இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலக தோற்றத்துக்கு முன்னரே!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
உலக தோற்றத்துக்கு முன்னரே!
Permalink  
 


பரிசுத்த வேதாகமத்தில் "உலக தோற்றத்துக்கு முன்னே"
என்ற வார்த்தை சில இடங்களில் வருவதை  பார்க்க முடிகிறது.
 
எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
 
இங்கு உலக தோற்றத்துக்கு முன்னமே தேவன் நம்மை தெரிந்துகொண்டதாக வசனம் சொல்கிறது. ஒருவரை யாராவது  ஒருவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்க்கு ஏதோ ஒரு அடிப்படை காரணம் இருக்கும். அவ்வாறு  ஆராய்ந்தால்   உலக தோற்றத்துக்கு முன்னே நடந்த  ஏதோ சில நிகழ்வுகளின் அடிப்படையில்  தேவன் உலக தோற்றத்துக்கு முன்னமே தெரிந்துகொண்டு சிலரை முன்குறித்தாரா?
 
இந்த வசனம் சொல்வதை பாருங்கள்
 
I கொரிந்தியர் 2:7 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
 
"உலகம் தோன்றுவதற்கு முன்னமே தேவன் நம்முடய மகிமைக்காக ஏற்ப்படுத்தினது" என்று வசனம் சொல்கிறது. உலகம் தோன்றிய பிறகுதானே நாம் பிறந்திருக்க முடியும்? தேவன் எப்படி அதற்க்கு முன்னமே நம்முடைய மகிமைக்காக ஏற்ப்படுத்த முடியும்? 

தேவன் அனைத்தும் அறிந்தவர் எனவே நாமெல்லாம் தோன்றும் முன்னமே அவர் முன்கூட்டியே நம்மை அறிந்து சிலரை முன்குறிதார் என்று வைத்து கொண்டால், பிறகு உலகில் நடக்கும் எல்லாமே அவர் முன்குறித்த்துதான் என்று ஆகிவிடும் பிறகு யாருடைய தனிப்பட்ட செயலினாலும் பையன் எதுவும் இல்லை அவர் முன்குறித்ததுதான் நடக்கும் என்று ஆகிவிடுமே.

என்னுடைய கருத்துப்படி, நாம் காணும்  இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னமே என்னவோ சில நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்று கருதுகிறேன். இவ்வசனங்களுக்கு சரியான  விளக்கம் தெரிந்தவர்கள் இருந்தால் பதிவிடவும்.


-- Edited by இறைநேசன் on Tuesday 11th of May 2010 10:04:02 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

 பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.
 
இவ்வாறு இந்த பூமி தோன்றி பல மில்லியன் ஆகிவிட்டது என்பது அறிவியலார் நிரூபித்துள்ள உண்மை. ஆனால் நமது வேதமோ சுமார் ஆறாயிரம் ஆண்டுகால வரலாரைதான் உள்ளடக்கியுள்ளது.  
 
6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பூமியில் டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன என்பது புவியியல் வல்லுனர்களின் கருத்து. அதை பல ஆதாரங்களோடு மற்றும் அக்காலத்தில் புதைந்து கண்டெடுக்கபட்ட எலும்புகள் மூலமும் அதை நிரூபித்துள்ளனர்.
 
டயோனசராஸ் மட்டும் வாழ்ந்த அந்த காலத்திலும் ஒன்றை ஓன்று கொன்று தின்னும் நிலை இருந்திருக்கிறது என்பதை கண்டெடுக்கப்பட்ட அதன் எலும்புகள் மற்றும் ஆராய்ச்சியின் மூலம்  உறுதி படுத்தப்பட்டுள்ளது
 
இக்கருத்தின் மூலம் "மரணம்" மற்றும் "ஒன்றை ஓன்று கொன்று தின்னும் நிலை" அதாவது தாவர உண்ணி மற்றும் மாமிச உண்ணி போன்றவைகள் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்னமேயிருந்து பூமியில் வாழ்ந்துள்ளன. 
 
ஆதாம் ஏவாளின் மூலம்தான் மரணம் என்பது பூமிக்குள் வந்தது என்ற கருத்து தவறானது என்று நான் கருதுகிறேன். ஆதாம் ஏவாளின் மூலம் நமது மனுக்குலத்துக்குள் மரணம் வந்திருக்கலாம் ஆனால் மரணம் என்பதும்  தீமை என்பதும், இந்த மனிதன் வாழும் உலகம் உருவாகும் முன்னர் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்னமே  இருந்திருக்கிறது என்பது  ஆதார  பூர்வமாக  நிரூபிக்கபட்டுள்ளது என்பதை
நம்மால் மறுக்க முடியாது. 
 


இவற்றின் அடிப்படையில் பார்த்தால் ஆதாம் ஏவாள் படைக்கபட்ட  இந்த உலகம் தோன்றும் முன்னமே ஏதோ நடந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard