இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்கள் நகைகள் அணியலாமா - ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கிறிஸ்தவர்கள் நகைகள் அணியலாமா - ?
Permalink  
 


இன்று பல சபைகளில் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் விசுவாசிகளிடம் இருந்தும் கூட பலரால் ஞானஸ்தானம்  எடுக்க முடிய வில்லை ஏனென்றால் ஞானஸ்தானம்எடுக்க வேண்டும் என்றால் கம்பல், தாலி, மற்றும் நகைகள்  பூ  இவைகளை விட்டால்தான்   போதகர்  
ஞானஸ்தானம் கொடுப்பார் இதனால் எத்தனையோ நபர் ஞானஸ்தானம் எடுக்காமல் இருந்ததை நான் என் சபைகளில் பார்த்து இருக்கின்றேன் என் ஊழியரை நான் குறை கூற வில்லை

என்  போதகர் சபைக்கு நான் விசுவாசியாய் இருப்பது கர்த்தர் எனக்கு  தந்த ஈவு  எனக்கு மாம்சத்தில் தகப்பன் இருந்தாலும் ஆவிக்குரிய தகப்பன் எனக்கு உண்டு அவர்தான் என் போதகர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
 
நான் பெந்தகொஷ்து சபையில் விசுவாசியாய் இருக்கின்றேன்
நகைகள்  எடுத்தால் தான் ஞானஸ்தானம் என்று சொன்னதும் யாரும் ஞானஸ்தானம் எடுக்கவில்லை
சில மாதங்கள் கழித்து அப்படியே மாறிவிட்டது நகை போட்டுகொண்டு ஞானஸ்தானம் எடுக்கலாம் என்று
ஏனென்றால் யாருமே ஞானஸ்தானம் எடுக்காததினால்
 
என் சபைகளில் மட்டும், அல்ல  இன்று அனேக சபைகளில் இப்படி பட்ட ஒரு சட்டம் உருவாகியுள்ளது
 
இந்த காரணத்தினால் அனேக மக்கள் ஞானஸ்தானம் பெறாமல் இருக்கின்றனர்
 
நகை போட்டு கொண்டு ஞானஸ்தானம் எடுக்கலாமா
இல்லை நகை போடாமல் தான் ஞானஸ்தானம் எடுக்க வேண்டுமா
 
தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதிக்கவும்
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

ஸ்திரிகள் பொன்னினால் தங்களை அலங்கரிக்க கூடாது என்று  பவுல் தீமோத்யுக்கு எழுதும் கீழ்க்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளதால், பொன் நகைகளை அணிவது ஸ்திரிகளுக்கு ஏற்றதல்ல என்றே  நான் கருதுகிறேன்   
 
I தீமோத்தேயு 2:9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
 
பொதுவாக விலையேறப்பெற்ற எதுவுமே நமது உடலில் இருக்ககூடாது என்பதுதான் தேவன் விரும்புவது. ஆனால் இந்நாட்களில் ஒரு சில சபை  பிரிவுகளை  தவிர பல சபைகளில் உள்ள சகோதரிகள் நகை அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.
 
போதகர்களும் அதை திடமாக கண்டிப்பதும் இல்லை மாறாக "நகையை  அணிந்துகொள்ளுங்கள் பில்டிங் கட்டுவதற்கான பண சேகரிப்பு வரும்போது அதை எடுத்து காணிக்கை போட்டுவிடுங்கள் என்று போதிப்பதை கேட்டிருக்கிறேன்.
 
சகோதரிகள் நகை அணியாமல் இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் அதற்காக யாரும் கட்டாயப் படுத்தி அவ்வாறு செய்யவைப்பது சரியல்ல என்றே கருதுகிறேன். மேலும் அதற்காக ஒரு ஆத்துமாவுக்கு ஞானஸ்தானம் கொடுக்காமல் இருப்பது ஏற்றதல்ல என்பதும்  எனது கருத்து. எல்லா விதத்திலும் சரியான பிறகுதான்  ஞானஸ்தானம் எடுக்கவேண்டும் என்றால் ஒருவரும் மீட்பை பெறமுடியாது
 
ஆத்துமாக்களை சுத்திகரிக்கும் ஆவியானவர் வைத்த பின் அவரே அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் போதித்து பூ/போட்டு/கொலுசு/நகை போன்ற உலக பொருட்களின் மேல் வெறுப்பை ஏற்ப்படுத்தி விலக வைத்துவிடுவார்.
 


-- Edited by இறைநேசன் on Wednesday 12th of May 2010 09:27:23 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

இந்த பிரச்சினையில் வட்டார தன்மையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது; அதாவது ஒரு குறிப்பிட்ட போதனையானது வேதத்தின் அடிப்படையிலானதாக இருக்குமானால் அது உலகமுழுவதிலுமுள்ள கர்த்தருடைய சபைகளுக்குள் பொதுவாக பின்பற்றப்படுவதாக இருக்கவேண்டும்;மற்றபடி அது அவரவருடைய பக்திவிருத்திக்கேற்ப அவரவரே ஏற்படுத்திக் கொண்டதாக இருக்கும்;அது வேத சட்டத்தை பாதிக்காது;

"புது சிருஷ்டியே காரியம்"


__________________

"Praying for your Success"


இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

[பொன் நகைகளை அணிவது ஸ்திரிகளுக்கு ஏற்றதல்ல என்றே நான் கருதுகிறேன் ]

Does that mean men can wear jewels??


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

இன்று கிறிஸ்தவர்கள்
 
பெருமை , பொறாமை  , மற்றவர்களை குற்றபடுத்தும் எண்ணம்,
மேட்டிமை, பண  ஆசை மற்றும் பொருள் ஆசை,  இச்சை மற்றவர்களை அலச்சியம் செய்யும் எண்ணம்
 
இப்படி பட்டவைகளை தன் இருதயத்தில் எடுக்காமல் வெள்ளை
பொடவை தான் கட்டனும்

இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால்  மீசை  தாடி கூட வைக்க கூடாது காலர்  வைத்த சட்டைகள் போடா கூடாதுஎன்று உபதேசிக்கும் ஒரு கூட்டம் உண்டு
 
நகை கலர் புடவை மற்றும் கலர் சட்டை  இவைகளுக்கும் கிறிஸ்து ஏசுவுக்கும் என்ன சம்மந்தம்

கிறிஸ்து இதை பற்றியா போதனை செய்து கொண்டு இருந்தார்
 
நகைகள் அணிவது தவறு  இல்லை மற்றவர்கள் பொறாமை படும் படி அணிவதும்  ஆடம்பரத்தை காட்டி கொள்வதிலும் தான் தவறு இருக்கின்றதே தவிர நகை போட்டால் தவறு என்பது முற்றிலும் தவறு
 
அப்படி தவர் என்றால் உதாரணத்திற்கு கூட இயேசு கிறிஸ்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டார்
 
லூக்கா - 15
22  அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்
 
மோதிரம் என்பது கூட நகைதான் என்பது எல்லோருக்கும் தெரியும்
 
சகோதரரே நான் நகைக்கு முக்கியம் தரவில்லை

இதினால் ஒருவருக்கு மற்றவர்களால் தேவனுடைய நாமம் தூசிக்க படுமானால் நிச்சயம் அதை தவிர்ப்பது நல்லது
தவீர்த்தே ஆக வேண்டும்


-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 14th of December 2010 09:20:35 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard