1. அவரைத் துதிக்கும் படியாக... 2. அவருடைய அன்பின் வெளிப்பாடாக...
ஏசாயா 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைசொல்லிவருவார்கள்.
மனிதர்களை தேவன் படைத்ததே அவரை துதிக்கும்படியாகத்தான்...
மேலும், சமீபத்தில் ஒரு போதகர் சொன்னது...
லூசிபர் விழுந்து போவதற்கு முன் தேவனைத் துதிக்கும் பணியில் (அதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டு) இருந்தான். அவன் தன் மேட்டிமையால் விழுந்து போன பின் அவன் இருந்த ஸ்தானத்தில் மனிதர்களை நிறுத்தும் படி (அதாவது அவரை இடைவிடாது துதிக்கும் படி) விரும்பி அவர்களை சிருஷ்டித்தார்..
அதற்கு அவர்களை உடனே ஏற்படுத்தாமல் அவர்களை தகுதிப் படுத்த(அல்லது பரிசோதிக்க) விரும்பி, ஆதாம்- ஏவாளை படைத்து ஏதேனை பண்படுத்தும் பணியைத் தந்தார்..
பின் அவர்கள் வீழ்ச்சிக்குள்ளாகி தேவமகிமையை இழந்தனர். எனவே தான் இந்த மீட்பின் பாதையை கொடுத்து பின் மீண்டும் பரலோகில் மனிதர்களை(இயேசு கிறிஸ்துவின் மூலம் தகுதிப்பட்டவர்களை) எடுத்து இடைவிடாமல் துதிக்கும் பாக்கியம் தருவார்...
(தொடரும்...)
-- Edited by timothy_tni on Thursday 6th of May 2010 10:03:55 PM
timothy_tni wrote:எனவே தான் இந்த மீட்பின் பாதையை கொடுத்து பின் மீண்டும் பரலோகில் மனிதர்களை(இயேசு கிறிஸ்துவின் மூலம் தகுதிப்பட்டவர்களை) எடுத்து இடைவிடாமல் துதிக்கும் பாக்கியம் தருவார்...
மத்தேயு 2230. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
என்றுதான் வேதம் சொல்கிறது. இடைவிடாமல் துதித்துகொண்டு இருப்பார்கள் என்பதற்கு ஆதார வசனம் எதுவும் இருக்கிறதா? தெரியப்படுத்தவும்.
சகோதரர் அவர்களே! தேவனை துதிப்பததோ அவரின் மகத்துவத்தய் தியானித்து பேசுவதோ அனேக நன்மையான காரியங்களுக்கு அடிப்படையாய் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!.
ஆனால்
தேவன் தம்மை துதிப்பதற்காக மட்டுமா மனிதனை படைத்தார்? என்ற கேள்விக்கே நான் இங்கு பதில் தர விரும்புகிறேன்.
சகோதரர் அவர்கள் சுட்டிய வசனம் இதுதான்:
ஏசாயா 43:21இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைசொல்லிவருவார்கள்.
இந்த வசனத்தின் கருத்தோடு ஒத்த கருத்துள்ள இந்த வாக்கியத்தை சற்று கவனியுங்கள்
இந்த பிள்ளைகளை எனக்கென்று பெற்றேன், இவர்கள் எனது பெயரை புகழை) சொல்வார்கள்
என்று ஒரு தகப்பன் சொல்கிறார் என்றால் அந்த வாக்கியத்தின் பொருள் என்ன?
அவர்களோடு பேச, அவர்களோடு உறவாட, அவர்களோடு மகிழ்ந்திருக்க, அவர்களில் அன்புகூர, அவர்களை வளர்க்க, அவர்களை படிக்கவைக்க போன்ற எல்லா காரியமும் அடங்கிவிடும் அத்துடன் அவர்கள் எனது பெயரை / புகழை சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அங்கு நிறைவேறும் .
அதுபோல், தேவன் மனிதனை படைத்தது அவர்களோடு பேச, அவர்களோடு உறவாட, அவர்களோடு சந்தோஷப்பட, அவர்கள் இன்பமாக இருப்பதை பார்த்து மகிழ போன்ற பல்வேறு அன்பின் வெளிப்பாடுகளுக்க்த்தான். தேவனின் மகிமையும் அவரது மகத்துவத்தையும் அறிந்த எவரும் அவரை துதிக்காமல் இருக்கமுடியாது. எனவே எனது துதியை அவர்கள் சொல்வார்கள் என்று தேவன் சொல்லுகிறார்.
இங்கு தேவன் மனிதனை படைத்ததன் பிரதான நோக்கம் துதிப்பதற்காக மட்டும் அல்ல என்பதை நாம் அறிய முடியும். ஏனெனில் வசனம் "இந்த ஜனங்களை நான் என்னை துதிப்பதற்காக ஏற்ப்படுத்தினேன்" என்றோ "அவர்கள் என்றென்றும் என்னை துதித்துகொண்டு இருப்பார்கள்" என்றோ சொல்லவில்லை. அவரது மகிமையின் மகத்துவத்தை கண்ட சங்கீதக்காரன்
என்று பாடுகிறான். அவன் உட்காந்து வெறுமனே துதித்துகொண்டு மட்டுமா இருந்தான், தனது ராஜ பதவியோடு கூட துதிக்கும் செயலையும் சேர்த்து செய்தான் அவ்வளவுதான். மற்றபடி தேவன் மனித்னை பார்த்து என்றென்றைக்கும் நீங்கள் சதா காலங்களிலும் என்னை துதித்க்கொண்டே இருக்கவேண்டும் என்று எங்கும் யாருக்கும் கட்டளையிடவில்லை.
மாறாக
சங்கீதம் 115:16வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். ஏசாயா 65: 17. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; ...... ஏசாயா 65:18நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்
எசேக்கியேல் 37:25அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.
இங்கு "என்றென்றைக்கும்" என்று அதாவது முடிவில்லாமல் நடைபெறப்போகும் காரியம், அவர் படைக்கபோகும் புதிய பூமியிலே மனிதன் என்றென்றென்றும் மகிழ்ந்து களிகூர்ந்து இருப்பதுதான் அந்நாட்களில் கர்த்தரையும் அவரது மகத்துவத்தையும் துதியாமல் யாராலும் இருக்கவே முடியாது.
ஒரு மிகுந்த அழகான ஒரு இயற்க்கை காட்சியையோ அல்லது ஏதோ மனதை கவரும் ஒன்றை பார்த்துவிட்டால் உடன ஆ! என்ன அருமை! என்று ஒரு முறைக்கு பலமுறை சொல்லுகிறோம். அதுபோல் தேவனின் மகத்துவத்தையும் அவரது பரிசுத்தத்தையும் நாம் பார்க்கும்போது, அவரது மகிமையை தானாகவே துதிக்கும் நிலை ஏற்ப்படும்.
II பேதுரு 3:13அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
வெளி 21:1பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று.
3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்
4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின என்று விளம்பினது.
பாவத்தில் விழுந்துபோன இந்த பழைய உலகை அக்கினியில் போட்டு ஒழித்து, புதிய வானம் பூமியை படைத்து அதில் என்றென்றைக்கும் மனிதனை எந்த துன்பமும் இல்லாமல் மகிழ்து களிகூர்ந்திருக்க வைப்பதுவே தேவனின் திட்டம்.
பரலோகத்திற்கு கொண்டுபோகப்பட்டு நடக்கும் அனேக காரியகளை யோவான் தரிசித்து எழுதினாலும் இறுதியாக புதியவானம் புதியபூமி என்ற நிலையிலேயே முடிவடைகிறது! அதையே மேற்கண்ட வசனங்கள் சொல்கின்றன. ஆனால் அது இதே பூமியில் இருக்குமா அல்லது வேறு தனிப்பட்ட இடமா என்பது குறித்து பலரிடம் கருத்து வேறுபாடு இருக்க்கிறது.
மற்றபடி தேவனை துதிப்பதென்பது சதா காலங்களிலும் தானாக நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல். அவரது ஆவியை தனக்குள் கொண்ட அவரது மகத்துவத்தை கண்ட எவராலும் அவர் மகிமையை துதிக்காமல் இருக்கவே முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனவே நான் முன்னமே சொன்னதுபோல தேவன் ஏன் மனிதனை படைத்தார் என்ற கேள்விக்கு பதிலறிய நாம் வேறு எந்த உதாரணத்துக்கும் போகவேண்டிய தேவையே இல்லை. நம் எல்லோருக்கும் பிதாவாகிய நமது தேவன் நம்மை படைத்த காரணம், ஒரு தகப்பன்/தாய் ஏன் ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ அத்தோடு அனைத்து விதத்திலும் சம்பந்தம் உள்ளதுவே.
ஒரு நல்ல தகப்பன் பிள்ளைகளை எதற்கு பெறுகிறார் அவர் தனது பிள்ளைகளுக்கு என்னென்ன செய்வார் என்னென்ன செய்யமாட்டார் என்பதன் அடிப்படையிலேயே தேவனுக்கும் மனிதனுக்கு இடையில் உள்ள உறவை ஆராவதுவே சிறந்தது.
மத்தேயு 7:11ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஆம்! பொல்லாதவர்களாகிய நாமே நமது பிள்ளைகளில் ஒரு பிள்ளைகூட கெட்டு போய்விடக்கூடாது என்றும். மிகவும் மோசமான பிள்ளையாக இருந்தால் கூட அதையும் எப்படியாவது திருத்திவிட தான் முயற்ச்சிப்போம். அப்படி ஒருவேளை அது திருந்தாமல் தீய காரியங்களை செய்துகொண்டு இருந்தாலும் "எங்காவது கண்காணா தேசத்துக்கு போ, என்னிடம் வராதே" என்றுதான் விரட்டுவோமே தவிர, எந்த தாய் தகப்பனும் தான் பெற்ற பிள்ளைகளை சோதனை வைத்து சோதித்து பார்த்து அது சோதனையில் தோற்றுவிட்டால் உடனே அழிந்து போகட்டும் என்று விடுவதில்லை.
அதுபோலவே தேவனும், நித்யநித்யமாக மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான எல்லாவற்றையும் பூமியில்படைத்து அங்கு மனிதனையும் படைத்தார். தீமை என்று ஓன்று இருப்பதை அறிந்த தேவன் அதை விட்டு விலகியிருக்கும்படியும் கட்டளையிட்டார். ஆனால் மனிதனோ அந்த தீமையில் மாட்டிகொண்டான். இப்பொழுதோ அவன் எக்கேடு கேட்டும் அழிந்துபோகட்டும் என்று விட்டுவிடாமல் அவனை தீமையிலிருந்து மீட்பதற்காக திட்டமிட்டு இயேசுவை பலியாக அனுப்பி திட்டத்தை நிறைவேறிவருகிறார்.
தொடர்ந்து ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம்.....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள களக்காடு என்னும் ஊர் பக்கத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகள் இருப்பதால் அங்கு போகும் வழிகள் முழுவதும் இயற்க்கை காட்சிகள் நிறைந்து பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வித விதமான பூக்கள், வண்ணத்து பூச்சிகள் பறவைகள் என்று ஆங்காங்கே வட்டமிட மலையை நோக்கி நடந்து போவதே மிகுந்த சந்தோசத்தை தரும். அதை நான் பலமுறை தனியாக சென்று கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அது நிச்சயம் ஒரு சதொசமான நிகழ்ச்சிதான்.
ஆனால் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கு சுமார் 6,11 வயது இருக்கும்போது அந்த குழந்தைகளுடன் அந்த மலைப்பாதையில் நடந்து சென்று அவர்களுக்கு ஒவ்வொரு பூவாக இனம் காட்டி, ஒவ்வொரு பறவையாக பெயர் சொல்லி, சில வண்ணத்து பூச்சிகளை தும்பிகளை அவர்களோடு சேர்ந்து ஓடிபோய் பிடித்து அவைகளுக்கு அவர்களை புதியதாக பெயரிட சொல்லி கேடடு, சில
பழங்களை பரித்துகொடுத்து, அந்த இடங்களை சுற்றி வந்த நிகழ்ச்சியை இன்றும் என்னால் மறக்கவே முடியாது. தனியாக ரசிப்பதை விட சிறு குழந்தைகளோடு சேர்ந்து ரசிக்கும் சந்தோசத்துக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.
இதுவே தேவனின் நிலையும்! தேவனிடம் படைக்கும் ஆற்றல் உருவாக்கும் திறன் பராமரிக்கும் வல்லமை எல்லாமே இருந்தது அதை பயன்படுத்தி அருமையான உலகத்தை படைத்து, தனியாக பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பதைவிட, தன்னோடு சேர்ந்து பார்த்து எல்லாவற்றயும் அனுபவிக்க மற்றும் அவனோடு உறவாடி மகிழ்ந்திருக்கவே தனது சாயலிலேயே மனிதனை படைத்தார். அவன் மகிழ்ந்திருப்பதில், அவனுக்கு தேவையானதை செய்வதில் அவர் என்றென்றும் ஆர்வம் கொண்டார். இடையில் இந்த சாத்தான் வந்ததால் எல்லாமே சீர்குலைந்தது. என்றாலும் தேவன் எலாவற்றையும் மீண்டும் சீர்செய்து மனிதனை முந்தின சீருக்கு கொண்டுவருவார் அதுதான் அவரது திட்டத்தின் முடிவு.
யோவேல் 2:21தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
ஏசாயா 65:18நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்
அதன்பின் தேவன் என்றென்றும் நம்மோடு வாசம்செய்து நமது தேவனாயிருப்பார். இதுவே முடிவு.
வெளி 21:3இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்
-- Edited by SUNDAR on Wednesday 19th of May 2010 07:02:10 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவன் மனிதனை எவ்வளவு உயர்ந்தவனாக படைத்தார் எதற்க்காக படைத்தார் என்பதை கீழ்க்கண்ட வசனம் மிக அருமையாக விளக்குகிறது.
எபிரெயர் 2:7அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின்கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
தேவன் மனிதனை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டி, அவரின் கரத்தின் கிரியைகள் எல்லாவற்றின் மேலும் ஆளுகை செய்யும் அதிகாரந்த்தையும் கொடுத்தார்.
அந்தோ! மனிதனோ அந்த மேன்யையை எல்லாம் சாத்தானிடம் இழந்துபோனான். இழந்ததை தேட இயேசு வந்தார்:
லூக்கா 19:௧௦ இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
தேவன் மனிதனை ஆண்டவராகிய இயேசுவின் தியாகபலியின் மூலம் இரட்சித்து மீண்டும் அவனை பழைய சீருக்கு திருப்புவார்:
என்று வாக்கு பண்ணியிருக்கிறார். அவர் வாக்கை நிறைவேற்றுவார்!
உலக தோற்றத்துக்கு முன்னேயிருந்து பரிசுத்தமான தேவனுக்கும் அசுத்தமான தீமைக்கும் இடையே நடக்கும் நீண்ட போராட்டத்தில் தேவன் உருவாக்கிய இறுதி ஆயுதமே மாமிசமாக படைக்கப்பட்ட மனிதன். இத்தோடு அனைத்து தீமையும் அசுத்தமும் ஒழிக்கப்பட்டு நீதி வாசம் செய்யும் புதிய பூமி உருவாகும் அத்தோடு தேவனின் திட்டம் வெற்றிகரமாக முடிவடையும்!
II பேதுரு 3:13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மனிதனை தேவன் படைத்தது வெறும் துதி சொல்வதற்காக மட்டுமல்ல என்றே நானும் கருதுகிறேன். அவ்வாறு துதிப்பதற்கு மட்டும்தான் என்றால் வெறும் வாயை மட்டும் படைத்து எப்பொழுதும் துதித்துகொண்டிருக்க வைத்திருக்க முடியும். ஆனால் மனிதனின் உடல் அமைப்பே அவன் பல்கிபெருகுவதற்காக அமைக்கபட்ட ஒன்றாகவே தெரிகிறது
அதற்க்கேற்ப்பவே தேவனின் ஆசீர்வாதமும் இருக்கிறது
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
அதன் அடிப்படையில் மனுஷனை இந்த பூமியில் என்றென்றைக்கும் வாழவைப்பதுதான் தேவனின் நோக்கம் என்பதை மேலும் பல வசனங்களின் மூலம் அறிய முடியும்.
ஏசாயா 6:2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறுசெட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர்பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்
எனவே எனது கருத்துப்படி மனுஷனானவன் தேவனை துதிக்க வேண்டியது அவசியம் என்றாலும் வெறும் துதிசெய்வதற்காக
மட்டுமே அவன் படைக்கப்படவில்லை என்றும் அவன்மீது தேவனின் மேலான திட்டம் எதுவோ இருக்கிறது என்றும் கருதுகிறேன்.