இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் மனிதர்களை கணக்கின்றி படைக்கிறாரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவன் மனிதர்களை கணக்கின்றி படைக்கிறாரா?
Permalink  
 


எந்தஒரு செயலுக்குமே ஒரு அடிப்படை கணக்கு ஓன்று நிச்சயம் இருக்க வேண்டும். சாதாரண  மனிதர்கள் கூட கணக்கிலாமல் எதையுமே கைக்குவந்தபடி செய்வதில்லை. "ஆற்றில் போடாலும்  அளந்து போடு" என்றொரு பழமொழி கூட உண்டு
 
இவ்வாறு  இருக்கையில்  இந்த  உலகில் மனிதர்கள் படைக்கபடுவதர்க்கு ஏதாவது ஒரு அடிப்படை காரணம் நிச்சயம் இருக்க வேண்டும். "ஆத்துமா" என்பது விலையேறப்பெற்றது.  "ஒரு ஆத்துமாவும் கெட்டுபோவது தேவனின் விருப்பம் அல்ல" என்று வேதம் சொல்கிறது. இவ்வாறு  இருக்கையில்  இந்த விழுந்துபோன
துன்பமும் துயரமும் நிறைந்த  உலகில் இன்றுவரை ஆத்துமாக்களை  கணக்கின்றி தேவன் படைக்க வேண்டிய  காரணம் என்ன?
 
எதன் அடிப்படையில் மனிதர்கள் உலகில் படைக்கப்படுகிறார்கள் என்பதை 
யாராவது விளக்க முடியுமா
?
 
இறைவன் கணக்கில்லாமல் மனிதர்களை படைத்துகொண்டே  "ஒருவரும் கெட்டு போவது எனது சித்தமல்ல"  எல்லோருக்கும் சுவிசேஷம் சொல்லுங்கள் என்று நமக்கு கட்டளை இடுகிறாரா?
 
அப்படிஎன்றால்  நான்குபேருக்கு சுவிசேஷம் சொல்லி இரட்சிப்புக்குள் கொண்டு வரும்முன் நாற்ப்பது புறஜாதி குழந்தைகள் புதியதாக பிறந்தால் எப்படி எல்லோருக்கும் சுவிசேஷம் சொல்ல முடியும்?
 
அல்லது கணக்கில்லாமல் மனிதர்களை படைத்து சோதனை செய்து செய்து நித்ய ஜீவனுக்கு தகுதியான மனிதனை தேர்ந்தெடுத்து மற்றவர்களை அழிக்கபோகிறாரா?  
அப்படி என்றால் தான் படைக்கபோகும் மனிதனை தனது ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவனாகவே படைக்க தெரியாத ஒருவரா எல்லாம்வல்ல நமது தேவன்?
 
ஏன் இன்றுவரை மனிதர்கள் தொடர்ந்து  படைக்கப்பட்டுகொண்டே இருக்கிறார்கள்?       
 
எனக்கு தெரிவிக்கப்பட்டபடி முந்திய ஆதாமாகிய  "ஆதாமும்"  பிந்திய ஆதாமாகிய "இயேசுவுமே" இந்த உலகில் புதியதாக வந்தவர்கள். மற்றவர்கள் எல்லோருமே
"மாம்சமானவர்கள்" அதாவது வேறு ஏதோ ஒரு இடத்தில் வேறு ரூபத்தில் இருந்து ஏதோ காரணத்தால் மாமிசமாகமாறி  இந்தஉலகில் வந்தவர்கள் என்று கருதுகிறேன்.
 
தள சகோதரர்கள் கருத்து இருந்தால் பதியலாம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சமீபத்தில் ஆண்டவருக்கு மிகவும் பிரியமான ஒரு சகோதரியின் வார்த்தைகளை கேட்க நேர்ந்தது.

ஆண்டவராகிய இயேசு ஒருநாள் அந்த சகோதரியிடம் "இந்த உலகத்தில் அழிவை நோக்கி
போகும் ஒரே ஒரு ஆத்துமாவை ஜீவனுக்குள் திருப்பி  கொண்டு வருவது மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. ஒவ்வொரு ஆத்துமா வுக்ககவும் நான் பரிதபிக்கிறேன்.
 
இந்நிலையில்  கிறிஸ்த்துவுக்குள் இருக்கும் மீட்கப்பட்ட   குடும்பத்தினர் தங்களால் முடிந்த அளவு பிள்ளைகளை பெற்று வளர்த்தால்  அவ்வாத்துமாக்கள்  எல்லாமே நிச்சயம் என்னுடையதாக இருக்குமே, ஆனால் கிறிஸ்த்துவை அறிந்த குடும்பத்தாரும் ஓரிரு பிள்ளைகளோடு நிருத்தி கொள்வதால்  புரஜாதியினர் அதிகம் அதிகமாய் பெருகி,  அழிந்துக்போகும் ஆத்துமாக்கள் அதிகமாகிறது என்று அக்கலாய்த்தாராம்.
 
இந்த வார்த்தைகளை கேட்டபோது ஆண்டவர் நிச்சயம் கணக்கில்லாம் ஆத்துமாக்களை படைக்கவில்லை ஏதோ ஒரு அடிப்படையில்தான் படைக்கிறார் என்று உருதியானதொடு.  எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தது.  

பூமியில் உள்ள
எல்லாமே ஒரு சுழற்ச்சி முறையில்தான் இருக்கிறது. மழையாக பெய்யும் நீர் மீண்டும்  ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகிறது. இவ்வாறு எல்லா உயிரினங்களுமே ஒன்றை ஓன்று தின்று பின்னர் தானும் செத்து மண்ணாகி இப்படி சுழன்ற்றுதான் வருகிறது.   
 
அதுபோல் ஆத்துமாக்களும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்குமோ? 
 
இன்னும் இந்த சந்தேகம் முழுமையாக தீரவில்லை இது குறித்து  ஆண்டவரிடம் அமர்ந்து விசாரிக்க வேண்டும்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

மறுபிறவிக் கொள்கைக்கு மிக அருகிலிருந்து இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது;

எபிரெயர்.9:27-ன் படி மறுபிறவி என்பதோ வேறொருவரின் அவதாரம் என்பதோ அடிப்படையில்லாத கூற்றாகும்;அப்படியானால் அனைத்து உயிர்களும் ஆதாமில் முடிவடையும்;

ஆனால் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் தனித்தனி அடையாளத்தையும் நோக்கத்தையும் அழைப்பையும் வேதம் வலியுறுத்துகிறது;

அப்படியானால் தொடர்ந்து உயிர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கக் காரணம்..?

அதற்கு வேதம் சொல்லும் காரணம் "அக்கிரமத்தின் தொகை இன்னும் நிறைவடையவில்லை"

மேலும் குறிப்பிட்ட சகோதரி கிறித்தவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துக் கொள்வதைக் குறித்து கவலைப்பட்டதைக் குறித்து...

மாம்சத்தினால் மாம்சமாயிருக்கும் ;ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும் என்பதே பதிலாகும்;பிள்ளைபெற்று பரலோகத்தை நிரப்பமுடியாது;ஆனால் சுவிசேஷத்தை அறிவித்து பரலோகத்தை நிரப்புவதுடன் நரகத்தையும் காலியாக்கலாம்;

பிரபல‌ ஊழியர் மோகன் சி லாசரஸுக்கு பிள்ளை பாக்கியமில்லை;அதனால் அவரது ஊழியம் தோல்வியடைந்துவிட்டதா என்ன..?

(வேத வார்த்தைகளின் சாரத்திலிருந்து பேச்சு வழக்கில் எழுதுவதே எனது பாணி;எனவே வேத வார்த்தைகளைக் குறிப்பிடாததைக் குறித்து வருந்தவேண்டாம்;அதனைத் தேடி எடுத்து சம்பந்தப்படுத்திக்கொள்வது வாசகரின் பொறுப்பு மற்றும் பங்கு;வேண்டுகோளின் அடிப்படையில் சரியான மிகச் சரியான வேத வார்த்தைகளைக் குறிப்பிடவும் ஆயத்தமாக இருக்கிறேன்..!)


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

CHILLSAM WROTE
///எபிரெயர்.9:27-ன் படி மறுபிறவி என்பதோ வேறொருவரின் அவதாரம் என்பதோ அடிப்படையில்லாத கூற்றாகும்; ///
 
எபிரெயர்.9:27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
 
இந்த வசனம் மனிதன் ஒரேதரம் பிறப்பது பற்றி கூறவில்லை  ஒரேதரம் மரிப்பது பற்றியும் அதற்க்கு பிறகு நியாயதீர்ப்பு" என்றும்தான் கூறுகிறது. அதாவது இதற்க்கு முன் சிருஷ்டிக்கப்பட்டவர் சிலர் மரிக்காமல் ஏதாவது ஒரு நியமனத்தின்கீழ் ஓரிடத்தில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் புதியஏற்பாட்டு காலத்தில் பிறந்து மரித்து நியாயதீர்ப்பு அடைய வாய்ப்பிருக்கிறது அல்லவா? ஏனெனில் மரணம் என்பது வேறு பாதாளம் என்பது வேறு இரண்டுமே இரண்டு தூதர்கள் என்றே வெளிப்படுத்தின விசேஷம் சொல்கிறது
 
மேலும் பழையஏற்பாட்டில் இதற்க்கு இணை வசனம் எதுவும்
இருக்கிறதா? அப்படி இல்லாத பட்சத்தில்,  கடைசி காலம் என்று சொல்லப்படும் இந்த புதிய ஏற்பாட்டு  காலத்துக்காக  மட்டும்  இந்த வசனம் சொல்லப்ப்ட்டிருக்கலாமே!  
 
CHILLSAM WROTE: 
/////அதற்கு வேதம் சொல்லும் காரணம் "அக்கிரமத்தின் தொகை இன்னும் நிறைவடையவில்லை"/////
 
இதன்  கருத்து  எனக்கு  சரியாக  புரியவில்லை சகோதரரே. அக்கிரமத்தின் தொகை என்றால் என்ன?   நரகத்துக்கு  போகும்  கூட்டமா? அல்லது  "எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை" என்று ஆண்டவர் சொன்னதுபோல் அக்கிரமம் நிறைவாகுவதக்காகவே ஆண்டவர் மனிதர்களை படைக்கிறார் என்று கருதுகிறீர்களா?     

CHILLSAM WROTE:
///மேலும் குறிப்பிட்ட சகோதரி கிறித்தவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துக் கொள்வதைக் குறித்து கவலைப்பட்டதைக் குறித்து...///

குடும்ப கட்டுப்பாடு கூட தேவனின் திட்டம் நிறைவேற தடையாக இருக்கும் ஒரு சாத்தானின் திட்டம் என்றே நான் கருதுகிறேன். எனவே
தேவன் தெரிவித்த அந்த கருத்தில் உண்மை இருக்கலாம் என்றே நம்ப தோன்றுகிறது  


CHILLSAM WROTE:
////மாம்சத்தினால் மாம்சமாயிருக்கும் ;ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும் என்பதே பதிலாகும்;///

சரியான கருத்துதான்! ஆவிக்குரியவர்கள் தங்கள் குழந்தைகளை ஆவிக்குரியவர்களாகவே நிச்சயம் வளர்ப்பார்கள் எனவே சுலபமாக ஆண்டவரின் சேனை அதிகமாகும்  என்றே நான் கருதுகிறேன் நூற்றில் ஓன்று வேண்டுமானால் திசைமாறி போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் ராஜஸ்தானில்  பிறக்கும் ஒரே ஒரு புறஜாதி குழந்தையை  சுவிஷேஷத்துக்குள் கொண்டு வருவது சாதாரண விஷயமா?   
 
CHILLSAM WROTE:
/////பிள்ளைபெற்று பரலோகத்தை நிரப்பமுடியாது;/////
 
இது உறுதி படுத்த முடியாத கருத்து.  எனக்கு தெரிந்து ஒரு சகோதரிக்கு சுமார் எட்டு குழந்தைகள் அவர்கள் கஷ்டப்பட்டுதான் வளர்த்தார்கள். இன்று  அனைத்துமே ஜெபம் வேதவாசிப்பு ஊழியம் என்று அனேக ஆத்துமாக்களை ஆண்டவரை நோக்கி திருப்புகிறது எனவே பிள்ளைகளை பெற்று ஆவிக்குரியவர்களாய் வளர்ப்பதும் ஒரு ஊளியம்தானே?     
 
CHILLSAM WROTE:
////ஆனால் சுவிசேஷத்தை அறிவித்து பரலோகத்தை நிரப்புவதுடன் நரகத்தையும் காலியாக்கலாம்;///
 
இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை கருத்து. இதை தவறு என்றோ அல்லது இதற்க்கு மாற்று அது என்றோ சொல்ல வரவில்லை.  ஆண்டவர் ஆதங்கப்பட்டார் என்று சொன்னதில் நியாயம் இருக்க வாய்பிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
 
 
சரி எபிரெயர் வசன அடிப்படையில்  மறுபிறப்பு என்று எப்பொழுதுமே இல்லை என்று உறுதியாக நம்பும் கிறிஸ்த்தவ உபதேசம் கீழ்க்கண்ட வசனத்துக்கு என்ன பதில் தருகிறது என்பதை நான் சற்று அறியலாமா?
 
எசேக்கியேல் 14:
19.  நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,
14  நோவா, தானியேல், யோபுஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

கர்த்தர் ஒரு தேசத்தை அழிக்கும்போது "நோவா, தானியேல், யோபு" ஆகிய (போன்ற அல்ல) மூன்று புருஷர்களும் அங்கு இருந்தாலும் அவர்கள்  தங்கள் நீதியால் தங்கள் ஆத்துமாவை தப்புவிப்பார்கள் என்று கர்த்தர்  குறிப்பிடுகிறார். அதில் நோவாவும் யோபுவும் இந்த வசனம் சொல்லப்படுவதற்கு முன் எப்பொழுதோ  மரித்து போனவர்கள், அவ்வாறிருக்க கர்த்தர் அழிக்கும் தேசத்தில் அவர்கள் எப்படி  இருக்க முடியும்? இருந்தால் தப்பிப்பார்கள் என்று கர்த்தர் ஏன் குறிப்பிடுகிறார்? 
 
நீங்கட நாளாக என்னை குழப்பும் இக்கேள்விக்கு விளக்கம் அறிய ஆவல்!
 
 


-- Edited by SUNDAR on Thursday 17th of June 2010 03:16:39 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard