"எல்லா சாமியும் ஒண்ணுதான், எங்கள் வீட்டில் வந்து பாருங்கள் நாங்கள் எல்லா சாமி படத்தோடு இயேசு படத்தையும் வைத்து கும்பிடுகிறோம் அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். பெசன்ட் நகர் போனால் அங்கு சர்ச்சுக்கு போய்விட்டுத்தான் வருவோம், எங்களுக்கு அந்த சாமி இந்த சாமி என்ற பாகுபாடு கிடையாது, எல்லாமே ஒன்றுதான்"
இயேசுவை அறியாத மக்களிடம் சுவிசேஷத்தை அறிவிப்பவர்கள் அடிக்கடி கேட்டிருக்கும் வார்த்தைகள் இவைகள்.
இதுபோன்ற வார்த்தைகள் சொல்பவருக்கு சரியான உதாரணத்தோடு பதில் சொல்ல ஏதாவது விளக்கம் இருந்தால் சகோதரர்கள் பதிவிடவும்.
-- Edited by இறைநேசன் on Tuesday 18th of May 2010 08:34:04 PM
இக்கேள்விக்கு யாருக்கும் பதில்தர விருப்பம் இல்லையா, அல்லது ஒருவருக்கும் சரியான பதில் தெரியவில்லையா என்பது புரியவில்லை எனக்கு தெரிந்த கருத்தை நான் பதிவிடுகிறேன்.
நமது இந்தியாவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உண்டு. இன்னும் கூட ஒவ்வொரு தேசத்திலும் அந்தந்த தேசத்துக்கு ஏற்றாற்போல் வானராங்கி, பாகால், தியானாள், அன்னமலேக்கு, தாகோன் போன்ற பெயர் பெற்ற பல்வேறு தெய்வங்கள் இருந்திருப்பதை வேதத்தின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் இத்தனை கோடி தெய்வங்களில் எந்த தெய்வமும் எனது பாவங்களுக்காக மரிக்க முன்வரவில்லை. எனது பாவங்களுக்காக மரிக்க முன்வந்தவர் இயேசு ஒருவரே.
அட எல்லா தெய்வமும் உண்மையாகவே இருந்து விட்டு போகட்டுங்க, எனக்காக ஜீவனைகொடுக்க, எனது பாவங்களுக்காக அடி உதை பட முன்வைத்தது யாருங்க?
நாம் ஆண்டவராகிய இயேசு ஒருவர்தானுங்க.
"அதை செய்" "இதை செய்" என்று கட்டளை இடுவது எல்லோரார்லும் முடியும். ஆனால் "உனக்காக நான் வந்து எல்லாவற்றையும் செய்கிறேன்" என்று யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு நமக்ககாக மிகுந்த பரிவோடு முன்வந்து நமது பாவங்களுக்காக ஜீவனை தந்த அந்த இயேசுவை மற்ற எல்லா தெய்வங்களுடன் சேர்த்து ஒன்றாக பார்ப்பதுவே தவறான செயல்.
எல்லா தெய்வங்களும் ஒன்றாக இருக்கலாம் ஆனால் இயேசு அவர்களுக்குள் ஒருவரல்ல
"எல்லா சாமியும் ஒண்ணுதான், எங்கள் வீட்டில் வந்து பாருங்கள் நாங்கள் எல்லா சாமி படத்தோடு இயேசு படத்தையும் வைத்து கும்பிடுகிறோம் அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். பெசன்ட் நகர் போனால் அங்கு சர்ச்சுக்கு போய்விட்டுத்தான் வருவோம், எங்களுக்கு அந்த சாமி இந்த சாமி என்ற பாகுபாடு கிடையாது, எல்லாமே ஒன்றுதான்"
மேலே காணப்படும் கூற்று ஒரு ஆவிக்குரிய குருடனுடையதாகும். இதை எழுதியவரின் அகக் கண்கள் நன்றாக இருக்கலாம்; ஆனால் மனக் கண்கள் இன்னும் குருடாகவே இருக்கிறது. அவருடைய ஆத்மா (சிந்தனை, திட்டம், செயல் யாவும்) ஆவிக்குரிய காரியத்தில் இருளில் இருக்கிறது. ஒரே ஒரு விடுதலைதான் உண்டு. வேதத்தில் (பைபிளில்) புதிய ஏற்பாட்டை நன்கு வாசித்து, படித்து அண்ட சராசரத்தின் ஒரே தேவனாகிய கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறே தேவன் இல்லை என்றும், இயேசு கிறிஸ்துவே மனுகுலத்தை மீட்க வந்த ஒரே இரட்சகர் என்றும், அவர் ஒருவரே ஆண்டவர் என்றும், அவரைத் தவிர வேற தேவர்கள் எதுவும் இல்லை என்றும் விசுவாசிக்க வேண்டும்.
அங்ஙனம் விசுவாசிப்பது மட்டுமன்று; அவரையே தன் பாவத்தின்/ பாவங்களின் ஒரே பரிகாரியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் தன் வாழ் நாள் முழுவதும் இயேசு கிறிஸ்துவை தன் இரட்சகராகவும் ஆண்டவராகவும் உறுதியாகப் பற்றிக் கொண்டு அவரையே ஆராதித்து வந்தால்!!! இவருக்கு விமோசனம் உண்டு.
ஒரு காரியம் மிகவும் கண்டிப்பாக செய்ய வேண்டியது. எல்லா விக்கிரகங்களையும் (இயேசுவின் சிலையையும் கூட) உடைத்தெறிந்து. கிறிஸ்த்து இயேசுவை மாத்திரமே தேவனாக சேவிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் பாவ மன்னிப்பும், சந்தோசமும், சமாதானமும் இவரை ஆணு கொள்ள நானும் பிரார்த்திக்கிறேன்.