இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நன்மை செய்வதில் சொர்ந்துபோகாதிருங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
நன்மை செய்வதில் சொர்ந்துபோகாதிருங்கள்!
Permalink  
 


இந்நாட்களில் எவ்விதத்திலாவது பிறரை ஏமாற்றி சம்பாதிப்பதென்பது எல்லா இடங்களிலும் சகஜமாகிவிட்டது!எந்தெந்தவழிகளிலெல்லாம் ஏமாற்றி இரங்கவைத்து சம்பாதிக்க முடியுமோ அதற்க்காக உடகார்ந்து யோசித்து புதுபுது வழிகளையெல்லாம் கண்டுபிடித்து ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை!
  • உடுக்க துணியில்லை என்று பழைய துணிவாங்கி அதை பணமாக்கி வாழும் கூட்டம் ஒருபுறம் .
    பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை என்று பணம்பறித்து வாழ்க்கை நடத்தும் கூட்டம் ஒருபுறம்
    மகனுக்கு மருந்து வாங்கவேண்டும் என்று மற்றாடி பணம்கேட்டு வாழும் கூட்டம் ஒருபுறம்
    பசிக்கு உணவில்லை என்று பாசாங்கு செய்து பணம்பெற்று வாழும் கூட்டம் ஒருபுறம்.
    மகளுக்கு திருமணம் என்று குங்குமத்தோடு வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் ஒருபுறம்
    படிப்புக்கு பணமில்லை என்று பாவலா கட்டி  பணம் வாங்கி தண்ணியடிக்கும் கூட்டம் ஒருபுறம்
    சாமியைபோல  வேடமிட்டு சாதாரணமாய் ஏமாற்றி வாழும் கூட்டம் ஒருபுறம்

இப்படி இரக்கமனம்கொண்ட எல்லோருமே அடிக்கடி வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் தான் எத்தனை எத்தனை. மேலும் ஒருவருக்கு உதவி என்று செய்யப் போய், அதனால் அனேக பிரச்சினைக்குள்ளாகி பாடுகள்பட்டு. இனிமேல் யாருக்கும் உதவியே செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருபர்களும் அநேகர் உண்டு! யார் வந்து உதவி கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்யும் பலர், பலமுறை ஏமாற்றப்பட்டிருப்பதை நானும் அறிந்திருக்கிறேன்

அனாலும்  எனது கருத்து  இதோ:

ஒருமுறை நானும் என் நண்பனும் சாலையில் நடந்துகொண்டு இருக்கும்போது மிகவும் எழ்மை நிலையில் வந்த ஒருவர் சாப்பிட பணம்வேண்டும் என்று கேட்டார் அவர் நிலயை பார்த்து மனமிரங்கி சற்றும் யோசிக்காமல் பணம் எடுத்து கொடுத்து விட்டேன். என் நண்பனுக்கோ கடுமையான கோபம். நீ என்ன இப்படி கொஞ்சமும் யோசிக்காமல் பணம் கொடுக்கிறாய் அவன் பின்னால் போய்பார். நேரேபோய் மது கடையில் போய் குடித்துவிட்டு ஆட்டம் போடபோகிறான் என்று என்னை கடிந்துகொண்டான்.

அவனுக்கு என்னுடைய பதில் என்னவென்றால்

அவன் மதுகுடிக்கட்டும் என்னவேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் ஆனால்
என்னிடம் வந்து கேட்டபோது பசி என்றுதான் கேட்டான் நானும் அவனுக்கு இரங்கி அவன் பசியாரவேண்டும் என்ற நோக்கில்தான் பணம் கொடுத்தேன். எனது நோக்கம் மற்றும் எண்ணம் எல்லாமே சரி ஒருவேளை அவன் நோக்கம் தவறாக இருக்கு மாயின் அதற்குரிய தண்டனையை அவன் பெறுவான். ஒரு வேளை அவன் உண்மை யான பசியோடுஇருந்து நான் ஏமாற்றுகிறான் என்றுநினைத்து அவனுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அது எனக்கு பாவமாக ஆகிவிடு மல்லவா? பத்துபேரிடம் ஏமாறலாம் அனால் ஒரே ஒரு உண்மை பசியாளியை துன்பபடவிட கூடாது என்றேன்.

ஆம்!

இந்த கடைசி காலங்களில் மனிதர்கள் எல்லோரையும் இரக்கமில்லாதவர்களாக,
அன்பில்லாதவர்களாக,கீழ்படியாதவர்களாக,கடன்காரர்களாக மாற்ற சகமனிதர் களும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே! ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிவிட்டு போகட்டும். ஓரளவுக்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு உதவுவது நல்லதுஎன்றே நான் கருதுகிறேன்.

நான் ஏமாந்துபோன இடங்கள் கொஞ்சனம்ஜமல்ல ஆனால் அதற்க்காக நான் சிறிதும் கவலைப்படவில்லை! நன்மையே செய்து அழிந்தவர் ஒருவரும் இல்லை.

நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்!  

(இது வேறுஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கும் எனது பதிவின் மீள்பதிவு)  

 

 

-- Edited by SUNDAR on Friday 7th of May 2010 07:55:10 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard