ஆதியாகமம் 3:14அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
இங்கு சர்ப்பத்தின் தலை நசுக்கப்படும் என்று வசனம் கூறுகிறது.
இந்த சாபத்தின்படி சர்ப்பத்தின் தலை நசுக்கப்ப்ட்டுவிட்டதா? இல்லையா?
ஆண்டவராகிய இயேசு சர்ப்பத்தின் தலையை நசுக்கினார் என்று பரவலாக நம்பபட்டாலும் வேதபுத்தகத்தின் "சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டது" போன்ற வசனம் எங்கும் இல்லை.
மேலும் ஆண்டவராகிய இயேசு மரித்து உயிர்த்தபின்னும் இன்னும் சாத்தான் தனது வேலையை ஜோராக செய்துகொண்டுதான் இருக்கிறான். இன்னும் அதிகமதிகமாக தீய காரியங்கள் அரங்கேறுகிறதேயன்றி குறைந்தபாடில்லை.
ஒருவேளை சாத்தனுக்கு தலை நசுக்கப்பட்டு இருந்தால் அவனுக்கு யோசிப்பதற்கு மூளை இருக்காது. ஆனால்
என்ற வசனம், இன்னும் அவன் தந்திரக்காரனாக இருக்கிறான் என்பதை நமக்கு தெரிவிக்கிறது.
ஒருவேளை சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டிருந்தால் அதனால் இலக்கை நோக்கி நகர்ந்து செல்ல முடியாது. ஆனால் அவன் எப்படி யுதாசினுள் சென்று கிரியை செய்தானோ அதேபோல் இயேசு மரித்து உயிர்த்த பிறகும் சிலரது உள்ளங்களினுள் சென்று நிரப்பியிருக்கிறான்
அப்போஸ்தலர் 5:3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
மேலும் காலம் நிறைவேறியபோது தேவன் தன் குமாரனை அனுப்பி நமது பாவங்களை சிலுவையில் சுமந்து நமக்கும் தேவனுக்கு இடையே இருந்த பகைமையை கொன்று கையெழுத்தை குலைத்து தேவனோடு நம்மை ஒப்புரவாக்கினார் என்றுதான் வசனம் சொல்கிறதே தவிர சர்பத்தை பற்றி ஒன்றும் கூறவில்லை
கலாத்தியர் 4:5காலம்நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.... 7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
இதனால் நாம் தேவனுடைய புத்திரராகும் பாக்கியம் உண்டானது.
கொலோசெயர் 1:20அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
மேலும்:
கொலோசெயர் 2:14நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; கொலோசெயர் 2:15துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
சாத்தானின் அதிகாரத்தை எல்லாம் இயேசு பரித்துகொண்டதொடு அவ்வதிகாரங்களை பயன்படுத்தும் வல்லமையை மனிதனுக்கு கொடுத்தார். இதுவே அவர் சிலுவையில் செய்து முடித்த முக்கிய காரியங்கள் என்பது எனது கருத்து.
ஏனெனில் உலகில் நடக்கும் எல்லா தீய காரியங்களுக்கும் சாத்தனே காரணமாயிருக்கிறது. அவன் ஆதிமுதல் மனித கோலைபாதகனும் பொய்யும் பொய்க்கு பிதாவுமாக இருக்கிறான். அவன் தலையை நசுக்கிவிட்டால் பிறகு உலகில் தீமைகள் எப்படி இருக்கமுடியும்
எனவே எனது கருத்துப்படி ஆண்டவராகிய இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் அவன் அதிகாரங்களை பறித்துக்கொண்டு சாத்தானின் தலை நசுக்கப்படுவதற்கு வழியை ஏற்ப்படுத்திகொடுத்து சத்துரு அழிக்கப்படுவதற்கு காத்துகொண்டு இருக்கிறார் என்று கருதுகிறேன்.
எபிரெயர் 10:13தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
(வேறு எங்கும் இயேசு சாத்தானின் தலையை நசுக்கினார் என்றோ அல்லது அதற்க்கு சமமான வார்த்தைகள் இருக்குமாயின் எனக்கு சற்று தெரியப்படுத்தவும் பதிவை நீக்கிவிடுகிறேன்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் மீண்டும் சர்ப்பம்பற்றிய செய்தி வருவதால் அதன் தலை இன்னும் நசுக்கப்படவில்லை எனபது அறிய வருகிறது.
வெளி 12:4 அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது
வெளி 12:7வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்
எனவே சர்ப்பத்தின் தலை நசுக்கப்படும் செயல் இன்றுவரை நடை பெறவில்லை
மேலும் ஆண்டவராகிய இயேசு மரித்தபின்னும் கூட இன்னும் இந்த உலகில் வேதனை துன்பங்கள் தீமைகள் மற்றும் பிசாசின் போராட்டங்கள் எதுவும் குறையாத காரணத்தால் சர்ப்பத்தின் கிரியைகள் இன்னும் பூமியில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
எனவே சர்ப்பத்தின் தலை நசுக்கப்படும் செயல் இனிதான் நிறவேறும் என்பது உறுதியாகிறது.
இந்நிலையில் சர்ப்பத்தை நச்சுக்கிபோடும் சம்பவம்பற்றி குறிப்பிடும் கீழ்க்கண்ட வசனத்தை நாம் சற்று ஆராய்தல் அவசியம்
ரோம் 16:20, "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
என்ற வசனத்தை நன்றாக ஆராய்ந்தால் நாம் கீழ்க்கண்ட\ உண்மைகளை அறிய முடிகிறது.
1. தேவன்தான் சாத்தானை நசுக்கிபோடுவார்
2. "உங்களுடைய காலின் கீழ்" (இது விசுவாசிகளின் கூட்டம் அதாவது சபையை குறிக்கிறது.)
தேவன் சீக்கிரமாக சபையின் காலின் கீழ் சாத்தானை நசுக்கி போடுவார் என்று இவ்வசனத்துக்கு பொருள் கொள்ளமுடியும்.
இதற்கும் ஆதியில் சொல்லப்பட்ட "அவர் உன் தலையை நசுக்குவார்" என்ற வசனத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பார்த்தால் நிச்சயம் இல்லை! எப்படியெனில் "நீ நசுக்குவாய்" என்று சொல்வதற்கும் "நான் நசுக்கி போடுவேன்" என்று சொல்வதற்கு இடையே அனேக வேறுபாடுகள் உண்டு?
"நீ அந்த பாம்பை கொல்லுவாய்" என்று சொல்வதற்கும் "அவர் அந்த பாம்பை நசுக்கி உன் காலின் கீழ்போடுவார்" என்று சொல்வதற்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு. (தேவன் நசுக்கி போட்ட பிறகு சபையார் செத்த பாம்பின் தலையை நசுக்குவார்களோ?) அவ்வாறு பொருள் இருக்க முடியாது. எனவே அதற்காக இந்த வசனம் குறிப்பிடப்படவில்லை.
ஆதியில், ஸ்திரியின் வித்தின் மூலம் சர்ப்பத்தின் தலை நசுக்கப்படும் என்று தேவன் சொல்லியிருப்பதால், சீக்கிரம் அதை யார் மூலமாவது தேவன் நிறைவேறி, சர்ப்பத்தின் தலையை நசுக்கி, சபையாரின் காலின் கீழ்போடுவார் என்ற பொருளில்தான் பவுல் கூறியிருக்க முடியும்.
-- Edited by SUNDAR on Friday 18th of June 2010 11:16:29 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)