இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தள சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தள சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!
Permalink  
 


கிறிஸ்த்துவுக்குள் அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
 
நான் இத்தளத்தில் எனக்கு தெரிந்த அனேக காரியங்களை முடிந்த அளவு வேத வசன ஆதாரத்தோடு  எழுதி வருகிறேன். நான் பதிவிடும்  கருத்துக்கள் எல்லாமே என்னை ஆண்டவர் அபிஷேகித்து நடத்தியபோது நான் அறிந்து கொண்ட  மற்றும் எனது தனிப்பட்ட வேத தியானத்தின் விளைவால் உருவானது.  ஒரு சில கருத்துக்களை தவிர மற்றவை  யாருடைய போதனையையும் கேடடு நான்  எழுதவில்லை! ஆண்டவரே எனது போதகர்.
 
எனது கருத்துக்கள் சில சகோதரர்களுக்கு அவர்கள் கேடடு அறிந்துகொண்ட போதனைகளின் அடிப்படையில்  தவறாகவும் முரணபாடாகவும் தெரியலாம். அதற்காக தாங்கள் இத்தளத்தில் பதிவிடுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்தவேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
 
தங்களுக்கு எதாவது கருத்து தவறாகபடுமாயின்  விளக்கம் தேவைப்படும் இடத்தில்  விளக்கம்  கேட்கலாம், கொடுக்கப்படும் விளக்கம்  திருப்தியாக இருக்காத பட்சத்தில் தங்கள் விளக்கங்களை அல்லது எதிர் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி பதிவிடலாம். அது எனது தவறை அறிந்துகொள்ள எனக்கு பயனுள்ளதாக இருக்கும் .
 
ஒருவேளை விவாதிப்பது என்பது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சகோதரர் சந்தோஷ் எழுதுவதுபோல தங்கள் கருத்துக்க்களை  தனியாக கட்டுரையாக வடித்து பதிவிடலாம். அது  ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து உண்மையை அறிந்துகொள்ள எனக்கு மற்றும் பலருக்கு பிரயோஜனப்படும். எதிர் கருத்து தேவைப்படும் தலைப்புக்களை மட்டும் விவாத பகுதியிலோ அல்லது கேள்வி  பகுதியிலோ பதிவிடலாம். 
 
இது ஒரு இலவச தளம்! இது நம்முடைய தளம்! எக்காரணத்தை கொண்டு இதை தனிப்பட்டவருக்கு சொந்தமானது என்று எண்ணி  ஒதுங்க வேண்டாம்
 
தங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளும் அதிகமதிகமாய் வரவேற்க்கபடுகின்றன!   
 
நன்றி
அன்புடன்
SUNDAR 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

"இறைநேசன் " சார்பில் வரவேண்டிய அறிக்கையினை "சுந்தர்" தருவது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்;

"
இறைநேசன் " தானே தளநிர்வாகி..?

-- Edited by chillsam on Friday 14th of May 2010 02:52:07 PM

__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

chillsam wrote:

"இறைநேசன் " சார்பில் வரவேண்டிய அறிக்கையினை "சுந்தர்" தருவது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்;

"
இறைநேசன் " தானே தளநிர்வாகி..?

-- Edited by chillsam on Friday 14th of May 2010 02:52:07 PM



சகோதரின் கருத்துக்கு நன்றி!
 
இந்த இலவச தளத்தை வடிவமைத்ததும்  நான்தான் இன்றுவரை அதிகம் பதிவுகளை தந்துகொண்டு இருப்பதும்  நான்தான், பலவிதமான வேறுபட்ட கருத்துக்களை பதிவதும் நான் தான்! எனவே  பதியும்  கருத்துக்கள் சம்பந்தப்பட்ட இந்த அறிவிப்பை நானே பதிவிடுவதுதான் முறையானது!
 
தற்சமயம்  தளத்தின் மாடரேட்டர் பதவியை இங்கு யாரும் விரும்பாததால் யாராவது கேட்டால் கொடுத்துவிடலாம் என்ற நிலையும் உள்ளது. 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard