சவுல் பெலிஸ்தியரோடே யுத்தம் பண்ண நேர்ந்தபோது தனக்கு இக்கட்டு வந்த நேரத்தில் கர்த்தரிடம் விசாரிப்பதற்கு பல முறை முயன்றான். ஆனால் கர்த்தர் ஏற்கெனவே அவனைவிட்டு விலகிவிட்டதால் அவனுக்கு எவ்விதத்திலும் உத்தரவு கொடுக்கவில்லை.
I சாமுவேல் 28:6சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
எனவே "அஞ்சனம் பார்க்கிரவர்களிடத்திலும் குறி கேட்பவர்களிடத்திலும் போக வேண்டாம்" என்ற கர்த்தரின் எச்சரிப்பை அறிந்திருந்தும் யுத்தத்தின் முடிவு நிலையை அறிந்துகொள்ள ஒரு அஞ்சனம் பார்த்தது செத்தவர்களை எழும்பி வரவைக்கும் ஒரு ஸ்திரியிடம் போனான்
I சாமுவேல் 28:7
7. அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்;
8. .... அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். 11. அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.
இந்த அஞ்சனம் பார்க்கப்படும்போது சாமுவேல் மரித்தாகிவிட்டது. ஆனால் அந்த ஸ்திரி சாமுவேலை எழும்பி வரப்பண்ணினாள் என்று வேதம் சொல்கிறது. எழும்பி வந்த சாமுவேல் இவ்வாறு பேசுகிறார்
15. சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான்.
அத்தோடு எழுந்துவந்த சாமுவேல் சொன்ன தீர்க்கதரிசனமும் அப்படியே நிறைவேறியது
19. கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
இவ்வளவு தெளிவாக வேதத்தில் "சாமுவேல் சவுலை பார்த்து நீ என்னை எழும்பி வரப்பண்ணி கலைத்தது என்ன" என்று கேட்டார் என்றும் பதிவாகி இருப்பதால். அது நிச்சயம் சாமுவேலாகத்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் வேதம் ஒருநாளும் பொய் சொல்லாது. அப்படி ஒருவேளை அது வேறு ஒருவராகவோ அல்லது சாத்தான் சாமுவேல் போல வேஷமிட்டு வந்திருந்தாலோ வேதத்தில் அவ்விடத்தில் "சாமுவேல் போலிருந்தவர்" என்றோ "சாமுவேல் போல் எழுந்துவன்தவர்" என்றோ பதிவாகியிருக்கும். ஆனால் இங்கு"சாமுவேல் சவுலை நோக்கி" என்று சொல்வதால் அது நிச்சயம் சாமுவேலாகத்தன் இருந்திருக்க முடியும்.
இந்த சம்பவத்தில் இருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால்.
மனிதன் மரித்தபின் ஒன்றுமில்லாமல் போவதில்லை என்றும் பழையஏற்பாட்டு கால பரிசுத்தவான்கள் எல்லோரும் மரித்தபின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு ரூபத்தின் தூக்க நிலையில் தங்கி இருந்திருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. மேலும் இவர்களை எழுப்பவும் முடியும் நிலை இருந்திருக்கிறது என்பதையும் இதன் மூலம் அறியமுடிகிறது.
-- Edited by SUNDAR on Wednesday 19th of May 2010 05:01:19 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேறு ஒரு தளத்தில் எனது பதிவிற்கு கொடுக்கப்பட்ட பதிலும் அதற்க்கு எனது விளக்கமும்:
soulsolution WROTE ///இந்த சம்பவம் உண்மையில் ஆராய்ச்சிக்குரியதுதான். இதில் சொல்லப்பட்ட சம்பவங்கள் வேத்தத்தின் மற்ற வசனங்களுக்கு இசைவாக இல்லாததினால் நிச்சயம் இதை ஆராயவேண்டும்.///
இதற்க்கு இணை வசனங்கள் இல்லை என்ற கருத்து எற்க்க முடியாதது. ஏனெனில் பழைய ஏற்பாட்டு காலத்தில் மரித்த அநேகர் நித்திரை நிலையில் இருப்பதாக வசனம் சொல்கிறது.
II நாளாகமம் 16:13 ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான். தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில்
பாதாளத்தின் இறங்கிய ஒருவனால் (அவன் முயற்ச்சியால்) ஏறி வரமுடியாது என்று வேதம் சொன்னாலும்
யோபு 7:9 மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
கர்த்தரால் ஒருவரை பாதளத்திலிருந்து ஏறி வரப்பண்ண வைக்க முடியும் என்று வேதம் சொல்கிறது.
I சாமுவேல் 2:6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
என்று மிகத்தெளிவாக இருக்கிறது. ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் பிசாசுகளின் மீடியம்களாக செயல்படுவதால்தான் அதைக் குறித்து எச்சரித்துள்ளார் தேவன். தேவனே தெரியப்படுத்தாத ஒரு செயலை ஒரு குறிகாரியால் எப்படி செய்ய முடியும்?////
தேவன் ஒரு செயலை செய்யக்கூடாது என்று சொன்னால் அப்படி ஒரு செயல் இருக்கிறது, அது தவறு, அதை செய்யகூடாது, என்றுதான் பொருள்படுமே தவிர அப்படி நடக்க சாத்தியம் இல்லை என்று பொருள்கொள்வது ஏற்றதல்ல.
உதாரணமாக "ஸ்திரிகளின் உடைகளை புருஷர்கள் அணியகூடாது அப்படி அணிபவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்" என்று வேதம் சொன்னால் அதற்க்கு பொருள் என்ன? ஸ்திரிகளின் உடையை விரும்பினால் புருஷர்கள் அணிய முடியும் ஆனால் அப்படி அணியக்கூடாது, அது தவறு, என்பதுதான் அதன் பொருள்.
அதுபோல் குறிகேட்பதும் அஞ்சனம் பார்ப்பதும் கர்த்தரின் பார்வயில் தவறுதான் ஆனால் அது செய்யமுடியாதது அல்ல. அதில் ஏதோ சூட்சுமம் அடங்கியிருப்பதால் அதை செய்யவேண்டாம் என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார் அவ்வளவுதான்.
///சவுல் நேரடியாக 'சாமுவேலை' ஏன் பார்க்கவில்லை. முதிர்வயதும், சால்வையும் தெரிவதாக குறிகாரி சொன்னதை வைத்துதான் 'அது' சாமுவேல் என்று ஊகிகிகிறான். தரைமட்டும் முகங்குனிந்து அவன் வணங்கியது குறிகாரியைத்தான். அவளே சாமுவேல் போல பேசியிருக்கிறாள்.////
அது சரி சகோதரரே ஆனால் வேதம் சொல்வது என்ன "சாமுவேல் சவுலை நோக்கி" என்று சொல்கிறதல்லவா? ஒருவேளை சவுலுக்கு அது சாமுவேல அல்லது யாரென்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் வேதபுத்தகத்தை எழுதி கொடுத்த ஆவியானவருக்கு அது யாரென்று நிச்ச்யம் தெரிந்திருக்கும் அவ்வாறு இருக்கையில் அது ஒருவேளை வேறு ஆவியாக இருந்தால் அந்த ஆவியை வேத புத்தகத்தில் "சாமுவேல்" என்று பதிய அனுமதிப்பாரா?
வேதபுத்தகமே அந்த ஆவியை சாமுவேல் என்று சொல்லும்போது அது வேறு ஒரு ஆவி என்று சொல்வதற்கு நாம் யார்?
soulsolution /// இது போல செயல்பட்டு ஜனங்கள் வஞ்சிக்கப்படுவார்கள் என்பதால்தான் தேவன் இவைகளைத் தடை செய்திருந்தார்.////
தேவன் ஏன் அக்காரியத்தை தடை செய்தார் என்பது தேவனுக்கு மட்டும்தான் தெரியும் நாமாக இதற்குதான் என்று உறுதியாக சொல்லமுடியாது. நாம் அவ்வளவு பெரிய அறிவாளியல்ல.
பழயஏற்பாட்டு காலத்தில் இயேசு மனிதனின் பாவங்களுக்காக மரித்திருக்க வில்லை. எனவே மரித்த எல்லோரும் பிசாசின் கண்ட்ரோலிலேயே நித்திரை நிலையில் இருந்தனர் எனவே பிசாசின் துணையுடன் கர்த்தரின் அனுமதியுடன் அவர்களை கலைத்து எழ வைக்கும் சூழ்நிலை இருந்திருக்கிறது. இங்கு பிசாசு இன்வால்வ் ஆவதால் தேவன் அதை தடைசெய்தார். மற்றபடி அது முடியாத காரியம் அல்ல.
soulsolution wrote ////மேலும் மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; நீ போகிற பாதாளத்தில் வித்தை, செய்கை, அறிவு, ஞானம் ஒன்றுமில்லை பிரசங்கி 9: 5,10.இவைகள் (மிருகங்கள்) சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள் பிர 3:11 என்ற வேதவார்த்தைகளும் பொய் கிடையாது. ///
நான் இவ்வார்த்தைகளை பொய் என்று சொல்லவில்லை சகோதரரே. மரித்தவர்கள் சிலர் ஒன்றும் அறியாத ஒரு நிலையிலும் போகிறார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் சிலர் பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள், பாதாளத்தினுள் இருந்து பேசுவார்கள் என்று வேதம் சொல்லும் இவ்வசனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எசேக்கியேல் 32:21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.
எசேக்கியேல் 32:30 அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவசனம் இன்னொரு வசனத்தை பொய்யாக்காது. நீங்கள் சொல்லும் வசனத்தை நான் ஏற்கிறேன் அனால் நான் சொல்லும் வசனத்தை நீங்கள் கண்டகொள்ளாமல் மரணத்துக்கு புது விளக்கம் கொடுக்கிறீர்கள்.
soulsolution wrote: ///////கர்த்தருக்கு அருவருப்பான ஒருத்தியால் ஒரு 'பரிசுத்தவான்' உயிரோடு எழும்புவது நகைப்புக்குரியது. அதுவும் தேவன் தடைசெய்த ஒரு காரியத்தை செய்து. "அதற்காக அவர் அவனைக் (சவுலை) கொன்று..." 1நாளா10:14 சவுகுக்குக் கிடைத்த தண்டனையைப் பாருங்கள்./////
இதற்க்கு பதில் முன்னமே தந்துவிட்டேன். இயேசு மரிக்கும்வரை அவர்கள் நித்திரையில் இருந்த இடம் அப்படிபட்டது. எனவே இந்த காரியம் நடந்ததா இல்லையா என்பதுதான் இங்கு விவாதம். செய்யக்கூடாத ஒன்றை செய்ததால் சவுலுக்கு தண்டனை கிடைத்தது அது அடுத்த கருத்து.
////மேலும் தீர்க்கதரிசிகளால் உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் சரீரத்தில் உயிரடைந்து சிலகாலம் வாழ்ந்து மரித்தார்கள் இது போல சால்வை போர்த்த ஆவியாக யாரும் வரவில்லை. அதன்பின் சாமுவேல் மறுபடியும் தூங்கப் போய்விட்டாரா, என்னவானார் என்பது இல்லை. ஆக குறிகாரிதான் இவையெல்லாவற்றையும் செய்திருக்க வேண்டும்.///
இதே கருத்தைதான் பல கிறிஸ்த்தவர்கள் ஆராய்ந்து சொல்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் போதனையாக இருக்கும் வேதம் இக்கருத்தை அவரவர் அனுமானத்துக்கு விட்டுவிட்டதா? அல்லது "சாமுவேல் சவுலை நோக்கி பேசினான்" என்று பொய்சொல்கிறதா?
soulsolution wrote: ///மரணம் பற்றிய தெளிவின்மைதான் இத்தகைய கேள்விகளுக்குக் காரணம். அதில் தெளிவடையலாமே? சாமுவேல் தூக்க நிலையில் இருப்பது உண்மைதான் மரணத்தை வேதம் பல இடங்களில் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் உயித்தெழுதலின் போது சரீரத்தில் உயிரடைந்துவருவார்கள், ஒரு போதும் அதற்கு முன்பாக இல்லை. The dead are dead.///
மரணத்தை பற்றிய முழுதெளிவு இன்றுவரை யாருக்குமே கிடையாது. ஒருவர் மரித்து பிழைத்து வந்து சொன்னால்தான் உண்டு. அதையும் யாரும் நம்ப போவது இல்லை. ஏனெனில் அனைத்தும் அறிந்த ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக மரித்த ஐஸ்வர்யாவான் பாதாளத்தில் வேதனை அனுபவித்தான் என்று சொல்லி யிருந்தும், அதையே நீங்கள் முற்றிலும் நிராகரித்து அது உண்மையல்ல என்று வாதிடும்போது இயேசுவை விட உங்களுக்கு மரணத்தை பற்றி அதிகம் தெரியுமா?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
பாதாளம் என்ற வார்த்தைபற்றிய உண்மைகளை முழுமையாக அறிந்தால்தான் மட்டுமே மரணம் பற்றிய மறைபொருளை அறியமுடியும்!
-- Edited by SUNDAR on Thursday 20th of May 2010 10:09:27 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
(Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இதே விஷயத்தைப்பற்றி தன்னுடைய மரணம் ஒரு முடிவல்ல என்ற புத்தகத்தில் எழுதியுள்ள விவரத்தையும் வாசித்து தியானியுங்கள்).
சவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல்போனதால் அவர் அவரைவிட்டு நீங்கினார். அவரோடு பேசுவதை நிறுத்திவிட்டார். பெலிஸ்தரோடு அவருக்குள்ள போரின் முடிவு என்னவாயிருக்குமென்று அறிய அதிக ஆவலாயிருந்தார் சவுல். மாறுவேடம் அணிந்துக்கொண்டு பிசாசுகளோடு உரையாடும் ஒரு பெண்ணிடம் சென்று மரித்த சாமுவேலைக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டார். சாமுவேல் அவருக்கு தரிசனமாகி போரில் அவர் பெலிஸ்தரால் கொல்லப்படுவாரென்று கூறினார்.
இதில் ஒரு பிரச்சனையுண்டு "மரித்தவர்களிடத்தில் குறிகேட்கிறவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்" என்று தேவன் தம்வசனத்தில் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார். (உபாகமம் 18:11,12). அப்படியானால் இப்பொழுது எப்படி மரித்துப்போன சாமுவேலின் ஆவியின் வழியாய்ச் சவுலோடு பேசுவார்? தரிசனமானது சாமுவேலல்ல, சாமுவேலின் ஆவியைப்போன்று தோற்றமளித்த ஒரு அசுத்தஆவியென்று சில வேதவிளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். மரித்துப்போனவர்களைப்போல தோற்றமளித்து உயிரோடி இருக்கிறவர்களை அசுத்தஆவிகள் வஞ்சிக்கிறதுண்டு என்பது உண்மை. ஆனால் 1சாமுவேல் 28:7-19ல் உள்ள முழு திருமறைப்பகுதியையும் கவனமாய் படிக்கும்பொழுது இந்த விளக்கம் இந்த ஒரு இடத்துக்கு மட்டும் பொருத்தமானதல்லவென்று கண்டுக்கொள்வோம். 17-19 வசனங்களில் சாமுவேல் சவுலின் பாவத்தையும், கடவுளின் நியாயத்தீர்ப்பையும் தெளிவாய் எடுத்துக்காட்டுகிறார்.
இன்றைக்கு தீர்க்கதரிசனம் என்கிற பெயரில் பாவத்தைப்பற்றியும், மனந்திரும்புதலைப்பற்றியும், நியாயத்தீர்ப்பைப்பற்றியும் கூறாமல், சுகத்தையும், செல்வத்தைப்பற்றியும் மட்டும் கூறும் எதிர்கால முன்னறிவிப்புகள் மலிந்து காணப்படுகின்றன. இவை பிசாசினால் உண்டாகக்கூடும். அது வெறும் குறி சொல்லுதலாகும். ஆனால் இங்குச் சாமுவேலின் சொற்களில் கடவுளின் நீதியும், நியாயத்தீர்ப்பும் தெளிவாய் உறுதிப்படுத்தப்படுகின்றன. சாத்தான் இதைச் செய்யவேமாட்டான். அவன் தேவன் நீதியுள்ளவராக ஒருபொழுதும் காட்டமாட்டான். மேலும், சாமுவேல் எழும்பி வருவாரென்று அந்தப்பெண் எதிர்ப்பார்க்கவே இல்லை. ஆதலால்தான் 11-12 வசனங்களில் நாம் பார்க்கிறபடி அவள் சாமுவேலைப் பார்த்தவுடன் மகாசத்தமிட்டு அலறினாள் என்று வாசிக்கிறோம்.
சாமுவேல் சவுலுக்குத் தரிசனமாகிறதற்குக் கர்த்தர் விசேஷ அனுமதி கொடுத்தார்.
-- Edited by SUNDAR on Wednesday 9th of June 2010 03:54:40 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)