இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேறும்போது!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேறும்போது!
Permalink  
 


சமீபத்தில் எங்கள் வீட்டில் " குடும்ப வருமானத்தை யார் வைத்து செலவு செய்வது" என்பதில் எனக்கும் எனது மனைவிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது.  தொடக்கத்தில் இருந்தே நானே எனது கையில் வைத்து செலவுசெய்து வருவதால் அதை என் மனைவியிடம்  விட்டுகொடுக்க என்னால் முடியவில்லை. அப்பொழுது ஆண்டவர் ஒரு புத்தகத்தின் மூலம் இடைபட்டு எனக்கு தெரிவித்த செய்தியை இங்கு உதாரணத்துடன் தந்துள்ளேன்.

எனக்கு சுமார் 12-13 வயது இருக்கும்போது சிறு கவண்  தயாரித்து குருவிகளை  வேட்டையாடுவது என்பது மிகவும் பிடித்த விஷயம். .  அந்நாட்களில் "காசிகரட்டி" என்று  எங்களால் பெயரிடப்பட்ட  பறவை ஓன்று உண்டு. அது அழகழகான பல்வேறு வண்ணங்களுடன் பார்பதறகு மிகவும் அருமையாக  இருக்கும். அக்குருவியை வேட்டையாடுவதர்க்காகவே மூன்று நான்குபேர்கள் சேர்ந்து குழுவாக புறப்பட்டு செல்வோம். அவ்வாறு  புறப்பட்டு போகும் நாங்கள், வழியில்  எதாவது ஒரு மரத்தில் ஒரு ஓணானை கண்டுவிட்டால் போதும்,  உடனே நாங்கள் எதற்க்காக போகிறோம் என்பதை மறந்து அந்த ஓணானை வேட்டையாடுவதில் தீவிரமாகிவிடுவோம்.  அந்த ஓணானை வேட்டையாடுவதால் எந்த பயனும் இல்லை ஆகினும் அதற்காக அனேக நேரத்தை செலவுசெய்து அந்த ஓணானை  கொன்று தூர தூக்கி போட்டு விட்டுதான் பிறகு அந்த இடத்தைவிட்டு கடந்து செல்வோம் அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.  
 
ஆவிக்குரிய வாழ்வில்  உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் நாம் தேவையற்ற சிறு சிறு காரியங்களில் தலையிட்டு அதில் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து  அந்நேரங்களில் ஆண்டவருக்காக எதையாவது  செய்ய பிரயாசப்பட வேண்டும். மற்றும் தேவனின் திட்டத்தை நிறைவேற்ற நாம் பயணிக்கும் பயணத்தில் இடையிடையே வரும் அனேக சிறு பிரச்சனைகளை தவிர்க்க அதை அடுத்தவர்களுக்கு மனதார விட்டுகொடுத்துவிடுவது நல்லது.
 
மோசேயை எடுத்துகொண்டால் கானான் தேசத்துக்கு போகும் ஒரு உன்னதமான பயணத்தில்  வழியில் இஸ்ரவேல் புத்திரர்கள் முரு முறுத்து பிரச்னைக்கு வந்தபோதெல்லாம் முகம் குப்புற விழுந்து அவர்களை சமாதனப்படுத்தினான். ஏனெனில் அவனது நோக்கம் எப்படியாவது கர்த்தர் காண்பிக்கும் தேசத்தில் இந்த ஜனங்களை கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்று உயர்ந்ததாக இருந்தது
   
ஆபிரகாமை எடுத்துகொண்டால் அவன் தேவன் காட்டிய வழியில் முன்னேறி சொல்லும்போது,  இடையே  வந்த  சிறு பிரச்சனயாகிய லோத்துடன் ஏற்ப்பட்ட இடபங்கீட்டு பிரச்சனையில் தான் முழு மனதோடும் லோத்துவுக்கு விட்டுகொடுத்து அவனுக்கு தேவையானதை எடுத்துகொள்ள விட்டுவிட்டான். அதுபோல் சாராள்
"இஸ்மவேலை புறம்பே தள்ளும்" என்று சொன்னபோது அது அவனது மனதுக்கு விசனமாக இருந்தாலும் அதற்காக வாதிட்டு நாட்களை கடத்தாமல் விட்டுகொடுத்துவிட்டன்  
 
எனவே நாமும் உயர்ந்த இலக்கை அடைய முன்னேறிக்கொண்டு  இருக்கிறோம் என்பதை கருத்தில் கொண்டு, நமது வாழ்வின் வழியில் இடைபடும்  சிறு சிறு பண விஷயங்கள் மற்றும் சிறுசிறு தேவையன்ற வழக்குகளில் மனதார மற்றவர்களுக்கு விட்டுகொடுத்துவிட்டு, நமது இலட்சியம்  மற்றும் நோக்கம் எல்லாம் தேவனின் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே ஆனந்தம் காண்பதாக இருக்கவேண்டும்.
 
 


-- Edited by SUNDAR on Tuesday 18th of May 2010 10:47:46 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒரு மிகப்பெரிய காட்டாற்றையும் அதற்க்கு அப்பால் உள்ள வநாந்திரத்தையும்
கடந்தால் சொர்க்கபூமி இருக்கிறது எனபதை  தேவதூதன் மூலம் ஒரு கூட்ட மக்கள்  அறிந்துகொண்டனர்.

அப்படி அறிந்துகோண்டவரில் சிலர், "அது ஆபத்தான பயணம் நிச்சயம் நம்மால் அந்த இடத்தை அடையவே முடியாது" என்று ஒருவரோடு ஒருவர் பேசி அந்த முயற்சியிலிருந்து விலகிகொண்டனர். இன்னும் சிலர்  தங்களுக்குள்ளே "அங்கு போகலாமா வேண்டாமா" என்பது குறித்து பல நாட்கள்  விவாதித்துக்கொண்டே காலம் தள்ளிக்கொண்டு இருந்தனர். ஒரே ஒரு சிறு கூட்ட மக்கள் மட்டும் எப்படியாவது அங்கு போக முடிவெடுத்து புறப்பட்டனர்.

காட்டாற்றில் சிறிது தூரம் பயணம் செய்ததும் நீரின் வேகம் மற்றும் ஆழம் இவற்றை கண்டு பயத்த பலர், "நாம் எப்படித்தான் போய் சேரபோகிறோமோ அல்லது இடையிலேயே மூள்கி  உயிரை விடப்போகிரோமோ!  இன்னும் பெரிய வனாந்திரம் வேறு  இருக்கிறது, அங்கு என்னென்ன ஆபத்தோ!" என்று புலம்பிக் கொண்டே வந்தனர்.

ஆனால் அவர்களில் ஒரேஒருவர் மட்டும் எப்படியாவது அந்த இலக்கை அடைந்தே  ஆகவேண்டும் என்ற முழு முயற்ச்சியில் செயல்பட்டார் அவர் வேறு எதையும் பற்றி பேசாமல் தான் அடையப்போகும் இலக்கின் பெருமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு வந்தார்.  திடீர் என்று ஒரு பெரிய நீர் சுழலில் அவர்கள் வந்த படகு சிக்கிக்கொள்ள பயந்து பயந்து புலம்பியவர்கள் ஒவ்வொருவராய் பின்வாங்க ஆரம்பித்ததோடு, திடமனது உள்ளவர்களிடமும், "இனி நாம் தொடர்ந்து போவது நல்லதல்ல இந்த பயணம் மிகுந்த ஆபத்து நிறைந்தது உடனே திரும்பி நாம் போய்விடுவோம்" என்று சொல்லி சொல்லி எல்லோரையும் குழப்பிகொண்டே அந்த ஆற்று சுழலில்லிருந்து போராடி தப்பித்து ஒரு வழியாக அக்கறையை வந்து அடைந்தனர்.

எதிர்பட்ட கொடூர வனாந்திரத்தை பார்த்து ஒவ்வொருவரும் பயந்து தத்தளிக்க ஆரம்பித்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து உன்னாலேதான் நான் இங்குவந்தேன் என்று மாற்றி மாற்றி திட்டிக்கொண்டு வந்துகொண்டிருக்க அந்த ஒரே நபர் மட்டும் எதயும்பற்றி கவலைப்படாமல் தொடந்து முன்னேறிக்கொண்டே இருந்தார்.

ஒரு கட்டடத்தில்  ஆக்ரோஷத்துடன்  எதிர்பட்ட சிங்கத்துக்கு பயந்து எல்லோரும் சிதறி திரும்பி வந்த வழியே ஓட, அந்த ஒரே நபர்மட்டும் இலக்கை நோக்கி ஓடினார்! ஓடினார்! இறுதியில் அந்த இலக்கை அவர் ஒருவர் மட்டும் அடைந்தார்.

அவர் ஒருவர் மட்டும் எப்படி இவ்வளவு துணிச்சலுடன் போய் அந்த இலக்கை
அடைந்தார் என்று ஆச்சார்யமாய் இருக்கிறதா?

உண்மை வேறு ஒன்றும்இல்லை,
 "காரணம் அவர் ஒரு செவிடர்".

ஆம் அன்பர்களே!

முதலில் உங்கள் இலக்கு என்னவென்பதை சரியாக கண்டுபிடியுங்கள். அது சரியான இலக்குதானா எனபதை  பலமுறை  உறுதிசெய்து கொள்ளுங்கள். நம்மை மனம்மடிய செய்வதர்க்கென்றே அநேகம்பெர்கள் நம்மை சுற்றி எப்பொழுதும் இருக்கத்தான் செய்வார்கள். ஏன் சொந்த மனைவி மக்கள்கூட நாம் போகும் இலக்கை அடையவிடாமல் நம்மை பின்னிழுக்கலாம். அண்டை அயலார் எவர் சொல்வதையும் காதில் வாங்காமல் அந்த இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்.     

வெற்றி நிச்சயம்!


(எனது பதிவின் மீள்பதிவு)



-- Edited by SUNDAR on Wednesday 19th of May 2010 12:40:39 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard