ஒரு தகப்பனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள். ஒருநாள் அந்த தகப்பன் அவரது குமாரர்களை அழைத்து "நீங்கள் என்மேல் அன்பாய் இருக்கிறீர்களா?' என்று கேட்டார். உடனே நான்கு குமாரர்களும் "அப்பா உங்களுக்காக நாங்கள் ஜீவனையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஒருசேர சொன்னார்கள். அந்த தகப்பனும் தன் குமாரர்கள் தன்மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்து அசந்து விட்டார்.
நாங்கள் நகர்ந்தன அந்த தகப்பன் முதியவராகி படுத்த படுக்கையானார். ஒரு குமாரன் கூட வந்து அவர் என்னவானார் என்று எட்டிபார்க்கவில்லை. மிகுந்த மனமடிவான தகப்பன் ஆட்களை சொல்லியனுப்பு தனது மகன்களை வரவழைத்தார். எல்லோரும் வந்தனர் அவர்களிடம் "மகனே என்னால் எழுந்து எங்கும் போக முடிய வில்லை என்னை கொஞ்சம் மருத்துவமனைக்கு அழைத்து சொல்லுங்கள்" "எனக்கு தேவையான சில பொருட்களை வாங்கி கொடுங்கள்" என்று கேட்டுகொண்டார் ஆனால் எந்த மகனும் அதை காதிலேயே ஏற்க்கவில்லை.
மிகமும் வேதனை அடைந்த தகப்பன் "மகன்களே எனக்காக ஜீவனையும் கொடுப்பேன் என்று எவ்வளவு அன்பாக பேசினீர்கள், இப்பொழுது நான் கேட்டுக் கொள்ளும் இந்த சின்ன காரியத்தை கூட உங்களுக்கு செய்ய விருப்பமில்லையா?" என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்க்கு அந்த குமாரர்கள் "அப்பா நாங்கள் இப்பொழுதும் சொல்கிறோம் உங்களுக்காக ஜீவனை கொடுக்கவும் நாங்கள் தயார் ஆனால் "அதை வாங்கிதா" "இதை வாங்கிதா" "அதை செய்" "இதை செய்" என்று மட்டும் எங்களுக்கு கட்டளை இடவேண்டாம் அது எங்களால் செய்ய முடியாது" என்று பதிலுரைத்தனர்.
இதே கதைதான் இன்று கிறிஸ்த்தவ வட்டாரங்களில் பார்க்க முடிகிறது.
இயேசுவுக்காக இரத்த சாட்சியாக மரிக்க பலசகோதரர்கள் தயாராக இருக்கின்றனர். அவருக்காக ஓடியாடி உழைக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இயேசுவுக்காகவே வாழ்கிறேன் என்று பலர் சாட்சி சொல்கின்றனர்.
ஆனால் இயேசுவின் வார்த்தைகளை முழுமையாக தங்கள் வாழ்க்கையில் கைகொண்டு வாழ்கின்றனரா என்று பார்த்தால் அதெல்லாம் இந்த உலகில் முடியாது பிரதர் என்று சுலபமாக பதில் சொல்கின்றனர். இயேசுவுக்காக இரத்த சாட்சியாக மரிப்பது நல்ல செயல்தான் ஆனால் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. அதற்கென்று யாரை கர்த்தர் நியமித்திருக்கிராரோ அவர்களுக்கு மட்டும்தான் அது சாத்தியம்.
ஆனால் எல்லோருக்கும் இயேசு திரும்ப திரும்ப சொன்ன வார்த்தைகள்
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:23இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான் என்பதுதான்
மேலும்
I யோவான் 3:24அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்;
I யோவான் 5:3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
என்று பல வசனங்கள் அவரது வார்த்தையை கைகொள்வதின் முக்கியத்துவத்தை போதிக்கிறது. எனவே இயேசுவின்மேல் அன்பாயிருந்து அவருக்காக ஜீவனை கொடுக்க துணியும் நாம் என்ன நிலையிலும் இயேசுவின் வார்த்தைகளை மீறாமல் வாழ்ந்து அவரது மலைபிரசங்க வார்த்தைகளை கைகொண்டு நடந்து அதனால் ஒருவேளை மரணம் வந்தாலும் அதை சந்தோசத்துடன் ஏற்பேன் என்று வாழ வேண்டும். அதுவே நாம் இயேசுவின் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்பாக அறியப்படும். மற்றபடி வெறும் வாய்ப்பேச்சு யாருடைய வயிற்றையும் நிரப்பாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)