இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழைய ஏற்பாடா, புதிய ஏற்பாடா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பழைய ஏற்பாடா, புதிய ஏற்பாடா?
Permalink  
 


இன்று கிறிஸ்த்தவ சகோதரர்களிடையே மிகப்பெரிய
பிரிவினைகளை உண்டாகும் கருத்துக்களில் இதுவும் ஓன்று.  ஆண்டவரின் வார்த்தைகளை அடிப்படையாக கொண்டே சகோதரர்களுக்கு இடையே பிரிவினைகள் உண்டாவது மிகுந்த  வியப்புதான்.
 
பல பெரிய தேவ ஊழியர்கள்கூட தேவனின் கட்டளைகளை நியாயங்களை  கைகொண்டு நடக்க வேண்டும் என்று போதிக்கின்றனர். ஆனால் சிலரோ அதை கடுமையாக எதிர்க்கின்றனர்.  
 
பழையஏற்பாட்டின் நிறைவேறுதல்தான்  புதிய ஏற்பாடு என்பது  பொதுவாக சொல்லப்படும் கருத்து  
 
மத்தேயு 4:16 ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 26:56 ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார்
 
இயேசுவும் தனது வாயாலேயே நியாயபிரமாணத்தை
நிறைவேற்றுவதர்க்காகதான் நான் வந்தேன் என்று சொல்வதை பார்க்கமுடிகிறது . 
 
மத்தேயு 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்
 
தேவன் முற்பிதாக்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை
நிறைவேற்றவே இயேசுவை அனுப்பினர்
என்று பவுலும் குறிப்பிடுகிறார்.  
 
அப்போஸ்தலர் 13:33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்
 
பழையஏற்பாடு நிறைவேற்றப்பட்டுவிட்ட இந்நிலையில்  புதிய ஏற்பாட்டை மட்டும் கைகொண்டு நடந்தால் போதுமா? பழைய ஏற்பாட்டை  அதில் உள்ள கட்டளைகளை கைகொள்ள தேவையில்லையா? என்பதுபற்றி  தள சகோதரர்கள் கருத்துக்கள் தர விரும்பினால் தரலாம்.
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

வேதாகம பழைய ஏற்பாடு:
 
மனிதன் இந்த உலகத்தில் வாழும் காலம்வரை அவனது மாமிசம் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களையும் நிர்ணயிப்பது  பழய ஏற்பாடு என்று சொன்னால் மிகையாகாது .

ஒருவர் பூமியில் மாம்சமாக  
பிறந்துவிட்டாலே அவர் வாழும் காலங்கள் வரை அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  அவரை ஆழுகை செய்வது பழைய ஏற்பாட்டு பிரமாணங்களே .  
 
பழைய ஏற்பாட்டில் பொதுவாக  பரலோகம் வாக்குபண்ணப்படவில்லை! ஆனால்
பூமிக்குரிய அனைத்து ஆசீர்வாதங்களும் வாக்கு பண்ணப்பட்டதோடு, இந்த பூமியில் ஒரு துன்பமும் இல்லாமல் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழிகளையும் வாக்குதத்தங்களையும் தனகத்தே கொண்டது பழைய ஏற்பாடு!
   
ஆதாம் ஏவாளுக்கு ஒரே ஒரு கட்டளை மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது, அவர்கள் அதை மீறி நன்மை தீமையை அறிந்துகொண்டபோதோ, தீமையை தவிர்த்து நன்மையை மாத்திரம் செய்யவேண்டிய நிர்பந்தம்  அவர்கள்மேல் தானாகவே
வந்தது.
அந்த தீமைகள் என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்ற விபரம் கர்த்தர் ஒருவருக்கே தெரியும்! அதை அவர் தன்னோடு நெருங்கி உறவாடிய ஓரிரு தேவ மனிதர்களிடம் ஆதியில் பகிர்ந்துகொண்ட போதிலும் பலர் தங்கள் அனுபவிக்கும் வேதனைக்கு சரியான காரணம் தெரியாமல் புலம்பியிருக்கிறாகள்.  
 
இந்த மாமிசம் சம்பந்தப்பட்ட  கட்டளைகள் மற்றும் பிரமாணங்களை உலகுக்கு வெளிப்படுத்த  தேவன் தேர்ந்தெடுத்த நபரே மோசே! அவர் மூலமே  மாமிசம் சம்பந்தமான அனைத்து  பிரமாணங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது!
     
அத்தோடு  திரும்ப திருப்ப கர்த்தர் சொன்ன காரியம் உங்களுக்கு நன்மை உண்ட்டாகும்படி அவைகளை கைகொள்ளுங்கள் என்பதுதான் :
 
லேவியராகமம் 25:18 என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்
 
உபாகமம் 29:9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
 
பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்;
 
என்று அனேக இடங்களில் வலியுறுத்தி இந்த நன்மை/தீமைகளை சரியாக  அறிந்து தீமையை விலக்கி நன்மையை கைகொள்ளுகிறவன்  பூமியில் துன்பமிற்றி ஆசீர்வாதமாக இருப்பான்  என்று அச்சீர்வதித்த கையோடு
 
உபாகமம் 27:26 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் .
 
என்ற சாபத்தையும் சுமத்தினார். அதன் பின்னால்  ஈளை காய்ச்சல் பகை துன்பம்  எல்லாமே அடங்கிவிட்டது என்ற உண்மையையும் சேர்த்தே எழுதி கொடுத்துவிட்டார் .   
 
மனிதனாக வந்த நமது ஆண்டவராகிய இயேசு   இந்த நியாயபிரமாண பாவத்தை நமக்காக சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்று வேதம் சொல்கிறது.
 
கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
 
அனால் இதுவரை எந்த துன்பம் துயரமாவது நீங்கியிருக்கிறதா?
 
இல்லவே இல்லை! இந்த மாமிச உலகை பொறுத்தவரை  எல்லோருக்கும் ஒரேபோல்தான் நடக்கிறது. கிறிஸ்த்தவர்களுக்கும் கேன்சர் வருகிறது அவர்களுக்கும் துன்பம் மற்றும்  மரணம் வருகிறது. வந்துகொண்டேதான் இருக்கிறது எந்த மாற்றமும் இதுவரை இல்லை! நான் கிறிஸ்த்துவை அறியாத போதும் எனக்கு காய்ச்சல் தலை  வலி வந்தது அறிந்தபிறகும் வந்தது!    
 
பவுலின் கூற்றுப்படி இயேசுதான் நியாயபிரமாணத்தின் முடிவாக இருக்கிறாரே!

பிறகு ஏன்  நியாய பிரமாணத்தில் சொல்லபட்ட
சாபமாகிய  ஈளையும் காய்ச்சலும்  பகையும்/ கொலையும் துன்பமும் துயரமும் வேதனையும்   இன்னும் யாருக்கும் தீர்ந்தபாடில்லை?
 
இதற்க்கான  பதிலை புதிய ஏற்பாடு சொல்கிறது தொடர்ந்து பார்க்கலாம்.....


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard