதனைக்கும் பொருத்தமானது;ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசேஷித்த வழிகாட்டு நெறிகளில் சேர்க்கப்படவேண்டியது;

தங்களை என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்;வாழ்த்துக்கள்..!



__________________

"Praying for your Success"


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

REALLY BROTHER That VERSE WILL WORK IN OUR HEART WHILE SPELL IT


நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
SO REPEAT IT AND BE FILLED WITH THE SPIRIT OF HOLY.


THANK YOU FOR YOUR SUGGESTION.



]JESUS COMING SOOONNNNN

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மனிதன் கவலையின்றி  தேவையான அனைத்து   இன்பங்களையும் அனுபத்து இவ்வுலகில் இன்பமாக வாழவேண்டும் என்று எண்ணுவதில் தேவனுக்கு ஈடாக யாரையும் சொல்லமுடியாது. தேவன் மனிதனை அவ்வளவு நேசிக்கிறார். ஆனால் அவன் அனுபவிக்கும் இன்பம் எல்லாம் அவர் வகுத்த எல்கைக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். 
 
ஆனால் நமது பார்வைக்கோ,  தேவனின் வார்த்தைக்குள்  வாழும் வாழ்க்கை வெறுமையும், ஒன்றுமற்றதுமாகவும் இருப்பதுபோலவும் ஒரு சன்யாச வாழ்க்கை போலவும்,  அவரது வார்த்தை என்னும்  பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே மிக பெரிய இன்பம் இருப்பதுபோலவும் ஒரு பொய்யான தோற்றத்தை சாத்தான் உருவாக்கி இன்று எல்லோரையும் தேவனின் வார்த்தைகளை மீற வைத்து கெடுத்து வருகிறான். ஒரு நலவனுக்கு  நேர்மையான வழியில் காதலித்து திருமணம் செய்வதற்கு ஒரு பெண் கூட கிடைக்கமாட்டாள்,  ஆனால் தவறான வழியில் அவனை கெடுத்துபோட  அனேக திருமணமான  பெண்கள் தயாராக இருப்பார்கள் என்பதை அறியவேண்டும்.   
 
மேலும் நமது மாமிசம் என்பது தேவனுக்கு கீழ்படிய கூடாததாகவும் அனித்ய  பாவ சந்தோசத்தை அதிகம் விரும்புவதாகவும் இருக்கிறது. காரணம் நமது மாமிசமே ஒரு சாத்தான்தான். அதாவது எங்கோ செய்த தவறுக்கு தண்டனையாகத்தான் இந்த மண்ணான வேதனை தரும் மாமிசத்தை பெற்றுள்ளோம்.  அது எப்பொழுதுமே திருப்தியற்றதாகவும் தேவனது வார்த்தை என்னும் கோட்டுக்கு வெளியே எட்டி பார்த்து இன்பம் பெறுவதிலேயே திருப்தியடைகிறது எனவே நமது மாமிசத்தின் கிரியைகளை அழித்து ஆவியில் கிரியைகளில் மேலும் மேலும் வளர்வது மிகமிக அவசியமாகிறது. இல்லையேல் நாம் தப்பிப்பதும் கடினமே. 
 
ஆலயத்துக்கு வரும் சகோதரிமார்கள் எல்லாம் தேவனின் மேலுள்ள ஈர்ப்பால் அவரது நாமத்தை உயர்த்த  வருகிரார்கள் என்று எண்ணிவிடமுடியாது. சாத்தானால் அபிஷேகம்  பண்ணப்பட்ட பல சகோதரிமார்கள் பூ கொலுசு வளையல் மற்றும் எடுப்பான உடைகளை அணிந்து கொண்டு தேவனை தொழவரும் ஆவிக்குரியவர்களின் கவனத்தை திசை திருப்பவும் வருகிறார்கள். மேலு சில சாத்தானின்  கையாட்கள் பிரசங்கம் பண்ணும் பாஸ்ட்டர்களையும் நல்ல ஆவிக்குரியவர்களையும் சந்தித்து உரையாடி வீழ்த்துவதிலும் சாகசம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர்.
 
பிரசங்க வேளை முடிந்தபின் பாஸ்டரை சந்திக்கும் ஒரு சகோதரி "உங்கள் பிரசங்கம் மிகவும் நன்றாக இருந்தது பாஸ்டர், நீங்கள் தேவ தூதரை போல் எனக்கு தெரிகிறீர்கள், உங்கள் மனைவி கொடுத்துவைத்தவள்" போன்ற  பசப்பும் வார்த்தைகளை பேசி அவகளை கவருவதுண்டு. அதனால் மனம் மகிழ்ந்த ஒரு தேவ
ஊழியர் அந்த பெண்ணை சற்று இச்சையின் ஆவியுடன் நோக்கினாலும்  போதும் அவரது ஆவிக்குரிய கண்கள் உடனே பழுதடைந்துவிடும். எனவே இதுபோன்ற
சகோதரிமார்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பதோடு.  கணவன்மார்களும் பாஸ்டர்களை புகழ்ந்து தள்ளும் சகோதரிகளுக்கு சற்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.
 
இந்த காரியங்கள் எல்லாம் வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை. யாரும் வேண்டுமென்று விரும்பி எதையும் செய்வதில்லை. இவை அனைத்தும், தேவனின் திட்டத்தையும் அவரது  சித்தத்துக்குள் வாழவிரும்பும் தேவ மக்களையும் எப்பொழுது குறிவைத்து காய்களை நகத்தும் சாத்தானின் தந்திரங்களே! தனது காரியத்தை வெற்றிகரமாக முடித்தபின் சாத்தான் சத்தமின்றி கழன்று விடுவான் பிறகு அதனால் வரும் அனைத்து பிரதிபலனையும் நாம்தான் மாமிசத்தில் அனுபவிக்க வேண்டும் எனவே  சகோதரர்கள் இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்ட வேண்டும்.



-- Edited by SUNDAR on Thursday 17th of June 2010 11:28:52 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

..........\\இந்த காரியங்கள் எல்லாம் வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை. யாரும் வேண்டுமென்று விரும்பி எதையும் செய்வதில்லை. இவை அனைத்தும், தேவனின் திட்டத்தையும் அவரது சித்தத்துக்குள் வாழவிரும்பும் தேவ மக்களையும் எப்பொழுது குறிவைத்து காய்களை நகத்தும் சாத்தானின் தந்திரங்களே! தனது காரியத்தை வெற்றிகரமாக முடித்தபின் சாத்தான் சத்தமின்றி கழன்று விடுவான் பிறகு அதனால் வரும் அனைத்து பிரதிபலனையும் நாம்தான் மாமிசத்தில் அனுபவிக்க வேண்டும் எனவே சகோதரர்கள் இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்ட வேண்டும்....//

பவுல் கூட தன்னுடைய நிருபத்தில் குறிபிட்டுள்ளார் " அவனுடைய தந்திரத்தை நாம் அறியாதவர்கள் அல்லவே " உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவனுடைய தந்திரத்தை அறியாமல் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய போதகர் சொல்வார்கள் சகோதர்கள் வீடு ஜெபத்திற்கு சென்றால் கூட தங்களுடைய மனைவியாவது சகோதிரிகளையாவது அழைத்து கொண்டு போகும்படி சொல்வதுண்டு. அதனுடைய ரகசியம் பின்னாட்களில் தான் புரிகிறது.

என்னதான் பரிசுத்தவானாக இருந்தாலும் கூட நம்முடைய மாம்ச சரிரத்தில் நமக்கு தெரியாமலே இச்சை வந்து விடும் அதற்கு இடம் கொடாமலிருக்க நாம் தேவையில்லாத காரியங்களை தவிர்ப்பது அவசியம்.


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இன்றுகூட நான் இதுபோல் ஒரு சோதனையை சந்தித்தேன்.  ஒரு ஆணை கவிழ்த்து போடுவதற்கு என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையையும் ஸ்திரியானவள் மூலம் சத்துரு தொடர்ந்து செய்து வருகிறான்.  
 
நீதிமொழிகள் 30:20 அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்..
 
ஆம்! அவள் சுலபமாக நம்மை இழுத்து குழியில் போட்டுவிட்டு நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்று சொல்லி போய்விடுவாள்.  காரணம் அங்கு பாவத்தை செய்வது ஆண்தானே.  எனவே அன்பானவர்களே எச்சரிக்கை எச்சரிக்கை! 
 
இந்த திரியில் உள்ள கருத்துக்களின் முக்கியத்துவம் கருதி மீண்டும்  பார்வைக்கு வைக்கப்படுகிறது.  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

சாத்தான் என்றைக்கும் ஸ்திரி மூலமாகவே காயை நகர்த்துகிறான்.ஒரு பிரபல பத்திரிக்கையில் முந்திய காலத்தில் ஒரு பதிவை பார்த்தேன் சிறையில் இருக்கும் காம கொடூரர்களுக்கு கவுன்சிலிங் என்றப்போர்வையில் அந்த பத்திரிக்கை ஒரு சிறப்பு கண்டோட்டத்தை போட்டிருந்தது அதில் அநேக காம கொடூரர்கள் சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காரணம் அவர்கள் இச்சைக்கு தூண்டப்பட்ட காரணம் புளு பிம்,மற்றும் வீதியில் கவர்ச்சியாக வலம் வரும் பெண்களாலும் மிகுதியாக உணர்ச்சிவசப்ப்பட்டு இரவில் அந்த உணர்ச்சியை தணிக்க ரோட்டோரங்களில் படுத்துக்கிடக்கும் ஏழைப் பெண்களை வலுகட்டாயமாக தூக்கிக்கொண்டு கற்பழித்து விடுவார்களாம் அந்த ஏழைகள் ஸ்டேசனுக்குப்போய் புகார் கொடுக்கமாட்டார்கள் என்ற தைரியமும்,அப்படியே புகார் கொடுக்கச் சென்றாலும் போலீஸ்காரர்கள் அதை அலட்சியப்படுத்தி எப் ஐ ஆர் போடாமல் பேசி அனுப்பிவிடுவதாலும் இந்த துனிகர முடிவை எடுத்திருக்கிறார்கள் அந்த கயவர்கள் .
இதுவும் கானாதுக்கு வேலைக்கு சென்று இரவு நேரத்தில் ஆட்டோக்கள் கிடைக்காமல் ஏதாவது உதவி கிடைக்குமா என்று பேதையாக நிற்கும் நல்லவிதமாக உடை உடுத்திருந்தாலும் அப்பெண்களை ஏமாற்றி அவர்களை கடத்தி கற்பழித்தவர்களும் ஏறாளம்.
ஆனால் இதில் ஒரு ஆச்சரியமான உண்மை என்னவெனில் கவர்ச்சியாக வீதியில் வலம் வரும் பெண்கள் பாதிக்கபடவில்லை மாறாக நல்ல பெண்களே பாதிப்புக்குள்ளானதாக அநேகருடைய பதில் இருந்து தெளிவாகியுள்ளது.
அந்தகயவர்களிடம் நீங்கள் ஏன் கவர்ச்சியாக போகும் பெண்களை ஏதும் செய்யவில்லை என்றதற்கு அதற்கு அவர்கள் பொது இடத்தில் அவர்களை நாங்கள் எப்படி கடத்துவது அவர்கள் மீது உள்ள ஏக்கத்தால்தான் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பெண்கள் பக்கம் எங்கள் கவனம் திரும்பியது என்றார்களாம்.
இதில் இந்த குற்றத்தை செய்த ஆண்களுக்கு சிறை என்றால் கவர்ச்சியை தூண்டும் பெண்களோ கொஞ்சமும் உணர்வில்லாமல் தன் மானம் தெரிய பொது இடத்தில் விபச்சாரியாக அலைகிறார்கள். இவர்களுக்கு தண்டனை இந்த பூமியில் இல்லை போல !
மேற்கத்திய கலாச்சாரம் என்று பென்கள் மிக அருவப்பாக டைட்டாக ஆடை அணிந்து திரிகிறார்கள்.இது பெலவீனமுள்ள எவரையும் தடுமாறச்செய்யும்.
இப்படிப்பட்டவர்களிடம் அறிவுரைகள் கூறினால் அவர்கள் கூறும் பதில் எங்கள் இஸ்டம் துனி இல்லாமலும் போவோம் உங்களுக்கு என்ன?நீங்கள் கண்ணை மூடிக்கிட்டு போக வேண்டியதுதானே என்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு என்னோட ஆதங்க பதில் “நீங்கள் எப்படியும் அலையலாம் ஆனால் உங்களால் பாதிக்கப்படுவது நல்ல பெண்களும்,ரோட்டோர ஏழைப்பெண்களும்தான்.அவர்களின் இரத்தப்பலியை கவர்ச்சியாக அலையும் பெண்களிடம் கட்டாயம் தேவன் கேட்பார்”!
புத்தியுள்ளவர்கள் மனிதாபிமானத்தோடு சிந்திக்கக்கடவர்கள்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரிமார்கள் ஒரு குறிப்பிடட வயதுக்குமேல் இந்த சரீர பிரகாரமான பாலியல் இச்சையில் இருந்து தானாகவே விடுவிக்க படுகிறார்கள். இயற்க்கையாகவே அவர்கள் சரீரம் ஆவ்வாறு அமையப்பெற்றுள்ளது    
 
ஆனால் ஆண்களுக்கோ இந்த பாலியல் தொல்லை ஜீவன் உள்ளவரை ஒரு பெரிய போராடடமாகவே இருக்கிறது.
 
தேவனிடம் கெஞ்சி மாற்றாடி இதில் இருந்து விடுபட்டாலொழிய இந்த மூலம் 70-80 வயது முதியவர்களை கூட சாத்தன் கவுத்துபோட்டு விடுகிறான்.
 
மிகவும் அருமையான எனது பாஸ்ட்டர் 75 வயதுக்கு மேலானவர் மனைவியோ மிக முதிர்ந்த வயது இயலாமை, பாஸ்டர் சற்று  தடுமாறிவிடடார் சில நாடகளில் மரித்தும்விடடார்.     
 
 
எனவே திரியின்  முக்கியத்துவம் கருதி இந்த திரி மீண்டும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard