இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தரை தொழுது கொள்வது!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கர்த்தரை தொழுது கொள்வது!
Permalink  
 


ஒரு  சகோதரர்  இந்த கேள்வியை எனது தனி மெயிலுக்கு அனுப்பியிருப்பதால், அதைப்பற்றி தியானித்து அதற்க்கான பதிலை இங்கு பதிவிடலாம் என்று கருதுகிறேன். இதைப்பற்றி விளக்கமாக எழுதும் அளவுக்கு எனக்கு வெளிப்பாடுகள் இல்லை என்றாலும் ஆண்டவர் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் எனது அனுபவ அறிவின் அடிப்படையிலும் வேதவசனத்தை சார்ந்து  இக்கட்டுரையை எழுத விளைகிறேன்.   
 
தேவனை தொழுதுகொள்ளுதல், பணிந்துகொள்ளுதல், ஆராதனை செய்தல், கும்பிடுதல், ஜெபித்தல், வேண்டுதல் செய்தல், போன்ற எல்லாமே நெருங்கிய தொடர்புடயவைகலாக இருந்தாலும் ஒவ்வோன்றுக்குமிடையே சிறு சிறு வேறுபாடுகளும் உண்டு.       
 
ஏசாயா 12:4 : கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.

சங்கீதம் 29:2
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

போன்ற அனேக வசனங்கள் கரத்தரை தொழுதுகொள்வதன்
முக்கியத்துவத்தை
நமக்கு போதிப்பதால் அவரை தொழுதுகொள்வது பற்றிய  அறிவு நமக்கு அவசியமாகிறது.
 
முதன்  முதலில் மனுஷர்கள்  கர்த்தரை தொழுதுகொள்ள ஆரம்பித்தது ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டு  சுமார் 235 வருடங்களுக்கு பிறகு என்று வேதம் குறிப்பிடுகிறது.  அதாவது ஆதாம் தேவனை முகமுகமாக அறிந்து பெசியிருந்தான் அவனது குமாரனான சேத்துக்கு குமாரன்  பிறந்தபிறகே கர்த்தரை தெய்வமாக தொழுதுகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்     
 
ஆதியாகமம் 4:26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனை தொழுதுகொள்ள பல சட்ட திட்டங்கள் இருந்தது அதற்காக பல ஒழுங்கு முறைகளும் இருந்தது ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆண்டவராகிய இயேசு மரித்து பரிசுத்த ஸ்தலத்துக்கு இடையே இருந்த திரையை கிழித்து நம்மை பிதாவாகிய தேவனோடு  ஒப்புரவாகியபடியால் தேவனை தொழுது கொள்ளும் முறையில் அனேக மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. 
 
புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நாம், இக்காலத்தில் தேவனை எவ்வாறு  தொழுதுகொள்வது என்பது  பற்றி வேதம் என்ன கூறுகிறது என்பதை மட்டும் இங்கு பார்க்கலாம்.    
 
தேவனை எங்கு தொழுதுகொள்ளலாம்?
 
தேவனை நாம் எங்கும் தொழுதுகொள்ளலாம்!  இந்த இடத்தில்தான் தொழவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. "வானம் அவரது சிங்காசனம் பூமி அவரது பாதபடி" எனவே.  வீட்டில், ரோட்டில், சபையில், வேலைஸ்தலத்தில் மற்றும் எவ்விடத்தில் வேண்டுமானாலும் நாம் நினைத்த நேரத்தில் தேவனை தொழுது கொள்ள முடியும்.      
 
யோவான் 4:21  நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

என்று இய்சு அறிவித்தார். அவர் மரித்து உயிர்த்தபிறகு தேவனுக்கு மனுஷனுக்கும் இடையே இருந்த திரை நீக்கப்பட்டுவிட்டதால் இப்பொழுது தேவனை  எங்கும் தொழுதுகொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஆகினும் புதியஏற்பாடு காலம் சபை அமைப்பாக இருப்பதால் நாம் சபைகூடுதலை விட்டுவிடாமல் சபை ஒழுங்குப்படி சபையில் கூடியும்  தேவனை  ஆராதித்து தொழுதுகொள்ள வேண்டும்.   
 
எபிரெயர் 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்;
 
தனியாகவும் தொழுதுகொள்ளலாம் குடும்பமாகவும்  சபையாகவும் குழுவாக கூடியும் எப்படி வேண்டுமானாலும்  தொழுதுகொள்ளலாம்.


அடுத்து யாரை நோக்கி தொழவேண்டும் எப்படி தொழவேண்டும்
என்று பார்க்கலாம்
 


-- Edited by SUNDAR on Tuesday 25th of May 2010 04:27:26 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கர்த்தரை எவ்வாறு தொழுதுகொள்வது!
Permalink  
 


யாரை தொழ வேண்டும்?
 
ஒருவர தேவனை தொழுவதற்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்று வசனம் நேரடியாக  சொல்கிறது  
 
வெளி 19:10 . அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்
 
வெளி 19:4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
 
சங்கீதம் 116:13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

தேவனும், தேவகுமாரனாகிய  இயேசுவும்  முற்றிலும் வேறு வேறானவர்கள் அல்ல அவர்  தேவனால் ஆண்டவராக உயரத்தப்பட்டார். என்றும் வசனம் சொல்கிறது
 
அப்போஸ்தலர் 2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்
 
தாவீது, "கர்த்தர் என் ஆண்டவரைநோக்கி" என்று இயேசுவை அவரின் சொந்த ஆண்டவர் என்று சொந்தம்கொண்டாடி அழைப்பது  மிகவும் அருமை.  ஆம் ஆண்டவராகிய இயேசு  "நமது ஆண்டவர் " தேவனின் வார்த்தயுமாகிய இயேசுவின்
நாமத்தையும் ஆதி அப்போஸ்தலர்கள்  தொழுதுகொண்டனர்
 
அப்போஸ்தலர் 7:59  கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

 I கொரிந்தியர் 1:2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது
 
மேலும் மனுஷகுமாரனாகிய இயேசுவையே சகலபாஷைகாரரும் சேவிக்கும்படிக்கு அவருக்கு கர்த்தத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்று வசனம் சொல்கிறது
 
தானியேல் 13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். 7:14 சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

எனவே   கர்த்தராகிய  இய்சுவையும் தொழுதுகொள்ளலாம். 
 
இன்று கிறிஸ்த்தவத்தில் ஆண்டவராகிய இயேசுவை மட்டும் தொழுது கொள்பவர்களையும் பார்க்க முடியும் மற்றும்  ஒரு சில பிரிவில் தேவனாகிய கர்த்தரை மட்டும் தொழுதுகோள்பவரையும் பார்க்கமுடியும். இரண்டுமே தவறான காரியங்கள் அல்ல என்பதே எனது கருத்து. ஆனால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பை பெறாமல் எதுவுமே சாத்தியம் அல்ல பரலோகத்தில்
நுழைய வழியே இயேசுதான். அவரை விசுவசிக்காமல் பிதாவை தொழுவத்தில் பயனில்லை.    
 
பிதா ஒருவரை தேர்ந்தெடுத்து இய்சுவுக்கு கொடுப்பாரானால் அவர் இயேசுவை மட்டும்தான் தொழுவார். 
 
யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

அதேநேரத்தில், ஆண்டவராகிய இயேசு ஒருவருக்கு பிதாவை பற்றி  வெளிப்படுத்த சித்தமாகி வெளிப்படுத்துவாரானால் அவர் இயேசுவை விசுவாசிப்பதொடு பிதாவை தொழுவதர்க்குதான் முக்கியத்துவம் கொடுப்பார். இங்கு தவறு என்று யாரும் யாரையும் சொல்ல முடியாது
 
 மத்தேயு 11:27   குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
  
பிதாவினிடத்தில்  அனேக  வாசஸ்தலங்கள் இருப்பதால் ஆவர்கள் தொழுது கொண்டதர்க்கு தகுந்தால்போல் அவர்களது வாசஸ்தலம் அமையும்.  
 
எனவே பிதாவாகிய தேவன், தேவனாகிய கர்த்தர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து  யாரை வேண்டுமானாலும் தொழுதுகொள்ளலாம்.  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கர்த்தரை தொழுது கொள்வது!
Permalink  
 


கர்த்தரை எவ்வாறு  தொழுதுகொள்வது ?  
கர்த்தரை தொழுகொள்பவர்கள் பரிசுத்தம் என்னும் அலங்காரத்துடனே அவருக்கு மகிமையை  செலுத்தி, நடுக்கத்துடன் அவரை தொழவேண்டும் என்று வசனம் சொல்கிறது.
 
சங்கீதம் 96:9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
 
சங்கீதம் 29:2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

பரிசுத்தம் இல்லாத ஒருவன் தேவனை தரிசிக்க முடியாது. இங்கு பரிசுத்தம் என்று சொல்லப்படுவது வெளிப்புற சரீர பரிசுத்தத்தை குறிப்பிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! தேவனை தொழுதுகொள்ள நம் இருதய நிலைகளில் மிகுந்த  சுத்தம் வேண்டும்.  பொறாமை, வஞ்சம், கோபம், இறுமாப்பு, அகங்காரம், தற்பெருமை, உலக ஆசை போன்ற அழுக்குகளை இருதயத்தில் வைத்து கொண்டும் தேவனை தொழமுடியும். ஆனால் அவ்வாறு தொழுவதினால் எந்த பயனும் இல்லை. ஒரு சிறு குழந்தையை போல சுத்தமான இருதயம் இருதயத்தோடு தாகத்தோடு தொழ வேண்டும். அப்பொழுதுதான் தேவனின் இருதய நிலையை நம்முடய இருதயத்தில உணர முடியும்.            
 
இருதயத்தில் சுத்தம் என்பது அவ்வளவு சீக்கிரம் அமைவது இல்லை. ஏதாவது  ஒரு "பிறவிக்குணம்" என்னும் அழுக்கு நமது இருதயத்தில் ஒட்டிக்கொண்டு இறைவனை உண்மையாக தொழமுடியாமல் செய்து, தேவனின் வார்த்தைகளை கேட்கவிடாமல்
நிச்சயம் தடைசெய்யும்.  அவ்வாறு பரிசுத்தம் இல்லாதவர்கள் இருதய பரிசுத்தத்துக்காக ஆண்டவரிடம் இடைவிடாமல் மன்றாட வேண்டும்
 
சங்கீதம் 51:10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

தேவன் ஒருவராலேயே அவருக்கு ஏற்ற சுத்தமான நிலையில் ஒருவரது மனதை கொண்டுவர முடியும். அதற்க்கு பல நாட்கள் மாதங்கள் வருடங்கள்கூட ஆகலாம். ஆனால் அவ்வாறு  இருதய சுத்தம் வரும்வரை நாம் முதலில் நமது  இருதய சுதத்துக்காக சில நிமிடங்கள் ஜெபித்துவிட்டு அதன்பிறகு  தொடர்ந்து  தேவனை தொழுவது நல்லது.
 
எனவே தேவனை தொழுதுகொள்ள முதல் தகுதி "பரிசுத்தம் என்னும் அலங்காரம்" உள்ள இருதயம்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஆவியில் நிறைந்து தொழுதல்.
 
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
 
தேவனை  தொழுதுகொள்ள  அவர்  எதிர்பார்க்கும்  இரண்டாம்  தகுதி, ஆவியின் நிரம்பி தொழுவது!  புதியஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை, தேவனை தொழுது கொள்வதற்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றிருப்பது மிக மிக அவசியமாகிறது. ஏனெனில்  ஆவியில் நிறையாமல் தேவனை தொழுது கொள்பவர்கள் ஆண்டவரின் இருதயத்துக்கு ஏற்ற தொழுகை நிலையை நிறைவேற்ற முடியாது!.
 
என்ன தொழவேண்டும்? எப்படி தொழவேண்டும்?  எதை குறித்து தொழவேண்டும்? என்று சரியாக போதித்து நம்மை வழி நடத்துபவர் ஆவியானவரே.    
 
ரோமர் 8:26  நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
  
சில இடங்களில் தேவனை தொழுகொள்ளும்போது ஒருசில பாடல்களை மட்டும் பாடிவிட்டு உடனே  வார்த்தைகளை அடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அது ஒரு சரியான நிலை அல்ல.   ஆவியானவர் அவ்விடத்தில் இரங்கும்படி அவரது பிரசன்னம் அவ்விடத்தை நிரப்பும்படி மன்றாட வேண்டும், அவரது அசைவாடுதல் அவ்விடத்தில் தெரியும்வரை முதலில் அவரை அங்கு அழைக்கவேண்டும். பின்னர் அவர் அங்கு இறங்கியிருப்பதை நிச்ச்யத்துகொண்ட பிறகு தேவனை  தொழ ஆரம்பிபது  நமக்கு சரியான ஒரு வழிகாட்டுதலாக  இருக்கும் .
 
இவ்வாறு   தொழும்போது  நமது தொழுகையானது நமது  மாமிச மற்றும் உலக நிலைகளுக்கு ஏற்றதாக இருக்காமல் தேவனது இதய நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இந்நிலையில் நாம் நினைத்துகூட பார்க்காத பல வார்த்தைகளுடன் ஆண்டவரைத் தொழமுடியும் அவரது மகிமையை போற்ற முடியும். 
  
எனவே  தேவனுக்கு ஏற்றவாறு தொழ விரும்புகிறவர்கள் முதலில் ஆவியில் நிறைந்து பின்னர் தொழ ஆரம்பிப்பது தேவன் எதிர்பார்க்கும் ஒரு தொழுகை  நிலை ஆகும்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

உண்மையோடு தொழுதுகோள்ளுதல்!
 
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
 
இறுதியாக,  கர்த்தரை தொழுதுகொள்ளும்போது  "உண்மையாக தொழுதுகொள்ள வேண்டும்" என்று வேதம் வலியுறுத்துகிறது. இவ்வாறு உணம்யாக தொழ முடியாமல் நம்மை கெடுக்கும் சில காரணிகளை இங்கு ஆராயலாம்:
 
1. உலக காரியங்களால் நிறைத்த மனது:
 
மனமானது உலக காரியங்களால், நிகழ்வுகள், பிரச்சனைகள் அல்லது  டிவி/ சினிமா நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கும்போது ஒருவரால் ஆண்டவரை உண்மையாக தொழ முடியாது. நமது செய்கையும் வாயும் தேவனை தொழுவது போல இருந்தாலும் நமது இருதயமோ தேவனை விட்டு தூரமாக இருக்கும்.  
 
மத்தேயு 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

இந்த உண்மையில்லா  தொழுகையினால் ஒரு பயனும் இல்லை. நமது முழு இருதயத்தையும் கர்த்தரிடம் ஊற்றி உண்மையாக் ஜெபிக்க வேண்டும். தொழும் நேரத்தில் மனதை ஒருமனப்படுத்த சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.  மனிதர்களாகியநாம் அன்றாடம் ஆயிரம் பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஒவ்வொரு நாளும் இவ்வுலகில் வாழபோராடுகிறோம் எனவே நமது மனதில் உலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்  நெருக்குவது சகஜமே. ஆகினும் நாம் தொழுவது சாதாரண ஆள் அல்ல! நமது பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஒரு பனியைப்போல நீக்க வல்லவரான சர்வவல்ல தேவனை நாம் தொழுகிறோம். எனவே அந்நேரத்தில் எல்லா உலக பிரச்சனைகளையும் தூக்கி கர்த்தர் மேலேயே வைத்துவிடுவது நல்லது!
   
II நாளாகமம் 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது
 
என்ற உண்மையை அறிந்து கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு அவரை நோக்கி முழு மனதோடு தொழ பிரயாசம் எடுக்கவேண்டும். அதுவே மிகுந்த பயன் தரக்கூடியது.
 
2. மாய்மால தொழுகைகள்:
 
இரண்டாவதாக மாய்மால தொழுகைகள் தேவனுக்கு அருவருப்பானவைகள். அதாவது பிறருக்கு முன்னால் தேவனை தொழுவதுபோல் நடிப்பது அல்லது பிறர் தன்னை  உயர்வாக எண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு தொழுவது போன்றவை இதில் அடங்கும். சபைகளில் பல நேரங்களில் தொழுகைகளில் பார்க்கும்போது அநேகர் பிறரில் கண்களுக்கு பரிசுத்தமாக தெரிய வேண்டும் என்பதற்காகவே தொழுவதையும். சிறிது நேரம் தொழுவிட்டு பிறகு சுற்றிவர யார் நம்மை கணிக்கிறார்கள் என்று பார்ப்பதையும் அறியமுடியும்.
 
அதொபோல் ஜெப கூட்டங்கள் மற்றும் போது தொழுகையின்போது பலருக்கு பிறர் தம்மைப்பற்றி நல்ல ஒரு கருத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலோ தொழுவது அனைத்து இந்த மாய்மால தொழுகையே சேரும்.  
 
லூக்கா 20:46 நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
மாற்கு 12:40  பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
 
செய்வது  முழுஎண்ணத்தோடு கர்த்தருக்காக அவர் நாமத்தை உயர்த்துவதற்காகவே செய்யப்பட வேண்டும்!
 
3.. பணத்தை அடிப்படை நோக்கமாக கொண்ட தொழுகைகள்
 
உண்மையற்ற தொழுகையில் அடுத்த இடம் பிடிப்பது தற்காலத்தில் அதிகமாக நிறைவேறி வரும் பணத்தை அடிப்படையாக கொண்ட தொழுகைகள்.  இன்றைய தொழுகையில் எவ்வளவு பணம் கிடைக்கும் அல்லது இவ்விடத்தில் கூட்டம் போட்டு தொழுதுகொண்டால் எவ்வளவு சம்பாதிக்கலாம். அல்லது இந்த வீட்டில் போய் தொழுகை நடத்தினால் நமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பது போன்ற பணத்தை அல்லது சுயநலனை அடிப்படையாக கொண்ட தொழுகைகள் பயனற்ற உண்மையில்லா தொழுகைகள். இவ்வகை தொழுகைகள் தலைமை தாங்குபவரையும் கெடுப்பதோடு விசுவாசிகளையும் குழப்பத்தில் தள்ளிவிடும்.      
 
தேவனை தொழுதுகொள்ளும் இடத்தில் பணம் எந்த பங்கும் வகிக்ககூடாது. பணத்தை நோக்கமாக கொண்ட தொழுகைகள் தேவனுக்கு அருவருப்பானவைகள். 
 
தேவனுடைய பார்வைக்கு நமது மனதில் மறைவானது எதுவும் இல்லை. நமது மனதில் ஒரு சிறு கருப்புபுள்ளி இருந்தால் கூட அது தேவனுக்கு தெரிந்துவிடும்   
 
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

என்பதை கருத்தில் கொண்டு தேவனை உண்மையாக தொழுவோமாக.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard